பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடகா தேர்தல்: கருத்துகணிப்பு
கர்நாடகாவில், நேற்று 224 தொகுதிகளுக்கு ஒரே. நாளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் கருத்துகணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வெளியாகி உள்ளது. மாநிலத்தில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும், ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்காது எனவு முடிவுகள் வெளியாகி உள்ளது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2461 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 225 கனஅடியாக உள்ளது; 59 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 753 மில்லியன் கனஅடியாக உள்ளது கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 468 மில்லியன் கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார் ஜெய்ஸ்வால். வெறும் 13 பந்துகளில் 7 ஃபோர், 3 சிக்ஸர் விளாசி, அரை சதம் கடந்தார்.
ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி, 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர்(57) அரைசதம் அடித்தார்
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் தீவிர புயலாக மாறியது. மே 14ம் தேதி முற்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் – மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடக்கும்
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜமுனீஸ்வரர் (11) என்ற சிறுவன், நீச்சல் குளத்தில் இடைவிடாது 2 மணிநேரம் நீச்சலடித்தபடியே சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். Nobel World Records என்ற அமைப்பு இதனை சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கைப் பயண புகைப்படக் கண்காட்சியை நடிகர் ஜெயம் ரவி பார்வையிட்டார்
சேலத்தில் தனியார் தீம் பார்க்கில் நீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க சென்ற குடும்பத்தினருடன் சென்ற தீம் பார்க்கில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த போது, மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளான். இதுதொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்-ஐ பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இம்ரான் கான்-ஐ கைது செய்தது சட்டவிரோதமானது என குறிப்பிட்டு, உடனடியாக விடுதலை செய்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நாளை ஆஜராகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “மக்கள் நலனில் அக்கறையுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயர் பரிசோதனைகள் அரசியலாக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் பாரதி சாலையில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருந்த போது, ஆப்ரேட்டர் அறையிலிருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால், திரையரங்குக்குள் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் புகை பரவியதால், பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆபரேட்டர் அறையில் இருந்த ஏ.சி. முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியமர்த்த வேண்டும். 2012-ல் நடந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு முன் வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஐஐடியில் புதிதாக மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம் என்ற 4 ஆண்டு புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படுகிறது.
LGBTQ+ பிரிவினருக்கான திருமணங்களை சட்டப்பூர்வமாக்குதல் தொடர்பான பல்வேறு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நிறுத்திவைத்துள்ளது.
கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த செவ்வாய் அன்று கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 14ம் தேதி காலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், திருவிழாவில் கலந்து கொள்ள வருவோர் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது. பள்ளி, கல்லூரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. வேறு கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால், மாவட்ட எஸ்.பி-யிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியின் போது மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் பள்ளத்தில் சிக்கிய வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் மீட்ட நிலையில், ஆம்புலன்சில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் திருமுல்லைவாயல் காவல் நிலைய காவலர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ரோந்து வாகன ஓட்டுநரான வள்ளிநாயகம்(32) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில் விபரீத முடிவு
சேலம், சின்னக்கடை வீதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் உரிமம் இல்லாமல் ரசாயனம் தெளித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது” – சென்னை உயர்நீதிமன்றம் ஹான்ஸ் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் மறுப்பு
தமிழகம், புதுச்சேரியில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு, அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்; முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன் – அமைச்சராக பொறுப்பேற்றபின் தலைமைச்செயலகத்தில் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
தமிழ்நாடு நிதி அமைச்சராக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசுவுக்கு ப.சி. வாழ்த்து
தமிழ்நாடு நிதி அமைச்சராகத் திரு தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய புதிய பொறுப்பில் தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய என் நல்வாழ்த்துக்கள்! 💐
— P. Chidambaram (@PChidambaram_IN) May 11, 2023
ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது;
நான் எந்த சொத்தும் இதுவரை வாங்கவில்லை, எந்த தொழிலும் நான் செய்யவில்லை, விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன்; திமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது- சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் ,டிடிவி தினகரன் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்றது; கிளைச்செயலாளர்களுக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கிடையாது; வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் ஓபிஎஸ்-ஐ கைவிட்டு விட்டனர்” – சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
உத்தவ் தாக்ரே தாமாக முன்வந்து பதவி விலகியதால் ராஜினாமாவை ரத்து செய்ய முடியாது. உத்தவ் தாக்கரே பதவி விலகி விட்டதால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சரியே- மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி விவகாரம் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைந்தத நிலையில், துரோகியும் துரோகியும் இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை; உட்கட்சி விவகாரங்களை சரி நம்பிக்கை வாக்கெடுப்பை பயன்படுத்தக் கூடாது; உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் பழைய நிலையை மீட்டெடுத்திருக்கும்- உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
அனைத்து அரசு பணிகளின் மீது டெல்லி அரசுக்கு அதிகாரமே இல்லை என்ற தீர்ப்பை ஏற்க முடியாது.
மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.
டெல்லி அமைச்சரவை முடிவுக்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பட்டவர்.
பொது ஒழுங்கு, காவல், நிலம் ஆகிய துறைகளை தவிர்த்து எஞ்சிய பணிகளில் சட்டம் இயற்ற டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது- உச்ச நீதிமன்றம்
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு
நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம்
மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமனம்; தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு
அமைச்சராக பதவியேற்றார் எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா. ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்
டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் தொடங்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அருகே மர்மபொருள் வெடித்த சம்பவத்தில் 5 பேர் கைது
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது” – வானிலை ஆய்வு மையம்
தமிழக அமைச்சராக இன்று பதவியேற்கிறார் மன்னார்குடி எம்.எல்.ஏ., டிஆர்பி ராஜா . டிஆர்பி ராஜாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
ஹூண்டாய் நிறுவனத்துடன், 20,000 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது .
அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் ஜூன் 22ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்