Advertisment

Tamil news today: ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிட கோரி கெஜ்ரிவால் மோடிக்கு கடிதம்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

Petrol and Diesel Price:

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

டிரோன் விவகாரம்:

சென்னையில் அனுமதியின்றி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.  உயர்நீதிமன்றம், ரிசர்வ் வங்கியை ட்ரோன் மூலம் படம் பிடித்த கர்நாடக மாநில இளைஞர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இனி ட்விட்டர் இவரிடம்தான் :

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் ஆகியோர் பணி நீக்கம்.  ட்விட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.



  • 00:36 (IST) 29 Oct 2022
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மு.க. ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

    அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனை நடந்தது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் வீடு திரும்பினார்.

    மு.க. ஸ்டாலினுக்கு முதுகு வலி பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.



  • 21:59 (IST) 28 Oct 2022
    முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

    சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை காலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



  • 21:26 (IST) 28 Oct 2022
    ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிட கோரி கெஜ்ரிவால் மோடிக்கு கடிதம்

    ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்களை அச்சிடவேண்டும் எனப் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



  • 19:46 (IST) 28 Oct 2022
    இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை - மு.க.ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 18:56 (IST) 28 Oct 2022
    எலான் மஸ்க்குக்கு ராகுல் காந்தி வாழ்த்து

    ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்க்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 18:55 (IST) 28 Oct 2022
    காரைக்குடி: தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த தடை

    காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு பாதுகாப்பு கருதி மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 18:54 (IST) 28 Oct 2022
    சிவசங்கர் பாபாவுக்கு எதிராக மேல்முறையீடு

    மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதியப்பட்ட புகாரில் இருந்து விடுவிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.



  • 18:50 (IST) 28 Oct 2022
    கேரளத்தில் பறவைக் காய்ச்சல்.. கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு

    கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் கோவை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



  • 18:49 (IST) 28 Oct 2022
    திருமண வீட்டில் ரசகுல்லா தீர்ந்ததால் சண்டை.. ஒருவர் உயிரிழப்பு

    உத்தரப் பிரதேசத்தில் திருமண வீட்டில் ரசகுல்லா தீர்ந்ததால் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்.

    உஸ்மான் என்பவரின் மகளுக்கு ஏற்பட்ட திருமணத்தின்போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.



  • 18:28 (IST) 28 Oct 2022
    கோடநாடு வழக்கு... நேபாளம் விரைகிறது சி.பி.சி.ஐ.டி., போலீஸ்

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் நேபாளம் செல்ல உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



  • 18:10 (IST) 28 Oct 2022
    தேர்தல் நடத்தக் கோரி இம்ரான் கான் பேரணி

    பாகிஸ்தானில் தேர்தல் நடத்தக் கோரி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பேரணி நடைபெற்றது.

    இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.



  • 17:28 (IST) 28 Oct 2022
    பந்த் அழைப்பு விடுக்கவில்லை.. நீதிமன்றத்தில் பாஜக பதில்

    கோவையில் கார்வெடிப்பு தொடர்பாக அக்.31ஆம் தேதி முழு அடைப்புக்கு எதிராக பாஜக அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது பாஜக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கோவையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றார்.



  • 17:26 (IST) 28 Oct 2022
    தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது.. தங்கம் தென்னரசு

    தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டும் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.



  • 17:05 (IST) 28 Oct 2022
    கோவை கார் வெடிப்பு.. 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    கோவையில் சிலிண்டர் கார் வெடிப்பு விபத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.



  • 17:00 (IST) 28 Oct 2022
    இலவசங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.. காங்கிரஸ்

    இலவசங்கள் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.



  • 16:46 (IST) 28 Oct 2022
    சீனாவில் மீண்டும் ஊரடங்கு

    சீனாவின் வூகான் மாகாணத்தில் அக்.30ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மாகாணத்தில் திடீரென கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகமான நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



  • 16:38 (IST) 28 Oct 2022
    பந்த் நடத்தினால் நடவடிக்கை.. நீதிபதிகள் எச்சரிக்கை

    கோவையில் அனுமதியின்றி பந்த் நடத்தினால் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



  • 16:12 (IST) 28 Oct 2022
    கோவை கார் வெடிப்பு... 109 பொருள்கள் பறிமுதல்

    கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து இதுவரை 109 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அதில் வெடிமருந்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என என்ஐஏ தகவல்.



  • 15:21 (IST) 28 Oct 2022
    கொடநாடு வழக்கு

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.



  • 15:21 (IST) 28 Oct 2022
    கோவை கார் வெடிப்பு வழக்கு

    கோவை கார் வெடிப்பு வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வெடிபொருள் உள்ளிட்ட 109 பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் என்.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது



  • 14:58 (IST) 28 Oct 2022
    ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்

    திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல்; தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும் என ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.



  • 13:57 (IST) 28 Oct 2022
    டி20 உலக கோப்பை

    ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான போட்டி மழையின் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



  • 13:17 (IST) 28 Oct 2022
    டி20 உலகக்கோப்பை

    டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் மெல்போர்ன் மைதானத்தில் அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.



  • 13:16 (IST) 28 Oct 2022
    5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:45 (IST) 28 Oct 2022
    தமிழ்நாட்டில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம்

    கிராம சபை கூட்டங்களை போல, தமிழ்நாட்டில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது. பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி மாநகர சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் குறை கேட்கிறார்



  • 12:12 (IST) 28 Oct 2022
    கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.



  • 11:19 (IST) 28 Oct 2022
    விமரிசையாக நடைபெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்

    விமரிசையாக நடைபெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் நர்மதா என்ற பெண்ணை கரம்பிடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஹரிஷ் கல்யாண் திருமணம் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து



  • 11:19 (IST) 28 Oct 2022
    சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு

    சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு. சட்டம், ஒழுங்கு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி பல்வேறு சவால்களுக்கு மத்தியில், பண்டிகைகளின் போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை - பிரதமர் மோடி



  • 10:07 (IST) 28 Oct 2022
    மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்

    கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்



  • 10:04 (IST) 28 Oct 2022
    ஆன்லைன் வழி பி.எச்.டி. படிப்பு

    ஆன்லைன் வழி பி.எச்.டி. படிப்பு செல்லத்தக்கதல்ல" அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு



  • 09:29 (IST) 28 Oct 2022
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதல்

    ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 , காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதல்



  • 09:28 (IST) 28 Oct 2022
    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

    ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 , பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்



  • 09:28 (IST) 28 Oct 2022
    கண்டன ஆர்ப்பாட்டம்

    சென்னையில் விசிக சார்பில் நவம்பர் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம். மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment