Latest Tamil News : உதவி ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 66 பணியிடங்களுக்கான ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வினை, சுமார் இரண்டரை லட்சம் பேர் இன்று எழுதுகின்றனர். காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், 9.15 மணிக்கே மையத்துக்குத் தேர்வு எழுதுபவர்கள் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. OMR தாளில் விடையைக் குறிப்பதற்கு, கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தெரியாத கேள்விகளுக்கு "E" என்ற கட்டத்தை Shade செய்ய வேண்டும், விடையளித்த மொத்த கேள்விகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 39வது நாளாக இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் நாளை நடத்தவுள்ள பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தால், குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர்களில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். வருகிற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று ராஜபாட்டையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கவுள்ள நிலையில், விவசாயிகளின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், குமரிக் கடல் பகுதியில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil News Today : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
அஞ்சாநெஞ்சன்… உண்மை உடன்பிறப்புகளுடன் ஆலோசனை” என்ற பெயரில் மதுரையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மு.க.அழகிரி, " நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன். நான் எந்த முடிவை அறிவித்தாலும், நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது, ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 22,500 பேருக்கு , கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை நிபுணர் குழு ஆய்வு செய்து, அவசர சூழலுக்கு கட்டுப்பாடுகளுடன் இந்த தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை செய்தது. இந்நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் பரிசோதனையும் தொடரும்.
இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள் இரண்டு முறை போடப்பட வேண்டும். இவைகள் அனைத்தையும் 2-8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பாதுத்து வைத்திருக்க வேண்டும்.
என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் இந்திய அளவிலும் உலகளவிலும் சிறப்பாக இருந்தது.
இந்த நிறுவனம் எலிகள், முயல்கள் போன்ற பல்வேறு விலங்கு இனங்களில் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தரவை உருவாக்கி ஆய்வுகளை நடத்தியது. அனைத்து தரவுகளும், மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்துடன் பகிரப்பட்டது. முதல் மற்றும் 2ம் கட்ட சோதனைகள், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, சிறந்த எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை நிருபித்தன. 3ம் கட்ட பரிசோதனை, இந்தியாவில் 25,800 தன்னார்வலர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நம் நாட்டில் 1600 பங்கேற்பாளர்களிடம் 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த இந்திய சீரம் மையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டன. இது வெளிநாட்டு ஆய்வுகளுடன் ஒப்பிடும் வகையில் இருந்தது கண்டறியப்பட்டது. விரிவான ஆய்வுக்குப்பின், சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு, சில ஒழுங்குமுறை நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்நிறுவனம் நம் நாட்டில் மேற்கொள்ளும் பரிசோதனை தொடரும்.
கோவிட்-19 தடுப்பூசிகளை கட்டுப்பாட்டுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதித்தது குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) விடுத்துள்ள அறிக்கை
அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அறிக்கையை இந்திய சீரம் மையம் தாக்கல் செய்தது. வெளிநாட்டு மருத்துவ ஆய்வுகளிலிருந்து, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 23,745 பங்கேற்பாளர்களிடமிருந்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் செயல்திறன் தரவை சீரம் மையம் சமர்ப்பித்தது. ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறன் 70.42 சதவீதம் என கண்டறியப்பட்டது.
A momentous achievement for India!
DCGI has granted approval to COVID vaccines of @SerumInstIndia and @BharatBiotech.
I salute our very talented and hardworking scientists for making India proud.
Congratulations to PM @narendramodi ji for striving towards a COVID free India.
— Amit Shah (@AmitShah) January 3, 2021
இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில், " இந்தியாவுக்கு ஒரு முக்கியமான சாதனை! இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவை பெருமைபட வைத்த, நமது திறமையான, கடினமாக உழைக்கும் விஞ்ஞானிகளை வணங்குகிறேன் " என்று பதிவிட்டார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்: “முதல்வர் மக்களை சந்தித்து வருவதைப் போல, எதிர்க்கட்சி தலைவரும் மக்களை சந்திக்கிறார்; திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை தடுக்க வேண்டுமென்ற சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர்; நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எவ்வாறு வெற்றி பெற்றதோ அதே போல சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சி ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தடுப்பூசிகளை தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக் ஆகிய 2 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தடுப்ப்பூசிகளும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்கலாம்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்காக ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ-டெக் நிறுவனம், தன்னுடைய தயாரிப்பான கோவக்சின் தடுப்பூசியை, அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு விண்ணப்பித்திருந்தது. இதனைப் பரிசீலித்த மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு, நிபந்தனைகளுடன் அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கலாம் எனப் பரிந்துரை வழங்கியுள்ளது.
சோறு வீணாவதைத் தடுக்க இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் பழைய சோற்றை முன்னிலைபடுத்தி இந்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
குடல் நோய்கள் தொடர்பான சிகிச்சைக்கு பழைய சோரின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய 2.7 கோடி ரூபாய் செலவில் 600 மனிதப் பரிசோதனைகளை உள்ளடக்கிய ஒரு ஆராய்ச்சி திட்டத்தை மாநில சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights