Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு ஆகியோரும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
-
Jul 24, 2024 22:08 ISTகன்னியாகுமரியில் 1000 அடி உயர காமராஜர் சிலை: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
கன்னியாகுமரியில் 1000 அடி உயர காமராஜர் சிலை நிறுவ வேண்டும். அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Jul 24, 2024 22:05 IST2 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ். அணை
2 ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது. 124.80 அடி கொண்ட கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு நீர் வரத்து 41,000 கன அடியாக உள்ளது காவிரி வழியே தமிழ்நாட்டுக்கு 38,500 கன அடி தண்ணீரும், கர்நாடக விளை நிலங்களுக்கு கால்வாய் மூலம் 2,500 கன அடி தண்ணீரும் அணையில் இருந்து வெளியேற்றம்
-
Jul 24, 2024 22:03 ISTசர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீட்டா அம்பானி
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
Jul 24, 2024 19:03 ISTமாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை; தமிழ் புதல்வன் திட்டப் பணிகளைத் தொடங்கியது தமிழக அரசு
உயர் கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டப் பணிகளைத் தமிழக அரசு தொடங்கியது. தகுதியான மாணவர்கள், ஆதார் எண்ணை கட்டாயமாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Jul 24, 2024 18:57 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சீசிங் ராஜா தப்பி ஓடியதாக தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் 2-வது மனைவி வீட்டில் பதுங்கியிருந்த சீசிங் ராஜா, காரில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. காரின் பதிவெண்ணை வைத்து சீசிங் ராஜாவை தனிப்படை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
-
Jul 24, 2024 18:32 ISTதமிழ்நாட்டிற்கு ரூ. 6,362 கோடி நிதி ஒதுக்கீடு - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்: “பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6,362 கோடி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டிற்கு 2009 - 20214 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ஒதுக்கியதைவிட 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். கடந்த ஆண்டு ரூ. 6,080 கோடி தமிழ்நாட்டிற்கென ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
-
Jul 24, 2024 18:24 ISTகடற்கரை - எழும்பூர் வழித்தடத்திற்கு நிலம் எடுப்பதில் தாமதம்: தமிழக அரசு மீது ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு
சென்னை கடற்கரை - எழும்பூர் 4 வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதி தமிழக அரசு தாமதம் செய்கிறது; தற்போது 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம்சாட்டியுள்ளார்.
-
Jul 24, 2024 18:15 IST'ராயன்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
சன் பிக்சர்ஸ் தயாரிபில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் திரைப்படம் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ராயன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் காலை 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
Jul 24, 2024 17:34 ISTகர்நாடகா ஆகஸ்ட் மாதத்திற்கான நீரை திறந்துவிட வலியுறுத்தினோம் - தமிழக நீர்வளத்துறை செயலர்
காவிரி மேலாண்மை ஆனைய கூட்டத்திற்குபின் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பேட்டி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 45 டி.எம்.சி காவிரி நீரை கர்நாடகா திறக்க வலியுறுத்தினோம். 45 டி.எம்.சி நீர் திறப்பது குறித்து ஜூலை 30-ல் முடிவெடுக்கப்படும் என
காவிரி மேலாண்மை ஆனையம் அறிவித்துள்ளது. -
Jul 24, 2024 17:00 IST2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி; டி.டி.வி தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனக் கூறிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரையில் அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
-
Jul 24, 2024 16:39 ISTசாதிவாரி கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்; அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
-
Jul 24, 2024 16:36 ISTசெந்தில் பாலாஜி வழக்கு; டிஜிட்டல் ஆவணங்கள் எங்கே? உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள்” என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
-
Jul 24, 2024 16:33 ISTபட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு; தயாநிதி மாறன்
“குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது” என தயாநிதி மாறன் எம்.பி. கூறியுள்ளார்
-
Jul 24, 2024 15:46 ISTநாட்டை காப்பாற்றாது; ஆட்சியை காப்பாற்றும் பட்ஜெட்; மு.க. ஸ்டாலின்
“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!
அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் #INDIA கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
— M.K.Stalin (@mkstalin) July 24, 2024
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே…
“தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே… pic.twitter.com/95xXotDQDa -
Jul 24, 2024 15:07 ISTசெந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றவருகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜரானார். -
Jul 24, 2024 14:45 ISTசாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும்
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும். வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்த பின் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
-
Jul 24, 2024 14:05 ISTகாவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் எந்த நேரத்திலும் 30,000 முதல் 50,000 கன அடி வரை நீர் திறக்கப்படும் என எச்சரிக்கை காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்
-
Jul 24, 2024 13:45 ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: ஆக்ஸ்ட் 6ம் தேதி விசாரணை
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்குகள் ஆகஸ்ட் 6ம் தேதி இறுதி விசாரணை - சென்னை உயர் நீதிமன்றம் அரசின் அறிக்கை அடிப்படையில் வாதங்களை முன்வைக்க உள்ளதாக அ.தி.மு.க, பா.ம.க. தரப்பு தகவல்
-
Jul 24, 2024 13:45 ISTஇலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் "ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன் தினம் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு" "இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்" கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என முதல்வர் ஸ்டாலின் கவலை "இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்"
-
Jul 24, 2024 13:24 ISTபண மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன்
பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. சவுக்கு சங்கர் தரப்பில் இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 24, 2024 12:53 ISTஅடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள்: தமிழ்நாடு அரசு
புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிதாக ரேஷன் கார்டுகள் பெற 2.8 லட்சம் பேர் விண்ணப்பம்.
-
Jul 24, 2024 12:40 ISTவிமான விபத்தில் 18 பேர் பலி
நேபாளத்தில் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலி. விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பல்.
-
Jul 24, 2024 12:36 ISTவிமான விபத்து- 18 பேரின் உடல்கள் மீட்பு
நேபாள விமான விபத்தில் 18 பேரின் உடல்கள் மீட்பு
காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி சாக்கியா, மருத்துவமனையில் அனுமதி
-
Jul 24, 2024 12:12 ISTகல்வராயன் மலைப்பகுதியை முதல்வர் பார்வையிட வேண்டும்
கல்வராயன் மலைப்பகுதியை முதல்வர் அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சருடன் சென்று பார்வையிட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
Jul 24, 2024 12:09 ISTஎந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட்டில், எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை
பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடாததால், புறக்கணிப்பு என்று அர்த்தமில்லை
காங்கிரஸ் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் அனைத்து மாநிலங்களின் பெயரும் இடம் பெற்றிருந்ததா? - நிர்மலா சீதாராமன்
-
Jul 24, 2024 11:45 ISTஎதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
-
Jul 24, 2024 11:43 ISTகாவல்துறை பயன்பாட்டிற்கு புதிய இரு சக்கர வாகனங்கள்
சென்னை மாநகர காவல்துறை பயன்பாட்டிற்காக ரூ.74.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் புதிய இரு சக்கர வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இரு சக்கர வாகனங்கள் காவல்துறைக்கு ஒப்படைப்பு
-
Jul 24, 2024 11:22 ISTதமிழ்நாடு என்ற சொல்லே மத்திய அரசுக்கு கசப்பாக உள்ளது: திருமா
தமிழ்நாடு என்ற சொல்லே மத்திய அரசுக்கு கசப்பாக உள்ளது. தமிழ்நாடு மக்கள் மீதான கசப்பை வெளிப்படுத்தும் வகையில் பட்ஜெட் உள்ளது. ஆட்சியை தக்கவைக்க கூட்டணி கட்சிகளுக்கு பணிந்து பட்ஜெட் - வி.சி.க எம்.பி திருமாவளவன்.
-
Jul 24, 2024 10:53 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வைரமணி என்பவரை திருநெல்வேலியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்
-
Jul 24, 2024 10:53 ISTமத்திய பட்ஜெட்டை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகின்றனர்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி தமிழக எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்.
#WATCH | Delhi | On INDIA bloc protest against Union Budget, Congress MP Randeep Singh Surjewala says, "... This is a 'kursi bachao budget', 'satta bachao budget', 'badla lo budget'. More than 90% people of the country have been isolated with this budget... Modi government is… pic.twitter.com/g1LrxLQrr8
— ANI (@ANI) July 24, 2024 -
Jul 24, 2024 10:06 IST2024 பட்ஜெட், இது அறிந்தே செய்யும் அநீதி- கவிஞர் வைரமுத்து
ஒன்றிய அரசின்
— வைரமுத்து (@Vairamuthu) July 24, 2024
நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது
இது
அறிந்தே செய்யும் அநீதி
தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு
மழை
மாண்பு தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்
குறள்… -
Jul 24, 2024 09:49 ISTதங்கம் விலை குறைந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,490க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.51,920-க்கும் விற்பனையாகிறது.
-
Jul 24, 2024 09:48 ISTபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,837 கன அடியில் இருந்து 4,702 கன அடியாக அதிகரிப்பு. அணையின் நீர்மட்டம் 85.06 அடியாக உயர்ந்துள்ளது.
-
Jul 24, 2024 09:25 ISTதமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் தொற்றால் 22 பேர் உயிரிழப்பு
2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
2024ம் ஆண்டு பாம்பு கடியால் 7,310 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
பொது சுகாதாரத் துறை
-
Jul 24, 2024 09:03 ISTசென்னையில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த விமானப்படை வீரர் காளிதாஸ், இன்று அதிகாலையில் பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது துப்பாக்கியால் தொண்டையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து முத்தா புதுபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 24, 2024 08:59 ISTஅவலாஞ்சியில் 8 செ.மீ. மழைப்பதிவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 8 செ.மீ. மழை பதிவு.
அதற்கு அடுத்ததாக உதகை அருகே உள்ள கிளண்மார்கனில் 5.6 செ.மீ மழையும், குந்தா பகுதியில் 5 செ.மீ, எமரால்டில் 3.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
-
Jul 24, 2024 08:58 ISTஎம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
நேற்றிரவு 12 மணி வரை விசாரணை நடத்தி உள்ளனர். இன்று மதியம் 2.30 மணியுடன் நீதிமன்றம் வழங்கிய 2 நாள் காவல் முடிகிறது.
-
Jul 24, 2024 08:36 ISTஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சருடன் மா.சு. ஜாகிங்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் அல்மரியுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாகிங் சென்ற வீடியோ
#WATCH | Chennai: UAE Minister of Economy Abdulla bin Touq Al Marri joins Tamil Nadu Health Minister Ma. Subramanian for a jogging session today.
— ANI (@ANI) July 24, 2024
UAE Minister for Economy, Abdulla bin Touq Al Marri has come to India along with UAE delegates and investors to attend 'Investopia… pic.twitter.com/pSaEUWzCLW -
Jul 24, 2024 08:15 ISTபோரூர்- தாம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தாம்பரம் - மதுரவாயல் சாலையில் மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. போரூரில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய சாலையில் 5 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன
கடும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
-
Jul 24, 2024 08:09 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார் இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 24, 2024 07:46 ISTமெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, அப்பகுதியில் மாநகர் பேருந்து போக்குவரத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது பெருநகர போக்குவரத்து கழகம்
இந்த மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன
-
Jul 24, 2024 07:41 IST3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை, திருப்பூர், தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 24, 2024 07:27 ISTதமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும், 30-40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
ஜூலை 29-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 24, 2024 07:26 ISTஇந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் போராட்டம்
மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளனர்.
-
Jul 24, 2024 07:26 ISTசெந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்வலியால் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை போலீஸார் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
-
Jul 24, 2024 07:26 ISTதிமுகவின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: தமிழிசை
மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழ்நாட்டின் நலனும்,தமிழ்நாட்டு மக்களின் நலனும் இருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டிற்கு தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டு மக்களின் நலனை புறக்கணிப்பதாகும்.
இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழ்நாட்டின் நலனை முதலமைச்சர் புறக்கணிக்கிறார். திமுகவின் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்
- தமிழிசை சௌந்தரராஜன்
-
Jul 24, 2024 07:25 ISTநிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் காங். முதலமைச்சர்கள்
தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது மற்றும் ஆபத்தானது. இது மத்திய அரசு பின்பற்ற வேண்டிய கூட்டாட்சி மற்றும் நேர்மை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் முதலமைச்சர்கள் புறக்கணிக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
-
Jul 24, 2024 07:25 ISTநீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முறையில் விதிமீறல் நடந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த தேர்வின் புனிதத்தன்மை பாதிப்படைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 2 இடங்களில் நடந்த வினாத்தாள் கசிவால் 155 பேர் பயனடைந்துள்ளனர் என்பது உண்மை
- தலைமை நீதிபதி
-
Jul 24, 2024 07:25 ISTநிர்மலா சீதாரமன் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
இரவல் வாங்கிப் பயன்படுத்தியவர் நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்குப் பெரும் திட்டம் ஒன்றுகூட அறிவிக்காமல் விட்டது ஏன்?
நிர்மலா சீதாரமன் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
“Go to the battlefields of election in January 2029. Till then, the only priority should be the country, its poor, farmers, women, and the youth,” our Hon'ble PM @narendramodi said in his address to the media ahead of the Parliament session. But the very next day, his… pic.twitter.com/XzhTJRiWIn
— M.K.Stalin (@mkstalin) July 23, 2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.