Advertisment

Tamil Breaking News Highlights: செப்.17 இல் மிலாது நபி: தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

Tamil Nadu News Update Today- 4 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mawlid indian express

Tamil news today live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மிலாது நபி

மிலாது நபி செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மிலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும்.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு    

  • Sep 04, 2024 22:15 IST
    முஸ்லீம்களுக்கு எதிராக நடவடிக்கை: அசாம் முதல்வருக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்

    அசாம் மாநிலத்தின் பா.ஜக. முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்து வருகிறார். அவரது பேச்சுக்கள் பொறுப்புள்ள முதலமைச்சர்களின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் அவருக்கு பல நேரம் கண்டணங்கள் வந்துகொண்டு இருக்கிறது. பிழைப்புக்காக அங்கு சென்ற மேற்குவங்க முஸ்லீம்களை பங்களாதேஷி என்று பதட்டத்தை தூண்டி அவர்களை பயமுறுத்தவது அவரின் நடவடிக்கை என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.



  • Sep 04, 2024 20:22 IST
    புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

    நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், அவர்களின் விசை படகையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் காங்கேசம்துறை கடற்பகுதி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.



  • Sep 04, 2024 19:11 IST
    'லத்தி வைத்திருக்க வேண்டும்' - போலீசாருக்கு எச்சரிக்கை!

     

    “பணியில் உள்ள காவலர்கள் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்” என்று பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



  • Sep 04, 2024 19:03 IST
    நடிகர் விஜய்க்கு அட்லீ ,லோகேஷ் கனகராஜ் வாழ்த்து 

    நடிகர் விஜய் நடிக்கும் கோட்  திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குனர்கள் அட்லீ ,லோகேஷ் கனகராஜ் தங்களது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 



  • Sep 04, 2024 18:46 IST
    "நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை" - நடிகை குஷ்பூ பேச்சு 

    "பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள் வெளியிடப்படும். நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை. எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, ஏன் சினிமாவை மட்டும் சொல்கிறார்கள். எல்லா துறைகளிலும் கமிட்டி தேவைப்படுகிறது என்று தான் சொல்லுவேன். நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை" என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளார். 



  • Sep 04, 2024 18:45 IST
    பிக் பாஸ் 8 - தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

    பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 7 சீசன்களை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் விலகுவதாக கூறினார்.கமல்ஹாசனுக்கு பதில் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிக் பாஸ் 8 சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Sep 04, 2024 18:21 IST
    ஜாபர் சாதிக் மனு - ஐகோர்ட் உத்தரவு 

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி ஜாபர் சாதிக் மனு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறை, திகார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 04, 2024 18:20 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கில், "கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கள்ளச்சாராய வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 04, 2024 18:04 IST
     5 ஆண்டு தடை - தீர்மானம்

    "பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை கமிட்டி செய்யும். பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டி மூலம் புகார்களை அளிக்கலாம். நேரடியாக ஊடகங்களில் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. 

     



  • Sep 04, 2024 17:48 IST
     ஓய்வூதியம் ரத்து -  மசோதா நிறைவேற்றம்

    கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் ஓய்வூதியம் ரத்து என்கிற ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

     



  • Sep 04, 2024 17:44 IST
    மருத்துவமனைகளில் பாதுகாப்பு - மாநில அரசுகளுக்கு உத்தரவு 

    மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்யும் விவகாரத்தில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி-களுக்கு, மத்திய சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். 



  • Sep 04, 2024 16:59 IST
    தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 04, 2024 16:20 IST
    THE GOAT பட சிறப்பு காட்சிக்கு அனுமதி

    THE GOAT படத்திற்கு நாளை மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது



  • Sep 04, 2024 16:03 IST
    வயநாடு நிலச்சரிவு: ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ராகுல் காந்தி

    வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக தனது ஒரு மாத சம்பளம் ரூ.2.3 லட்சத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வழங்கினார்



  • Sep 04, 2024 15:43 IST
    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்: குண்டு எறிதலில் இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46) இறுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய சாதனை படைத்தார் 



  • Sep 04, 2024 15:34 IST
    நித்தியானந்தா மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

    நாகை, திருவாரூரில் உள்ள மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து பெண் சீடருக்கு பொது அதிகாரம் வழங்கி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில், காணொலியில் ஆஜராக கூறியதற்கு பதிலளிக்காததால் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 04, 2024 15:16 IST
    காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் - அமைச்சர் எ.வ.வேலு

    தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான பரனூர், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நெல்லை புறநகர் பைபாஸ் சாலைக்கான நில எடுப்பு பணிகள் 90% முடிவடைந்துவிட்டன. விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என நெல்லையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்



  • Sep 04, 2024 15:15 IST
    விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘THE GOAT' திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது



  • Sep 04, 2024 14:53 IST
    சென்னையில் அரசு முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை 

    சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) இன்று காலை விடுதி அறையில் சடலமாக கண்டெடுப்பு - தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Sep 04, 2024 14:49 IST
    கார் ரேசுக்கு உடனடியாக அனுமதி... விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏன் - தமிழிசை கேள்வி

    ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தபின் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “காவல்துறை அதிகாரிக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. கார் ரேசுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏன்? விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள். விஜய்யின் மாநாட்டைப் பார்த்து அச்சம் ஏன்” என்று தமிமிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.



  • Sep 04, 2024 14:01 IST
    நாமக்கல் எருமப்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் மனிதக் கழிவு - இ.பி.எஸ் கண்டனம்

    நாமக்கல் எருமப்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் மனிதக் கழிவு பூசியவர்களை கைது செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். வேங்கைவயலில் உரிய நீதியை நிலைநாட்டியிருந்தால், இதுபோன்ற சம்பவம் தொடர்ந்திருக்காது என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்லார்.



  • Sep 04, 2024 13:28 IST
    ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சீனா நூடுல்ஸ்... முடிவு வந்ததும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்  உறுதி

    திருச்சியில் சைனீஸ் புல்டாக் நூடுல்சை சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன்: “சீனா நூடுல்ஸ் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது; முடிவு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 04, 2024 13:24 IST
    உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு; அத்துமீறிய போலீச் எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

    தருமபுரி அரசுமருத்துவமனை அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஷூவைக் கழற்றி உணவக உரிமையாளரை தாக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சி.சி.டி.வி வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தியதில் எஸ்.எஸ்.ஐ அதிகாரி அத்துமீறியது உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Sep 04, 2024 12:56 IST
    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

    TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.



  • Sep 04, 2024 12:53 IST
    கோட் படம்: பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட்

    விஜய் படத்திற்கு இலவச டிக்கெட் நடிகர் விஜய் நடித்து நாளை வெளியாக உள்ள `கோட்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அன்னதானத்துடன் பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட்



  • Sep 04, 2024 12:52 IST
    கொலை வழக்கு - முதல் குற்றவாளி நடிகர் தர்ஷன்

    கொலை வழக்கு - முதல் குற்றவாளி நடிகர் தர்ஷன்"

    ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    முதல் குற்றவாளி பட்டியலில் நடிகர் தர்ஷன் பெயர் சேர்ப்பு

    பெங்களூரு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார்

    231 சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில், 3,991 பக்கங்கள் கொண்ட குற்ற குற்றப்பத்திரிகை தாக்கல்

    வரும் 9ஆம் தேதியுடன் தர்ஷனின் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ள நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல்



  • Sep 04, 2024 12:19 IST
    ராகுல் உடன் வினேஷ், புனியா சந்திப்பு 

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் சந்திப்பு 



  • Sep 04, 2024 12:17 IST
    எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

    டெங்கு - எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

    கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு



  • Sep 04, 2024 11:56 IST
    அன்பில் மகேஷ் ஆலோசனை

    ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் - ஆலோசனை

    எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

    அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை



  • Sep 04, 2024 11:45 IST
    2 நாள் பயணமாக புருனே சென்றுள்ள மோடி

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் சந்திப்பு

    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடி



  • Sep 04, 2024 11:44 IST
     சீமானுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

     சீமானுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை தொடக்கம்  



  • Sep 04, 2024 10:38 IST
    சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

    2024-2025ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), 4 ஆண்டு உணவுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பி.டெக். படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது



  • Sep 04, 2024 10:02 IST
    இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில்

    அஷ்யூரண்ட் நிறுவனத்துடன், இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம், சிகாகோவில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து



  • Sep 04, 2024 09:56 IST
    கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்



  • Sep 04, 2024 09:35 IST
    மாரியப்பன் தங்கவேலுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன். 3வது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்

    ஸ்டாலின்



  • Sep 04, 2024 09:00 IST
    சிகாகோவில் பாடல் பாடிக் கொண்டே சைக்கிளில் பயணித்த மு.க.ஸ்டாலின்



  • Sep 04, 2024 08:57 IST
    பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது

    அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

    இச்சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர்



  • Sep 04, 2024 08:45 IST
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 17,000 கன அடி நீர்வரத்து

    தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து, இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 17,000 கன அடியாக உள்ளது.



  • Sep 04, 2024 08:12 IST
    சரத்குமார் விளக்கம்

    என் மனைவிக்கு கடந்து போகக்கூடிய சக்தி இருந்ததால், இந்த புகாரை அப்போதே சொல்லாமல் கடந்து போயிருக்கலாம்.

    கேரளாவில் படப்பிடிப்பு ஒன்றில் கேரவனில் கேமரா வைக்கப்பட்டிருந்ததாக ராதிகா குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதுபற்றி அப்போதே ஏன் புகார் கூறவில்லை? என்ற கேள்விக்கு சரத்குமார் விளக்கம்



  • Sep 04, 2024 07:54 IST
    கஞ்சா ரெய்டு: கல்லூரி மாணவர் தற்கொலை

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

    சில தினங்களுக்கு முன் கஞ்சா ரெய்டு நடத்தியபோது, மாணவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடந்தது.



  • Sep 04, 2024 07:47 IST
    செம்மஞ்சேரியில் பயங்கர விபத்து: 4 பேர் உடல்நசுங்கி பலி

    கிழக்கு கடற்கரை சாலையின் கோவளம் அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர் வாகனத்தில் கார் மோதிய பயங்கர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    காரை மீட்கும் பணியில் கேளம்பாக்கம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



  • Sep 04, 2024 07:46 IST
    குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

    குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.



  • Sep 04, 2024 07:46 IST
    தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம். மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    10 மீனவர்களை, வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு



  • Sep 04, 2024 07:45 IST
    டிராக்மேன்களுக்கு எந்த மதிப்பும் இல்லை: ராகுல் காந்தி

    இந்திய ரயில்வே துறையை பாதுகாப்பாகவும், உயிர்ப்புடனும் வைத்திருக்கும் டிராக்மேன்களுக்கு பதவி உயர்வும் இல்லை, அவர்களுக்கென எந்த மதிப்பும் இல்லை.

    இந்திய ரயில்வே துறையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஊழியர்கள் டிராக்மேன்கள். அப்படிப்பட்ட டிராக்மேன்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட டிராக்மேன்கள் பணியின் போது உயிரிழக்கிறார்கள்.

    இந்திய ரயில்வே துறையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட ஊழியர்கள் டிராக்மேன்கள். அப்படிப்பட்ட டிராக்மேன்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

    - ராகுல் காந்தி X தளத்தில் பதிவு                         



  • Sep 04, 2024 07:45 IST
    பாலியல் குற்றச்சாட்டு: நிவின் பாலி அறிக்கை

    பெண் ஒருவரை நான் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவறான செய்திகளை பார்க்க நேர்ந்த்து. இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன்; என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தியவர்களை வெளி கொண்டு வர தேவையான நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி, என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்வேன்”
    - நிவின் பாலி அறிக்கை    



  • Sep 04, 2024 07:44 IST
    The G.O.A.T. திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கண்டிஷன்

    The G.O.A.T. பட ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது த.வெ.க. கட்சி கொடி அல்லது பெயரை பயன்படுத்தக் கூடாது என நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைமை அறிவுறுத்தல்

    செப்டம்பர் 5ம் தேதி ‘The G.O.A.T.’ திரைப்படம் வெளியாகிறது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment