காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் அறிவிப்பு – அமைச்சரவை ஒப்புதல்

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள். 

6வது நாளை தொட்ட வண்ணாரப்பேட்டை போராட்டம் : சி.ஏ.ஏவுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் பொது மக்கள் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது. இன்று காலை கலைவாணர் அரங்கில் இருந்து சட்டமன்ற முற்றுகைப் போராட்டமும் நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்

நாட்டிலேயே மிகவும் இரைச்சல் மிகுந்த நகரம் சென்னை

நாட்டிலேயே அதிக போக்குவரத்து இரைச்சல் கொண்ட நகரம் சென்னை என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. போக்குவரத்து அதிகம் கொண்ட கிண்டியில் அதிக அளவு சத்தம்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் இந்த வீடியோவில்

சி.வி.சி மற்றும் சி.ஐ.சி ஆணையர்கள் தேர்வு : காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

செவ்வாய் கிழமையன்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் மத்திய தகவல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அரசு சஞ்சய் கோத்தாரியை புதிய ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும், பிமால் ஜூல்கா அடுத்த ஆணையராகவும் பொறுப்பு வகிப்பார்கள் என்று முடிவு செய்துள்ளது. உயர்மட்ட அதிகார்கள் தேர்வு கமிட்டியில் இடம் பெற்றிருக்கும் எதிர்கட்சி உறுப்பினர் அதிர் ராஜன் சௌத்ரி இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Live Blog

இன்று சென்னையின் வெப்பநிலை என்ன, பெட்ரோல் டீசல் விலை உயர்வா, எங்கே யார் போராட்டம் நடத்துகின்றார்கள்? முக்கிய கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் என்ன அனைத்தையும் அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் உங்களை இந்த லைவ் ப்ளாகிற்கு வரவேற்கிறது.


22:22 (IST)19 Feb 2020

புதிய சாதனையை நிகழ்த்த போகும் கோஹ்லி

டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சமதமடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை பின்னுக்கு தள்ளவுள்ளார் விராட் கோலி.

நியூசிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடித்தால் அதிக டெஸ்ட் சதமடித்த இந்தியர்களின் பட்டியலில் ஆறாவதாக உள்ள கங்குலியை பின்னுக்கு தள்ளுவார் கேப்டன் கோலி. இதுவரை முதலாவது இடத்தில் சச்சின் (15921) உள்ளார்.

அவரை தொடர்ந்து டிராவிட்(13265),கவாஸ்கர்(10123),லக்ஷ்மணன்(8781),சேவாக்(8503)கங்குலி(7212) ஆகியோர் முறையே அடுத்தடுத்து வருகின்றனர்

21:38 (IST)19 Feb 2020

பா.ரஞ்சித் ட்வீட்

பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து(மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்ந்துகின்றன!

– பா.ரஞ்சித்

21:35 (IST)19 Feb 2020

ரவீந்திரநாத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தன் மீதான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

ரவீந்திரநாத் குமார் மனுவுக்கு பதிலளிக்கும்படி வழக்கு தொடர்ந்த தேனி தொகுதி வாக்காளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

21:33 (IST)19 Feb 2020

மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் மீனவர்கள் மீது நடவடிக்கை.

மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை

21:24 (IST)19 Feb 2020

வால்டர் டிரைலர்

அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்திருக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரைலர் நாளை (பிப்.20) மாலை 5:06 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாக சிபி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

20:58 (IST)19 Feb 2020

அரசு கேட்காதது ஏன்?

டெல்டா பகுதி உண்மையிலேயே ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ விளங்க, பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் சட்டமுன்வடிவை விரைந்து பேரவையில் கொண்டுவர வலியுறுத்தினேன்.

7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் கூறியும் ஆளுநரிடம் அரசு கேட்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினேன்.

– மு.க.ஸ்டாலின்

20:45 (IST)19 Feb 2020

தனுஷ் நடிக்கும் புதிய படம் ஜகமே தந்திரம்

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. மே மாதம் வெளியாகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

20:23 (IST)19 Feb 2020

தனுஷின் புதிய படம் ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. மே மாதம் வெளியாகும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

20:07 (IST)19 Feb 2020

#MissIndia

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள #MissIndia திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

20:05 (IST)19 Feb 2020

டைமண்ட் பிரின்சஸ் கப்பல் – பூமி தொட்ட பயணிகள்

கோரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த பயணிகள் அவரவர் நாட்டுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.

20:02 (IST)19 Feb 2020

கண்காட்சியில் ரூ.40 கொடுத்து தேநீர் வாங்கி அருந்திய பிரதமர் மோடி

டெல்லியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ரூ. 40 கொடுத்து தேநீர் வாங்கி அருந்தினார். மேலும், பீகார் பதார்த்தங்களையும் ருசித்தார்.

19:11 (IST)19 Feb 2020

குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் – ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி கண்டனம்

பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்றதாக 127 பேருக்கு ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு, ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

19:09 (IST)19 Feb 2020

சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த ஆய்வுக்குழு 30 நாட்களில் அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு 30 நாட்களில் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என செனை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19:06 (IST)19 Feb 2020

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் அறிவிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்

தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

18:06 (IST)19 Feb 2020

பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்

நித்யானந்தாவுக்கு எதிராக அவரது ஆசிரமத்தில் இருந்த லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் ஆகியோர் தொடர்ந்த பாலியல் வழக்கு விசாரணை ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை ரத்து செய்வதாகவும், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தா மீதான ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை கர்நாடக சிஐடி போலீஸார் ராம்நகர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது.

தலைமறைவாக உள்ள நித்யானந்தாவை பிடிக்க இண்டர்போல் உதவியை நாடவும், இதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:58 (IST)19 Feb 2020

செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நிதிமன்றத்துக்கு மாற்றம்

செந்தில்பாலாஜி மீதான வேலைவாய்ப்பு மோசடி வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து எம்பி – எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

17:55 (IST)19 Feb 2020

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மகாத்மா காந்தியின் சுயசரிதை ராட்டை பரிசளிக்க திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியா வருகிறார். அவர் அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்லும் டிரம்ப்புக்கு ஆசிரம நிர்வாகிகள் மகாத்மா காந்தியின் சுயசரிதையான எனது வாழ்க்கையே எனது செய்தி புத்தகத்தையும் கதர் ஆடை தயாரிக்க பயன்படும் ராட்டையும் நினைவுப் பரிசாக வழங்க உள்ளனர்.

17:50 (IST)19 Feb 2020

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை 

சுகாதாரத்துறை: சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்துள்ளது. அதில், 2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

16:52 (IST)19 Feb 2020

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது. என்பிஆர்-ல் சில அம்சங்களை நீக்குவது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

16:26 (IST)19 Feb 2020

அமைச்சர் மீதான மேல் நடவடிக்கையை கைவிட முடிவெடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், அமைச்சர் மீதான மேல் நடவடிக்கையை கைவிட முடிவெடுத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்பு துறையின் அறிக்கையை நீதிமன்ற அனுமதியின்றி அரசுக்கு அனுப்பியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

16:19 (IST)19 Feb 2020

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

கீழடியில் தொல்லியல் துறையின் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை கானொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

15:47 (IST)19 Feb 2020

டெல்லி முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். டெல்லிக்கு போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

14:41 (IST)19 Feb 2020

ரத்தன் டாடாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது மான்செஸ்டர் பல்கலைக்கழகம்

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. மனிதநேயம், சமூக பொறுப்புணர்வு, புதிய கண்டுபிடிப்புகளில் ரத்தன் டாடாவின் பங்களிப்பிற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

14:38 (IST)19 Feb 2020

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது – அமைச்சர் சி.வி.சண்முகம்

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் பேசியதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்; ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது” என்று கூறினார்.

14:30 (IST)19 Feb 2020

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் – முதல்வர் பழனிசாமி

ராஜீவ் காந்தி கொலைவழக்கி தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய, முதல்வர் பழனிசாமி “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்” என்று கூறினார்.

14:03 (IST)19 Feb 2020

சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படம் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் சிக்கித் தவித்து வந்த நிலையில், ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

13:49 (IST)19 Feb 2020

டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில், வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்.” என்று கூறினார்.

13:46 (IST)19 Feb 2020

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது – இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்

இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங்: “சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. வர்த்தக நடவடிக்கையாக சீனா சென்றுவர விதிக்கப்பட்ட தடைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா தாக்கத்தால் இந்தியா, சீனா இடையேயான உறவு பாதிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

12:51 (IST)19 Feb 2020

ஆதரவற்ற பெண்களுக்கு நிதி உதவி

ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பெண்கள் 21 வயதினை பூர்த்தி செய்யும் போது அவர்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

12:50 (IST)19 Feb 2020

பாலின விகிதத்தை உயர்த்தும் 3 மாவட்டங்களுக்கு பதக்கங்கள்

தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகளை தடுத்து குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

12:25 (IST)19 Feb 2020

பிப்ரவரி 24ஆம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு

விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார் பிப்ரவரி 24ஆம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

12:15 (IST)19 Feb 2020

ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூ. 15 கோடியில் தங்கும் இல்லம் – முதல்வர் அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் சில முக்கிய அறிவிப்புகளை வழங்கி வருகிறார். உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு சென்னையில் ரூ. 15 கோடி மதிப்பில் தங்கும் இல்லம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:47 (IST)19 Feb 2020

அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை – தலைமைச் செயலாளர் மனு

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைக்கேடு புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அமைச்சர் மீதான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள கூறிய வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

11:28 (IST)19 Feb 2020

க்ரூப் 4 கலந்தாய்வு துவக்கம் !

சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு துவங்கியுள்ளது. தேர்வு முறைக்கேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு துவங்கியுள்ளது. 

11:26 (IST)19 Feb 2020

தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 31, 624க்கு விற்பனையாகி வருகிறது.

11:24 (IST)19 Feb 2020

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு

அயனாவரம் சிறுமியின் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி உமாபதி தன்னுடைய 5 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

11:11 (IST)19 Feb 2020

சிவானந்தா குருகுல நிறுவனர் மறைவுக்கு ஸ்டாலின் அஞ்சலி

”தொண்டுக்காகவே தன் வாழ்வை அர்பணித்த சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராமின் மறைவு பெரும் வேதனை அளிக்கிறது. அவரது தூய தொண்டுள்ளத்தையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன். அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

11:00 (IST)19 Feb 2020

ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதியுண்டு – ஜெயக்குமார்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டங்கள் இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு எப்போதும் அனுமதியுண்டு என ஜெயக்குமார் அறிவிப்பு

10:57 (IST)19 Feb 2020

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குனர் நியமனம் செய்யப்படுவார்

காஞ்சிபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குனர் நியமனம் செய்யப்படுவார் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

10:56 (IST)19 Feb 2020

பள்ளி இடைநிற்றல் விவகாரம்

மாணவர்கள் பள்ளி படிப்பில் பாதியில் இருந்து நிற்பது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த தகவல் தவறாக இருக்கிறது என்று தமிழக அரசு கூறியதை எதிர்த்து பேரவையில் தங்கம் தென்னரசு பேச்சு. தமிழக அரசுக்கு விருது வழங்கிய போது சரியாக இருந்த அரசின் புள்ளி விபரம் இப்போது தவறாக உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

10:38 (IST)19 Feb 2020

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2004-ஐ தொட்டது

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் 2004 பேர் உயிரிழப்பு. சீனாவில் வேகமாக பரவி வரும் வுஹான் வைரஸ் நோய் தொற்றால் இதுவரை 2000 பேர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10:26 (IST)19 Feb 2020

சென்னை வந்த சீன மாலுமிகள் இருவருக்கு கொரோனா

சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் பயணித்த 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் அருகில் யாரும் செல்லாத அளவிற்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது.

10:14 (IST)19 Feb 2020

இந்தியாவுடன் ஒப்பந்தம்

24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் இந்தியாவுடன் மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் ஒன்றினை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

10:12 (IST)19 Feb 2020

தமிழ்த் தாத்தாவுக்கு மரியாதை

சென்னை மாநில கல்லூரியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா-வின் 166-வது பிறந்த நாளையொட்டி அவருடைய உருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

10:00 (IST)19 Feb 2020

Asia Wrestling Championship

27 வருடங்கள் கழித்து ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றுள்ளது இந்தியா. கிர்ஸ்கிஸ்தான் வீரர் அஸாட் சலிதினோவினை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி 87 கிலோ பிரிவுக்கான போட்டியில் தங்கம் வென்றார் சுனில் குமார். க்ரெக்கோ ரோமன் தங்கத்தை 1993ம் ஆண்டு 48 கிலோ எடைப்பிரிவில் பப்பு யாதவ் வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் மரியாதையாக அழைக்கப்படும் உ.வே.சுவாமிநாத ஐயரின் பிறந்த தினம். ஓலைச்சுவடிகளில் இருந்த சிலப்பதிகாரம், மணிமேகலை,  அகநானூறு, புறநானுறு என அனைத்தையும் புத்தக வடிவத்திற்கு அரும்பாடுபட்டு கொண்டு வந்தவர். இவரின் தேடலும், ஆக்கப்பணியும் இல்லையென்றால் தமிழ் அன்னைக்கு மகுடம் போன்று விளங்கும் சங்க இலக்கியத்தில் பெரும் இடம் நிரப்பப்படாமலே இருந்திருக்கும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live updates breaking news latest updates

Next Story
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி – 20,000 பேர் மீது வழக்குப்பதிவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com