Advertisment

Tamil Breaking News Highlights: நாடு திரும்பிய டி20 சாம்பியன்ஸ்: மும்பையில் இன்று மாலை இந்திய அணி வெற்றிப் பேரணி

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BCCI announce Rs 125 crore prize money for Team India after T20 World Cup win

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 108-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2736 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 124 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 299 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • Jul 03, 2024 21:45 IST
  வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி; ராஜ்நாத் பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி

  ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக பாதுகாப்புத்  துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்நாடாளுமன்றத்தில் கூறினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். • Jul 03, 2024 20:13 IST
  ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்த சம்பாய் சோரன் - மீண்டும் முதல்வராகும் ஹேமந்த் சோரன்

  ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை  ராஜினாமா சம்பாய் சோரன் செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இதன் மூலம் மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன். 

  ஹேமந்த் சோரன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம், ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்தார். அதற்கான தேதியை ஆளுநர் இன்னும் முடிவு செய்யவில்லை. • Jul 03, 2024 19:22 IST
  லாகூரில் இந்தியா vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி?

  சாம்பியன்ஸ் டிராபி தொடரை எடுத்து நடக்கும் பாகிஸ்தான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை லாகூரில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

  எனினும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்லப்போவதாக இதுவரை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • Jul 03, 2024 19:19 IST
  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா - ஜூலை 8-ல் மாமன்ற கூட்டம்

  நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்த நிலையில், நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ஜூலை 8ம் தேதி நடக்கிறது. துணை மேயர் பொறுப்பு மேயராக கூட்டத்தை நடத்துவார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் அறிவித்துள்ளார். 

    • Jul 03, 2024 18:59 IST
  பீகாரில் 15 நாள்களில் விழுந்த 7 பாலங்கள்

   

  பீகாரில் 15 நாள்களில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இது சர்ச்சையாகி உள்ளது. • Jul 03, 2024 18:49 IST
  நடிகர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த நிர்வாகி; திடீர் வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக விழாவில் நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்தார். அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, வலிப்புடன் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி, சக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். • Jul 03, 2024 18:42 IST
  கோவை கவியருவியில் குளிக்க அனுமதி

   

  ஆனைமலை புலிகள் காப்பகம் - பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள ஆழியாறு கவியருவியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  ஜனவரியில் இருந்து அருவி வறண்டு காணப்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது சீரான நீர்வரத்து உள்ளதைத் தொடர்ந்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. • Jul 03, 2024 18:41 IST
  உலக கோப்பை வெற்றி; இந்திய அணி திறந்த பேருந்து பேரணி

  டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி திறந்த பேருந்து பேரணி வியாழக்கிழமை (ஜூலை 4) மாலை 5 மணிக்கு நடைபெறும் என பி.சி.சி.ஐ பொதுச்செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். • Jul 03, 2024 18:13 IST
  நெல்லை மேயர் ராஜினாமா

  கோவை மேயர் கல்பனாவை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். • Jul 03, 2024 17:52 IST
  ஹத்ராஸ் உயிரிழப்புகள்; மாநிலங்களவையில் இரங்கல்

   

  ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ராஜ்யசபா ஒரு நிமிடம் மௌனம் அனுசரித்தது. • Jul 03, 2024 17:51 IST
  அம்ரித்பால் சிங் நாளை எம்.பி ஆக பதவியேற்பு

  என்எஸ்ஏவின் கீழ் பதிவு செய்யப்பட்ட அம்ரித்பால் சிங், ஜூலை 4ஆம் தேதி எம்பியாக பதவியேற்கிறார் • Jul 03, 2024 17:20 IST
  கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ராஜினாமா; என்ன காரணம்?

  கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கியுள்ளார்.
  உடல்நிலை சரியில்லாததால் மேயர் பதவியை தொடர முடியாமல் ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • Jul 03, 2024 16:30 IST
  மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகும் ஹேமந்த்?

  ஜார்க்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஞ்சியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் சம்பை சோரன் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. • Jul 03, 2024 16:29 IST
  பாஜகவுக்கு எதிராக பிஜு ஜனதா தளம்

  மாநிலங்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் பல மசோதாக்களுக்கு ஆதரவு அளித்து நிறைவேற உதவிய பிஜு ஜனதா தளம், ஒடிசாவில் ஆட்சியை பாஜகவிடம் இழந்ததால், தற்போது எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்துள்ளது • Jul 03, 2024 15:32 IST
  சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத கிரேன்: கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

  மெட்ரோ ரயில் பணிக்காக வந்த ராட்சத கிரேன் சாலையின் குறுக்கே பழுதாகி நின்ற நிலையில் சென்னை போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அய்யப்பன்தாங்கல் - கிண்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போக்குவரத்தை சரிசெய்யும் பணியில், போக்குவரத்து போலீசார் தீவிரம் • Jul 03, 2024 15:27 IST
  தி.மு.க அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்,பாரதி விளக்கம்

  இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என்று தி.மு.க அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்,பாரதி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாய் கூட பட்டம் பெறுகிறது என்பதை உள்நோக்கத்துடன் சொல்லவில்லை. கல்வி அனைவருக்குமானதாகிவிட்டது என்ற நோக்கத்தில் தான் கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார். • Jul 03, 2024 14:54 IST
  டிடிவி தினகரன் வலியுறுத்தல்

  பரந்தூர் விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தங்களின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடுபவர்களை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்

  • டிடிவி தினகரன் வலியுறுத்தல் • Jul 03, 2024 14:32 IST
  விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% மெத்தனால்

  கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில்  8.6% முதல் 29.7% மெத்தனால் கலந்திருந்தது. விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது சிபிசிஐடி காவல்துறையினரால் 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை • Jul 03, 2024 14:16 IST
  மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

  நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

  - சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அறிவிப்பு • Jul 03, 2024 13:58 IST
  வினாத்தாள் கசிவு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மோடி

  நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களின் எதிர்காலத்தில் விளையாடுகின்றனர். வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

  - பிரதமர் நரேந்திர மோடி • Jul 03, 2024 13:56 IST
  விஷ சாராயம் லேப் ரிப்போர்ட்: தண்ணீரில் 10% மெத்தனால்

  கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய விஷ சாராயத்தில் தண்ணீரில் 10% மெத்தனால் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடந்த மரக்காணம் விஷ சாராய மரணங்களில் 16% மெத்தனால் கலந்து இருந்து.

  தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. • Jul 03, 2024 13:52 IST
  மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

  பிரதமரின் உரையை புறக்கணித்து, மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்


  சர்வாதிகாரம் ஒழிக.. ஒழிக.." என கண்டன முழக்கம் • Jul 03, 2024 13:38 IST
  திமுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி

  இடைத்தேர்தல் நடைபெறவுள்ள  விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த  வேட்டி - சேலைகள் பறிமுதல்

  திமுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

  - அன்புமணி ராமதாஸ் • Jul 03, 2024 13:38 IST
  கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: விசாரணை ஒத்திவைப்பு

  கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த வழக்கின் விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்;


  கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித்தொடர்பாளர் பாலு தாக்கல் செய்த வழக்குகள் • Jul 03, 2024 13:18 IST
  வாக்காளர்களுக்கு நன்றி: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

  3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சிகள் தோல்வியை ஏற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

  தேர்தலில் நாட்டு மக்களின் விவேகமான அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது

  - மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை • Jul 03, 2024 13:18 IST
  9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில்  ஓரிரு   இடங்களிலும்,  புதுவை  மற்றும்  காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 9ம் தேதி வரை  இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழைக்கு வாய்ப்பு

  - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • Jul 03, 2024 13:17 IST
  சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

  சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரம் 4 நாட்கள் இயக்கப்பட்டு வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை ஜூலை 21ம் தேதி வரை நீட்டிப்பு

  - தெற்கு ரயில்வே அறிவிப்பு     • Jul 03, 2024 12:49 IST
  பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு • Jul 03, 2024 12:45 IST
  .சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது

  மூன்று குற்றவியல் சட்டங்களும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன.சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் இந்தியில் சட்டங்களுக்கு பெயர் சூட்டியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என வழக்கு  • Jul 03, 2024 12:15 IST
  விஜய் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

  விஜய் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்" - தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் • Jul 03, 2024 11:47 IST
  நீட் தேர்வு : விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம் - ஜெயக்குமார்

  நீட் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு, விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் • Jul 03, 2024 11:46 IST
  விஜய் பேச்சு - தி.மு.க, காங் வரவேற்பு

  விஜய் பேச்சு - திமுக, காங் வரவேற்பு நீட் விலக்கு குறித்து விஜய் பேசியுள்ளது வரவேற்கத்தக்கது - திமுக நீட் விலக்கு குறித்த விஜய்யின் கருத்தை பாராட்டுகிறோம், வரவேற்கிறோம் - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் • Jul 03, 2024 11:07 IST
  மாநில அரசின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கூடாது - த.வெ.க. தலைவர் விஜய் 

  "ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் போன்ற கல்லூரிகளுக்கு வேண்டுமானால் நீட் தேர்வு நடத்திக் கொள்ளலாம். மாநில அரசின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கூடாது" - த.வெ.க. தலைவர் விஜய்  • Jul 03, 2024 10:39 IST
  'ஒன்றிய அரசு' என குறிப்பிட்டு பேசிய விஜய்

  'ஒன்றிய அரசு' என குறிப்பிட்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய். 

  நீட் தேர்வுவால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுத்த முடியாத உண்மை. கல்வியை ஒன்றிய அரசு பொதுப் பட்டியலுக்கு எடுத்து சென்றதால் தான் பிரச்சனை. 

  நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பரபரப்பு பேச்சு

    • Jul 03, 2024 10:34 IST
  நீட் ரத்து தீர்மானம்: விஜய் பேச்சு

   நீட் ரத்து தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு கால தாமதம் செய்யக்கூடாது - த.வெ.க. தலைவர் விஜய் 

  நீட் விலக்கு தொடர்பாக உடனே எதுவும் நடக்காது; அப்படியே நடந்தாலும் அதை நடக்கவிட மாட்டார்கள் - த.வெ.க தலைவர் விஜய் • Jul 03, 2024 10:14 IST
  திருநங்கை மாணவி நிவேதாவை வாழ்த்திய விஜய்

  பிளஸ் 2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா அருகில் தவெக தலைவர் விஜய் அமர்ந்து அவரை வாழ்த்தினார் • Jul 03, 2024 10:06 IST
  விழாவுக்கு வருகை தந்தார் விஜய்

  சென்னை திருவான்மியூரில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்.

  சென்னை திருவான்மியூரில் நடைபெறும், 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவுக்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய்.  • Jul 03, 2024 09:45 IST
  குரூப் 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

  குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு • Jul 03, 2024 09:16 IST
  அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

  சென்னை அண்ணா பல்கலை.க்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு மிரட்டலையடுத்து பல்கலையில் சோதனை செய்த போது புரளி என தெரியவந்தது.  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை • Jul 03, 2024 09:07 IST
  நீட் தேர்வை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்

  நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்

  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. CUET, NET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தல்.

    • Jul 03, 2024 09:07 IST
  சென்னை விமான நிலையத்தில் 960 கிராம் தங்கம் பறிமுதல்

  துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.62 லட்சம் மதிப்புடைய 960 கிராம் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

  தங்கம் கடத்திய பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை. • Jul 03, 2024 08:36 IST
  கார் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

  சென்னை மதுரவாயலில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து.

  தீ கொழுந்துவிட்டு எரியும் நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் கார் உதிரிபாக கடையை தொடர்ந்து அருகிலுள்ள உரக்கடை, டயர் கடை, ஹோட்டலுக்கும் பரவிய தீ 

  தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருவதாக தகவல் • Jul 03, 2024 08:05 IST
  கல்வி விருது வழங்கும் விழா: விஜய் வருகை

  தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குகிறார்.

  திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை.

  19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல்.

   மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ள த.வெ.க. நிர்வாகிகள் • Jul 03, 2024 08:02 IST
  கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணை ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்

  கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் - தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு 

  கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

  எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைககை வழங்க வேண்டும்.
   
  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க  மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது உள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

  இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

   Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment