scorecardresearch

Tamil news Highlights: குஜராத் மோர்பியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து; 120 பேர் உயிரிழப்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 30 Oct 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news Highlights: குஜராத் மோர்பியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து; 120 பேர் உயிரிழப்பு

Petrol and Diesel Price:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது

கர்நாடக ரத்னா விருது

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கும் விழா நவம்பர் 1ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த  விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார்.

இன்றைய ஆட்டம்

ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12, பிரிஸ்பேனில் நடக்கும் ஆட்டத்தில் வங்கதேசம் – ஜிம்பாப்வே அணிகள் மோதல்.

Live Updates
22:37 (IST) 30 Oct 2022
குஜராத் பாலம் விபத்து; பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

குஜராத் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட தொங்கும் பாலம் இடிந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்

22:18 (IST) 30 Oct 2022
குஜராத் பாலம் இடிந்து விபத்து – நிவாரணம் அறிவிப்பு

குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நிவாரணம் அறிவித்துள்ளார்

21:28 (IST) 30 Oct 2022
பாலம் விபத்தில் 35 பேர் மரணம்

குஜராத்தின் மோர்பி பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

20:14 (IST) 30 Oct 2022
குஜராத் மோர்பியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்து; பலர் காயம்

குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. 400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கியதாக அச்சம் நிலவுகிறது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்

20:07 (IST) 30 Oct 2022
கல்லூரி மாணவன் உயிரிழந்த விவகாரம்; காதலியே விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்

தமிழக – கேரள எல்லையில் கல்லூரி மாணவன் ஷரோன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில், காதலியே விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக காதலி கிரீஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

விஷம் குடித்த பிறகும், யாரிடமும் சொல்ல வேண்டாம் என காதலன் கேட்டுக்கொண்டதாக கிரீஷ்மா தெரிவித்துள்ளார்

19:22 (IST) 30 Oct 2022
தன் சொந்த கட்சி தேவைக்காக மாநிலத்தை பதற்றமாக வைத்துள்ளார் அண்ணாமலை – தி.மு.க

பாதுகாப்பை அதிகப்படுத்த மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜமேசா முபின் குறித்த எந்த கடிதமும் தமிழக அரசுக்கு மத்திய அரசால் அனுப்பப்படவில்லை. மத்திய அரசின் அறிக்கையை அண்ணாமலைக்கு ஒரு அதிகாரி வழங்கியது போலவே, எனக்கும் வழங்கப்பட்டது. திமுக மீது அண்ணாமலை வைக்கும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரமில்லை. தன் சொந்த கட்சி தேவைக்காக மாநிலத்தை பதற்றமாக வைத்துள்ளார் அண்ணாமலை என திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்

18:40 (IST) 30 Oct 2022
ராமஜெயம் கொலை வழக்கு.. 12 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை செய்யவுள்ள 12 ரவுடிகளின் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ் உள்ளிட்ட 12 பேர் உள்ளனர்.

இவர்களிடம் போலீசாரின் சிறப்பு புலன் விசாரணை குழு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவுள்ளனர்.

18:28 (IST) 30 Oct 2022
முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது ஜெயந்தி மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

18:09 (IST) 30 Oct 2022
தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

17:53 (IST) 30 Oct 2022
அதிமுக அணிகள் இணையுமா? டி.டி.வி. தினகரன் பதில்

அதிமுக அணிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “கடந்த காலங்களில் யாரால் இணைக்கப்பட்டார்களோ? அவர்கள் மனது வைத்தால் முடியும்” என்றார்.

17:32 (IST) 30 Oct 2022
வழக்கை திசை திருப்ப என்ன கேட்டுவிட்டோம்.. அண்ணாமலை அறிக்கை

கோவை கார் வெடிப்பு வழக்கை திசை திருப்ப என்ன கேட்டுவிட்டோம். தமிழக டிஜிபி தன்னை சர்வாதிகாரியாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

இது காவல்துறையா அல்லது அறிவாலயத் துறையா? எனவும் அண்ணாமலை அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

17:11 (IST) 30 Oct 2022
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா திணறல்

டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டத்தில் 8 ஓவரில் 4 விக்கெட் இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது.

15:50 (IST) 30 Oct 2022
டி20 உலககோப்பை: நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

டி20 உலககோப்பை போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த நெதர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது. 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

15:50 (IST) 30 Oct 2022
தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்; தேவர் ஜெயந்தியை ஒட்டி மோடி தமிழில் ட்வீட்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி: “பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு உட்பட தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். தேவரின் கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

15:21 (IST) 30 Oct 2022
மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 கல்லூரி மாணவர்கள்; தேடும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் ஆற்றில் குளிக்க 10 மாணவர்கள் இறங்கிய நிலையில், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

14:59 (IST) 30 Oct 2022
பா.ஜ.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர்; ஆனால் ஆளுநர் ரவி ஒரு அரசியல் கட்சி பிரதிநிதி போல் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார். எடப்பாடி எப்படி மோடி முன் கைகட்டி வாய் பொத்தி நின்றாரோ, அப்படியே தமிழக முதல்வர் ஸ்டாலின் நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள்; அதனால்தான் இந்த ஆட்சியின் மீது போர் தொடுக்கிறார்கள்.” என்று கூறினார்.

14:09 (IST) 30 Oct 2022
சென்னையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள்; போலீஸ் நடவடிக்கை

சென்னை, நந்தனத்தில் இளைஞர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தனர். இதனால், அங்கே இருந்த போலிசார் 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்டனர்.

13:44 (IST) 30 Oct 2022
கீழ்பவானி வாய்க்கால் கரை பள்ளம் விழுந்து சேதமடைந்ததால் பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை பள்ளம் விழுந்து சேதமடைந்ததால் பரபரப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

13:18 (IST) 30 Oct 2022
20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 20 மாவட்டங்களுகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்ல மையம் தெரிவித்துள்ளது.

13:16 (IST) 30 Oct 2022
கோவையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கோவையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கார் வெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே சோதனை

கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை சுற்றி சோதனை

கோயிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

12:26 (IST) 30 Oct 2022
முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா

மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள

முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை

12:24 (IST) 30 Oct 2022
எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான குழு ஆய்வு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் என்.ஐ.ஏ. தனிப்படை போலீசார் விசாரணை

கார் வெடித்த இடத்தில் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான குழு ஆய்வு

12:23 (IST) 30 Oct 2022
‘தென்னகத்து போஸ்’ தேவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியைதை

கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்

'தென்னகத்து போஸ்' பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

11:51 (IST) 30 Oct 2022
மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அண்ணாமலை மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா

மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை

11:49 (IST) 30 Oct 2022
பா.ஜ.க தலைமையை மகிழ்விக்க சட்டத்தை எதிர்த்து பேசுகிறாரா?

“ஆளுநர் ஆர்.என்.ரவி பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜக தலைமையை மகிழ்விக்க அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்து பேசுகிறாரா?”

“அப்படி பேசுவதாக இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேசட்டும்”

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம்

11:46 (IST) 30 Oct 2022
வெள்ளி கவசம் வழங்கி ஓ.பி.எஸ் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா

தேவர் சிலைக்கு 10.4 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கி ஓ.பி.எஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக வெள்ளி கவசம் வழங்குவதாக அறிவிப்பு

11:16 (IST) 30 Oct 2022
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா

சென்னை, நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை

முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் மரியாதை

10:32 (IST) 30 Oct 2022
வைரமுத்து கோரிக்கை

மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

10:32 (IST) 30 Oct 2022
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்

“தேசியத்தையும், தெய்வீகத்தையும் கண்ணாக காத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குவோம்” தேவர் ஜெயந்தியை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்

10:31 (IST) 30 Oct 2022
தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

10:05 (IST) 30 Oct 2022
5 மாவட்டங்களில் கனமழைக்கு

அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்

09:54 (IST) 30 Oct 2022
தேவர் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் மரியாதை

09:20 (IST) 30 Oct 2022
தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை

மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை

09:19 (IST) 30 Oct 2022
முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை, கிண்டியில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை முத்துராமலிங்க தேவர் தொலைநோக்கு தேசியவாதி, சமூக சீர்திருத்தவாதி என ஆளுநர் புகழாரம்

Web Title: Tamil news today live today match devar statute ministers honour rain update