Tamil News: இந்தியாவில் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை , மொத்தம் 2,27,755 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,925 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இந்தியாவில் கொரோனா நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிராணயாம யோகா அல்லது சுவாசப் பயிற்சிகள் நமது சுவாச மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன. கோவிட் - 19 வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவது உடலின் சுவாச அமைப்பு என்பதால், இது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானது என்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
Live Blog
Tamil News Today Updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்குகளை தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
டெல்லியில் வசிக்கும் ஒருவருக்கு உத்தரப்பிரதேச மாநில பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனால் திருமணத்திற்காக மணமகன் குடும்பத்தினர் கடந்த 15ம் தேதி உத்தரபிரதேசம் அமேதிக்கு வந்துள்ளனர். அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணத்திற்காக மணமகன் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அதிகாரிகள் செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினர் திருமண ஊர்வலத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். அங்கிருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மணமகன் குடும்பத்தினர் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மணமகன் மற்றும் அவரது தந்தை முழுமையாக குணமடையும் வரை திருமண நிகழ்வை நடத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
'சென்னையிலிருந்து செல்லும் விமானங்கள் ரத்து'
சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்கள் நாளை முதல் ரத்து; தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
* மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முழுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால் சேவை நிறுத்தம்
இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாவட்டங்கள்!
சென்னை - 1,487
மதுரை - 157
திருவண்ணாமலை - 139
திருவள்ளூர் - 120
செங்கல்பட்டு - 126
கடலூர் - 63
தூத்துக்குடி - 62
காஞ்சிபுரம் - 56
திருச்சி - 51
விழுப்புரம் - 41
ராணிப்பேட்டை - 52
தஞ்சை - 36
தேனி - 36
சிவகங்கை - 33
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்து வருகிறது
உயிர்காக்கும் வீரியமிக்க மருந்துகள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன
முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ்
முதலமைச்சர் எந்த விதிவிலக்கும் இல்லாமல் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்
மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றுகின்றனர்
கொரோனாவைப் பார்த்து பதற்றம் வேண்டாம், பயம் வேண்டும்
- அமைச்சர் விஜயபாஸ்கர்
கண்ணுக்குத் தெரியாத வைரஸை எதிர்த்து முன்கள பணியாளர்கள் போராடுகின்றனர்
* சராசரியாக நாளொன்றுக்கு 30,000 பரிசோதனைகள் செய்கிறோம்
* தமிழகத்தில் 9.19 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன
* இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்து வரும் மாநிலம் தமிழகம் தான்
- கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
'கடந்த 4 நாட்களில் ஊரடங்கு விதி மீறியதாக 16,043 வாகனங்கள் பறிமுதல்'
சென்னையில் கடந்த 4 நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியதாக 4 நாட்களில் 16,043 வாகனங்கள் பறிமுதல்
- காவல்துறை
பெங்களூரில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்தார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெங்களூர் நகரில் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்படுமோ என கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தேசிய பொது செயலாளர் பொறுப்பிலிருந்து சங்கர்சிங் வகேலா ராஜினாமா; கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகல்
முன்னாள் குஜராத் முதல்வரான வகேலா, தேசியவாத காங்கிரஸின் குஜராத் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் அமைந்தகரை , அண்ணா ஆர்ச் அருகில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.
இதில் தொடர்புடைய 1,883 இருசக்கர வாகனங்கள், 67 ஆட்டோக்கள், 47 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1997 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வெளியே வந்த நபர்கள்,
மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது மொத்தம் 989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார்.
மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது மொத்தம் 989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார். pic.twitter.com/Z80x8gAXeP
— ChennaiTrafficAlert (@CCTPolice_Alert) June 22, 2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுங்கள்.
கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்
- ஆட்சியரக்ளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன அழுத்தத்தை அதிகப்படுத்தி இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த, வடசென்னை திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், பலராமனின் உருவப்படத்திற்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை எனவும் 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ஆம் தேதி திருச்சி செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை ஆய்வு முதல்வர் எடப்பாடி அய்வு செய்கிறார் . அத்துடன் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிற்பித்துள்ளது. மேலும், மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும், நிலையில் மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவரான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தையே உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆவணக் கொலையின் மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியது. இதுக் குறித்து கருத்து கூறிய தொல். திருமாவளவன் சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு அதிர்சி அளிப்பதாக கூறினார்.
கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயத்தை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வழங்குகிறீர்கள்? என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சித்த மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரிய மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயத்தை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வழங்குகிறீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-இந்தியா-சீனா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பங்கேற்கிறார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களுக்காக அமல்படுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு. ரூ.50 லட்சம் கொண்ட இந்தக் காப்பீடு நாடு முழுவதும் உள்ள 22 லட்சம் மருத்துவப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து மும்பை தாராவியில் தமிழ் வழி பயிலும் 10 ம் வகுப்பு குழந்தைகளுக்குத் தேர்வு ரத்து அனைவரும் தேர்ச்சி உத்தரவு பொருந்தாது என்பது பாரபட்சமானது. தமிழக அரசு மும்பை தமிழ் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி திமுக, அஇஅதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் தொடர்ந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
'I will fight for justice till I am alive'- Kowsalya/Gowsalya reacts to her father's acquittal. Details here- https://t.co/GkTDVk4O5Y pic.twitter.com/ohOtomjjZD
— Dhanya Rajendran (@dhanyarajendran) June 22, 2020
நீதி வாங்கமா விடமாட்டோம், எங்களோட சட்ட போராட்டம் தொடரும். . நான் உயிரோட இருக்கிற வரைக்கும் சங்கருக்கான நீதிய வாங்காம விடமாட்டேன் என்று கவுசல்யா தெரிவித்தார்.
திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் பணகுடி அருகேயுள்ள பகுதி, மகேந்திரகிரி. இங்கு இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோவுக்கு) சொந்தமான வளாகம் இருக்கிறது. இஸ்ரோ புரப்பல்ஷன் காம்ப்ளெக்ஸ் (ஐ.பி.ஆர்.சி) என்கிற இந்த வளாகத்தில்தான் இந்தியா விண்வெளிக்கு ஏவும் அனைத்து ராக்கெட்டுகளும் உருவாக்கப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக, கோவிட்-9 தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட மருத்துவ மேலாண்மை விதிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில்,கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏற்கெனவே நோயுற்று குணமடைந்தவரின் உடலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை ப் பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறையை “கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி” சிகிச்சை என்றழைக்கப்படுகிறது. கன்வலசன்ட் சீரம், அதாவது கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த அணுக்கள், கோவிட்-19 பாதித்த நோயாளிக்கு செலுத்தப்படுகிறது.
உயர்😆😆😆நீதி😁😁😁மன்றம்😜😜😜 https://t.co/IK0495fKsr
— pa.ranjith (@beemji) June 22, 2020
கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல், விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர்நீதிமன்றம், இவர்கள் குறைந்து 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பலித்தது.
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து உத்தரவு.
கவுசல்யாவின் தாய் அன்னலஷ்மி, மாமா பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்த பிரசன்ன குமார் ஆகியோர் மூவரின் விடுதலையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இது போன்ற வெளிப்படையான அச்சுறுத்தலை சமாளிக்க, ஒரு தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் ஒன்று பட கூடிய தருணம் இது. தவாறான தகவல் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும், வலிமையான தலைமைக்கும் மாற்றாக அமையாது என்று அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் நமது ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நீதி கிடைக்காவிடில் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்பட்ட வரலாற்று துரோகமாக அமைந்து என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா- சீனா எல்லை மோதல் குறித்த தனது அறிக்கையில் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் சென்னையில் இன்று இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவமனை - 7; சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை - 5; கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை - 3; ஸ்டான்லி மருத்துவமனை - 1 ; தனியார் மருத்துவமனை - 5 என மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று காலை 9 மணி வரை உயிரிழப்பு எண்ணிக்கை 601 ஆக இருந்தது.
விடுவிக்கப்பட்ட 3 பேரை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை மேல்முறையீடு செய்திருந்தார். அனைத்து மேல்முறையீடு வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த நீதிபதிகள், இன்று தீர்ப்பை வாசிக்க இருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற பொறியியல் பட்டதாரி, பழனியை சேர்ந்த கௌசல்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி இருவரையும் உடுமலை பேருந்து நிலையம் அருகே, ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கௌசல்யா படுகாயம் அடைந்து உயிர்பிழைத்தார்.
உடுமலை சங்கர் கொலை வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த மணிகண்டன், ஜெகதீசன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை அறிவித்தது. மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளில், ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தாய் அன்னலஷ்மி, மாமா பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்த பிரசன்ன குமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவிலேயே சாதி ஆணவ கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் வாயில் காயத்தோடு சில நாட்களாக தவித்து வந்த 12 வயது ஆண் யானை இன்று பரிதாபமாக உயிரிழந்தது. உணவு உட்கொள்ளும் போது வாயில் மரக்குச்சிகள் குத்தியதால், யானை கடந்த 10 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் தவித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வரும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை , மொத்தம் 2,27,755 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,925 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது, 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, இந்தியாவில் கொரோனா நோயாளிகளில், குணமடைந்தோர் விகிதம் 55.49 சதவீதமாக அதிகரித்துள்ளது
சென்னையில் 43 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights