Advertisment

Tamil News updates: சென்னையில் பல பகுதிகளில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை

17-06-2024 : இன்று நடைபெறும் செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்ள இந்த லிங்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains today

Tamil News Updates : பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 92-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மே.வங்க ரயில் விபத்து: 5 பேர் பலி 

மேற்கு வங்களத்தில் நியூ ஜல்பைகுரி நிலையம் அருகே சீல்டா சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில்  சரக்கு ரயில் மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில்  ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் லோகோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 

ஆங்கிலத்தில் படிக்க:  https://indianexpress.com/article/cities/kolkata/kanchanjunga-exoress-train-accident-live-updates-bengal-darjeeling-9396945/

நியூ ஜல்பைகுரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரங்கபானி ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 18, 2024 07:03 IST
    சென்னையில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை

    சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், பெசண்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை முழுவதும்குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.



  • Jun 17, 2024 22:52 IST
    மணிப்பூரில் வன்முறை நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - அமித்ஷா   

    மணிப்பூர் நிலவரம் தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  “மணிப்பூரில் மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய படைகளை வியூக ரீதியாக ஈடுபடுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • Jun 17, 2024 20:51 IST
    விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

    எனக்கு வாய்ப்பு கிடைத்தால் விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்



  • Jun 17, 2024 20:30 IST
    முன்பு 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன; சாதி இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

    முன்பு பிராமண, ஷத்திரிய, வைஷ்ணவ, சூத்திர என நான்கு பிரிவுகள் மட்டுமே இருந்தன. இதைத் தவிர முஸ்லீம்கள் இருந்தனர். ஆனால் சாதிகள் இல்லை என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்



  • Jun 17, 2024 19:53 IST
    வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

    ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்



  • Jun 17, 2024 19:40 IST
    வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா

    ராகுல் காந்தி வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். ரேபரேலி தொகுதி எம்.பி.,யாக நீடிக்கிறார்



  • Jun 17, 2024 18:55 IST
    வெளிமாநில பதிவெண்; ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை

    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க வேண்டும் என ஆம்னி உரிமையாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரசு விடுத்துள்ள கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jun 17, 2024 18:40 IST
    நான் முதல்வன் திட்டம்; இங்கிலாந்து சென்று திரும்பிய மாணவர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Jun 17, 2024 18:33 IST
    எந்தத் தொகுதியில் எம்.பி ஆக தொடர்வது; ராகுல் காந்தி ஆலோசனை


    வயநாடு, ரேபரேலி ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் எந்தத் தொகுதியில் எம்.பி. ஆக தொடர்வது என்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, கே.சி வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



  • Jun 17, 2024 18:19 IST
    மூத்தக் குடிமக்கள் பேருந்து பயண டோக்கன்


    சென்னை மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்தக் குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வருகிற 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை டோக்கன் வழங்கப்படுகிறது.



  • Jun 17, 2024 17:19 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; தி.மு.க வெற்றிபெற எடப்பாடி ஒதுங்கிவிட்டார்: டி.டி.வி தினகரன்

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறத்தான் எடப்பாடி பழனிசாமி போட்டியில் இருந்து விலகி நிற்கிறார் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.



  • Jun 17, 2024 17:12 IST
    அரவிந்த் சாமி வழக்கு - தயாரிப்பாளருக்கு வாரண்ட்

    நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்ச ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கில, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. 



  • Jun 17, 2024 16:58 IST
    ராகுல் காந்தி பதிவு 

    “ஜனநாயக அமைப்புகள் கைப்பற்றப்பட்டால், வெளிப்படையான தேர்தல் நடைமுறைகள் மட்டுமே பொது மக்களுக்கு பாதுகாப்பை தரும். ‘கருப்பு பெட்டியாக’ உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதன் செயல்முறைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும் இல்லையெனில் அவை ஒழிக்கப்பட வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Jun 17, 2024 16:55 IST
    வட மாநில இளைஞர்கள் மோதல்

    திருப்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் ஏற வந்த வடமாநில இளைஞர்கள் இருகுழுவாக பிரிந்து திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 



  • Jun 17, 2024 16:44 IST
    மேற்கு வங்க ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு 

    மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி நிலையம் அருகே சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலுடன் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர். 

    நியூ ஜல்பைகுரியில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரங்கபானி ஸ்டேஷன் அருகே மோதியதில் இரண்டு பின்புற பெட்டிகள் தடம் புரண்டன.



  • Jun 17, 2024 16:42 IST
    மேற்கு வங்க ரயில் விபத்து: மத்திய அமைச்சர் ஆய்வு 

    மேற்கு வங்க பா.ஜ.க மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் ரயில் விபத்து நடந்த இடத்தை இன்று மாலை பார்வையிடுகிறார்.



  • Jun 17, 2024 16:41 IST
    மேற்கு வங்க ரயில் விபத்து: 19 ரயில்கள் ரத்து 

    மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தைத் தொடர்ந்து, நியூ ஜல்பைகுரி, சிலிகுரி சந்திப்பு, பாக்டோக்ரா மற்றும் அலுபாரி சாலை வழித்தடங்களில் செல்லும் 19 ரயில்களை ரத்து செய்துள்ளதாக வடக்குகிழக்கு ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது 

    ரத்து செய்யப்பட்ட 19 ரயில்களின் பட்டியல் பின்வருமாறு: 

    நியூ ஜாம்பைகுரி - உதய்பூர் நகர வாராந்திர விரைவு
    திப்ருகர்-புது டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ்
    அகர்தலா-ராணி கமலாபதி சிறப்பு விரைவு
    சீல்டா- நியூ அலிபுர்துவார் படடிக் எக்ஸ்பிரஸ்
    நாகர்கோவில் - திப்ருகார் சிறப்பு ரயில்
    ஹவுரா- நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
    குவஹாத்தி-ஹவுரா சராய்காட் எக்ஸ்பிரஸ்
    காமாக்யா-ஆனந்த் விஹார் வடகிழக்கு எக்ஸ்பிரஸ்
    கவுகாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ்
    நியூ ஜாம்பைகுரி-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
    காமாக்யா-கயா எக்ஸ்பிரஸ்
    குவஹாத்தி-ஓகா எக்ஸ்பிரஸ்
    நியூ தின்சுகியா-தாம்பரம் எக்ஸ்பிரஸ்
    பாமன்ஹாட்-சீல்டா உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ்
    திப்ருகர் -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 



  • Jun 17, 2024 16:31 IST
    பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? - ஜெயக்குமார் பதில் 

    "அண்ணாமலையை மாத்திட்டு பின்லேடனே வந்தாலும் சரி, அதிமுக முன் வைச்ச கால பின் வைக்காது" என்று பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என எழுப்பிய கேள்விக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார் 



  • Jun 17, 2024 16:29 IST
     "சசிகலாவுக்கு ரீ-என்ட்ரி கிடையாது" - ஜெயக்குமார்

    "சசிகலாவுக்கு எக்ஸிட் கொடுத்தாச்சு, ரீ-என்ட்ரி கிடையாது. சசிகலாவிற்கும், அ.தி.மு.க-விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 



  • Jun 17, 2024 14:44 IST
    டிடிவி தினகரன் பேட்டி

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் NDA கூட்டணி சார்பில் பாமக கடினமாக போட்டியிடும் என்பதாலேயே  அதிமுக போட்டியிடவில்லை; திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டி எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலிருந்து போட்டியிடாமல் ஒதுங்கி நிற்க முடிவு செய்துள்ளார்

    - மானாமதுரையில் டிடிவி தினகரன் பேட்டி    



  • Jun 17, 2024 13:58 IST
    மேற்குவங்க ரயில் விபத்து: ரயில்வே நிவாரணம் அறிவிப்பு

    மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்



  • Jun 17, 2024 13:58 IST
    டார்ஜிலிங் ரயில் விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்

    - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு



  • Jun 17, 2024 13:41 IST
    உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

    ராமநாதபுரம் மண்டபம் அருகே இயந்திர படகு கவிழ்ந்து, உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்

    -மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • Jun 17, 2024 13:39 IST
    விபத்து நடந்த இடத்தை முதல்வர் இன்று பார்வையிடுகிறார்

    காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்த இடத்தை இன்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிடுகிறார்.



  • Jun 17, 2024 13:10 IST
    விஜய் பக்ரீத் வாழ்த்து



  • Jun 17, 2024 12:59 IST
    ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு 

    காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ், மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு. 60 பேர் காயமடைந்தனர். 

    போலீஸ் அறிக்கைகளின்படி, திங்களன்று மேற்கு வங்கத்தில் ரங்கபானி நிலையம் அருகே சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 60 பேர் காயமடைந்தனர். இதில்  விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. 



  • Jun 17, 2024 12:43 IST
    ரயில் விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

     மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

    காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவிப்பு



  • Jun 17, 2024 12:26 IST
    நியூ ஜல்பைகுரி ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதிவு

    எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்- ரயில்வே அமைச்சர் பதிவு



  • Jun 17, 2024 12:26 IST
    நியூ ஜல்பைகுரி ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதிவு

    எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்- ரயில்வே அமைச்சர் பதிவு



  • Jun 17, 2024 11:56 IST
    ரயில் விபத்து: அவசர கால எண்கள் அறிவிப்பு

    மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது. 033-23508794, 033-23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு



  • Jun 17, 2024 11:50 IST
    தங்கம் விலை ரூ.120 குறைவு

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,690க்கும், சவரன் ரூ.53,520க்கும் விற்பனை



  • Jun 17, 2024 11:48 IST
    சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி

    சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி. டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் வெற்றி. 



  • Jun 17, 2024 11:19 IST
    மே.வங்க ரயில் விபத்து: 5 பேர் பலி

    மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி அருகே இன்று (ஜுன் 17) காலை சீல்டா சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில்  ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.25 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 



  • Jun 17, 2024 10:37 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,690-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520-க்கும் விற்பனை. 



  • Jun 17, 2024 10:37 IST
    குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கிய கனிமொழி

    குவைத் தீபத்தில் உயிரிழந்த தொழிலாளி மாரியப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை திமுக எம்பி கனிமொழி வழங்கினார்.



  • Jun 17, 2024 10:19 IST
    மேற்கு வங்கம்: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்து: 4 பேர் பலி

    மேற்கு வங்க மாநிலத்தில் நின்று கொண்டிருந்த காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து சீல்டா செல்லும் வழியில் ரயில் சிலிகுரியைக் கடந்த பிறகு ரங்கபாணி நிலையம் அருகே மோதல் ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பின்புற பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன, இதன் விளைவாக நான்கு பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரங்கபானி மற்றும் நிஜ்பரி நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    மம்தா நடவடிக்கை 

    இந்த தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் வலைதள பதிவில், "டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விவரங்கள் காத்திருக்கும் நிலையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. மீட்பு, மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்காக டி.எம், எஸ்.பி, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.



  • Jun 17, 2024 10:10 IST
    கமல் பக்ரீத் திருநாள் வாழ்த்து



  • Jun 17, 2024 09:47 IST
    காவிரி நடுவண் மன்ற தீர்ப்பு: பன்னீர்செல்வம் அறிக்கை

    உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவண் மன்ற தீர்ப்புக்கு இணங்க ஜூன் மாதத்திற்கான நீரை, தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசிற்கு வலியுறுத்துமாறு திமுக அரசை வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை



  • Jun 17, 2024 09:21 IST
    மேற்கூரை பூச்சு விழுந்து இளைஞர் படுகாயம்

    தூத்துக்குடி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் காயமடைந்த இளைஞர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.



  • Jun 17, 2024 09:20 IST
    பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

    "கருணையும் ஈகையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; தியாகத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில், அனைவரிடையே அமைதியும், மனித நேயமும் நிலவவும், சமத்துவமும், சகோதரத்துவமும் மலரவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" - பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை



  • Jun 17, 2024 09:05 IST
    2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

    கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈக்தா பள்ளிவாசலில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை. 



  • Jun 17, 2024 07:51 IST
    மதுரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

    மதுரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகை; இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு



  • Jun 17, 2024 07:50 IST
    மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

    மதுரை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது!



  • Jun 17, 2024 07:48 IST
    வேன் கவிழ்ந்து விபத்து: 10க்கும் மே.ற்பட்டோர் காயம்

    செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து .விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - 10க்கும் மே.ற்பட்டோர் காயம்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment