Advertisment

Tamil News Updates: அச்சமின்றி கடமையை செய்யுங்கள்; வாக்கு எண்ணும் அரசு ஊழியர்களுகு கார்கே வேண்டுகோள்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mallikarjun kharge

Tamil News Live Updates : பெட்ரோல்,டீசல் விலை: சென்னையில் 78-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 சென்னை : முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2938 மில்லியன் கன அடியாக உள்ளது.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 320 மில்லியன் கன அடியாக உள்ளது.

  • Jun 03, 2024 22:02 IST

    சவுக்கு சங்கர் வழக்கில் 3வது நீதிபதி நியமனம்; நாளை விசாரணை

    சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், 3வது நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைத்ததை எதிர்த்து தாயார் மனுத்தாக்கல் செய்தார். சவுக்கு சங்கர் தாயார் மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி சுவாமிநாதன், குண்டர்சட்டத்தை ரத்து செய்தார், நீதிபதி பாலாஜி, அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கினார்.  2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.



  • Jun 03, 2024 21:57 IST

    அச்சமின்றி கடமையை செய்யுங்கள்; வாக்கு எண்ணும் அரசு ஊழியர்களுகு கார்கே வேண்டுகோள்

    வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகொள் விடுத்துள்ளார். அதில், “யாருக்கும் ஆதரவின்றி, அச்சமின்றி தங்கள் கடமைகளை வாக்கு எண்ணும் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்; அரசமைப்புக்கு முரணான எந்தவொரு வழிமுறைக்கும் வாக்கு எண்ணுவோர் தலைவணங்க வேண்டாம்” என்று கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jun 03, 2024 21:13 IST

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு 

    மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில், தேர்தல் முடிவுகளில் குளறுபடி இருந்தால், குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதனால், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.



  • Jun 03, 2024 20:04 IST

    ரூ.4 கோடி விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் கேசவ விநாயகம் ஆஜராஜ ஐகோர்ட் உத்தரவு

    ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், விசாரணையே சட்ட விரோதம் என்பதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிய தமிழக பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எப்படி சட்ட விரோதம் என்று சொல்ல முடியும்? விசாரணைக்கு அழைத்தால் கேசவ விநாயகம் ஆஜராக வேண்டும்.” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 03, 2024 19:58 IST

    மக்களவைத் தேர்தல்: வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு - முத்தாசன்

    'காலம் உள்ளவரை கலைஞர்' என்ற நவீன கண்காட்சியை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன்: “மக்களவைத் தேர்தல்: வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு” என்று கூறினார்.



  • Jun 03, 2024 19:54 IST

    பெங்களூருவில் போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமா கைது

    கடந்த மே 20ம் தேதியன்று பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீஸ் சோதனையின் போது, ஆந்திரா, கர்நாடக திரை திரை உலகினர் பங்கேற்றது தெரியவந்தது. ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், நடிகை ஹேமாவின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தபோது, போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசார், போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமாவைக் கைது செய்தனர்.



  • Jun 03, 2024 18:48 IST

    பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்; எல். முருகன்

     

    பிரதமர் மீதான கண்மூடித்தனமான விமர்சனத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.



  • Jun 03, 2024 18:37 IST

    கருத்துக் கணிப்பில் உண்மை இல்லை: பழனிவேல் தியாகராஜன்

    “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை: யாரோ சொன்ன கட்டளைக்கு நம்பரை சேர்த்து இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன” என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.



  • Jun 03, 2024 18:35 IST

    இந்தியா கூட்டணி வெல்வது உறுதி: செல்வ பெருந்தகை

    மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி; காங்கிரஸ் முகவர்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து கவலை கொள்ள கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.



  • Jun 03, 2024 18:33 IST

    சென்னையில் தாய்பால் விற்பனை; மீண்டும் அதிகாரிகள் சோதனை

    சென்னையில் தாய்பால் விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்த நிலையில் அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர்.



  • Jun 03, 2024 17:58 IST

    அ.தி.மு.க. 25 தொகுதிகளில் வெல்லும்: உதயகுமார்

    தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும் என தேனியில் ஆர்.பி. உதயகுமார் கூறினார். மேலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஆதாரமற்றவை என்றார்.



  • Jun 03, 2024 17:41 IST

    டெல்லி பயணிகள் ரயிலில் தீ விபத்து

    டெல்லி சரிதா விகார் காவல் நிலையம் அருகே பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • Jun 03, 2024 17:39 IST

    2024 மக்களவை தேர்தல் முடிவுகள்: முன்னாள் நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்


    தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட வேண்டும்; ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்க வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.



  • Jun 03, 2024 16:54 IST

    கலைஞரின் 101வது பிறந்த நாள் : அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

    கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார்



  • Jun 03, 2024 16:51 IST

    தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர்  என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு விளக்கம் அளித்துள்ளார்.



  • Jun 03, 2024 15:58 IST

    மாவட்ட ஆட்சியர்களை அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார்

    வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் 150 மாவட்ட ஆட்சியர்களுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.



  • Jun 03, 2024 15:13 IST

    முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது அறிவார்ந்த குணத்திற்காக பலராலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அவரோடு நான் ஆற்றிய பல்வேறு உரையாடல்களை கனிவுடன் திரும்பிப் பார்க்கிறேன்என புகழாரம் சூட்டியுள்ளார்.



  • Jun 03, 2024 14:51 IST

    கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் மோடி வாழ்த்து

    கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட ஆண்டுகள் பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவர் தனது அறிவார்ந்த இயல்புக்காக பரவலாக மதிக்கப்படுகிறார். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்



  • Jun 03, 2024 14:36 IST

    முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை

    தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை இன்று முன்கூட்டியே தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 03, 2024 14:00 IST

    பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்

    பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 03, 2024 13:58 IST

    தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும்

    வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, EVM வாக்குகள் எண்ணப்படும்                                                                                                         

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உறுதி



  • Jun 03, 2024 13:44 IST

    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 03, 2024 13:32 IST

    இதுவரை ரூ.4,391 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

    பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதுவரை ரூ.4,391 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

    இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி



  • Jun 03, 2024 13:13 IST

    இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி

    1.5 கோடி பேர் தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றினர். 27 மாநிலங்களில் மறு வாக்குப்பதிவு இல்லை. 2019 மக்களைத் தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடந்துள்ளது, இது மிகப்பெரிய சாதனை

    நக்சல் பாதிப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளான மணிப்பூர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வன்முறை இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது

    இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி



  • Jun 03, 2024 13:13 IST

    மக்களவைத் தேர்தலில் 64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை

    நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை படைத்துள்ளனர். 27 ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாக்களர்களை ஒப்பிடும் போது 2.5 மடங்கு அதிகமாகும்.

    - நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக டெல்லியில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி



  • Jun 03, 2024 12:55 IST

    தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பது சரியா?

    நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு 

    கடும் சவால்களை சந்தித்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பது சரியா எனவும் ராஜீவ் குமார் பேச்சு 



  • Jun 03, 2024 12:43 IST

    தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

    சாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரி வழக்கு

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    அரசியல் லாபத்துக்காக சாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாக மனுவில் குற்றச்சாட்டு



  • Jun 03, 2024 12:42 IST

    டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை: நீதிமன்றம் உத்தரவு

    டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவை அதிகரிக்கக் கோரி டெல்லி அரசு தாக்கல் செய்த வழக்கு.

    யமுனை நீர் வாரியம் அவசரக் கூட்டத்தை ஜூன் 5-ம் தேதி கூட்டவும்; ஜூன் 6-ம் தேதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு



  • Jun 03, 2024 12:30 IST

    நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி ரிட் மனு

    நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி ரிட் மனு

    வினாத்தாள் கசிவு விவகாரம் - நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

    மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து, மீண்டும் தேர்வை நடத்த கோரிக்கை



  • Jun 03, 2024 12:17 IST

    டி.டி.எஃப் வாசன் விசாரணைக்கு ஆஜர்

    செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய வழக்கில், விசாரணைக்கு ஆஜரானார் யூடியூபர் டிடிஎஃப் வாசன். செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க அவகாசம் கோரினார் வாசன். 



  • Jun 03, 2024 12:12 IST

    சேலம் முருகன் கோயிலில் இ.பி.எஸ் தரிசனம்

    நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் உலகிலேயே மிக உயரமான சேலம் முத்துமலை முருகன் கோயிலில் ஈபிஎஸ் சுவாமி தரிசனம்.

    சுவாமி தரிசனத்திற்கு பின் சிறிதுநேரம் தியானத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி 



  • Jun 03, 2024 11:56 IST

    தங்கம் விலை அதிரடி குறைவு

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,666க்கும், சவரன் ரூ.53,328க்கும் விற்பனை 



  • Jun 03, 2024 11:55 IST

    கருணாநிதி பிறந்தநாள்: ராகுல் புகழாரம்

    தமிழ்மொழி, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர் கருணாநிதி: ராகுல்காந்தி 

    தமிழ்மொழியை பாதுகாத்த, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்த மாபெரும் தலைவர் கருணாநிதி. மாபெரும் தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை காங்கிரஸ் எம்.பி  ராகுல்காந்தி



  • Jun 03, 2024 11:53 IST

    கருணாநிதி படத்திற்கு சோனியா, ராகுல் மரியாதை 

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா. டெல்லி திமுக அலுவலகத்தில் கருணாநிதி திருவுருவ படத்திற்கு சோனியா காந்தி, ராகுல் மரியாதை 



  • Jun 03, 2024 10:52 IST

    முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை. 



  • Jun 03, 2024 09:47 IST

    கொல்கத்தா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விமானத்தை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர் விமானத்தில் இருந்த 182 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 



  • Jun 03, 2024 09:24 IST

    கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

    முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.



  • Jun 03, 2024 09:21 IST

    மதுபோதையில் வாகனம் ஓட்டிய காவலர் பணியிட மாற்றம்

    மதுபோதையில் வாகனம் ஓட்டிய காவலர் பணியிட மாற்றம் .சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் நடவடிக்கை முடிச்சூரில் மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலர் ஸ்ரீராம துரை வாகனத்தை நிறுத்தி கேள்வி எழுப்பிய பொதுமக்கள் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீ ராம துரை தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம்.



  • Jun 03, 2024 08:55 IST

    கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவு

    நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் கம்பீரமாக விளங்குகிறார் .இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி., கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவு



  • Jun 03, 2024 08:47 IST

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு .வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுநாள் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தல் - மின்சார வாரியம் அறிவுறுத்தல்.



  • Jun 03, 2024 08:06 IST

    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் சென்னை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 03, 2024 08:03 IST

    என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஓ.பன்னீர் செல்வம்

    என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல. நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே இயக்கம் அதிமுக உரிமை மீட்புக் குழு" - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்



  • Jun 03, 2024 08:02 IST

    சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை

    சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சி! சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. 



  • Jun 03, 2024 08:00 IST

    8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment