Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
சிலிண்டர் விலை குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 36.50 காசுகள் குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. அதே ரூ. 1,068. 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
கோவை- சேப்பாக் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிப்பு

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி கோவையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை இருந்த காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் 2022
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். உணவு, தங்குமிடங்கள் குறித்து, போட்டி ஏற்பாட்டாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மேலும் பாலஸ்தீனை சேர்ந்த இளம் வீராங்கனை ராண்டாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து நன்றாக விளையாடும்படி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர் ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வருவதும் பாராட்டுக்குரியது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்துக்கான சான்றிதழை எதிர்த்து தணிக்கை குழு முன் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தணிக்கை குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாததால், தணிக்கை குழுவில் மேல்முறையீடு செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 5ம் தேதி நடத்த இருந்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒத்திவைத்தது. முதல்வர் உடனான சந்திப்புக்கு பின் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்றைய ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் மங்கோலிய வீரர் தம்பசுரன்-ஐ தோற்கடித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த எஎன்.டி. ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது. என்.டி. ராமாராவின் மகள் மகேஸ்வரி மரணம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணி, கடந்த 3 நாட்களாக எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளையும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்துள்ளனர். இந்திய பி பிரிவு அணியில் குகேஷ், சரின் நிஹல், பிரக்ஞானந்தா, சத்வானி இடம்பெற்றுள்ளனர். தொடக்கம் முதலே இந்திய பி அணி செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார். இலங்கை அகதிகள் முகாமை கூடலூர் கிராமத்தில் அமைக்க கோரிய வழக்கில், பொதுப்பணித்துறை, மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“2024 பொதுத்தேர்தலிலும் நரேந்திர மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் இன்று ஒரேநாளில் 103 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 41 வயது பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அமெரிக்காவில் இருந்து பழனிக்கு திரும்பியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது
மக்களவையில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது. இதற்காக மக்களவையில் 4 எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை குறித்து இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு பின் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்
சென்னை பரந்தூர் பகுதியில் 2ஆவது விமான நிலையம் அமைய உள்ளது என மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார்
சென்னை மாநகர இணை காவல் ஆணையர் பிராபாகரனுக்கு பதவி உயர்வு அளிக்கபட்டுள்ளது. அவரை திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு . இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் – ஜெயக்குமார்
அதிமுக சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தெரியவில்லை , தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்துக்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் . அமல்படுத்த தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
புதுக்கோட்டை தேர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம். காயமடைந்த 6 பேருக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கினார் அமைச்சர் சேகர் பாபு.
தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்புகள் பங்கேற்பு .ஈபிஎஸ் தரப்பில், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பு ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பு.
குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு. மத்திய சுகாதார அமைச்சகம், நிதி ஆயோக் உறுப்பினர் உள்ளிட்டோர் குழுவிற்கு தலைமை தாங்குவார்கள் என அறிவிப்பு. நோய் தொற்று குறித்து ஆராய்ந்து வழிகாட்டுதல்களை வழங்க குழு அமைத்து உத்தரவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 4,795 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8000 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும்.
வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் எந்நேரத்திலும் தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதால், வைகை ஆற்றில் குளிக்கவோ இறங்க வேண்டாம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள், விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ சூட் எடுக்க நிரந்தர தடை விதித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,464 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 1.43 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்
சேலம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121 அடியை எட்டியதால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளபுரம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காமன்வெல்த் ஆடவர் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு திரெளபதி முர்மு, மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.
பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் நடைபெறுகிறது. விளையாட்டு பிரிவுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகிற 7ஆம் தேதி வரை நடைபெறும்.
மும்பை பத்ரா சால் நில ஊழல் வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்தது.
பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர http://tnmedicalselection.org, http://thhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலம், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.