Advertisment

Tamil Breaking News Highlights: தமிழகம் முழுவதும் இன்று மிலாடி நபி கொண்டாட்டம்- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Tamil News Live Updates-16-09-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
miladi nabi indian express

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 183-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2242 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 58 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 299 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Sep 16, 2024 21:37 IST
    மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு நிறைவு

    கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவமனை சம்பவத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு தீர்வு காண போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையேயான சந்திப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



  • Sep 16, 2024 21:00 IST
    மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சந்திப்பு

    கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, முதல்வரின் காளிகாட் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.



  • Sep 16, 2024 18:23 IST
    சென்னையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி, 10 பேர் காயம்

    சென்னையில் செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற பேருந்து, மதுரவாயல் அருகே சர்வீஸ் சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சர்வீஸ் சாலையில் ஆட்டோ மீது பேருந்து கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் உயிரிழந்தார். இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.



  • Sep 16, 2024 18:14 IST
    சென்னை ஓக்கியம் மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவு - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

    சென்னை ஓக்கியம் மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த பாதையை விரிவாக்கம் செய்வது மற்றும் பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பருவமழை முடிந்த பிறகு புதிய பாலம் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 16, 2024 18:09 IST
    பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கை நீக்குவோம் - பிரசாந்த் கிஷோர் 

    தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர், அக்டோபர் 2-ம் தேதி ஜன சுராஜ் எனும் அரசியல் கட்சியைத் தொடங்க உள்ள நிலையில்,  “நாங்கள் பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றினால், ஒரு மணி நேரத்தில் மது விலக்கை நீக்குவோம். பூரண மது விலக்கு சட்டத்தால், சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளது; இதனால், அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏர்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 16, 2024 17:32 IST
    பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ம.ம.க-வினர் போராட்டம்

    பரனூர் சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் முற்றுகையிட்டு ம.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகமாக வசூல் செய்யப்படும் கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது .



  • Sep 16, 2024 16:58 IST
    தயவு செய்து பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை சேர்க்காதீர்கள் - கனிமொழி வேண்டுகோள்

    நாடார் சங்க கட்டட திறப்பு விழாவில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, “நாம் எல்லோரும் மனிதர்கள், உழைப்பாளிகள், தயவு செய்து பெயருக்கு பின்னால், சாதிப் பெயரைச் சேர்க்காதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.



  • Sep 16, 2024 16:27 IST
    த.வெ.க மாநாடு அக்.15 என கட்சி நிர்வாகிகள் சுவர் விளம்பரம்

    த.வெ.க தலைவர் விஜய் மாநாட்டிற்கான தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில் அக்டோபர் 15 என வரையப்பட்ட சுவர் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது 



  • Sep 16, 2024 16:07 IST
    நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றம்

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பருகப்பட்டு கிராமத்தில் நீர்நிலை வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் இடித்து அகற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேவாலயத்தை அதன் நிர்வாகிகளே அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், காலம் தாழ்த்தப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. முன்னதாக தேவாலயத்தின் மீது ஏறி, இடிப்புக்கு எதிராக போராடிய மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்



  • Sep 16, 2024 15:50 IST
    கிண்டி சிறுவர் பூங்கா - வரும் 17-ம் தேதி விடுமுறை இல்லை

    சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை வரும் 17ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது



  • Sep 16, 2024 15:36 IST
    வேட்டையன் பட கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட் இன்று முதல் வெளியாகும்; படக்குழு அறிவிப்பு

    ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட் இன்று முதல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது



  • Sep 16, 2024 15:15 IST
    ரூ.4 கோடி விவகாரம் – சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வெளியான புதிய தகவல்

    சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி யாருடையது? என்ற சி.பி.சி.ஐ.டி விசாரணையில், பணத்தை உரிமைகோரிய முஸ்தபா என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முஸ்தபாவின் செல்போன், வங்கிக் கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முஸ்தபாவிடம் உரிமைகோர கூறிய நபர்களுக்கு சம்மன் கொடுத்து, விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்



  • Sep 16, 2024 14:55 IST
    புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க உண்ணாவிரத போராட்டம்

    புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்திய என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது



  • Sep 16, 2024 14:33 IST
    எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் - சீமான்

    எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்



  • Sep 16, 2024 14:14 IST
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் 2- 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 16, 2024 14:12 IST
    நடன இயக்குனர் மீது பாலியல் புகார்; போலீசார் வழக்குப்பதிவு

    வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் நடன இயக்குனர் மீது இளம் நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்



  • Sep 16, 2024 13:44 IST
    மழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் செப். 22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 



  • Sep 16, 2024 12:12 IST
    திருமாவளவன் பேட்டி

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வீடியோ குறித்து மு.க.ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுகவிற்கும் - விசிகவிற்கும் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்கள். தேர்தலுக்கும் முதலமைச்சருடனான சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை
    - மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி



  • Sep 16, 2024 11:55 IST
    மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள்

    கும்மிடிப்பூண்டி அருகே தங்களுக்கு சொந்தமான இடத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வர மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீண்டும் கோயில் திறக்கப்பட்டது.



  • Sep 16, 2024 11:54 IST
    மு.க.ஸ்டாலினை சந்திக்க திருமா வருகை

    மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்தார்.



  • Sep 16, 2024 10:49 IST
    ராணிப்பேட்டையில் புதிய டாடா ஆலை

     டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கார்களை உற்பத்தி செய்யும் ஆலை. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள புதிய உற்பத்தி ஆலைக்கு செப். 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். இதன் மூலம் 5000  பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் 

    மேலும் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 20 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். 



  • Sep 16, 2024 10:35 IST
    மீண்டும் ரூ.55,000 கடந்த தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு . ஒரு கிராம் தங்கம் ரூ.6,880க்கும், ஒரு சவரன் ரூ.55,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



  • Sep 16, 2024 10:27 IST
    ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை

    வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் காணப்படும் பங்குச் சந்தை; புதிய உச்சத்தை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைத் கடந்து வர்த்தகம் ஆனது. 



  • Sep 16, 2024 09:58 IST
    தடையை மீறி ஊர்வலம் - 61 பேர் மீது வழக்கு

    சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி ஊர்வலம் - 61 பேர் மீது வழக்கு

    சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 61 பேர் மீது வழக்குப் பதிவு. அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லாமல் அப்பகுதியில் உள்ள பெரிய மசூதி தெரு வழியாக செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 61 பேர் மீது ஜாம் பஜார் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 



  • Sep 16, 2024 08:23 IST
    விஜய்யின் த.வெ.க மாநாடு எப்போது?

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை அக்டோபர் 3வது வாரத்தில் நடத்த திட்டம் என தகவல். மீண்டும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கவும் தவெக திட்டமிட்டுள்ளது



  • Sep 16, 2024 08:22 IST
    புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு கைதி தற்கொலை

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் என்ற முதியவர் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 



  • Sep 16, 2024 08:18 IST
    ஸ்டாலின் உடன் திருமாவளவன் இன்று சந்திப்பு

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்ற சந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் விசிக அழைப்பு விடுத்திருந்த நிலையில் சந்திக்கிறார்.  



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment