/indian-express-tamil/media/media_files/YTAFrTI7IAJYV3XFykIH.jpeg)
Tamil News Updates: பெட்ரோல், டீசல் விலை: 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டல் பெட்ரோல் விலை ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 193 கனஅடியாக சரிவு. நீர்இருப்பு 2709 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 302 மில்லியன் கனஅடியாக உள்ளது.
-
Jul 13, 2024 01:01 IST
மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு வேலூர், திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
-
Jul 13, 2024 01:01 IST
மாணவர் கடத்தல் - மேலும் 4 பேர் கைது
மதுரையில் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் மதுரையில் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கில் நெல்லையைச் சேர்ந்த அப்துல்காதர், முன்னாள் காவலர் செந்தில்குமார், சிவகிரியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வசதியான பின்புலம் உள்ள குழந்தைகளை கடத்தி, பணம் சம்பாதிக்கும் நோக்கில், இதே கும்பல் சென்னையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமாகியள்ளது.
-
Jul 13, 2024 00:57 IST
காவல்துறையில் முஸ்லீம்கள் தாடி வைக்க தடையில்லை: மதுரை உயர்நீதிமன்றம்
காவல்துறையில் இஸ்லாமியர்கள் நேர்த்தியாக தாடி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு; இறைத்தூதர் நபிகளை பின்பற்றும் இஸ்லாமியர்கள் வாழ்க்கை முழுவதும் தாடி வைத்திருப்பது வழக்கம்; பல மதங்கள், இனங்களை கொண்ட இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு என்று மதுரையை சேர்ந்த அப்துல்காதர் என்பவர் தனது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Jul 12, 2024 21:02 IST
மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் கைது
சென்னை தாம்பரம் அருகே சாலையில் நடந்து சென்ற 71 வயது மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு (42) என்பவரை போலீசார் கைது செய்தனர் கைதான பாபு, வீடுகளில் தனியாக இருக்கும் முதியோரை பாதுகாக்கும் பணி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
-
Jul 12, 2024 21:01 IST
ஜூலை-14ம் தேதி ரயில் சேவை நிறுத்தம்: ரயில்வே நிர்வாகம் தகவல்
சென்னை எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே தண்டவாள பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி, ஜூலை-14ம் தேதி ஒருநாள் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அன்றைய நாளில் எழும்பூரிலிருந்து இயக்கப்படவுள்ள மின்சார ரயில்களுக்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
-
Jul 12, 2024 20:59 IST
குற்றாலம் அருவியில் குளிக்க தடை
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jul 12, 2024 19:54 IST
நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு
தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம், நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் ஒத்த எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்.
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், காற்று, சூரிய ஒளி, உயிரி எரிபொருள், கடல் அலைகள் உட்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும்.
நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்கப்படும் நிலையில் மின்வினியோகம், மின்உற்பத்தியில் எவ்வித இடர்பாடும் இருக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Jul 12, 2024 19:51 IST
அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
-
Jul 12, 2024 18:38 IST
சசிகலா தென்காசி பயணம்: அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 17ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் மொஹரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் 17ஆம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் 17ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இந்த நாளில் தென்காசி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
-
Jul 12, 2024 18:36 IST
ரவுடி துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உடலை போலீசார் ஒப்படைத்த நிலையில், கொட்டும் மழையில், உடலை அவரது சொந்த ஊரான திருச்சிக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைசாமி, நேற்று புதுக்கோட்டையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Jul 12, 2024 17:47 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் காவலர் படுகாயம்: தீட்சிதர்கள் மீது குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்சிதர்கள் எடுத்து வந்த தீபத்தின் பொறிபட்டு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பிரகாஷ் காயமடைந்த நிலையில், தீட்சிதர்கள் உள்நோக்கத்தோடு செயல்பட்டதாக வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2024 17:44 IST
தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை: சித்தாராமையா
கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் சுமார் 28 சதவீத நீர் குறைவாக உள்ளது. இது குறித்து காவிரி மேலாண்மை ஆணைய ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினோம். ஆனால் காவிரி ஒழுங்காற்று குழு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை. காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு கர்நாடக அணைகளுக்கு என்ன நீர்வரத்து உள்ளதோ அதை திறந்து விடுகிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
-
Jul 12, 2024 17:42 IST
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது
-
Jul 12, 2024 17:39 IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலை: முதல்வரை சந்தித்த திருமா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக எம்.பி திருமாவளவன், செய்தியாளர்களின் பேசுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலையை திட்டமிட்டவர்கள், நடைமுறைப்படுத்திய கைக்கூலிகள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தினோம் என கூறியுள்ளார்.
-
Jul 12, 2024 17:00 IST
செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
-
Jul 12, 2024 16:41 IST
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ என்று கடைப்பிடிக்கப்படும் – மத்திய அரசு
1975ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ என்று கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைச் சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பை ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ நினைவுகூரும் என்று அமித் ஷா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2024 16:16 IST
மதுவிலக்கு சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்
-
Jul 12, 2024 15:51 IST
புதுக்கோட்டையில் ரவுடி என்கவுண்டர்; ஆர்.டி.ஓ விசாரணை
புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில், பிரேத பரிசோதனை அறையில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விசாரணையை தொடங்கினார். உடலில் பாய்ந்துள்ள குண்டுகள் குறித்தும், சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். துரைசாமியின் உறவினர்களிடமும் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா விசாரணை மேற்கொள்கிறார்
-
Jul 12, 2024 15:32 IST
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலை; சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்க உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
-
Jul 12, 2024 15:28 IST
ஸ்மிருதி இரானி அல்லது வேறு எந்த தலைவளையும் இழிவா விமர்சிக்கக் கூடாது - ராகுல் காந்தி அறிவுறுத்தல்
“ஸ்மிருதி இரானி குறித்தோ அல்லது வேறு எந்த தலைவர் குறித்தோ யாரும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கக் கூடாது. பிறரை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளமே தவிற, வலிமை அல்ல” என்று ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
-
Jul 12, 2024 15:19 IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Jul 12, 2024 14:37 IST
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 12, 2024 13:55 IST
“எஸ்.ஐ முதல் டி.எஸ்.பி வரை கைத்துப்பாக்கி உடன் வைத்திருப்பது அவசியம் - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி உத்தரவு
சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம்: தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டி.எஸ்.பி வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். லத்தி துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனி காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (எஸ்.எச்.ஓ), இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2024 13:49 IST
ஓ.பி.எஸ், சசிகலா ஆதரவாளர்களை அ.தி.மு.க-வின் இணைக்க நடவடிக்கை - இ.பி.எஸ்
மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக 3-வது நாளாக அரக்கோணம், தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பி.எஸ், சசிகலாவின் ஆதரவாளர்களை அ.தி.மு.க-வில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jul 12, 2024 13:23 IST
சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் - கீதா ஜீவன் கண்டனம்
அமைச்சர் கீதா ஜீவன்: “5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியை சீமான் அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டம், ஒழுங்கு பிரச்சினை, சாதி ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்துவதே சீமான் பேச்சின் நோக்கம். சீமான் மாற்றி மாற்றி பேசுகிறார். அவர் மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது. இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர் தான் சீமான். சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும். அரசியல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்” கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2024 12:41 IST
மதுரையில் மூதாட்டிகள் குறிவைத்துக் கொலை அதிகரிப்பு - அண்ணாமலை கண்டனம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “மதுரையில் மூதாட்டிகளைக் குறிவைத்துக் கொலை செய்வது அதிகரிதுள்ளது. கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது; ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு காவல்துறையை இரையாக்கும் போக்கை தி.மு.க கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
-
Jul 12, 2024 12:31 IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஆருத்ரா - பா.ஜ.க முக்கோணம் குறித்து விசாரிக்க திருமா வலியுறுத்தல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் செயல் திட்டம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பாஜகவில் பொறுப்புகளில் உள்ளனர். பா.ஜ.க இதில் வலிந்து தலையிட்டு சி.பி.ஐ விசாரணை கோருகிறது. இவையெல்லாம் புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஆருத்ரா - பா.ஜ.க என்ற முக்கோணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Jul 12, 2024 11:44 IST
ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பேச்சு
முதலமைச்சர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் திருமாவளவன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jul 12, 2024 11:41 IST
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை; 11 பேரிடம் போலீசார் விசாரணை
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் பெரம்பூரில் நோட்டமிட்டது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. பெரம்பூரில் உள்ள மதுபான கடையில் தனது கும்பலோடு மது அருந்தியபடியே எவ்வாறு ரூட் எடுப்பது என்பது குறித்து திட்டம் தீட்டியுள்ளனர். ரத்தம் அதிகளவில் வெளியேறும் நரம்புகளை குறிவைத்து வெட்டவும், மிஸ் ஆகக்கூடாது என பாலு தனது கூட்டாளிகளிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 5ல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், கைதான 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Jul 12, 2024 11:28 IST
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின். 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம் கைதை எதிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு கூடுதல் அமர்வுக்கு மாற்றம்.
-
Jul 12, 2024 11:27 IST
யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு
யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய விவகாரத்தில் டி.டி.எஃப். வாசனின் கார் பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறை பறிமுதல் செய்த காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரி டி.டி.எஃப். வாசனின் தாயார் சுஜாதா தாக்கல் செய்த மனு வாகனத்தை கொடுத்தால் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட வாய்ப்பு - நீதிபதி
-
Jul 12, 2024 11:21 IST
தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் சசிகலா
வரும் 17ஆம் தேதி தென்காசியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், சசிகலா 'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் ஜூலை 17 - 20 வரை தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் ஜூலை 17 பிற்பகல் 3 மணிக்கு காசிமேஜர்புரத்தில் தொடங்கும் சுற்றுப்பயணம் - கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியத்திலும் மக்களுடன் சந்திப்பு 18, 19 தேதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா கடைசி நாளான 20ஆம் தேதி மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூரில் பொதுமக்களை சந்திக்கிறார்
-
Jul 12, 2024 10:56 IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக இ.பி.எஸ் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாளாக இ.பி.எஸ் ஆலோசனை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார், எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை.
-
Jul 12, 2024 10:55 IST
மதுரையில் போலி விமான டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றம்
மதுரையில் போலி விமான டிக்கெட்டுடன் விமான நிலையத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றம் .தனியார் விமான மூலம் அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக கூறி 100க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்ததாக தகவல் மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்த பயணிகள் தவிப்பு தனியார் விமான நிறுவனத்தில் கேட்டபோது, அவ்வாறு எதுவும் புக்கிங் செய்யவில்லை என கூறியதால் அதிர்ச்சி.
-
Jul 12, 2024 10:25 IST
மதுரையில் தொடரும் மூதாட்டிகள் கொலை சம்பவம்
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி சடலமாக மீட்பு மூதாட்டி முத்துலெட்சுமி அணிந்திருந்த கம்மலை காணாததால், நகைக்காக கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு மூதாட்டி சடலமாக மீட்பு மூதாட்டிகள் தொடர் கொலை - நகைக்காக கொலை சம்பவங்களா? என பொதுமக்கள் அச்சம்.
-
Jul 12, 2024 10:18 IST
மரக்காணம் அருகே கூனிமேடு மற்றும் அனுமந்தை குப்பம் கடற்கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய 2 குழந்தைகளின் உடல்கள்;
விழுப்புரம்: மரக்காணம் அருகே கூனிமேடு மற்றும் அனுமந்தை குப்பம் கடற்கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய 2 குழந்தைகளின் உடல்கள்; கூனிமேடு கடற்கரை பகுதியில் ஒன்றரை வயது குழந்தையில் உடல் கரை ஒதுங்கிய நிலையில் அனுமந்தைக் குப்பத்தில் 4 வயது சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது; இந்த சம்பவம் தொடர்பாக கடற்கரையோர கிராம மக்கள் கொடுத்த தகவல்களின் பெயரில் குழந்தைகளின் உடல்களை போலீசார் கைபற்றி விசாரணை
-
Jul 12, 2024 10:03 IST
11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு
சேலம்: அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் கொலை வழக்கில் கைதான 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல்.
-
Jul 12, 2024 09:55 IST
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.6,825-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,600-க்கும் விற்பனை.
-
Jul 12, 2024 09:19 IST
போதைப்பொருள் வழக்கு: ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கியது டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமீன் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர். தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர்சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
-
Jul 12, 2024 07:51 IST
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி முதுகுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதி. தற்போது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
-
Jul 12, 2024 07:48 IST
புதுக்கோட்டை ரவுடி துரைசாமி என்கவுன்ட்டர் விவகாரத்தில் போலீஸார் விளக்கம்
ஆலங்குடி அருகே காட்டுப்பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றுத்திரிவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரிக்க முயன்றனர் ரவுடி துரைசாமி போலீஸாரை நாட்டு துப்பாக்கியால் சுடமுயன்ற நிலையில் ஆய்வாளர் சாதுரியமாக தப்பினார் மேலும் அரிவாளால் போலீஸாரை வெட்ட முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரைசாமி காயமடைந்தார் ரவுடி துரைசாமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.