/indian-express-tamil/media/media_files/2024/10/16/sFWmo63M7DGkKcPBsWQY.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 217-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர்பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5ஏரிகளில் 41.34% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 37.39% ; புழல் - 75.06% ; பூண்டி - 15.69% ; சோழவரம் - 18.13% ; கண்ணன்கோட்டை - 63.4%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 20, 2024 21:07 IST
பெண்கள், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் - மோடி
பிரதமர் மோடி: “பெண்கள், இளைஞர்கள் அதிகாரம் பெறும்போது சமூகம் வளர்ச்சி அடையும். பெண்களுக்கு அரசாங்கம் புதிய பலத்தை அளித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுகிறோம். மக்களுக்கான சேவைகளை மேம்படுத்த வேலைவாய்ப்புகளை உருவாக்க பணியாற்றி வருகிறோம். 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளோம். நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை ஆகும்.” என்று கூறினார்.
-
Oct 20, 2024 21:04 IST
12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மத்தியக் கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 20, 2024 20:46 IST
மோடியை சந்தித்தபோது ஏன் செங்கல்லைக் காட்டவில்லை; உதயநிதிக்கு சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது, அவரிடமே செங்கல்லைக் காட்டி நிதியைப் பெற்றிருக்கலாம்... ஏன் அதை செய்யவில்லை? நீட்டை ஒழிக்கும் ரகசியத்தை எப்போது வெளியிடுவீர்கள்?” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Oct 20, 2024 20:09 IST
எந்த காலத்திலும் பெண்களுக்கு தி.மு.க பாதுகாப்பு தரவில்லை - இ.பி.எஸ் விமர்சனம்
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி: “எந்த காலத்திலும் தி.மு.க பாதுகாப்பு கொடுத்ததில்லை; சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது; கட்சியில் அடிப்படை உறுப்பினர்கள்கூட பெரும் பதவிக்கு வருவதும், விவசாயி கூட முதல்வராக, கட்சியில் பொதுச் செயலாளராக வருவதும் அ.தி.மு.க-வில் மட்டும்தான்” என்று கூறினார்.
-
Oct 20, 2024 19:42 IST
‘தேசத்தின் நலனுக்காக நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ - சந்திரபாபு நாயுடு பேச்சு
தென் மாநிலங்களில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் வயதானவர்களின் மக்கள் தொகை குறித்து கவலை தெரிவித்த முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தம்பதிகள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்களாக மாற்றும் சட்டத்தை கொண்டு வர தனது அரசு திட்டமிட்டுள்ளதாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
-
Oct 20, 2024 18:42 IST
காரைக்காலில் கோயில் நிலம் மோசடி; துணை ஆட்சியரை சஸ்பெட்ண்ட் செய்து விசாரணை
காரைக்காலில் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை ஆட்சியர் ஜான்சனிடம் சினிமா பாணியில் விசாரணை நடத்தினர்.
-
Oct 20, 2024 18:40 IST
தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் வாங்க சென்னை தி.நகரில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை தி.நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். தீபாவளிக்கு 10 நாட்களே உள்ள நிலையில், புத்தாடைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
Oct 20, 2024 18:30 IST
மு.க. ஸ்டாலின் அக். 22-ம் தேதி சேலம் வருகை; ட்ரோன்கள் பறக்கத் தடை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையையொட்டி, சேலத்தில் அக்டோபர் 22-ல் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் வருகிறார்.
-
Oct 20, 2024 17:38 IST
வி.சி.க ஒருநாள் ஆட்சி அதிகாரத்துக்கே வந்தே தீரும் - வன்னி அரசு
திருமாவளவன் முதல்வராவது பற்றி கனவு கானக்கூடாது என்று கூறிய எல். முருகனுக்கு வி.சி.க துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, “விடுதலைச் சிறுத்தைகள் ஒருநாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும்; தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பா.ஜ.க-வை அகற்றுவதுதான் இலக்கு; அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்தவர்கள் நாங்கள்; பா.ஜ.க-வினர் எங்களுக்கு பாடம் எடுக்க முடியாது. உள் ஒதுகீட்டை வி.சி.க ஆதரித்தாலும், எல். முருகன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை எதிர்க்காமல் வி.சி.க-வை மட்டும் குறிவைப்பது ஏன்? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்தான் அருந்ததியர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Oct 20, 2024 17:31 IST
ஓ.பி.எஸ், சசிகலா செல்லாக்காசு - பொன்னையன் கடும் விமர்சனம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன்: “முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் செல்லாக்காசாகிவிட்டனர்; தமிழ்த்தாய் வாழ்த்தை யாரோ பாடியதற்கு ஆளுநரை ஏன் கேள்வி கேட்க வேண்டும். மழைக்கால பணிகளை செய்து முடிக்காமல் தி.மு.க-வினர் கொள்ளையடிக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
Oct 20, 2024 16:59 IST
தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். பதவி நீக்கம் செய்யவில்லை என்றால், அவரை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Oct 20, 2024 16:40 IST
தவெக நிர்வாகிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
திருத்தணியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை போலீசார் எச்சரித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் ஊர்வலம் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கோயில் வளாகத்தில் அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும், இதுபோன்று பேரணியில் ஈடுபடும்போது அனுமதி பெற வேண்டுமெனவும் எச்சரித்து அனுப்பினர்.
-
Oct 20, 2024 16:29 IST
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கர்நாடகாவில் உள்ள விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையத்திற்கு, சென்னையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Oct 20, 2024 16:26 IST
விசிகவுக்கு பாஜக பாடம் எடுக்க முடியாது - வன்னி அரசு
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்த போது விசிக ஆதரித்ததாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாஜக பாடம் எடுக்க முடியாது எனக் கூறியுள்ள அவர், இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Oct 20, 2024 15:55 IST
சாலை சீரமைப்பு பணிக்கு மாநகராட்சி ஒப்புதல்
சென்னையில், வேளச்சேரி - பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தை இணைக்கும் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இச்சாலையின் மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் எளிதாக பயணம் செய்ய முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
-
Oct 20, 2024 15:51 IST
6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 20, 2024 15:30 IST
100 கிலோ குட்கா பறிமுதல்
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்புவனத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பால் வண்டியில் சுமார் 100 கிலோ குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருள்களை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
-
Oct 20, 2024 15:01 IST
போதைப் பொருள் விற்பனை - 6 பேர் கைது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-
Oct 20, 2024 14:55 IST
திருமாவளவனை முதலமைச்சராக்குவோம் - சீமான்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை முதலமைச்சராக்குவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருமாவின் முதல்வர் கனவு பலிக்காது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக சீமான் தெரிவித்துள்ளார்.
-
Oct 20, 2024 14:20 IST
சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Oct 20, 2024 14:15 IST
ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்த போது 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
-
Oct 20, 2024 13:54 IST
தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது
-
Oct 20, 2024 13:40 IST
நாடாளுமன்ற தேர்தலில் ஹவாலா பணப்பட்டுவாடா?
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ரூ.4 கோடி பணம் மட்டுமல்லாது பல கோடி ரூபாய் பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹவாலா தரகர்கள் மூலமாக எந்தெந்த அரசியல் பிரமுகர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி விரிவான விசாரணை நடத்தி வருகிறது
-
Oct 20, 2024 13:04 IST
வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக உள்ளது. இது ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும். தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Oct 20, 2024 13:03 IST
காரைக்காலில் கனமழை
காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
-
Oct 20, 2024 12:32 IST
சாலை விபத்தில் 8 குழந்தைகள் மரணம்
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் மரணமடைந்தனர். சொகுசு பேருந்து- டெம்போ மோதிக்கொண்ட விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர்
-
Oct 20, 2024 12:12 IST
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி – த.வெ.க தொண்டர்களுக்கு விஜய் கடிதம்
அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று; நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி என த.வெ.க தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்
— TVK Vijay (@tvkvijayhq) October 20, 2024
-
Oct 20, 2024 12:08 IST
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டத்தில் உள்ள புதர்களை அகற்ற வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது
-
Oct 20, 2024 11:29 IST
கேரளாவில் முகாமிட்டுள்ள நெல்லை தனிப்படை
நெல்லையில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய ஜல் நீட் பயிற்சி மைய உரிமையாளரை தேடி கேரளாவில் நெல்லை தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.
-
Oct 20, 2024 10:51 IST
5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
பெங்களூருவில் நேற்று நள்ளிரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரமாக உள்ளதால், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
Oct 20, 2024 10:35 IST
80 புதிய BS-VI சாதாரண பேருந்துகள் இயக்கம்
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக்த்தில் இன்று முதல் 80 புதிய BS-VI சாதாரண பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் 'விடியல் பயணத் திட்டத்தின்கீழ்’ இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்தார்.
-
Oct 20, 2024 10:33 IST
ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு
திருவேற்காடு கோலடி ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு, அதிகாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Oct 20, 2024 10:09 IST
மகளிர் டி20 உலகக்கோப்பை - இன்று இறுதிப் போட்டி
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் முறை கோப்பையை வெல்ல இரு அணிகளுக்கு முனைப்பு காட்டுகிறது.
-
Oct 20, 2024 09:40 IST
ஒரு தலை காதல் - சிறுமி எரித்துக் கொலை
ஆந்திர மாநிலம் கடப்பாவில் “நீ வராவிட்டால் செத்து போவேன்“ என்று போனில் மிரட்டி 16 வயது சிறுமியை காட்டுப் பகுதிக்கு வரவழைத்து எரித்துக் கொன்ற கொடூரன். குற்றவாளி விக்னேஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
-
Oct 20, 2024 09:13 IST
கவரைப்பேட்டையில் ரயிலை கவிழ்க்க சதி?
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட்டு ஆகியவற்றை கழற்றியதே விபத்துக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்ப்பட்டுள்ளது.
-
Oct 20, 2024 09:03 IST
மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
புரட்டாசி மாதம் முடிந்ததால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்தது. ஒரு கிலோ வஞ்சிரம்- ரூ.950, சங்கரா- ரூ.500- 550, இறால்- ரூ. 450- 550க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஒரு கிலோ நண்டு- ரூ.300-400, வவ்வால்- ரூ.400-500க்கு விற்பனையாகிறது
-
Oct 20, 2024 08:30 IST
அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம்
கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் அவதி. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.