Advertisment

Tamil News Update: அரசுக்கு இழப்பின்றி இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படும் - அமைச்சர் மூர்த்தி உறுதி

Tamil News , Petrol price today, TNEA counseling 2022, Chennai Day 2022, Manish sisodia CBI Raid – 20 August 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Update: அரசுக்கு இழப்பின்றி இழப்பீட்டுத் தொகை கணக்கிடப்படும் - அமைச்சர் மூர்த்தி உறுதி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Latest Updates

மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20)  தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-இல் தொடங்கி அக்டோபர். 23 வரை நடைபெறும்.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

சென்னை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 383 ஆவது சென்னை தினத்தையொட்டி,  பெசன்ட் நகர் கடற்கரையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், கைதானவர்களில் அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:32 (IST) 20 Aug 2022
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை - எய்ம்ஸ் மருத்துவக்குழு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என்று கூறி எய்ம்ஸ் மருத்துவக்குழு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது.

    ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தைராய்டு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் எய்ம்ஸ் மருத்துவ குழு கூறியுள்ளது.



  • 21:42 (IST) 20 Aug 2022
    வரும் செப்டம்பர் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்

    வரும் செப்டம்பர் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள்,அந்தமான்-நிக்கோபார் கொண்ட 30-வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 21:39 (IST) 20 Aug 2022
    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி

    பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



  • 21:39 (IST) 20 Aug 2022
    சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டம்

    தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், அரசு பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என - அமைச்சர் சிவசங்கரன் கூறியுள்ளார். மேலும் சென்னையில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளார்.



  • 19:52 (IST) 20 Aug 2022
    ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான இறுதி அறிக்கை குறித்து அமைச்சர் ரகுபதி பதில்

    ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை மே 18ம் தேதி தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்



  • 19:11 (IST) 20 Aug 2022
    சென்னை பெசன்ட் நகரில் தொடங்கியது "சென்னை தினம்" கொண்டாட்டம்

    சென்னை பெசன்ட் நகரில் "சென்னை தினம்" கொண்டாட்டம் தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.



  • 18:53 (IST) 20 Aug 2022
    தொடரை கைப்பற்றிய இந்தியா

    ஜிம்பாப்பே அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.

    இன்றைய ஆட்டத்தில் இந்தியா 162 ரன்கள் இலக்கை 25.4 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது.



  • 18:50 (IST) 20 Aug 2022
    ரசிகர்களை சந்தித்த விருமன் படக்குழு

    மதுரையில் ரசிகர்களை விருமன் படக்குழுவினர் சந்தித்தனர்.



  • 18:32 (IST) 20 Aug 2022
    கார் கண்ணாடியை தாக்கிய காட்டு யானை

    சத்தியமங்கலம் ஆசனூர் வனப்பகுதியில் கார் கண்ணாடியை காட்டு யானை தாக்கும் காட்சிகள் வைரலாகின்றன.



  • 18:04 (IST) 20 Aug 2022
    பெய்ஜிங்கில் ஜெய் பீம்

    நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெய்ஜிங்கில் வெளியானது. இந்தப் படத்தை பார்த்து சீனர்கள் கண்கலங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.



  • 17:45 (IST) 20 Aug 2022
    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் -மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியீடு

    விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது. இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது



  • 17:30 (IST) 20 Aug 2022
    பதவிக்காக தொண்டர்களை குழப்பி வருகிறார் இ.பி.எஸ் - ஓ.பி.ரவீந்திரநாத்

    கட்சிக்குள் பிளவு இருந்தால் தொண்டர்கள் நம்பிக்கை இழப்பார்கள். இ.பி.எஸ் பதவிக்காக தொண்டர்களை குழப்பி வருகிறார். தலைமைக்கு உண்மையாக செயல்பட்டதால் பல்வேறு பதவிகளை வழங்கியவர் ஜெயலலிதா நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்



  • 17:11 (IST) 20 Aug 2022
    செப்டம்பர் 3ம் தேதி மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்

    வரும் செப்டம்பர் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சிலில் பங்கேற்க கேரளா செல்கிறார் ஸ்டாலின். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள்,அந்தமான்-நிக்கோபார் ஆகியவற்றைக் கொண்டது இந்த தென்மண்டல கவுன்சில்.



  • 16:53 (IST) 20 Aug 2022
    அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம் - ஓ.பி.ரவீந்திரநாத்

    சாமானியரும் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அதிமுக. தொண்டர்களை உயர்ந்தவர்களாக நினைத்தவர் எம்.ஜி.ஆர். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது தான் தொண்டர்களின் எண்ணம் என ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி கூறியுள்ளார்



  • 16:37 (IST) 20 Aug 2022
    2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே

    2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 162 ரன்களை ஜிம்பாப்வே அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது



  • 16:16 (IST) 20 Aug 2022
    நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் – போக்குவரத்து காவல்துறை

    சென்னையில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்



  • 15:57 (IST) 20 Aug 2022
    26/11 போன்று மும்பையில் தாக்குதலா?

    2008 நவம்பர் 26 தாக்குதலை போல மீண்டும் தீவிரவாத தாக்குதல் மும்பையில் நடக்கும் என பாகிஸ்தானை சேர்ந்த செல்போன் எண்ணில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு மெசேஜ் வந்துள்ளது. இது தொடர்பாக மும்பை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.



  • 15:37 (IST) 20 Aug 2022
    பரந்தூரில் புதிய விமான நிலையம்: 'நிலம் வழங்குபவர்களுக்கு கூடுதல் இழப்பீடு' - அமைச்சர் தங்கம் தென்னரசு

    "சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழகம் பல மடங்கு தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும்.

    பரந்தூர் சுற்றுவட்டார பகுதியை மேம்படுத்த உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்படும். புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை விலையைவிட கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும்"

    என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



  • 14:43 (IST) 20 Aug 2022
    சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது!

    சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது!

    உதகையில் 4 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தையை பிடித்த வனத்துறை அதிகாரிகள், அதை வனப்பகுதியில் விடுவித்தனர்.



  • 14:38 (IST) 20 Aug 2022
    ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

    ராமஜெயம் கொலை வழக்கில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

    இந்நிலையில், 10 மாவட்டங்களில் உள்ள வெர்சா கார் உரிமையாளரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளது



  • 13:57 (IST) 20 Aug 2022
    ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீடு

    நெல்லையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு அஞ்சல் தலை வெளியீடு

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பெற்றுக் கொண்டார்



  • 13:56 (IST) 20 Aug 2022
    போலி நம்பர் பிளேட்- 4 நாட்களில் 828 வழக்குகள் பதிவு

    போலி நம்பர் பிளேட், நம்பர் பிளேட் இல்லாமல் சென்றதாக 4 நாட்களில் 828 வழக்குகள் பதிவு

    செயின் பறிப்பு, பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் நம்பர் பிளேட் இல்லாமல் செல்கின்றனர் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர்



  • 13:54 (IST) 20 Aug 2022
    மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வைத்து சோதனை நடத்திய நிலையில் புரளி என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு



  • 12:53 (IST) 20 Aug 2022
    போதை பொருள் ஒழிப்பு - டிஜிபி ஆலோசனை

    போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை

    சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு



  • 12:52 (IST) 20 Aug 2022
    லிஃப்டில் சிக்கிய அதிகாரிகள்

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மின் தூக்கியில் பழுது

    அதிகாரிகள் உட்பட 10 பேர் லிஃப்டில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு

    லிஃப்டில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்பு



  • 12:51 (IST) 20 Aug 2022
    ஸ்மார்ட் சிட்டி முறைகேடு - முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

    அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார்

    ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்



  • 11:52 (IST) 20 Aug 2022
    சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 4 பேர் காயம்

    சென்னை: எம்ஜிஆர் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - 4 பேர் காயம்

    நாட்டு வெடிகுண்டு வீசியதாக 4 பேர் கைது - 5 பேருக்கு வலைவீச்சு

    கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீச்சு என விசாரணையில் தகவல்



  • 11:45 (IST) 20 Aug 2022
    கேரள ஆளுநா் மீது குற்றச்சாட்டு

    கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் மற்றும் இடதுசாரி முன்னணி அரசுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆரிஃப் முகமது கான், இடதுசாரி முன்னணி அரசைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.



  • 11:26 (IST) 20 Aug 2022
    மதுக்கடைகள் அகற்றும் பணி

    கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள மதுக்கடைகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்.



  • 11:02 (IST) 20 Aug 2022
    நாட்டு வெடிகுண்டு வீச்சு

    சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசியதில் 4 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் 5 பேரை தேடி வருகின்றனர்.



  • 10:35 (IST) 20 Aug 2022
    கலந்தாய்வு தொடங்கியது

    பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 110 இடங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.



  • 10:32 (IST) 20 Aug 2022
    ராஜீவ் பிறந்தநாள்.. ராகுல் ட்வீட்

    இன்று ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாளைமுன்னிட்டு, அவரது மகன் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், “அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன், என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டுக்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 10:05 (IST) 20 Aug 2022
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 64 உயர்ந்து 38,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 10:03 (IST) 20 Aug 2022
    இந்தியாவில் மேலும் 13,272 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 13,900 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.



  • 09:33 (IST) 20 Aug 2022
    சிறுத்தை சிக்கியது

    உதகை அருகே 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் விட வனத்துறை முடிவு செய்துள்ளது.



  • 09:02 (IST) 20 Aug 2022
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி-20 என இரண்டு தொடர்களுக்கும், ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்படுவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.



  • 09:02 (IST) 20 Aug 2022
    குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்

    ராஜஸ்தானில் 1.35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான இலவச இணைய வசதியுடன், இலவச ஸ்மார்ட்போன் மாநில அரசு முடிவு செய்துள்ளது.



  • 09:02 (IST) 20 Aug 2022
    ராஜிவ் காந்தி பிறந்தநாள்

    ராஜிவ் காந்தியின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.



  • 09:00 (IST) 20 Aug 2022
    கேரளாவில் மீண்டும் கனமழை

    கேரளாவில் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment