Tamil Live News Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று, “தமிழ்நாட்டிற்கும் திராவிட முன்னேற்றக கழகத்திற்கும் வாழ்வை அர்பணித்திருக்கிறேன்; பிறந்தநாள் விழா என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும்”, என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
ஈரோடு இடைத் தேர்தல்: சீல் வைக்கப்பட்ட அறை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ஸ்ட்ராங் ரூமிற்கு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறையின் பாதுகாப்பை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
மீண்டும் தன்னை நிருபித்த மெஸ்ஸி
2022ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான FIFA விருதை பெற்றார் மெஸ்ஸி. கால்பந்து வரலற்றி ஒரு முக்கியமான நபராக மெஸ்ஸி பார்க்கப்படுகிறார்.
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம் போதுமானதல்ல. அபராதத்தை உயர்த்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது
பாழடைந்த நூலக கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
பயனாளிகளின் நிர்வாணப் படம் இணையத்தில் பரவாத வகையில் ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Take it down என்ற வசதி மூலம் தவறுதலாக தாங்கள் பதிவிட்ட அல்லது குழந்தை பருவத்தில் பதிவிட்ட புகைப்படத்தை இணையத்தில் பரவாமல் நீக்கிக் கொள்ளலாம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பு அதிகம். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான பாதையை கண்டுபிடித்து விட்டோம். ஆனால் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. கொரிய படங்களை போல இந்திய திரைப்படங்கள் வலுவான பாதையை உருவாக்க வேண்டும் என இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ளார்
திருச்சி, லால்குடி அருகே உள்ள அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி மதியம் 2 மணி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் அறிவித்துள்ளார்.
அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
நடிகர் யோகிபாபு நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை தற்போது வெளியிட மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தேன். கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்த வலியுறுத்தினேன் என பிரதமர் மோடியை சந்தித்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பெயரை பயன்படுத்த மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தினேன் என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5ஜி நெட்வொர்க் சேவை பிப்.28ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதனை ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று தொடங்கிவைத்தார்.
டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் சி.பி.ஐ கைது செய்து ரிமாண்ட் செய்துள்ள நிலையில் மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார் என்றும் அவரது ராஜினாமாவை முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட்-ஐ சுட்டுக் கொன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அந்த இடத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய அளவிலான இரு சக்கர பேரணிக்கு பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா பிப்.27ஆம் தேதி சி.பி.ஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மார்ச் 1, 2ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சீனா பங்கேற்க உள்ளது. இதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் மார்ச் 2ஆம் தேதி டெல்லி வருகிறார் 2019ல் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்ட பிறகு சீனாவின் உயர் மட்ட தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை
பஞ்சாப் சட்டப்பேரவையை மார்ச் 3ம் தேதி கூட்ட ஆளுநர் அழைப்பு – உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்க ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில், பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
“இந்தூரில் நாளை தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் களமிறக்கப்படுவாரா என்பது டாஸ் போடும் முன் தெரிய வரும்” கே.எல்.ராகுலுக்கு பதில் சுப்மன் கில் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார். மேலும் திறமையான வீரர்களுக்கு அணி நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் எனவும் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு பெண்களின் பிரச்சனைகளில் அதிக கவனம்” – டெல்லியில் பதவியேற்புக்கு பின் குஷ்பு பேட்டி
முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் மக்கள் சேவை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் மகளிர் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட நாள் மன நிம்மதியுடன் வாழ்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் அடக்குமுறையை பாஜக கைவிட வேண்டும். கைவிடாவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பார்கள். டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம்
நிதி நிலை அறிக்கை தொடர்பாக, மார்ச் 2ஆம் தேதி தொழிற்துறையினருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். குறு, சிறு நடுத்தர தொழில்துறை பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மார்ச் 1 முதல் வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை கண்காணித்து, ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்- அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.
தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின் இணைப்புகளுடன் 2.66 கோடி ஆதார் எண் (99.57%) இணைக்கப்பட்டுள்ளன; இதுவரை இணைத்திடாதவர்கள் இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்- அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை பணிக்கா 16 டேபிள்கள் போடப்படும். – ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி பேட்டி
நாளை பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
பள்ளி குழந்தைகள் பாட்டு பாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் அரசு விழா நிறைவடையும் தருணத்தில் திடீரென எழுந்த குழந்தைகள், பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இங்கிலாந்து Vs நியூசிலாந்து : வெலிங்டனில் நடைபெற்ற 2வது டெஸ்ட்
வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி
போட்டியை டிரா செய்ய ஒரு ரன் தேவைப்பட்ட போது ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து
சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 அதிகரிப்பு
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,207, சவரனுக்கு ரூ.41,656க்கு விற்பனை
கடலூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
முகமூடி அணிந்து கொண்டு நிதானமாக திருடிச் சென்ற கொள்ளையர்கள்- சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றும் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் மின்சார எண்ணுடன் ஆதார்-ஐ இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க அவகாசம் நீட்டிக்கபடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் – சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சீனாவின் டிக்டாக் செயலிக்கு கனடா தடை விதித்துள்ளது
தனி உரிமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக நடவடிக்கை என கனடா விளக்கம்
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது
சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 3,702 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு. வாகன நிறுத்த கோட்டைத் தாண்டி வாகனங்களை நிறுத்தியவர்களை வீடியோ பதிவு கொண்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு – போக்குவரத்து காவல்துறை
திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே கார் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. அதிவேகமாக வந்த கார் சைக்கிளில் வந்த பள்ளி மாணவர்கள் மீது மோதியதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு .
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசிக்கு ஆன்மிக பயணம் சென்று சென்னை திரும்பிய பயனாளிகள் . சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் பயனாளிகளை வரவேற்றார் அமைச்சர் சேகர்பாபு
மதுரை, மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு. கைது செய்ய சென்ற போது, அரிவாளால் தாக்க முயன்றதால் போலீசார் அதிரடி
டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் . இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டம். இன்று மாலைக்குள் மின் – ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தல்
தஜிகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
ஒரு மாதத்துக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கா விட்டால், மை பூசி அழிப்போம் – வணிகர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை