பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 167-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 35.26% நீர் இருப்பு
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 4.146 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது
-
Sep 01, 2024 22:45 ISTபார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடந்து முடிந்தது - உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் 2 நாட்களாக நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்தது; இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “பார்முலா 4 கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது; பார்முலா 4 கார் பந்தயம் மூலம் சென்னைக்கு பெருமை கிடைத்துள்ளது என நம்புகிறேன். தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை வரலாற்றில் இந்த கார் பந்தயம் சிறந்த இடம் பிடிக்கும்” என்று கூறினார்.
-
Sep 01, 2024 21:57 ISTசிறுபான்மையினர் மீதான தாக்குதலை மத்திய அரசு வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது - ராகுல் காந்தி
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரயிலில் ஹாஜி அஸ்ரப் என்ற முதியவர் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் மீதான தாக்குதலை அரசு வாய்மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது. மாட்டிறைச்சி என்ற பெயரில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
-
Sep 01, 2024 21:53 ISTகாஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி 5வது மாடியில் இருந்து குதித்து மரணம்
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், 5வது மாடியில் இருந்து குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Sep 01, 2024 20:03 IST2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் உடன் கூட்டணியா? - சீமான் பதில்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது; தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 01, 2024 18:44 ISTதேசிய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசம் - ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: “தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
-
Sep 01, 2024 18:07 ISTஹேமா கமிட்டி அறிக்கை: கேரள அரசு மூடி மறைக்க நினைக்கிறது - ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு
பா.ஜ.க தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா: “ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களைத் தடுப்பது, ஆட்டிப்படைப்பது எது? மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால்தான் கேரள அரசு மூடி மறைக்க நினைக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
-
Sep 01, 2024 17:29 ISTஃபார்முலா 4 கார் பந்தயம் - விபத்து காரணமாக முதல் போட்டி, பாதியிலேயே நிறுத்தம்
ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் விபத்து காரணமாக முதல் போட்டி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட பந்தயத்தின் கடைசி சுற்றில், 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கடைசி வரை முன்னிலையில் இருந்த டில்ஜித், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
Sep 01, 2024 17:10 ISTசென்னை ஃபார்முலா 4 பந்தயம்: பாதியில் பழுதாகி நின் கார்; நூலிழையில் மீட்கப்பட்ட ஓட்டுநர்
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான சுற்று போட்டி நடந்துக் கொண்டிருந்த போது 27வது எண் போட்டியாளரான துருவ் என்ற ஓட்டுநரின் கார் பழுதடைந்து பாதியில் நின்றது. மேலும் விபத்து ஏதும் ஏற்படாமல் ஓட்டுநர் துருவ் நல்வாய்ப்பாக நூலிழையில் மீட்கப்பட்டார்
-
Sep 01, 2024 16:44 ISTதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Sep 01, 2024 16:13 ISTகார் பந்தயம் நடத்துவதற்கான நோக்கம் என்ன? - ஜெயக்குமார் கேள்வி
மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கார் பந்தயம் நடத்துவதற்கான நோக்கம் என்ன? என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
-
Sep 01, 2024 15:48 ISTஆந்திரவில் கனமழை; இதுவரை 10 பேர் மரணம்
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். கனமழையால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்
-
Sep 01, 2024 15:32 ISTசென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Sep 01, 2024 15:24 ISTஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது - நடிகர் ரஜினிகாந்த்
மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்
-
Sep 01, 2024 15:06 ISTஃபார்முலா 4 கார் பந்தயம் - பிற்பகலுக்கு மேல் மெயின் ரேஸ் போட்டிகள் தொடக்கம்
ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள் தொடங்குகிறது. தற்போது பயிற்சி போட்டி நிறைவுப்பெற்ற நிலையில் தகுதிச்சுற்று போட்டி தொடங்குகிறது. முதல் நாளான நேற்று காலதாமதம் காரணமாக பயிற்சி போட்டிகள் மட்டுமே நடைபெற்றன
-
Sep 01, 2024 14:52 ISTஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறேன்
"ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறேன்"
"அம்மா அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவதற்காக காத்திருந்ததால், இதுவரை தனியாக கருத்து வெளியிடவில்லை"
"சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் திரைத்துறையிலும் உள்ளது"
"திரைத்துறையை சமூகம் உன்னிப்பாக கவனிப்பதால், சிறிய பிரச்சினையாக இருந்தாலும் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகிறது"
திரைத் துறையில் அசம்பாவிதம் நிகழாத வண்ணம் திரைத்துறையினர் கவனத்தோடும், விழிப்போடும் இருக்க வேண்டும் - நடிகர் மம்முட்டி
-
Sep 01, 2024 13:56 ISTதவெக மாநாடு இடம் - தொடரும் இழுபறி
தவெக மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் தொடர்ந்து நீடிக்கும் இழுபறி
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் விடுமுறையில் இருப்பதால் முடிவெடுப்பதில் தாமதம்
தவெக மனு தொடர்ந்து பரிசீலனையில் இருப்பதாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தகவல்
விடுமுறை முடிந்து நாளை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பணிக்கு திரும்பிய பிறகே முடிவு என தகவல்
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வரும் 23ஆம் தேதி தவெக மாநாடு நடத்த திட்டம்
-
Sep 01, 2024 13:40 IST"உனக்கு அறிவு இருக்கா?" - ஜீவா ஆவேசம்
நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுடன் வாக்குவாதம். ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என ஜீவா கருத்து.
செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்கவே, உனக்கு அறிவு இருக்கா? என ஜீவா ஆவேசம்.
தேனியில் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் ஜீவா வாக்குவாதம்
-
Sep 01, 2024 13:39 ISTபோன் பேசிக்கொண்டே பஸ் ஒட்டிய டிரைவர்
திருப்பூரிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் நீண்ட நேரமாக செல்போன் பேசியவாறு ஆபத்தான முறையில் பேருந்தை இயங்கியதால் பயணிகள் அச்சம்
ஓட்டுநரின் ஆஜாக்கிரதையான இந்த செயலை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
இந்நிலையில் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் ஓட்டுநர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை
-
Sep 01, 2024 13:14 ISTவெள்ளத்தில் பலர் மாயம் - 4 பேர் பலி
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா, குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் - போக்குவரத்து கடும் பாதிப்பு
கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் வீடுகள் இடிந்து 4 பேர் உயிரிழப்பு. மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சிலர் மாயம்
-
Sep 01, 2024 12:56 ISTஃபார்முலா 4: பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள்
ஃபார்முலா 4 கார் பந்தயம் - பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள் தொடக்கம்
2வது நாளான இன்று காலை 10 மணியளவில் பந்தய தட பரிசோதனை, பாதுகாப்பு பரிசோதனை நிறைவு
இப்போது பயிற்சி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், பிற்பகலுக்கு மேல் பிரதான ரேஸ் போட்டிகள் தொடக்கம்
-
Sep 01, 2024 12:53 ISTவியாபாரி கொலையை கண்டித்து போராட்டம்
வியாபாரி கொலையை கண்டித்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே, ஆட்டு வியாபாரி கொலையை கண்டித்து போராட்டம்
பன்னம்பாறையில், நாகர்கோவில் - திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டம்
குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரியும், இழப்பீடு கோரியும் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் பேச்சுவார்த்தை
-
Sep 01, 2024 12:25 ISTசவுரவ் கங்குலி சென்னை வருகை
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண வர உள்ள சவுரவ் கங்குலி
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பெங்கால் டைகர் ஃபார்முலா அணியின் உரிமையாளருமான சவுரவ் கங்குலி இன்று பிற்பகலில் வருகை தர உள்ளார்.
-
Sep 01, 2024 12:16 ISTபுலம்பெயர் தமிழர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்
புலம்பெயர் தமிழர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்
உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக அமெரிக்கா, 5வது இடமாக இந்தியா உள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2வது இடத்தில் உள்ளது, தமிழர்கள் உயர் பதவிகளில் உள்ளனர்.
இவை அனைத்தும் இரு நாடுகளுக்கிடையேயான நட்பின் அடையாளம். புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்களை நடத்தி வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக, அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக முதலீடுகளை செய்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் - முதல்வர் ஸ்டாலின்
-
Sep 01, 2024 11:47 ISTதேசிய நெடுஞ்சாலையில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நான்கு வழிச்சாலையில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு மேட்டு நீரத்தான் கிராமத்தில் மஞ்சுவிரட்டு திருவிழா நடத்த அனுமதி கேட்டு ஒரு பிரிவினரும், எதிர்த்து மற்றொரு பிரிவினரும் மோதிக்கொண்ட சம்பவம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி ஒரு பிரிவினர் 4 வழிச்சாலையில் மறியல் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு - போலீசார் பேச்சுவார்த்தை
-
Sep 01, 2024 11:19 ISTசென்னை பார்முலா 4 கார் பந்தயம்
இரவு 7.30 மணியளவில் JK FLGB 4 பிரிவுக்கான இரண்டாவது பிரதான ரேஸ் போட்டி இரவு 8.45 மணியளவில் பார்முலா 4 பிரிவுக்கான 2வது பிரதான ரேஸ் போட்டி இரவு 9.45 மணியளவில் IRL பிரிவுக்கான இரண்டாவது பிரதான ரேஸ் போட்டி கார் சாகசம், பெண் ஓட்டுநர்களின் இருசக்கர வாகன அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
-
Sep 01, 2024 11:18 ISTமுதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
Sep 01, 2024 10:44 ISTசுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனுக்கு இ.பி.எஸ் மரியாதை
மாமன்னர் பூலித்தேவனுக்கு இ.பி.எஸ் மரியாதை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 309-ஆவது பிறந்த நாள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவப் படத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை.
-
Sep 01, 2024 10:17 ISTதவெகவின் மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 பொறுப்பாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் தகவல்
விழுப்புரம் விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்; தவெகவின் மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 பொறுப்பாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் தகவல்; தவெக தலைவர் விஜய் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து பேசவுள்ளதாக தகவல்
-
Sep 01, 2024 09:40 ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் கன அடி உயர்வு நேற்று 6,396 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 19,199 கனஅடியாக அதிகரிப்பு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 14,200 கன அடி நீர் திறப்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.82 அடியாக உள்ளது.
-
Sep 01, 2024 09:40 ISTராக்கெட் லாஞ்சர் வெடித்து ஒருவர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ராணுவ துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் எடுத்து வரப்பட்டது வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள், குண்டுகளை அங்குள்ளவர்கள் எடுத்து வந்து அதில் உள்ள இரும்பு, பித்தளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம் கோதண்டன் என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்து வந்து இரும்பு, பித்தளை பொருட்களுக்காக உடைத்த போது வெடித்து சிதறியது காயம் அடைந்த கோதண்டராமன் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி - மறைமலைநகர் போலீசார் விசாரணை
-
Sep 01, 2024 08:58 ISTமேயர் பிரியாவுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்
"கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" "கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது" "இத்திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்" சென்னை மேயர் பிரியாவுக்கு, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம்.
-
Sep 01, 2024 07:53 IST25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்ந்தது. ரூ.5 முதல் ரூ.120 வரை கட்டணம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
Sep 01, 2024 07:52 ISTவணிக சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு. கடந்த மாதம் ரூ.1817-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.38 உயர்ந்து ரூ.1855-க்கு விற்பனை வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
-
Sep 01, 2024 07:51 ISTசெந்தில்பாலாஜி மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல்.
-
Sep 01, 2024 07:51 ISTபார்முலா-4 பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி : ஸ்டாலின் அறிவிப்பு
| சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகே பாதுகாப்புப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.