News Highlights: வாக்காளர் பட்டியல் திருத்தம்; தமிழகத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்

Tamil News : பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

By: Nov 4, 2020, 7:29:23 AM

Tamil News Today : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம். உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம்.அமைச்சர்கள் அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழு கடிதம்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் 2ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ம் கட்ட வாக்குப்பதிவில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் .

ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். பல்கலைக் கழகத்தில் ஈரானிய புத்தக கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, அரசு அதிகாரிகள் வருகை தர இருந்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாதி திடீரென நுழைந்த சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், மாணவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:00 (IST)03 Nov 2020
அதிமுகவில் பாஜக அணி உள்ளது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

விருதுநகர் பொதுக்கூட்டத்தில் காணொளி வழியாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அரட்டல் உருட்டல் செய்யும் அமைச்சராகவே ராஜேந்திர பாலாஜி வலம் வௌர்கிறார். அதிமுகவில் பாஜக அணி என்று ஒன்று உள்ளது. அதில் முக்கிய நபர்களாக ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் உள்ளனர்” என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

20:56 (IST)03 Nov 2020
பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணா காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “அன்பும் அடக்கமும் எளிமையும் இறைப்பற்றும் கொண்டவர் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணா; குறிப்பாக வயலின் இசையில் நாட்டம் கொண்டு பல சாதனைகள் புரிந்தவர்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

19:55 (IST)03 Nov 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,435 பேருக்கு கொரோனா; 31 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 31 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 2,707 பேர் குணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19:51 (IST)03 Nov 2020
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க 4 நாட்கள் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது குறித்து நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

19:47 (IST)03 Nov 2020
தமிழக மாவோயிஸ்ட் நபர் கேரளாவில் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கேரளாவில் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் நபர் ஒருவர் கேரள அதிரடிப்படை போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். என்கவுண்டரில் பலியான நபர் தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

19:07 (IST)03 Nov 2020
திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக முயற்சி - மு.க.ஸ்டாலின்

விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் வெற்றியை தடுக்க அதிமுக முயற்சிக்கிறது என்ரு குற்றம் சாட்டியுள்ளார்.

18:44 (IST)03 Nov 2020
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை

வெளிநாடு கருத்தரங்குக்கு சென்றபோது விமானப் பயண டிக்கெட் மோசடி வழக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை விதிகப்பட்டுள்ளது.

18:39 (IST)03 Nov 2020
நாங்கள் எதிர்ப்புக்கு அஞ்சுவோர் அல்ல - பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னையில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “வேல் யாத்திரைக்கு அனுமதி பெற நாட்கள் உள்ளன. நாங்கள் எதிர்ப்புக்கு அஞ்சுவோர் அல்ல. வேல் துள்ளி வரும்” என்று கூறினார்.

18:32 (IST)03 Nov 2020
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அரியர் மணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து அரசிடம் அனுமதி பெற்று தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18:04 (IST)03 Nov 2020
தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் அறிவித்துள்ளது.

17:55 (IST)03 Nov 2020
முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிறார்.

17:48 (IST)03 Nov 2020
சென்னை மின்வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, எஸ்பிளேனேடு, ஏழுகிணறு ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பாஸ்கர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புதிய மின் கட்டண இணைப்பு பெறுவதற்காக சுமார் ரூ.86 லட்சம் லஞ்சமாக பெற்றது அம்பலமாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

16:44 (IST)03 Nov 2020
திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது. அதனால், தமிழக அரசு திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் உள்ளேயும் வெளியேயும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து படம் பார்க்க அனுமதி, முகக் கவசம் அணியாதவர்களுக்கு திரையரங்குகளில் அனுமதி கிடையாது. நுழைவு வாயில்களில் கைகளால் தொடாமல் பயன்படுத்தக் கூடிய சானிடைசர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

16:05 (IST)03 Nov 2020
திராவிட கட்சிகளுடன் கூட்டணி உன்டு... ஆனால், கழகங்களுடன் கூட்டணி இல்லை - கமல்ஹாசன்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்ரத் தேர்தலில் கூட்டணி குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “திராவிட கட்சிகளுடன் கூட்டணி உன்டு... ஆனால், கழகங்களுடன் கூட்டணி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

15:50 (IST)03 Nov 2020
அமலா பால் முன்னாள் நண்பர் மீது வழக்கு தொடரலாம்

நடிகை அமலா பாலின் முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங், தன்னோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அமலாவின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பவ்னிந்தர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார்.

15:31 (IST)03 Nov 2020
தீபாவளியை முன்னிட்டு 14,757 சிறப்புப் பேருந்துகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், வருகிற 11-ம் தேதிமுதல் 13-ம் தேதிவரை சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,247 பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 16,026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

14:54 (IST)03 Nov 2020
கோலி, தமன்னாவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்காக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பவுள்ளது. மேலும், இந்த வழக்கு நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

14:22 (IST)03 Nov 2020
ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் 10 நாட்களில் அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யச் சட்ட வரையறை செய்யப்பட்டுள்ளதா எனத் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு? யார்? கணக்கிற்குச் செல்கிறது என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என்று உயர்நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

13:12 (IST)03 Nov 2020
தீபாவளி சிறப்பு பேருந்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றுபோக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  பண்டிகைக்காக சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும்  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

13:10 (IST)03 Nov 2020
திருச்சி சிவா மகன் சூர்யா சண்டை!

பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தின் போது நட்சத்திர ஓட்டலில் பீர் வாங்கிக்கொடுக்கும்படி நண்பரிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சண்டை போட்டதால் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

13:04 (IST)03 Nov 2020
எய்ம்ஸ் மருத்துவமனை!

வெளிநாடுகளுக்கு செல்வதைவிட விருப்பப்பட்டால் விரைவில் அமையும் மதுரை எய்ம்ஸில் ஸ்டாலின் சிகிச்சை பெறலாம் .எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்காதது பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில். 

13:04 (IST)03 Nov 2020
கமலா ஹாரிஸ்-க்காக வேண்டுதல்!

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி குலதெய்வ கோயிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு!

13:03 (IST)03 Nov 2020
நீதிபதிகள் அதிருப்தி!

பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி. ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

13:02 (IST)03 Nov 2020
மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு. 

13:01 (IST)03 Nov 2020
VPF கட்டணத்திற்கு எதிர்ப்பு!

VPF கட்டணத்தை ஏற்க தயாரிப்பாளர்களை தொடர்ந்து தமிழக தியேட்டர்களின் அதிபர்களும் மறுத்துள்ளனர் . 5 மாநிலங்களை சேர்த்து தென்னிந்திய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தை தொடங்கவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 

12:29 (IST)03 Nov 2020
டாடா குழுமம் நன்கொடை!

அதிமுகவுக்கு டாடா குழும அறக்கட்டளை ரூ.46.78 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தேர்தல் நன்கொடையாக இந்த தொகை இரண்டு பகுதிகளாக பிரித்து காசோலை மூலம் கட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 

12:17 (IST)03 Nov 2020
சாத்தான்குளம் வழக்கு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை .நவ. 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 

12:16 (IST)03 Nov 2020
மருத்துவ கலந்தாய்வு!

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியீடு . இன்று முதல் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்யலாம் .வரும் 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:43 (IST)03 Nov 2020
உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார் . 2018 ல் வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலிலிருந்து 45 பேர் நீக்கப்பட்டு 85 பேர் சேர்ப்பு.வேலைவாய்ப்பு முன்னுரிமை மதிப்பெண்களில் 18 பேருக்கு திருத்தம் என தகவல்.

10:41 (IST)03 Nov 2020
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

வடகிழக்கு பருவமழையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட கூடாது என்ற வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  கடந்த கால வெள்ள பாதிப்புகளை அனுபவமாக கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல். 

09:51 (IST)03 Nov 2020
பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி .பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் . கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல்.

Tamil News Today : அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள டிரம்ப் கடைசி நாளில் 5 இடங்களில் பேசுகிறார் . கொரோனாவை சமாளிக்க தமிழக அரசுக்கு மேலும் 5000 கோடி தேவை: ரங்கராஜன் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.

நீட் தேர்வு கெடுபிடிகள் குறித்து மத்திய தேர்வு முகமை, மத்திய அரசு 4 வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய முக்கிய செய்திகள்

தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு .அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ் .8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும்

Web Title:Tamil news today live today weather anna university diwali crackers scholl reopening covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X