Advertisment

Tamil Breaking News Highlights: சென்னை கடற்கரை- வேளச்சேரி மின்சார ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்

Tamil News Live Updates-28.10.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 225-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் 

Advertisment

சென்னை குடிநீர் ஏரிகளில் 41.33% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போது 4.859 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 40.88% ;  புழல் - 75.3% ; பூண்டி - 13.99% ; சோழவரம் - 10.91% ; கண்ணன்கோட்டை - 62.3%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 28, 2024 22:34 IST
     த.வெ.க மாநாடு உயிரிழப்பு - 7ஆக உயர்வு 

    த.வெ.க மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (65) என்பவர் உயிரிழந்துள்ளர். இதனால், பலி எண்ணிக்கை தற்போது 7ஆக உயர்ந்துள்ளது. 

     



  • Oct 28, 2024 21:35 IST
    த.வெ.க.மாநாடு - இறந்தவர்களுக்கு விஜய் இரங்கல்

    த.வெ.க மாநாட்டில் பங்கேற்று உயிரிழந்த நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், "விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

    வழக்கறிஞர் திரு.  கில்லி VL.சீனிவாசன்,
    திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

    திரு. JK.விஜய்கலை, 
    திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

    திரு. வசந்தகுமார், 
    கழகத் தோழர்
    பாரிமுனை, சென்னை 

    திரு. ரியாஸ்,
    கழகத் தோழர்,
    பாரிமுனை, சென்னை.

    திரு. உதயகுமார்,
    கழகத் தோழர்,
    செஞ்சி

    மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 

    திரு.சார்லஸ்
    கழகத் தோழர்,
    வில்லிவாக்கம்,
    சென்னை

    ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

    கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். 

    கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

    மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார். 



  • Oct 28, 2024 20:23 IST
    பாசிசம் பற்றிய விஜய் பேச்சு: திருமாவளன் கேள்வி

    பாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவை பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயாசமா' என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்வதா? பாசிச அல்லது பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிளவுவாதத்தை எதிர்ப்போம், அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயாசமா' என கூறும் விஜய் பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.



  • Oct 28, 2024 20:21 IST
    கேரள முதல்வரின் கான்வாய் விபத்து: சி.சி.டி.வி காட்சிகள் வைரல்!

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கியது. வாமனபுரம் பூங்கா சந்திப்பில் நடைபெற்ற விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.  இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றதால் விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 28, 2024 20:17 IST
    தொண்டர்கள் மரணம்: இரங்கல் பதிவு வெளியிட்ட த.வெ.க தலைவர்

    உயிரிழந்த தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.



  • Oct 28, 2024 18:52 IST
    சென்னையில் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

    சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ஓராண்டுக்கு பிறகு நாளை (அக்டோபர் 29) மீண்டும் தொடங்க உள்ளது. 



  • Oct 28, 2024 18:50 IST
    வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு! 

    வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 28, 2024 18:47 IST
    தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • Oct 28, 2024 16:11 IST
    'திமுகவை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது' - சேகர் பாபு 

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு: “கூடி கலைகின்ற மேகக் கூட்டங்கள் அல்ல தி.மு.க; கொள்கை சார்ந்தது; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கும் வரை, எந்த சக்தியாலும் தி.மு.க-வை அசைத்துப் பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.



  • Oct 28, 2024 16:06 IST
    தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    குரோம்பேட்டை ஆர்.பி. சாலையில் உள்ள என்.எஸ்.என் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சிட்லப்பாக்கம் ரோஸிரி மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களை வெளியேற்றி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



  • Oct 28, 2024 15:39 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் வழக்கு: விசாரணைக்காக, ஒரு நபர் ஆணையத்தில் கலெக்டரில் நேரில் ஆஜர்

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் விசாரணைக்காக, ஒரு நபர் ஆணையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜர் ஆனார். பாதிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னதாக விசாரணை நடைபெற்றது. 



  • Oct 28, 2024 15:23 IST
    போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.372 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு முக்கிய உத்தரவு

    அரசு போக்குவரத்துத் துறையின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ. 372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்பு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்ப்புத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • Oct 28, 2024 14:59 IST
    விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Oct 28, 2024 14:46 IST
    சிறைவாசிகள் தயாரித்த தீபாவளி இனிப்புகள்

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்ட தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதற்கான விற்பனை சிறை அங்காடி வளாகத்தில் இன்று தொடங்கியது.



  • Oct 28, 2024 14:16 IST
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை www.tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.



  • Oct 28, 2024 13:54 IST
    திமுக கூட்டணி வலுவாக உள்ளது - ஸ்டாலின்

    திமுக கூட்டணி வலுவாக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், கட்சி வழங்கிய பணிகளை செய்து முடிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.



  • Oct 28, 2024 13:24 IST
    தமிழக அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள் 

    மதுரையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ரூ. 25  ஆயிரம் வழங்க வேண்டுமென சு. வெங்கடேசன் எம்.பி. தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Oct 28, 2024 13:20 IST
    தவெக கொள்கை - காங்கிரஸ் எம்.பி. வரவேற்பு

    தவெக-வின் கொள்கைகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் கூட்டணி ஆட்சி ஆகிய இரண்டும் தனக்கு பிடித்திருந்ததாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Oct 28, 2024 13:03 IST
    அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு பணிக்கொடை; நிதி ஒதுக்கி மு.க.ஸ்டாலின் உத்தரவு

    அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • Oct 28, 2024 13:01 IST
    எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகை கெளதமி

    அ.தி.மு.க.,வின் கொள்கைப் பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டதை ஒட்டி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகை கெளதமி வாழ்த்து பெற்றார் 



  • Oct 28, 2024 13:00 IST
    தீபாவளி பண்டிகை; புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி விடுமுறை

    தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறையாகும். மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3ஆம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் விடுமுறை ஆகும். எனவே மொத்தமாக அக்டோபர் 30ல் இருந்து நவம்பர் 3ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை நாட்களாகிறது



  • Oct 28, 2024 12:30 IST
    ரூ.4 கோடி வழக்கு; பா.ஜ.க எம்.பி. செல்வ கணபதியிடம் நேரில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி திட்டம்

    நாடாளுமன்ற தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி பா.ஜ.க எம்.பி. செல்வ கணபதியிடம் நேரில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க எம்.பி. செல்வ கணபதி மற்றும் ஹவாலா புரோக்கர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஹவாலா புரோக்கர்கள் மட்டும் ஆஜரான நிலையில் செல்வகணபதி ஆஜராகவில்லை. அறுவை சிகிச்சை செய்திருப்பதால் 2 மாதம் அவகாசம் கேட்டு செல்வகணபதி கடிதம் அனுப்பி இருந்தார். இதனால் செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டுள்ளது. தங்கக் கட்டியை விற்றுத்தருமாறு ஹவாலா புரோக்கர் சூரஜிடம் செல்வகணபதி கேட்டதன் அடிப்படையில் விற்று கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.



  • Oct 28, 2024 12:27 IST
    ஓசூர் அருகே, லாரி ஓட்டுநரை தாக்கிய போக்குவரத்து காவலர்

    ஓசூர் அருகே மதுபோதையில் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டிய லாரி ஓட்டுநரை நிற்க சொல்லியும் நிற்காததால், லாரியை மறித்து ஓட்டுநர் மீது காவலர் தாக்குதல் நடத்தினார். தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்



  • Oct 28, 2024 12:26 IST
    தி.மு.க.,விற்கு எதிர்ப்பு அலையாகத்தான் த.வெ.க மாநாடு உள்ளது - ஆர்.பி.உதயகுமார்

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதன்முதலாக செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.,விற்கு எதிர்ப்பு அலையாகத்தான் நேற்றைய த.வெ.க மாநாடு உள்ளது என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்



  • Oct 28, 2024 11:59 IST
    கோவை தொழில் நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் பறிமுதல்; வருமான வரித்துறை தகவல்

    கோவையில் தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கணக்கில் வராத வருமானம் 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புல் மெஷின், லட்சுமி டூல்ஸ், ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வரதராஜன், பொன்னுதுரை ஆகியோர் தொடர்பான சுமார் 10 இடங்களில் 4 நாட்களாக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது



  • Oct 28, 2024 11:55 IST
    தி.மு.க சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள தி.மு.க தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தி.மு.க ஒருங்கிணைப்புக் குழு, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, பாக முகவர்களுடன் தொடர்பில் இருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. தொகுதி சார்ந்து அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படுகிறது



  • Oct 28, 2024 11:27 IST
    த.வெ.க கொள்கை விளக்க பாடல்; விஜய் குறித்து உருவாக்க தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சி

    என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டபோது உன்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்று விஜய் கூறினார் என தவெக கொள்கை விளக்க பாடலை உருவாக்க கிடைத்த வாய்ப்பு குறித்து தெருக்குரல் அறிவு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்



  • Oct 28, 2024 11:18 IST
    நெல்லை அருகே திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம்

    திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம். பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாய் அபராதம் விதிகப்படும் என நாங்குநேரி மற்றும் வடக்கு வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தனிநபர் கழிப்பிடத்தையோ, பொது கழிப்பிடத்தையோ பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 28, 2024 11:04 IST
    முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் திறப்பு

    பசும்பொன்னில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் 



  • Oct 28, 2024 10:51 IST
    உதயசூரியன் நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது

    "எத்தனை கட்சிகள் வந்தாலும் சரி, அதுகுறித்து கவலையில்லை, ஏனெனில் உதயசூரியன் என்றுமே நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது" என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். 



  • Oct 28, 2024 10:13 IST
    தங்கம் சவரனுக்கு ரூ.360 சரிவு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 சரிந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,315க்கும், சவரன் ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



  • Oct 28, 2024 10:12 IST
    திமுக கொடி, சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை துணை முதல்வர் உதயநிதி அணிவது தவறு

    அரசு ஊழியர் ஆடை குறித்த அரசாணை எண் 67, அரசை நடத்தும் அமைச்சருக்கும் பொருந்தும். திமுக கொடி, சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அணிவது தவறு என அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார். 



  • Oct 28, 2024 10:08 IST
    திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். 

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. 

    திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 4வது நாளாக கோயிலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

    தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், ஹோட்டல்களில் போலீசார் சோதனையிடுவதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர். 



  • Oct 28, 2024 09:33 IST
    கவரைப்பேட்டை ரயில் விபத்து: 200 பேரிடம் விசாரணை

    பொன்னேரி, கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக, பதிவான செல்போன் அழைப்பை கொண்டு 200 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது. டெலிகிராம், வாட்ஸ்அப், வி.பி.என் உள்ளிட்டவை பயன்படுத்தி பேசிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.



  • Oct 28, 2024 08:49 IST
    விஜய் பாஜகவின் சி டீம்: அமைச்சர் ரகுபதி

    விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை, பாஜகவின் சி டீம்

    நேற்று நடைபெற்ற தவெக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசியுள்ளார். அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அதிமுக பற்றி விஜய் பேசவில்லை. 

    அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தியுள்ளது. 

    திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும்  என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். 



  • Oct 28, 2024 07:43 IST
    சரவெடி அல்ல, புஸ்வாணம்

    "விஜய் பேச்சு சரவெடி அல்ல, புஸ்வாணம். கொள்கை எதிரியென்று விஜய்
    மறைமுகமாக எங்களை தான் சொல்கிறார். நாங்கள் பிரிவினைவாதம் பேசவில்லை...
    தவறான சாயம் பூச வேண்டாம். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல் விஜய் கிடையாது" என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



  • Oct 28, 2024 07:40 IST
    இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

    தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 11,176 பேருந்துகள் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment