Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின்ன் பைசாபாத்தில் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.
நீர் நிலவரம்
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 500 மில்லியன் கன அடியாக உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2946 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கு சரிவர நடவடிக்கை எடுக்காத குற்றாலம் காவல் ஆய்வாளர் அலெக்ஸ்-ஐ பணியிடை நீக்கம் செய்து டிஜஜி உத்தரவிட்டுள்ளார்
மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 6 ஆவது முறையாக ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரின் அஸ்தியை தனது சகோதரர் ஓ.ராஜாவுடன் கங்கையில் கரைத்தார்
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 157 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயம் செய்துள்ளது
தற்போது ரத்து செய்யப்பட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் செய்ததாகக் கூறி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்தது. சிபிஐ அதிகாரிகளின் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
ஈரோடு இடைத்தேர்தல் நாளை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்குவதையொட்டி முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட உபகரணங்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் எலாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்
விருதுநகர் வ.புதுப்பட்டி பேரூராட்சியில், டெங்கு மஸ்தூர் பணியாளராக முத்துலட்சுமி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைப் பார்த்து வந்துள்ளார்.
இவரை காரணமின்றி பணியில் இருந்து நீக்கிய நிலையில், இது தொடர்பாக கேட்ட போது தி.மு.க. பேரூராட்சித் தலைவி சுப்பு லட்சுமி, கணவர் சாந்தாராம் ஆகியோர் சாதியை சொல்லி திட்டியுள்ளனர்.
இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
உலகப் பொருளாதாரத்தை கேலி செய்யும் வழிகளைக் கண்டுபிடிப்பதே G20 அமைப்பின் முக்கியக் கவலை என்று ஹைதராபாத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறினார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
இதில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
பூமியில் இருந்து விலகி செல்வதாக ஆய்வில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதில், “சரியாக 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலா தனது தற்போதைய தூரத்தை விட 60 ஆயிரம் கிலோ மீட்டர் பூமிக்கு நெருக்கமாக இருந்ததாக” கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிலா ஆண்டுக்கு 3.8 செ.மீ தூரம் விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசப்பட்டது.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கல் வீசப்பட்டதில் ரயிலின் ஜன்னல்கள் சேதம் அடைந்ததாக தென்னக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்கள் புதைத்து வைத்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் சத்தீஸ்கர் ஆயுதப் படையின் (CAF) தலைமை கான்ஸ்டபிள் கொல்லப்பட்டார்.
இந்தத் தகவலை காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் நக்ஸல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே மாணவியின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் தாய் ராமலெட்சுமியும் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். மகள், கணவரை இழந்து புற்றுநோயுடன் போராடி வந்த ராம்லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் வாகனம் கவிழ்ந்ததில் வாக்குச் சாவடி அதிகாரி உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது என தலைமைத் தேர்தல் அதிகாரி எஃப்.ஆர்.கார்கோங்கோர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வேலையில்லை ஆனால் விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே ஆகியவை கெளதம் அதானியிடம் ஒப்படைக்கப்படுகின்றன என பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ‘குஜராத் ஜெயண்ட்ஸ்’ அணியின் ஜெர்சி வெளியீடப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2வது கட்ட இந்திய ஒற்றுமைப் பயணத்தை குஜராத்தின் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் காசிகட் வரை மேர்கொள்ள உள்ளார்.
குஜராத் மாநிலம், ராஜகோட் பகுதியில் நில நடுக்க உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
நடிகர் அக்ஷய் குமார்: “ஒரு திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றால், அது முழுக்க முழுக்க என்னுடைய தவறுதான். அதற்கு ரசிகர்களை குறை சொல்லக்கூடாது. ரசிகர்கள் மாறிவிட்டார்கள். அதற்கு தகுந்தவாறு கலைஞர்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும். ” என்று கூறினார்.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “இடைத் தேர்தலில் பணம் கொடுத்து பெறும் வெற்றி தேவையா? ஓட்டுக்கு பணம் தரப்படும் நடைமுறைக்கு மக்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன்: “இந்தி, சமஸ்கிருத மொழிகளை நாம் எதிர்க்கவில்லை; மொழி திணிப்பையே எதிர்க்கிறோம். டார்வின், ஆபிரகாம் லிங்கன் பேசக்கூடாது என ஆளுநர் கூறுவதை சாதாரணமாக எண்ணக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் காவல்துறை ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை, திருவப்பூரில் ஜல்லிக்கட்டின் போது கண்மாயில் மூழ்கி ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது. போட்டியின் இடையே கண்மாயிக்குள் காளைகள் ஓடிய நிலையில், ஒரு காளை மட்டும் உயிரிழந்தது, வெட்டன்விடுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது காளை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
உத்தரப்பிரதேசத்தில், லாரியில் சிக்கிய சிறுவனை 2 கி.மீ. தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. பேரனை அழைத்துக்கொண்டு தாத்தா சந்தைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் மீது லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 கி.மீ. தூரத்துக்கு 6 வயது சிறுவன் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளர்.
திருச்சி, மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தங்கைக்கு கிளி பிடித்துக் கொடுக்கும் வரலாற்று நிகழ்வு நடக்கும் நிலையில், திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 209 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து ஃபாலோ ஆன் கொடுத்துள்ளது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் 2வது இன்னிங்சில் 202/3 என எடுத்து 24 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து பகுதியில் விபச்சாரம் நடத்திவந்த கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் ராம்குமார் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 3 பெண்கள் அங்கிருந்து மீட்க்கப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க சென்ற காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 11 மீனவர்கள் இருந்த படகில் 7 பேரை கடலில் தள்ளியதாகவும், 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, வலைகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், மாநகராட்சி ஊழியர்கள் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து வருகிறார்கள்.
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கோலாகலம்
மாசித்திருவிழாவின் 2-வது நாளையொட்டி, திருச்செந்தூரில் குவிந்துள்ள வெளிமாவட்ட பக்தர்கள்
தஞ்சையில் இருந்து நெல் மூட்டைகளை அரவை பணிக்கு அனுப்பும் பணி தீவிரம்.
2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ரயில் மூலம் செங்கல்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.
58 ரயில் வேகன்கள் மூலம், நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
பிளாஸ்டிக் பைகளுக்கு 'Bye Bye' சொல்ல வேண்டும். ஒவ்வொரு மக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும் – மனதின் குரல் நிகிழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி மார்ச் மாதத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. மார்ச் 5, 6, 7 மற்றம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
கோலாப்பூர் பகுதியில் 112 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம்
திருப்பூர், காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் லாரி மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்
நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விதிமீறலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி பேட்டி
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன
வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன
உரிய பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன
மேகாலயா, துரா பகுதியில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு . டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மறைந்த தனது தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக, இன்று வாரணாசி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம் மதுரையில் இருந்து சென்னை வழியே வாரணாசிக்கு விமானத்தில் செல்கிறார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம். பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு
பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் அதிகபட்சமாக 6.5 ரிக்டர் அளவில் பதிவானதால் மக்கள் அச்சம் .
சென்னை எழும்பூர் – மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று சென்றது . மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.