Tamil News Updates: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
se ba admit

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின்  நீர் இருப்பு நிலவரம்

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 40.3% நீர் இருப்பு உள்ளது.செம்பரம்பாக்கம் - 41.21%, புழல் - 80.42%, பூண்டி - 4.36%, சோழவரம் - 11.65%, கண்ணன்கோட்டை - 63%

  • Jul 21, 2024 23:05 IST

    அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் புதிய மனு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு பதிவிற்காக செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி உடல் நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Jul 21, 2024 22:04 IST

    வங்கதேசத்தில் சிக்கிய தமிழர்கள் சென்னை வருகை

    வங்கதேசத்தில் சிக்கியிருந்த தமிழக மாணவர்கள் 20 பேர் சென்னை விமான நிலையம் வந்தனர். முதற்கட்டமாக வந்த 20 பேரை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

     “மற்றொரு விமானத்தில் இன்று இரவுக்குள் மேலும் 29 மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள்.  சென்னை விமான நிலையம் வந்தடைந்த 20 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விமான கட்டணம் முதல் அனைத்துமே தமிழக அரசு இலவசமாக செய்துள்ளது” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 21, 2024 21:00 IST

    ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி

    சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Jul 21, 2024 20:52 IST

    தி.மு.க-வுக்கு யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது - அமைச்சர் ரகுபதி

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்துள்ள சாதனையால் அருதி பெரும்பான்மையோடு தி.மு.க ஆட்சி அமைக்கும்; யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது” என்று கூறினார்.



  • Jul 21, 2024 20:15 IST

    தமிழகத்தில் இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    மிழகத்தில் இரவு 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு திருபத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 21, 2024 19:57 IST

    திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் - அமைச்சர் ரகுபதி

    தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: “திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட காவியம் ராம காவியம்; சமத்துவத்தையும் சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன்” என்று கூறியுள்ளார்.



  • Jul 21, 2024 19:51 IST

    வேலூர் அடுத்த தீர்த்தகிரி மலை கல்குவாரியில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

    வேலூர் அடுத்த தீர்த்தகிரி மலை கல்குவாரியில் தேங்கிய நேரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



  • Jul 21, 2024 19:14 IST

    பரமக்குடி அருகே செல்போன் வெடித்ததால் அதிர்ச்சி; இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழப்பு

    ராமநாதபுரம்  மாவட்டம், பரமக்குடி அருகே இளைஞர் ராஜா, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. செல்போன் திடீரென வெடித்து சிதறியதில், அதிர்ச்சி அடைந்த ராஜா இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்து உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 21, 2024 18:48 IST

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு; தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தி.மு.க சார்பாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தினர். கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,  அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும் என தகவல்.



  • Jul 21, 2024 18:27 IST

    நிபா வைரஸ்: கேரளா செல்லும் மத்திய குழு

    கேரளத்தில் நிபா வைரஸூக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில் மத்தியக் குழு கேரளா விரைந்துள்ளது.



  • Jul 21, 2024 17:54 IST

    மதுரையில் சிறுவன் கடத்தல்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை

    மதுரையில் ரூ.2 கோடி கேட்டு 14 வயது சிறுவன் கடத்தப்பட்டான். இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி சூர்யாவின் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் அவர் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 21, 2024 16:59 IST

    சென்னையில் பழங்கால சிலைகள் விற்பனை; 4 பேர் கைது

    சென்னையில் பழங்கால சிலைகள் விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து உலோக வாள் மற்றும் பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    இது தொடர்பாக கலியமூர்த்தி, பசுபதி தங்கராஜ், ராஜேஷ் கண்ணன் மற்றும் சுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



  • Jul 21, 2024 16:14 IST

    துணை முதலமைச்சர் பதவி; யார்தான் வேண்டாம் என்பார்? அமைச்சர் துரை முருகன்

    துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார் என திமுகவின் மூத்தத் தலைவரும், மூத்த அமைச்சருமான துரை முருகன் பதிலளித்துள்ளார்.



  • Jul 21, 2024 15:53 IST

    தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jul 21, 2024 15:42 IST

    சென்னையில் அம்மன் உலோகச் சிலைகளும், ஒரு உடைவாளும் பறிமுதல்

    சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி, பிரகாஷ் தம்பதியின் வீட்டில் இருந்து, சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீஸார் அம்மன் உலோகச் சிலைகளையும், ஒரு உடைவாளையும் பறிமுதல் செய்தனர். 



  • Jul 21, 2024 15:22 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சீசிங் ராஜாவை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை

    சென்னையில் கட்டப்பஞ்சாயத்து, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும், ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியான சீசிங் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக தெரியவந்துள்ளது. சீசிங் ராஜா, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, கிருஷ்ணாம்பட்டினம் துறைமுக பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். சென்னை குன்றத்தூரில் வசிக்கும் குடும்பத்தினருடன், சீசிங் ராஜா செல்போன் வாயிலாக தொடர்பு கொள்கிறாரா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Jul 21, 2024 15:03 IST

    வங்கதேசத்தில் 30% இடஒதுக்கீடு ரத்து

    வங்கதேச வேலை வாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 



  • Jul 21, 2024 14:48 IST

    சென்னை மேயர் இதுவரை எத்தனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளார்? இ.பி.எஸ் கேள்வி

    தரமான உணவுப் பொருட்கள் இல்லாததால், தரமான உணவு வழங்கப்படுவதில்லை. வேறு வழியில்லாமல், ஆய்வு என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்துகிறார். சென்னை மேயர் இதுவரை எத்தனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளார்?. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் 200 நாளில் 595 கொலைகள் நடந்துள்ளன என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.



  • Jul 21, 2024 14:20 IST

    காங்கிரஸ் தலைவர் கார்கே பிறந்தநாள்; ஸ்டாலின் வாழ்த்து

    ”உங்கள் வளமான அனுபவமும் திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக உள்ளன” என இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Jul 21, 2024 14:17 IST

    கள்ளக்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயம்

    கள்ளக்குறிச்சி அருகே ரயில்வே மேம்பாலம் மேலே இருந்து கீழே தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.



  • Jul 21, 2024 13:49 IST

    கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு

    கல்வராயன் மலையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு செய்தார். கல்வராயன் பகுதியில் உள்ள கச்சிராய பாளையம் காவல் நிலையத்திலும் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையில் அதிரடிப்படை ஆய்வு நீடிக்கும் நிலையில் ஏ.டி.ஜி.பி சோதனை நடைபெற்றுள்ளது. கடலூரில் நேற்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் மது கடத்தல் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இன்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது



  • Jul 21, 2024 13:35 IST

    ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; ஜூவல்லரி கடை உரிமையாளரிடமிருந்து பணம் கை மாறியது கண்டுபிடிப்பு

    சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சவுக்கார்ப்பேட்டையில் உள்ள ஜூவல்லரி கடை உரிமையாளரிடமிருந்து ரூ.4 கோடி கை மாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



  • Jul 21, 2024 13:08 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன் மீட்பு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூவம் ஆற்றில் வீசப்பட்ட மேலும் ஒரு பட்டன் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் மீட்பு



  • Jul 21, 2024 13:08 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒன்றிய கவுன்சிலர் கைது

     மேலும் தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை



  • Jul 21, 2024 13:08 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை

    பிரபாகரன், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது



  • Jul 21, 2024 12:41 IST

    இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல: அன்புமணி

    இரட்டை அடுக்கு நீட், ஊரக மாணவர்களுக்கு இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தரத் தீர்வு

    ஓரடுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வது சரியல்ல. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்

    - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்



  • Jul 21, 2024 11:52 IST

    கார்கேவிற்கு, ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    உங்கள் வளமான அனுபவமும் திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக உள்ளன. சமூகநீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பும், ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளும் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. உங்களுடைய முன்னோக்கிய பயணம் வெற்றிகளாலும், தாக்கங்களை ஏற்படுத்தும் பங்களிப்புகளாலும் நிரப்பப்படட்டும்

    மு.க.ஸ்டாலின்



  • Jul 21, 2024 11:51 IST

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

    ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.



  • Jul 21, 2024 11:25 IST

    அனைத்து கட்சிகளின் கூட்டம்

    டெல்லி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் தொடங்கியது



  • Jul 21, 2024 11:25 IST

    காவிரி ஆற்றில் நீர்வரத்து 85,000 கன அடியாக அதிகரிப்பு

    கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 60,000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 85,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 21, 2024 11:04 IST

    சேவல் சண்டை : 8 பேர் கைது

    காஞ்சிபுரம், மாங்காடு அடுத்த பரணி புத்தூர் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டை சேவல் சண்டை நடத்திய 8 பேர் கைது - 4 சண்டை சேவல் பறிமுதல்.



  • Jul 21, 2024 11:03 IST

    பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, பிரபாகரன் என்ற வழக்கறிஞரை பிடித்து போலீசார் விசாரணை பிரபாகரன், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயபாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.. ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளருமான தென்னரசுவின் அண்ணனான பாம் சரவணனை தேடி வரும் போலீசார் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் பாம் சரவணன் பங்கேற்கலாம் என்று போலீசார் எதிர்பார்த்த நிலையில், பங்கேற்கவில்லை ஆம்ஸ்ட்ராங்க் உடலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த உயிரிழந்த பாம் சரவணனின் அண்ணன் உயிரிழந்த போதும் அவர் வரவில்லை என போலீசார் தகவல் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவு பிரிவு எச்சரிக்கை உளவு பிரிவு எச்சரிக்கையை தொடர்ந்து பாம் சரவணனை தேடி வரும் போலீசார்



  • Jul 21, 2024 10:47 IST

    ஸ்டாலின் ஆட்சியில் பேரூராட்சிகள் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பேரூராட்சிகள் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை "ரூ.2,391.72 கோடியில் பேரூராட்சிகளின் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது ரூ.1,414 கோடியில் பல்வேறு சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது ரூ.1,412 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள், ரூ.51.81 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் மாமல்லபுரம், வேளாங்கண்ணி பேரூராட்சிகளில் ரூ.2 கோடி மதிப்பில் சுகாதார உணவு மையங்கள் அமைக்கப்படுகின்றன நபார்டு திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளில் ரூ.602 கோடி மதிப்பில் 515 சாலை, 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன ரூ.155.56 கோடியில் எல்.இ.டி தெரு விளக்குகள், ரூ.201.65 கோடியில் பேருந்து நிலையங்கள் - சந்தைகள்" நகரமயமாதலில் பேரூராட்சிகளின் பங்கு மகத்தானது எனவும் தமிழக அரசு பெருமிதம்



  • Jul 21, 2024 10:46 IST

    மத்திய பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும்: ஸ்டாலின்

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் "தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்" "பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்" கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் "தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" "கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்" தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் - முதல்வர் ஸ்டாலின்



  • Jul 21, 2024 10:14 IST

    மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பதிவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 21, 2024 10:13 IST

    சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வியில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடை

    சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வியில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடை - பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு 2024 - 25 மற்றும் 2025- 26 ஆகிய கல்வி ஆண்டுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு . 



  • Jul 21, 2024 10:12 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்போன் தேடும் பணி

     ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளின் செல்போன்களை தேடும் பணி தீவிரம் வெங்கத்துர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் வீசப்பட்ட நிலையில், ஸ்கூபா குழுவினர் உதவியுடன் தேடும் பணி நேற்று கடம்பத்துர் பகுதியை சேர்ந்த ஹரிதரன் கைதான நிலையில், 20க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டை கூவம் ஆற்றுக்குள் கொலையாளிகள் செல்போன்களை வீசியதால் சிம்கார்டுகள் மற்றும் செல்போன்களை தேடி வருகின்றனர். 



  • Jul 21, 2024 09:25 IST

    கர்நாடக அணைகளில் 64,400 கன அடி நீர் திறப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 64,400 கன அடியாக அதிகரிப்பு கபினி அணையில் 35,917 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் 25,500 கன அடி நீரும், நுகு அணையில் இருந்து 3000 கன அடி நீரும் வெளியேற்றம் கேஆர்எஸ் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால், அணையில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்



  • Jul 21, 2024 08:16 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அ.தி.மு.க கவுன்சிலர் ஹரிதரன் கூவம் ஆற்றில் வீசிய 4 செல்போன்கள் நேற்று மீட்பு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கூவம் ஆற்றில் வீசிய 4 செல்போன்கள் நேற்று மீட்பு. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களும் வீசப்பட்டுள்ளதா? என இன்று 2வது நாளாக தேடுதல்



  • Jul 21, 2024 07:50 IST

    மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் இன்று ஆர்ப்பாட்டம்

    மின் கட்டண உயர்வைக் கண்டித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி இன்று ஆர்ப்பாட்டம். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு  நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.



  • Jul 21, 2024 07:47 IST

    ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவு காரணமாக பரிசல் இயக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கவும் தடை. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 54,000 கன அடியாக குறைவு 



  • Jul 21, 2024 07:45 IST

    இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது

     அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது .ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இத்தேர்வை எழுத 26,510 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



  • Jul 21, 2024 07:44 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் சிறையில் அடைப்பு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை புழல் சிறையிலும், ஹரிதரன் பூந்தமல்லி சிறையிலும் அடைப்பு



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: