பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 225-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னை குடிநீர் ஏரிகளில் 41.42% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போது 4.870 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 41.32% ; புழல் - 75.06% ; பூண்டி - 14.27% ; சோழவரம் - 10.36 ; கண்ணன்கோட்டை - 62.8%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 30, 2024 00:38 ISTபோதையில் ரகளை செய்த இளைஞரால் மும்பை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
அரக்கோணம் ரயில் நிலையத்தில் போதையில் போலீசை வம்புக்கு இழுத்த இளைஞரால், மும்பை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றது. போலீசார் அந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது, ரயில் பெட்டியின் கண்ணாடியை உடைத்ததால் நடைமேடையில் அவரது ரத்தம் சிதறியது. 10க்கும் மேற்பட்ட போலீசார், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கீழே சாய்த்து கையை கட்டி அடக்கினர்
-
Oct 30, 2024 00:36 ISTசென்னையில் கேஸ் நிரப்பும் பங்கில் விபத்து
சென்னை கே.கே.நகரில் பெட்ரோல் பங்கில் உள்ள சிஎன்ஜி கேஸ் நிரம்பும் நிலையத்தில் இருந்து திடீரென கேஸ் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பெட்ரோல் பங்கில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
-
Oct 29, 2024 21:18 ISTவிஜய் அறிவித்துள்ளது கூட்டாச்சோறு கொள்கை: ஆளூர் ஷாநவாஸ்
"திமுக, விசிக, நாம் தமிழர், காங்கிரஸ் என அனைத்து கட்சிகளையும் சேர்த்து கூட்டாச்சோறு செய்து கொள்கை அறிவித்துள்ளார் விஜய் என விசிக பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
-
Oct 29, 2024 20:29 ISTசாலை விபத்தில் காவலர் மரணம்: நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரண நிதியாக ரூ25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
-
Oct 29, 2024 19:40 ISTதீபாவளி பண்டிகை முன்னிட்டு 3 நாட்களுக்கு 4,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல்!
தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து வரும் நிலையில். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து 3 நாட்களுக்கு 4,900 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்க உள்ளது.
-
Oct 29, 2024 19:37 ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம். மிஷினில் காத்திருக்கும் பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களின் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனிடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
-
Oct 29, 2024 18:56 ISTசென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை
சென்னை அண்ணாசாலை, ராயப்பேட்டை, எழும்பூர், வடபழனி, ஆலந்தூர், வேளச்சேரி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க கடை வீதிகளுக்கு வருகை தந்த பொதுமக்கள் திடீரென பெய்த மழையால் சிரமம் அடைந்தனர்.
-
Oct 29, 2024 18:55 ISTகொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முயற்சி: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள பச்சை மரத்தோடை என்ற இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின்படி இடிக்க முயன்றபோது பத்துக்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைந்து வந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். வீடுகளை காலி செய்யல் கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Oct 29, 2024 18:53 ISTதீபாவளி தினத்தில் தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு சிறப்பு ரயில்
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக நாளை (அக்.30) தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவாரூர், காரைக்குடி, சிவகங்கை வழியாக காலை 3.45க்கு மானாமதுரை சென்றடைகிறது. அதே ரயில் மறுமார்க்கத்தில் அக்.31ம் தேதி காலை 11.45க்கு புறப்பட்டு இரவு 11.10க்கு தாம்பரம் வந்தடைகிறது.
-
Oct 29, 2024 18:50 ISTஉங்களை பெற்றது என் வாழ்நாள் வரம்: தொண்டர்களுக்கு விஜய் நன்றி
த.வெ.க மாநாட்டில் கண்ட காட்சிகள், கண்ணிலும், மனதிலும் கல்வெட்டாக பதிந்து விட்டன. இதயங்கள் இடையேயான அன்பிற்கு முன்னால் இன்னல்கள் பெரிதல்ல என்பதை உணர செய்தீர்கள். இந்த பயணத்தின் இலக்கை, தமிழக மண் இனி வரும் நாட்களில் பார்க்கும் அது உறுதி. உங்களை என் தோழர்களாக, குடும்ப உறவினர்களாக பெற்றது என் வாழ்நாள் வரம் என்று விஜய் கூறியுள்ளார். -
Oct 29, 2024 16:51 ISTசட்டவிரோத குவாரிகள்: புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பணி இழக்க நேரிடும் - ஐகோர்ட் எச்சரிக்கை
"சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் தங்களது பணியை இழக்க நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரித்துள்ளது. சட்ட விரோத குவாரிகள் நடைபெறுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், தமிழக வருவாய் துறை செயலர், மாசு கட்டுப்பாடு வாரியம், தேனி ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
Oct 29, 2024 16:25 ISTதமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் - ஸ்டாலின் அறிவிப்பு
மிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Oct 29, 2024 16:22 IST'அமரன்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - ஐகோர்ட் உத்தரவு
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, 'அமரன்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படம் திருட்டுத் தனமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் எற்படும் என ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Oct 29, 2024 15:28 ISTதமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை அரை நாள் விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நாளை (அக்டோபர் 30) பள்ளி, கல்லூரிகளுக்கு பிற்பகல் அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.
-
Oct 29, 2024 14:46 ISTவிஜய் வீசிய அணுகுண்டு அவருக்கு எதிராகவே வெடிக்கும் -திருமாவளவன்
அதிகாரப்பகிர்வு என்ற அறிவிப்பின் மூலம் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என விஜய் எதிர்பார்ப்பது நடக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் வீசிய அணுகுண்டு அவருக்கு எதிராகவே வெடிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
-
Oct 29, 2024 14:35 ISTபாஜகவை விஜய் நேரடியாக விமர்சிக்காதது ஏன்? ஜவாஹிருல்லா கேள்வி
பாஜகவை விஜய் நேரடியாக விமர்சிக்காதது ஏன் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஃபாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை பாயாசமா எனக் கேலி செய்வது யாரை மகிழ்ச்சிபடுத்துவதற்காக எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆரவாரங்கள் மட்டுமே வெற்றியாக விளைந்துவிடாது எனவும் விமர்சித்துள்ளார்.
-
Oct 29, 2024 13:51 IST7 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 29, 2024 13:48 ISTவிஜய்யுடன் கூட்டணியா? சூழலுக்கு ஏற்ப முடிவு - இபிஎஸ்
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படுமென அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
Oct 29, 2024 13:23 ISTவிஜய் குழப்பத்தில் இருக்கிறார் - எல்.முருகன்
த.வெ.க தலைவர் விஜய் குழப்பத்தில் இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேசியத்தை குழப்பமாக கையாண்டு வருவதாகவும், தெளிவான பாதையில் விஜய் பயணிக்க விரும்பவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
-
Oct 29, 2024 13:07 ISTவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 29, 2024 13:00 ISTஉதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிவதை எதிர்த்த வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Oct 29, 2024 12:45 IST5 ஐ.ஜி.க்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
வெடிகுண்டு வழக்குகளில் பிடிவாரண்டை அமல்படுத்தாமல் கால அவகாசம் கோரிய 5 ஐ.ஜி.க்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் அமல்படுத்த, கால அவகாசம் கோரிய காவல்துறை கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை நவம்பர் 29ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
-
Oct 29, 2024 12:32 ISTஎன்கவுன்ட்டர்கள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம், பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம், புதுக்கோட்டையில் துரைசாமி என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் என என்கவுன்ட்டர் செய்த 4 காவல் ஆய்வாளர்கள், விசாரணை அதிகாரி உட்பட என்கவுன்ட்டரில் தொடர்புடைய அனைவரும் மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்
-
Oct 29, 2024 12:14 IST3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.426.32 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.98.21 கோடி மதிப்பில் ஏரிக்கரைகள், மேம்பாலத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணி, பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரை மேம்பாடு, வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி ஆகிய புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.156.5 கோடி செலவில் கட்டப்பட்ட வகுப்பறைகள் ஆய்வகங்கள், கலையரங்கம், விடுதிகள், உள்விளையாட்டு அரங்கங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
Oct 29, 2024 12:11 ISTஅம்மா அரங்கம், தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகையை மறு நிர்ணயம் செய்து தனியாருக்கு குத்தகை விட மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விடவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவருக்கும் இன்றைய கூட்டத்தில் டேப் வழங்கப்படுகிறது.
-
Oct 29, 2024 11:46 ISTசிறைத்துறை டி.ஐ.ஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தீவிரமாக கவனிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல, ஆர்டர்லியாக காவல்துறையினரையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
-
Oct 29, 2024 11:32 ISTத.வெ.க மாநாடு; விழுப்புரம்-கள்ளக்குறிச்சியில் மதுபானங்கள் விற்பனை அதிகரிப்பு
விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 195 மதுக்கடைகள் இயங்கும் நிலையில், சாதாரண நாட்களில் 4 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகி வருகிறது. த.வெ.க மாநாடு விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் மது விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 26ஆம் தேதி 4 கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், மாநாடு நடைபெற்ற தினத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, சுமார் 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
-
Oct 29, 2024 11:28 ISTதீபாவளி பண்டிகை; கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கென சிறப்பு பிரிவு அமைப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கென சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 11 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் 20 பொது சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன
-
Oct 29, 2024 11:13 ISTராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. கிலிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
-
Oct 29, 2024 11:05 ISTஅரசுப் பேருந்துகளில் 69% இருக்கைகள் உள்ளன; முன்பதிவு செய்வீர் - போக்குவரத்துத்துறைச் செயலாளர்
அரசுப் பேருந்துகளில் 69% இருக்கைகள் உள்ளன; தீபாவளி கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு செய்வீர் என போக்குவரத்துத்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Oct 29, 2024 10:51 ISTதீபாவளி வாழ்த்து கூறிய சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச வின்வெளி மையத்தில் இருந்து, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
இதில், காணொலி காட்சி மூலமாக, விண்வெளியில் இருந்து பேசிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இந்த ஆண்டு பூமியில் இருந்து 410 கிலோ மீட்டரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தீபாவளியை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்
-
Oct 29, 2024 10:40 IST5 மாவட்டங்களில் மழை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Oct 29, 2024 10:23 ISTவிமான கட்டணம் கிடு கிடு உயர்வு
தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறையைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களுக்கான விமான கட்டணம் பன் மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109, தற்போது, ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்வு. சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300, தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளது.
-
Oct 29, 2024 10:22 ISTதங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,375க்கு விற்பனை செய்யப்படுகிறது
-
Oct 29, 2024 09:58 ISTசென்னையில் இருந்து நேற்று பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சென்னையில் இருந்து பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். வழக்கமாக இயங்ககூடிய 2,092 பேருந்துகள் உடன் கூடுதலாக 369 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
-
Oct 29, 2024 09:53 ISTபூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது
சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையேயான பறக்கும் ரயில், பூங்கா ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாதங்களுக்கு பின் மீண்டும் , வேளச்சேரி - கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தொடங்கியது
கடற்கரை - எழும்பூர் இடையேயான 4வது வழித்தட பணிகள் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவை பகுதிவாரியாக ரத்து செய்யப்பட்டது
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் பறக்கும் ரயில் சேவை வேளச்சேரி - கடற்கரை இடையே வழக்கம் போல் தொடங்கியது
மறு அறிவிப்பு வரும் வரை சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
-
Oct 29, 2024 09:30 ISTமெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ்
சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Non-Executive பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
Oct 29, 2024 09:00 ISTஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி
தர்மபுரி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த நிலையில் 16 நாட்களுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது.
-
Oct 29, 2024 08:11 ISTசென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
14 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று முதல் 2 மார்க்கமாக தலா 45 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரியில் இருந்து முதல் ரயில் புறப்பட்டது. இரவு 11.13 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு கடைசி ரயில் புறப்படும். -
Oct 29, 2024 08:03 ISTவாணவேடிக்கையின் போது விபத்து - 150 பேர் காயம்
கேரள மாநிலம் காசர்கோட்டில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 150 பேர் காயம் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நீலேஸ்வரம் கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையின்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
வாணவேடிக்கையின்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த பந்தலில் தீப்பற்றி விபத்துஇ காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.