/tamil-ie/media/media_files/uploads/2023/06/rn-ravi-1200-1.jpg)
ஆளுனர் ஆர்.என். ரவி
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக, ராகுல் காந்தி இன்று (ஜூன் 29) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமூக அமைப்புகளையும் சந்தித்து ராகுல் காந்தி பேச உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:30 (IST) 29 Jun 2023ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை - அமைச்சர் ரகுபதி
அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
- 21:37 (IST) 29 Jun 2023மோடி அரசு சொல்வதை அப்படியே கேட்டு செய்வது ஆளுநர் ரவியின் வழக்கமாகிவிட்டது - கே.பாலகிருஷ்ணன்
இந்திய அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்ற எந்த கவலையும் இல்லை. மோடி அரசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டு செய்வதுதான் ஆளுநர் ரவியின் வழக்கமாகிவிட்டது என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்
- 21:05 (IST) 29 Jun 2023நீதிமன்றத்தில் திமுக முறையிடலாம் - வானதி சீனிவாசன்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியதை நீதிமன்றத்தில் திமுக முறையிடலாம் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
- 20:38 (IST) 29 Jun 2023தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - மு.க.ஸ்டாலின்
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. சட்ட ரீதியாக எதிர் கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
- 20:30 (IST) 29 Jun 2023அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - சபாநாயகர் அப்பாவு
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்
- 20:03 (IST) 29 Jun 2023காவல் அதிகாரிகள் மீது ஐ.ஜி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
திருச்சி, தொட்டியம் காவல் நிலையத்தில் பெண், குழந்தைகளிடம் 24 மணி நேரம் விசாரணை செய்த சம்பவத்தில், காவல் அதிகாரிகள் மீது ஐஜி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
- 20:02 (IST) 29 Jun 2023உளுந்தூர்பேட்டையில் மழை
உளுந்தூர்பேட்டை, வண்டிப்பாளையம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
- 19:45 (IST) 29 Jun 2023காஞ்சிபுரத்தில் கருணாநிதி சிலை திறப்பு
முன்னாள் முதல் அமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி சிலையை முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு காஞ்சிபுரம் பொன்னேரிகரையில் திறந்துவைத்தார்.
- 19:30 (IST) 29 Jun 2023தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ஆளுனர் மாளிகை
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
- 19:22 (IST) 29 Jun 2023பாக்கெட் லைட்டர் இறக்குமதி தடை: பியூஷ் கோயலுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி
பாக்கெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில், “இதனால் பல ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:49 (IST) 29 Jun 2023தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். டிஜபி சைலேந்திர பாபு இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.
- 18:38 (IST) 29 Jun 2023சிங்கத்தை தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்தார். 6 மாதம் சிங்கத்தின் பராமரிப்பு செலவுகளை சிவகார்த்திகேயன் கவனித்துக்கொள்வார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 18:18 (IST) 29 Jun 2023பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது புகார் மனு
காவல்துறை மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மீது புகார் மனு அளிக்கபட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவுக்கு வருபவர்கள் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தி உள்ளதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது.
- 18:15 (IST) 29 Jun 2023ப்ளே ஸ்டோரில் ரேப்பிடோ செயலி தொடர்பாக... தமிழக அரசு ஐகோர்டில் கோரிக்கை
ப்ளே ஸ்டோரில் இருந்து ரேப்பிடோ செயலியை நீக்கக் கூறி காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
- 18:09 (IST) 29 Jun 2023சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
7 முதல் 10 பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ளது என்று மனுவில் தெரிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17:38 (IST) 29 Jun 2023ஜூலை 13, 14 தேதிகளில் எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம்
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது.
சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் நடைபெற உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிர் அணியை கட்டமைப்பது குறித்து பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- 17:33 (IST) 29 Jun 2023பென்னாடத்தில் தூய்மை பணியாளர் மரணம்: எஸ்சி ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
கடலூர் பென்னாடத்தில் தூய்மை பணியாளர் மரணமடைந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் புகாரை அடுத்து தலைமைச் செயலாளர் டி.ஜி.பி கடலூர் ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- 17:02 (IST) 29 Jun 2023ஸ்டார் பிரியாணி என்ற பெயரை பயன்படுத்த தடை
ஆம்பூர் ஸ்டார் பிரியாணி ஹோட்டல் நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்கில் ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரை பயன்படுத்தி ஹோட்டல் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- 16:37 (IST) 29 Jun 2023ஹெலிகாப்டரில் சுராந்த்பூருக்கு சென்ற ராகுல்காந்தி
மணிப்பூர் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாதி வழியில் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மாநில அரசு அவருக்கு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்கு சென்றுள்ளார். அவருடன் ஹெலிகாப்டரில் உயர் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
- 16:12 (IST) 29 Jun 2023ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் என்னை சந்தித்தபோது, நிர்வாகம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தோம்; ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் புதுவை யூனியன் பிரதேசம்தான்; புதுச்சேரி முதலமைச்சரோடு இணைந்தே செயல்படுகிறேன்; 10ம் தேதிக்கு பிறகு விமான சேவை தொடங்கும்; விமான சேவை இல்லாததால் நானும் பாதிக்கப்படுகிறேன் என தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்
- 16:10 (IST) 29 Jun 2023காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி
கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் 'சாகர் கவாச்' ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடலோரக் காவல் படையினரே தீவிரவாதிகள் போல் வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனர்!
- 15:54 (IST) 29 Jun 2023பிஷ்னுபூர் பகுதியில் ராகுல் காந்தி சென்ற கார் தடுத்து நிறுத்தம்
மணிப்பூரின் பிஷ்னுபூர் பகுதியில் ராகுல் காந்தி சென்ற கார் தடுத்து நிறுத்தப்பட்டது; வன்முறையில் பாதித்து முகாமில் உள்ள மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தம்!
- 15:44 (IST) 29 Jun 2023ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை வழக்கில் 4 பேர் கைது
கடலூரில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாரதி, ராமானுஜம், முத்துலிங்கம், பாலமுருகன் ஆகிய 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்
- 15:06 (IST) 29 Jun 2023சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம் . அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிடம் நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவு
- 14:03 (IST) 29 Jun 2023ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம் . இம்பால் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் ராகுல்காந்தியின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
- 13:55 (IST) 29 Jun 2023புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு
புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு . ஆவின் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்: வாயுக் கசிவை நிறுத்த போராடி வரும் தீயணைப்புத்துறையினர்
- 13:54 (IST) 29 Jun 2023தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் . நாளையுடன் இறையன்பு ஐஏஎஸ்-ன் பதவிக்காலம் முடிவடைகிறது . நகராட்சி நிர்வாகம் - நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தலைமை செயலாளராக நியமனம்
- 13:40 (IST) 29 Jun 2023மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகை ஆசிரியருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின்
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறாக செய்தி வெளியிட்டதாக வழக்கு . மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகை ஆசிரியருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம் . ஒரு வாரம் ஆவடி காவல் நிலையத்திலும், மற்றொரு வாரம் திருப்பூர் காவல் நிலையத்திலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை
- 13:30 (IST) 29 Jun 2023மணிப்பூர் மாநிலம் சென்றடைந்தார் ராகுல்காந்தி
வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலம் சென்றடைந்தார் ராகுல்காந்தி . கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் சந்திக்க உள்ளார்
- 13:01 (IST) 29 Jun 2023'மஞ்சள் வீரன்' மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
"மஞ்சள் வீரன்"ஆக சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் டிடிஎஃப்
வாசனின் பிறந்த நாளன்று வெளியாகியுள்ள போஸ்டர் வைரல்
- 12:32 (IST) 29 Jun 2023உத்தரகாண்ட்டில் கடும் நிலச்சரிவு
உத்தரகாண்ட், சாமோலியில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு
நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளதாக தகவல் - மீட்பு பணிகள் தீவிரம்
- 12:16 (IST) 29 Jun 2023டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் - ஆலோசனை
டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்களில் மதுபானத்தை விற்பது குறித்து ஆலோசனை. கண்ணாடி பாட்டில்களை விட
டெட்ரா பாக்கெட்களில் மதுபானத்தை விற்றால் செலவு குறைவு என்பதால் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை
- 12:06 (IST) 29 Jun 2023டெல்லியில் அப்துல்கலாம் பெயரில் சாலை
டெல்லியில் அப்துல்கலாம் பெயரில் சாலை
ஒளரங்கசீப் சாலை அப்துல்கலாம் சாலையாக பெயர் மாற்றம்
- 11:49 (IST) 29 Jun 2023இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள்
ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந்திர சேகர் கெளா் என்பவர் ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்
- 11:36 (IST) 29 Jun 2023ஸ்ரீஐயப்பசாமி கோவிலில் குருபூஜை நடத்த அனுமதி
ராமநாதபுரம், கமுதியில் உள்ள முத்தையாபுரம் ஸ்ரீஐயப்பசாமி கோவிலில் குருபூஜை நடத்த அனுமதி
கோவிலுக்கு போடப்பட்டுள்ள பூட்டை அகற்றி, குருபூஜை நிகழ்வை அமைதியான முறையில் நடத்த உத்தரவு
சிவகங்கையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- 11:34 (IST) 29 Jun 2023காவல் துறையில் ட்ரோன் யூனிட் பிரிவு தொடக்கம்
காவலர்கள் ட்ரோன் மூலம் ரோந்து மேற்கொள்ளும் "ட்ரோன் யூனிட்" என்ற புதிய பிரிவு தொடக்கம்
சென்னை, அடையாறில் "ட்ரோன் யூனிட்" பிரிவை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு
ரூ.2 கோடி மதிப்புள்ள ஜெர்மனை சேர்ந்த அதிநவீன ட்ரோன்களும் ட்ரோன் யூனிட் பிரிவில் சேர்ப்பு
- 11:33 (IST) 29 Jun 2023பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சம்
பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சம் - ஸ்டாலின் பேச்சு
எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பின் ஏற்பட்ட அச்சத்தால் தான் பிரதமர் மோடி இறங்கி வந்து பேசுகிறார் - முதல்வர் ஸ்டாலின்
- 10:55 (IST) 29 Jun 2023திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான்
திமுகவினர் குடும்பம் குடும்பமாக அரசியல் நடத்தி வருவது உண்மைதான்; திமுகவினர் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடத்தி சிறைக்கு சென்றிருக்கிறோம்; தமிழ்நாடும், தமிழர்களும் கருணாநிதியின் குடும்பம் தான்- பிரதமர் மோடி திமுக நடத்துவது குடும்ப அரசியல் குறித்து பேசியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
- 10:55 (IST) 29 Jun 2023விளைவுகளை சந்திக்க நேரிடும்- அண்ணாமலை ட்வீட்
இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்- அண்ணாமலை ட்வீட்
- 10:09 (IST) 29 Jun 2023சந்திராயன் 3 ராக்கெட்
சந்திராயன் 3 ராக்கெட் ஜூலை 13ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- 10:09 (IST) 29 Jun 2023சவரனுக்கு ரூ. 72 குறைந்த தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்தது. தங்கம் கிராமுக்கு ரூ,5,437-க்கும், சவரன் ரூ. 43,496-க்கும் விற்பனையாகிறது.
- 10:09 (IST) 29 Jun 202330 மாணவர்கள் சஸ்பெண்ட்
குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து பட்டப்படிப்புகளில் சேர்ந்த புகாரில், நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 30 மாணவர்களும், 2 ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- 09:13 (IST) 29 Jun 2023‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை
கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
தமிழ்நாட்டின் பழவேற்காடு கடற்பகுதியில் இருந்து தென்கோடி கடற்பகுதியான நீரோடி வரை இந்த ஒத்திகை கடலோர காவல்படையினரால் நடத்தப்படுகிறது
- 09:10 (IST) 29 Jun 2023காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு
பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் புதன்கிழமையன்று பொதுமக்களை சந்திக்க உத்தரவிட்டுள்ளது.
- 08:17 (IST) 29 Jun 2023இன்று பக்ரீத் பண்டிகை
இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல், ஈத்கா மைதானங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
- 08:17 (IST) 29 Jun 2023எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சனிக்கிழமைகளான ஜூலை 8,15, 22, 29, ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ஞாயிற்றுக்கிழமைகளான ஜூலை 9, 16, 23, 30, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
- 08:17 (IST) 29 Jun 2023தக்காளி விலை குறைந்தது
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில், வரத்து அதிகரிப்பின் காரணமாக தக்காளி விலை 50 ரூபாயாக குறைந்தது.
கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் வந்த தக்காளி, இன்று 700 டன் வந்துள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு 60 முதல் இருந்து 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.