Tamil News Highlights: டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 16-07-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 16-07-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
 Tamil News Highlights: டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

Advertisment

தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் . தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு . காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை.

நீர் நிலவரம்

3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2250 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 101 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 381 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


Advertisment
Advertisements
  • 22:28 (IST) 16 Jul 2023
    முதல்வருக்கு நடிகர் சூர்யா நன்றி

    தங்களுடனான ஆக்கப்பூர்வமான உரையாடலும், வழிகாட்டலும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மனப்பூர்வமான நன்றிகள் என வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்


  • 21:48 (IST) 16 Jul 2023
    "சத்தியதேவ் லா அகாடமி"-யை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னையில் "சத்தியதேவ் லா அகாடமி"-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதியரசர் 'சத்தியதேவ்' நினைவாக சட்ட கல்லூரி மாணவர்களுக்காக 'சத்தியதேவ் லா அகாடமி' தொடங்கப்பட்டுள்ளது


  • 20:35 (IST) 16 Jul 2023
    விவசாயிகளுக்கு தனது வீட்டில் விருந்து வைத்த ராகுல்காந்தி

    ஹரியானாவில், எங்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லுங்கள் என கோரிக்கை வைத்த விவசாயிகளை, தனியாக வாகனம் மூலம் அழைத்து வந்து, சோனியா காந்தியிடம் அறிமுகப்படுத்தி, வீட்டில் விருந்து வைத்திருக்கிறார் ராகுல்காந்தி.


  • 20:11 (IST) 16 Jul 2023
    டெல்லி வெள்ளம்; பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 10,000 நிதியுதவி

    டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவித்துள்ளார். வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆவணங்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உடைகள், புத்தகங்களை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிகள் மூலம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது


  • 19:17 (IST) 16 Jul 2023
    ஆசிய தடகளம்; 27 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை

    ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியா 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதில் 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.


  • 18:59 (IST) 16 Jul 2023
    பாலியல் வன்கொடுமை; பா.ஜ.க நிர்வாகியின் மகன் உட்பட 4 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு

    மத்தியப் பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவத்தில் பா.ஜ.க நிர்வாகியின் மகன் உட்பட 4 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது


  • 18:31 (IST) 16 Jul 2023
    எதிர்கட்சிகள் கூட்டம்; ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதாக அறிவிப்பு

    டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்ப்போம் என்று காங்கிரஸ் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பெங்களூருவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அறிவித்தது.


  • 18:26 (IST) 16 Jul 2023
    மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர்

    மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்துவிட்டார். கடலில் தவறி விழுந்த காரைக்கால் மீனவர் தங்கசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 24 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வரும் தேடுதல் பணியில் இந்திய ரோந்து கப்பல், ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர். காரைக்கால் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் தேடி வருகின்றனர்


  • 18:12 (IST) 16 Jul 2023
    500 அடி உயரத்திற்கு தேசிய கொடி நிறுவப்போகும் பாகிஸ்தான்

    ஆகஸ்ட் 14 சுதந்திர தினத்தன்று 500 அடி உயரத்திற்கு தேசிய கொடியை பாகிஸ்தான் நிறுவ உள்ளது. இதனை 40 கோடி ரூபாய் செலவில் பஞ்சாப் லிபர்டி சவுக் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது


  • 17:57 (IST) 16 Jul 2023
    அரசியல் மாற்றம் தேவை: காமராஜர் மலர் வெளியிட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு

    "அரசியல் மாற்றம் வந்து விட்டால், சமுதாய மாற்றம் தானாக வந்துவிடும். அரசியல் அடிப்படையில் இருந்து மாற வேண்டும், அப்போதுதான் காமராஜர் கனவு கண்ட அரசியல் நடக்கும்.

    தமிழகத்தில் எது உயர்ந்திருக்கிறதோ இல்லையோ மது உயர்ந்துள்ளது” என மதுரையில் நடைபெற்ற, “காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள் மலர்” வெளியீட்டு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை உரையாற்றினார்.


  • 17:45 (IST) 16 Jul 2023
    கமல்ஹாசன் கட்சிக்கு வானதி சீனிவாசன் பதிலடி

    வானதி சீனிவாசனை காணோம்; வளர்ச்சி திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கமல்ஹசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காணொலி ஒன்றை வானதி சீனிவாசன் பதிவேற்றியுள்ளார்.

    அதில் வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:44 (IST) 16 Jul 2023
    கமல்ஹாசன் கட்சிக்கு வானதி சீனிவாசன் பதிலடி

    வானதி சீனிவாசனை காணோம்; வளர்ச்சி திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கமல்ஹசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காணொலி ஒன்றை வானதி சீனிவாசன் பதிவேற்றியுள்ளார்.

    அதில் வானதியும் இங்கே வளர்ச்சியும் இங்கே எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:31 (IST) 16 Jul 2023
    சூர்யா ரசிகர்கள் ரத்த தானம்

    நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.


  • 17:10 (IST) 16 Jul 2023
    வானதி சீனிவாசனுக்கு எதிராக ம.நீ.ம ஆர்ப்பாட்டம்

    பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அப்போது, வானதி சீனிவாசன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றச்சாட்டினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.நீ.ம இளைஞர் அணி மாநில செயலாளர் சினேகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


  • 16:59 (IST) 16 Jul 2023
    காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு அமைச்சர் பாராட்டு

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது.

    சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், “மரங்கள் வளர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயா பிறந்த ஊரில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மிளகு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பயிர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் தான் வளரும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், வெப்பம் அதிகம் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதில் நன்கு லாபமும் பார்த்து வருகின்றனர்.

    விவசாயிகளாகிய உங்களால் தான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க முடியும். வெப்பமயமாதல் என்னும் பிரச்சினை உலகளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதில் மரங்கள் வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

    அந்த வகையில், வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் விவசாயிகளாகிய நீங்கள் முன் களப் பணியாளர்களாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனின் வேண்டுகோளின்படி, சந்தன மரங்களை வளர்ப்பதிலும், அதை வெட்டுவதிலும் விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகளை நீக்குவதற்கு தமிழக முதல்வருடன் நான் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வேன்.

    தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்றார்.


  • 16:46 (IST) 16 Jul 2023
    தாராவி குடிசை மேம்பாடு திட்டம்

    மும்பை தாராவி குடிசை மேம்பாட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அதானி நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

    நாட்டின் வணிக தலைநகரான மும்பையில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசியாவிலேயே அதிக குடிசைகளை கொண்ட பகுதியான தாராவி உள்ளது.


  • 16:31 (IST) 16 Jul 2023
    வாணியம்பாடி: திடீரென தீப்பற்றி எரிந்த கார்

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர்; இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  • 16:21 (IST) 16 Jul 2023
    சரத் பவாருடன் அஜித் பவார் அணி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!

    மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் அணி எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு நடத்தினார்கள்.

    ஷிண்டே அரசுடன் அஜித் பவார் அணி இணைந்த நிலையில், மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் மற்றும் 9 அமைச்சர்கள் தற்போது சரத் பவாரை சந்தித்துள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.


  • 16:08 (IST) 16 Jul 2023
    நற்கருணை வீரர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம்: அரசாணை வெளியீடு

    நற்கருணை வீரர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

    அதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


  • 15:46 (IST) 16 Jul 2023
    பூமி சம்மான் 2023 விருதுகள் அறிவிப்பு

    டெல்லியில் ஜூலை 18ம் தேதி 'பூமி சம்மான் 2023' விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.

    டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    9 மாநில செயலாளர்கள் மற்றும் 68 மாவட்ட ஆட்சியர்கள் விருது பெற உள்ளனர்.


  • 15:28 (IST) 16 Jul 2023
    பிரதமர் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் கவர்னருடன் ஆலோசனை

    பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர். பிபேக் டெப்ராய், ஆளுநர் ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து விவாதம் நடத்தினார்.

    இந்த விவாதத்தில் பொருளாதாரம் குறித்த சில முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.


  • 15:16 (IST) 16 Jul 2023
    தாமிரபரணியை காப்பாற்ற ஆலோசனைக் கூட்டம்

    தமிழக அரசுடன் இணைந்து தாமிரபரணியை காப்பாற்றும் ஆலோசனை கூட்டம் நெல்லை, பெருமாள்புரத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் முனைவர் விதுபாலா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அனுமன் நதி, பழையாறு, சிற்றாறு, போன்ற நதிகளை தூய்மை படுத்த அரும்பணி ஆற்றிய சக்தி நாதன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அவர் விட்டு சென்ற பணியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    முதற்கட்டமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதியை சர்வே செய்வது, நதியில் கலக்கும் சாக்கடைகளை நிறுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர் கருவை செடிகளை அகற்றி மரம் நடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் கிருஷ்ணகுமார், சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், "நம் தாமிரபரணி" கல்யாணசுந்தரம், சிகாமணி, ரவிவெங்கடேஷ், விவேக், சவரி வாசன், ஆழ்வாரப்பன், ராஜேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.


  • 15:11 (IST) 16 Jul 2023
    டி.ஐ.ஜி தற்கொலை: அவதூறு கருத்துவிட்ட 8 பேருக்கு சம்மன்

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரத்தில், அவதூறு கருத்துக்களை பதிவிட்ட 8 பேருக்கு சம்மன் அனுப்பபப்ட்டுள்ளது.

    டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த வாரம், கோவை ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    டி.ஐ.ஜி தற்கொலை தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்கள், பேட்டி அளித்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் கோவை ராமநாதபுரம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


  • 14:54 (IST) 16 Jul 2023
    சென்னையில் இடி மின்னல் உடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


  • 14:53 (IST) 16 Jul 2023
    ஜூலை 18-ம் தேதி பூமி சம்மான் விருதுகளை வழங்கும் ஜனாதிபதி

    டெல்லியில் ஜூலை 18ம் தேதி 'பூமி சம்மான் 2023' விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.

    டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 9 மாநில செயலாளர்கள் மற்றும் 68 மாவட்ட ஆட்சியர்கள் விருது பெற உள்ளனர்.


  • 14:16 (IST) 16 Jul 2023
    சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு; ப்யணிகள் காத்திருப்பு

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை 2.05 மணிக்கு குவைத் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், புறப்பட வேண்டிய விமானம் தாமதமானதால் 12 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருக்கின்றனர். இதனால், இரவில் இருந்து விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர். இதனால், விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.


  • 13:44 (IST) 16 Jul 2023
    சென்னை-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் புறப்பாடு தாமதம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

    சென்னை-ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5.40 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக சென்னை செண்ட்ரலில் இருந்து 1.20 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


  • 13:28 (IST) 16 Jul 2023
    ஒரே ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும்; நாங்களும் பலமுறை பல தருணங்களாக வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறோம். 5 ஆண்டு காலம் ஆளுவதற்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்; அனைவரின் தலையெழுத்தையும் எங்களால் மாற்ற முடியும்” என்று கூறினார்.


  • 13:26 (IST) 16 Jul 2023
    அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

    அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது


  • 13:22 (IST) 16 Jul 2023
    ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பேர் கைது

    ஆந்திரா: திருப்பதி அருகே இருவேறு பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பேர்களை அந்திர காவல்துறையினர் கைது செய்தனர்.


  • 13:18 (IST) 16 Jul 2023
    விருது நகர் அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பதில் தகராறு; 2 பேர் உயிரிழப்பு

    விருதுநகர் அருகே நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது தொடர்பாக குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில், ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்தனர். தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  • 12:30 (IST) 16 Jul 2023
    விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடம்

    7.5% இட ஒதுக்கீட்டில் சேலம் மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முதலிடம் அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடம்


  • 12:29 (IST) 16 Jul 2023
    குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

    குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


  • 12:29 (IST) 16 Jul 2023
    லாரி கவிழ்ந்து விபத்து தக்காளியை பொதுமக்கள் அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    தெலுங்கானாவில் தக்காளி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து தக்காளியை பொதுமக்கள் அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிலாபாத் அருகே ரூ.25 லட்சம் மதிப்புள்ள தக்காளியுடன் கவிழ்ந்த லாரி கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற போது, லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய தக்காளி


  • 12:17 (IST) 16 Jul 2023
    மீனவர் மாயம்

    புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கசாமி என்பவர் கடலில் தவறி விழுந்து மாயம் மாமல்லபுரம் அருகே கடலில் தவறி விழுந்தவரை சக மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்


  • 11:58 (IST) 16 Jul 2023
    அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் ஆலோசனை

    சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் ஆலோசனை


  • 10:35 (IST) 16 Jul 2023
    7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசை: முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள்

    இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை 2023 அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசையில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா முதலிடம் . தருமபுரியைச் சேர்ந்த பச்சையப்பன் 2வது இடம், காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


  • 10:33 (IST) 16 Jul 2023
    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார் அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு என 3 வகையான தரவரிசைப் பட்டியல் வெளியீடு அகில இந்திய கலந்தாய்வு 20ம் தேதி தொடங்குகிறது


  • 09:55 (IST) 16 Jul 2023
    இளம்பெண்ணை கொலை: வெளியான தகவல்

    கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் பள்ளிப்பருவம் முதல் இருவரும் பழகி வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்து, தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்


  • 09:50 (IST) 16 Jul 2023
    கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    மக்கள் போற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்

    அவர்கள் மதுரையில் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் தீட்டிய சீரியத் திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றிய மாபெரும் நிகழ்வில் பங்கேற்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞரிட்ட அடித்தளத்தில், கோட்டைகளைக் கட்டியெழுப்பும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும்


  • 09:49 (IST) 16 Jul 2023
    கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று

    கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று. கடந்த 2004ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தீ விபத்து நடைபெற்றது.


  • 09:33 (IST) 16 Jul 2023
    லைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    மக்கள் போற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்

    அவர்கள் மதுரையில் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் தீட்டிய சீரியத் திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றிய மாபெரும் நிகழ்வில் பங்கேற்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞரிட்ட அடித்தளத்தில், கோட்டைகளைக் கட்டியெழுப்பும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும்


  • 09:31 (IST) 16 Jul 2023
    கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    மக்கள் போற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்

    அவர்கள் மதுரையில் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் தீட்டிய சீரியத் திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றிய மாபெரும் நிகழ்வில் பங்கேற்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞரிட்ட அடித்தளத்தில், கோட்டைகளைக் கட்டியெழுப்பும் நம் ிராவிட_மாடல் அரசின் சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும்


  • 09:29 (IST) 16 Jul 2023
    கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    மக்கள் போற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்

    அவர்கள் மதுரையில் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் தீட்டிய சீரியத் திட்டங்களை எடுத்துரைத்து உரையாற்றிய மாபெரும் நிகழ்வில் பங்கேற்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞரிட்ட அடித்தளத்தில், கோட்டைகளைக் கட்டியெழுப்பும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்றென்றும் நிலைத்திருக்கும்


  • 09:26 (IST) 16 Jul 2023
    கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழப்பு

    விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே கீழ் பத்துப்பட்டில் கார் மோதிய விபத்தில், 2 பெண்கள் உயிரிழப்பு; சாலையோரம் மீன் வாங்க அமர்ந்திருந்த லட்சுமி, கோவிந்தம் ஆகிய பெண்கள் மீது கார் மோதியுள்ளது!


  • 09:18 (IST) 16 Jul 2023
    இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(73) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி


  • 08:31 (IST) 16 Jul 2023
    அமர்நாத் புனித யாத்திரை : பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் மீட்பு

    அமர்நாத் புனித யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் தமிழ்நாடு அரசின் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்; நேற்றிரவு சென்னை திரும்பிய அவர்களை, அமைச்சர் மஸ்தான் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்


  • 08:27 (IST) 16 Jul 2023
    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை

    சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் தக்காளி விலையில் மாற்றமின்றி ரூ. 150க்கு விற்பனை வெங்காயம் - ₨20, சின்ன வெங்காயம் - ரூ.180, நவீன் தக்காளி - ரூ.120, உருளை- ரூ.30, பீன்ஸ் - ரூ.90, ஊட்டி கேரட் - ரூ.65 பெங்களூர் கேரட்- ரூ.40, இஞ்சி - ரூ.230, பூண்டு - ரூ.210, வண்ண குடைமிளகாய் - ரூ.200, பட்டாணி - ரூ.190, பச்சை குடைமிளகாய் - ரூ.60க்கு விற்பனை


Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: