/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-19T071206.064.jpg)
Tamil Nadu News Today Live Updates
Tamil News : தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பாதீர் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க மகாராஷ்டிரா பாஜக பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து சுமார் ரூ.500 கோடி வசூலித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவித்தார் .
மருத்துவ உள்கட்டமைப்பு நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, இன்று, 1383 பிரத்யேக கோவிட் - 19 மருத்துவமனைகள், 3107 கோவிட் - 19 சுகாதார நிலையங்கள் மற்றும் 10,382 கோவிட்- 19 பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் சேர்த்து, 46,673 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் உள்ளன. இதன் விளைவாக, கொரோனா தொற்றால் இறப்பவர்களின் விகிதம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today Live Updates: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில், இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரொனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்தனர் இதன் மூலம் பலி எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து, களத்தில் நின்று பணியாற்றி வரும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
போராட்டத்தின் நோக்கம், எழுப்பப்பட வேண்டிய முழக்கம் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மின் கட்டணம் என்ற பெயரால் வயிற்றில் அடிக்காதே, சலுகை வழங்கு, தவணை வழங்கு என முழக்கம் எழுப்ப வலியுறுத்தியுள்ளார். கொரோனா கால ஊரடங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தனி மனித இடைவெளியுடனும், முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். சானிடைசர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடனும் பொதுமக்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் அறப்போரில், அ.தி.மு.க. ஆட்சியின் அவலத்தை எடுத்துரைக்கும் வகையில், இல்லங்கள் தோறும் கறுப்புக்கொடிகள் பறக்கட்டும் என ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.
திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.#Thirukkural #Tamil #Periyar— வைரமுத்து (@Vairamuthu) July 18, 2020
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது
No amount of hate can ever deface a giant. pic.twitter.com/Y5ZBNuCfl2
— Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2020
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை தமிழில் பதிவு செய்தார். இது குறித்து தனது ட்விட்டரில்,' எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது ' என்று தமிழில் ட்வீட் செய்தார்.
சென்னையில், நேற்று மாலை முதல் தற்போது வரை 19 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனை - 8 பேர்,
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை - 3 பேர்,
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை - 3 பேர்,
ஸ்டான்லி மருத்துவமனையில் - 4 பேர்,
திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு, உயர்தர சிகிச்சை வழங்க ரூ.76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட அக்சிஜன் (High Flow Nasal Canula) கருவிகள் வாங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
'கறுப்பர் கூட்டம்' யூ டுயுப் சேனலை தடை செய்யக் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்ற வாசலின் முன் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மீது தொற்றுநோய் பரப்பும் சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி நிலையத்தில் பணியாற்றிய 2 அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரும் 20 ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அடுத்த மூன்று நாட்களுக்கு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும், 2 பேருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.
தமிழத்தில், நேற்று கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,391 பேர் குணமடைந்ததை அடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆக உயர்ந்தது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights