பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2409 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 93 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 307 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Nov 09, 2024 22:50 IST2026 தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக்க தயார்: அரசு ஊழியர்கள் சங்கம்!
எதிர்கட்சி தலைவராக இருந்தால் மட்டுமே முதலவர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம். ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என அனைவரின் உரிமைகளை பறித்தது தான் 3 ஆண்டு கால சாதனையாக இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளளது.
-
Nov 09, 2024 21:13 ISTத.வெ.க மாநாட்டுக்கு சென்று மாயமான மகன்: தந்தை புகார்
கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய் மாநாட்டுக்கு சென்ற தன் மகன் 2 வாரங்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை என்று தந்தை கண்ணீர் மல்க பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
-
Nov 09, 2024 20:43 ISTமதுரை ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி காரணமாக பிரதான நுழைவாயில் மூடல்!
மதுரை ரயில் நிலையத்தில் ₹347 கோடி செலவில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதான நுழைவாயில் (கிழக்கு) வரும் 11ம் தேதி மாலை 3 மணி முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக பிரதான நுழைவு வாயிலின் இடது புறம் உள்ள ரயில்வே புக்கிங் அலுவலகம் அருகில் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 09, 2024 20:32 ISTபைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் மரணம்
கடலூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் மரணமடைந்தார். பைக்கை ஓட்டி சென்ற கல்லூரி மாணவர் ரஞ்சித், 3 குழந்தைகள் படுகாயமடைந்தனர். கடலூரில் இருந்து திருச்சி சென்ற பேருந்து பெரியகாட்டுசாகை பகுதியில் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ரஞ்சித், தனது கிராமத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்களை அழைத்து சென்றுள்ளார்
-
Nov 09, 2024 19:40 ISTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது, ரிக்டர் அளவுகோளில் 3.3 ஆக உணரப்பட்டுள்ளது. மதியம் 1.30 மணியளவில், பூமிக்கு அடியில் 5 மீட்டர் நில அதிர்வு ஏற்பட்டதாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Nov 09, 2024 19:16 ISTலித்துவேனியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்
திருவள்ளூர் மாவட்டத்தில் லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்து கரம்பிடித்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் சூர்யகுமார். தமிழ்நாட்டில் கட்டட பொறியியல் பயின்ற இவர், மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்றபோது காதல் வயப்பட்டுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
-
Nov 09, 2024 18:30 ISTஅரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விருதுநகர் சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களிடம் பள்ளி மற்றும் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
-
Nov 09, 2024 18:29 ISTபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ21 கோடி செலவில் சீரமைக்க, வனத்துறை முடிவு
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ21 கோடி செலவில் சீரமைக்க, வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பாக்கம், கால்வாய் பகுதகிளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நிலத்தை சுற்றி கரைகள் அமைத்தல், ஆகாய தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 09, 2024 18:26 ISTமாணவியின் பேச்சைக் கேட்டு சிரித்த முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர் சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியின் பேச்சைக் கேட்டு சிரித்து மகிழ்ந்தார்.
-
Nov 09, 2024 18:19 ISTஅரசு காப்பகத்தில் முதல்வர் ஆய்வு
விருதுநகர் சூலைக்கரைமேட்டில் அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது காப்பகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
-
Nov 09, 2024 18:17 ISTபள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரமைப்பு
1965ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்ட நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
-
Nov 09, 2024 17:10 ISTஆக்கிரமிப்பு அகற்றம்: பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
மதுரை பி.பி குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பதற்காக 300-க்கும் மேற்பட்டோர் புறப்பட்ட நிலையில் பொதுமக்கள் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் முதலமைச்சரை சந்திக்க சென்றுள்ளனர்
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைநகர் பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவியது.
முல்லை நகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு என கூறி வீடுகளை இடிக்கவுள்ளதால் வீட்டில் உள்ள பொருட்களை நாளைக்குள் எடுக்க வேண்டும் என 500 வீடுகளில் நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு நோட்டீஸ் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை
-
Nov 09, 2024 16:49 ISTபுதுச்சேரியில் கள்ள லாட்டரி விற்பனை: 4 பேர் கைது; கும்பலின் தலைவனுக்கு வலை வீச்சு
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், லாட்டரி கும்பலின் தலைவன் சரவணனை தீவிரமாக தேடி வருகின்றனர்
புதுச்சேரி சீனியர் எஸ்.பி கலைவாணன் உத்தரவின் பேரில் சட்ட விரோதமாக கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை மற்றும் பெரிய கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கண்ணன்,கணேசன்,முகமது ரபீக், ராஜாராம் ஆகிய 4 பேரை போலிசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக சீனியர் எஸ்.பி கலைவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கள்ள ஆற்றல் விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர் என்றும், தலைமறைவான லாட்டரி கும்பலின் தலைவன் சரவணனை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
-
Nov 09, 2024 16:47 ISTகுருநானக் ஜெயந்தி: 15 ஆம் தேதி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை இல்லை
குருநானக் ஜெயந்தியையொட்டி வரும் 15ஆம் தேதி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வரும் 15ம் தேதி குருநானக் ஜெயந்தி. மத்திய அரசு விடுமுறை தினமான அன்று, ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே அன்று, நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.இருப்பினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Nov 09, 2024 16:45 ISTவாக்காளர்கள் பட்டியல் திருத்தம்: புதுச்சேரியில் 2 நாள் சிறப்பு முகம் தொடக்கம்
வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள புதுச்சேரி முழுவதும் சிறப்பு முகாம்கள் தொடங்கியது. இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக புதுச்சேரி முழுவதும் இன்று தொடங்கி நாளை வரை 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி புதுச்சேரியில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.
இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உட்பட பெண்கள், ஆண்கள் என வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக நேரடியாக வந்து அலுவலரை சந்தித்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.இதைத் தொடர்ந்து வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
-
Nov 09, 2024 16:44 ISTபுதுச்சேரி: அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
வனத்துறை அருகே உள்ள வாய்க்காலில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் தொடர்பாக உருளையன்பேட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுச்சேரி- கடலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே பெரியார் நகருக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இதனிடையே இன்று காலை அந்த வாய்க்காலில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் யார் என்றும், மது போதையில் வாய்க்காலில் விழுந்து இறந்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
-
Nov 09, 2024 16:24 IST"விண்வெளி ஆராய்ச்சி சிறப்பாக உள்ளது" - சிவன்
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் மற்ற நாடுகளைப் போலவே அனைத்து முயற்சிகளிலும் நாம் சிறப்பாக வளர்ந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியுள்ளார்.
-
Nov 09, 2024 16:03 ISTபாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலி எண்ணைக்கை 25ஆக உயர்வு
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Nov 09, 2024 16:01 ISTகாங். தலைவர்களின் படங்களுடன் பொட்டலம்
கேரளா மாநிலம் வயநாட்டில் ரகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் படங்கள் பொறித்த பொட்டலங்களில் உணவு விநியோகம் செய்யப்பட்டதையடுத்து வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பொட்டலங்களை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Nov 09, 2024 15:49 ISTடிரக் தமிழ்நாடு திட்டத்தை எதிர்த்து வழக்கு
வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
Nov 09, 2024 15:47 ISTபிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை - பிரதமர் மோடி
மலைப்பிரதேசங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்று சூழலை பாதுகாப்பாக வைக்க க்முடியும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
-
Nov 09, 2024 15:44 IST“ட்ரம்ப் ஆட்சியில் உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” - துருக்கி அதிபர் நம்பிக்கை!
அமெரிக்காவில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்பின் ஆட்சியில் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை உள்ளதாக துருக்கி அதிபர் கூறியுள்ளார்.
-
Nov 09, 2024 15:24 ISTவிஏஓ கல்வித்தகுதியை உயர்த்த வலியுறுத்தல்..
புதுக்கோட்டையில் நடைபெற்ற விஏஓ சங்க மாநாட்டில் விஏஓ வேலைக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வலியுறுத்தப்பட்டது.
-
Nov 09, 2024 15:22 ISTஆவடி ஆணையரக எல்லைக்குள் 52 இடங்களில் ரெய்டு..
2023 மற்றும் நடப்பாண்டில் நில மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டவர்கள் வீடுகள் என ஆவடி காவல் ஆணையாக எல்லைக்குட்பட்ட 52 இடங்களில் சைபர் கிரைம் காயல் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் கே.ஆர். வெங்கடேசன் வீட்டில் மத்திய குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
Nov 09, 2024 14:45 ISTரஜினியை நேரில் சந்தித்த கவிஞர் வைரமுத்து
தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து நடிகர் ரஜினிகாந்தை வீட்டில் சந்தித்துள்ளார். ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்த பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடுதான் வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 80 நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு 'கிரீன் டீ'யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை இடைவெளியும் இல்லை, சினிமாவின் அரசியல் அரசியலின் சினிமா வாழ்வியல் - சமூகவியல் கூட்டணிக் கணக்குகள் தலைவர்கள் தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்த எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது தன்முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது.
நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை தவத்திற்கு ஒருவர்; தர்க்கத்திற்கு இருவர் நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம் ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன் இரு தரப்புக்கும்அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு அது இது" என ரஜினியுடன் நடந்த உரையாடலையும் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கடிகாரம் பாராத
— வைரமுத்து (@Vairamuthu) November 9, 2024
உரையாடல்
சிலபேரோடுதான் வாய்க்கும்
அவருள் ஒருவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
80நிமிடங்கள்
உரையாடியிருக்கிறோம்
ஒரே ஒரு
‘கிரீன் டீ’யைத் தவிர
எந்த இடைஞ்சலும் இல்லை;
இடைவெளியும் இல்லை
சினிமாவின் அரசியல்
அரசியலின் சினிமா
வாழ்வியல் - சமூகவியல்
கூட்டணிக் கணக்குகள்… pic.twitter.com/GRRypLEFUr -
Nov 09, 2024 14:41 IST6 மாவட்டங்களில் இன்று கனமழை - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 09, 2024 14:16 ISTஉரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிர்கள் குருத்து வெடிக்கும் நிலையில் உள்ளன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போது தான் செழித்து வளரத் தொடங்குகின்றன. இரு நிலையில் உள்ள பயிர்களுக்கும் யூரியாவும், பொட்டாஷும் பெருமளவில் தேவை. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட அந்த உரங்கள் கிடைக்கவில்லை.
சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். அதைக் கட்டுப்படுத்தவோ, பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல் அதிகபட்ச சில்லறை விலைக்கு தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Nov 09, 2024 14:14 ISTவிருதுநகர்: பட்டாசு தொழிலாளர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்களை சந்திக்கும் முதல்-அமைச்சர், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
-
Nov 09, 2024 13:35 ISTகடல் விமான சேவை - தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு
விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சேவையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். பிரகாசம் தடுப்பணையில் இருந்து ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கு விமானம் புறப்பட்டது. வானிலும் நீரிலும் செல்லக்கூடிய இந்த விமானத்தில் 14 பேர் வரை பயணிக்கலாம்.
-
Nov 09, 2024 13:30 ISTகுமாரி கண்ணாடிக் கூண்டு பாலம்: ஜனவரியில் ஸ்டாலின் திறப்பு
கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடிக் கூண்டு பாலம் அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பாலத்தை திறந்துவைத்து, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு விழாவிலும் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Nov 09, 2024 13:22 ISTமதுரையை தார்ப்பாய் போட்டா முடியும்? செல்லூர் ராஜூ கேள்வி
"மழை பெய்ய தான் செய்யும்.. அதற்காக மதுரையை தார்ப்பாய் போட்டா மூடிவிட முடியும்?" என்று அதிகாரிகளை கடிந்து கொண்டுள்ளார் அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ.
மதுரையில் பாதாள சாக்கடை கால்வாய்ப் பணிகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்கள் சந்திப்பின் அவர் அவ்வாறு கேள்வி எழுப்பினார்.
-
Nov 09, 2024 13:01 ISTஜி.வி.பிரகாஷுக்கு வாட்ச் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்
அமரன் வெற்றியை அடுத்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் பரிசளித்துள்ளார்.
-
Nov 09, 2024 11:58 ISTபாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 21 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம், படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலைப்படையினரின் தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
-
Nov 09, 2024 11:42 ISTவேளச்சேரிக்கு நல்ல தீர்வு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வேளச்சேரி பகுதி வெள்ளச்சேரியாக இருந்தது. நன்னீர் குளம் அமைப்பதன் மூலம் வேளச்சேரிக்கு நல்ல தீர்வு. 3800 சதுர மீட்டர் அகலத்திற்கு புதிய நன்னீர் குளம் உருவாக்கப்பட்டு உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
Nov 09, 2024 10:46 ISTகுரூப் 2, 2A தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2A தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. இதன் மூலம் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2540 ஆக அதிகரித்துள்ளது.
-
Nov 09, 2024 10:25 IST2 நாள் பயணமாக விருதுநகர் சென்ற ஸ்டாலின்
அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக விருதுநகர் மாவட்டம் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.
பிற்பகலில் விருதுநகருக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு, மாவட்ட எல்லையில் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்து, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
மாலையில் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். நாளை காலை, குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்
பின்னர் பட்டம்புதூரில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று 40,000 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவும், 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
-
Nov 09, 2024 09:50 ISTநல்பூரில் ஷாலிமார்- செகந்திராபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
மேற்கு வங்கம் ஹவுரா அருகே நல்பூரில் ஷாலிமார் - செகந்திராபாத் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து. நல்வாய்ப்பாக எந்த உயிர்தேசமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Nov 09, 2024 09:03 ISTவங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதற்கடுத்து இரு நாட்களில் தமிழ்நாடு- இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
Nov 09, 2024 08:34 IST23ம் தேதி கிராம சபை கூட்டம்
தமிழ்நாட்டில், நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமசபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
-
Nov 09, 2024 07:50 ISTஉலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது- மோடி
மகாராஷ்டிர மாநிலம் துலே-வில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ”உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. பாகிஸ்தானின் மொழியில் பேசி வருகின்றன. அம்பேத்கர் இயற்றிய சட்டம் மட்டும் தான் காஷ்மீரில் செல்லுபடியாகும். காங்கிரஸ் கட்சி முன்பு மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தியது" என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.