Advertisment

Tamil Breaking News Highlights: இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை, எதிர்க்கட்சி மட்டுமே: நவீன் பட்நாயக் அறிவிப்பு

Tamil Nadu News Update Today- 24 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naveen Patnaik aide V K Pandian quits politics after BJD debacle in lok sabha polls Odisha Tamil News

Tamil News updates:  Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம்

விபத்து வழக்குகளில் இழப்பீட்டை நிர்ணயிப்பதை தீர்மானிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், அதனால் ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 25, 2024 07:03 IST
    இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை, எதிர்க்கட்சி மட்டுமே: நவீன் பட்நாயக் அறிவிப்பு

    ராஜ்யசபாவில் உள்ள ஒன்பது எம்பிக்களும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு பட்நாயக் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை.  எதிர்க்கட்சி மட்டுமே. ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். பாஜகவை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை

    பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்



  • Jun 24, 2024 22:07 IST
    கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக சுரேஷ் குமார் என்பவர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே உள்ள மணப்பாச்சி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான சுரேஷ் என்கிற சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Jun 24, 2024 21:39 IST
    குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினாரா? ராஜ்பவன் விளக்கம்

    குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாக பரவும் செய்தியை மறுத்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது



  • Jun 24, 2024 20:25 IST
    அப்துல் கலாம் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு

    முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்



  • Jun 24, 2024 19:54 IST
    குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

    தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 



  • Jun 24, 2024 19:33 IST
    புதுச்சேரி விஷவாயு விபத்து; காரணம் குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம்

    புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், விஷவாயு தாக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். கழிவறை இணைப்புகளில் 'S' அல்லது 'P' வடிவ நீர்க்காப்பு முறை இல்லாதது, ஆய்வு தொட்டிகள், வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது முதன்மை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.



  • Jun 24, 2024 19:31 IST
    ஜூன் 3-ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் - அமைச்சர் சாமிநாதன்

    அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்



  • Jun 24, 2024 18:39 IST
    தி.மு.க மீது பழி சுமத்துவது அவைக்கு அழகல்ல: பா.ம.க.வுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்

    சமூகநீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் பாஜகவை தமிழ்நாட்டில் தூக்கிப் பிடிப்பதே நீங்கள் மட்டும்தான். 20% இட ஒதுக்கீடு கொடுத்த கலைஞரை இந்த சமூகத்திற்கு எதிரானவர் போல சித்தரிப்பதையே பா..க தொடர்ந்து செய்துவருகிறது. எப்படி ஒரே நேரத்தில் இத்தனை விதமாக பேசமுடிகிறது என்பது விந்தையாக உள்ளது. மீண்டும் மீண்டும் தி.மு.க மீது பழி சுமத்துவது அவைக்கு அழகல்ல. உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் அழகல்ல என சட்டப்பேரவையில் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.



  • Jun 24, 2024 17:35 IST
    பள்ளி மாணவிகளுக்காக அகல்விளக்கு திட்டம்

    9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவிகள் எந்த வித இடர்பாடுகளும் இன்றி பள்ளி செல்வதை உறுதி செய்ய ரூ50 லட்சம் மதிப்பில் அகல்விளக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.



  • Jun 24, 2024 17:32 IST
    நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது : மம்தா பானர்ஜி

    தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது. 2017க்கு முன்பு இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சுமூகமானதாக இருந்தது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூறியுள்ளார்.



  • Jun 24, 2024 16:32 IST
    வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் 

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு: “வெப்ப அலை இனி மாநில பேரிடராக அறிவிக்கப்படும்; வெப்ப அலை பாதிப்பிற்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்; உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.



  • Jun 24, 2024 15:37 IST
    விஷச் சாராய விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பு - தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி: “பிரதமர் மோடி தமிழகம் வருகையை ரத்து செய்கிறார். அன்றைய தினமே விஷச் சாராய சம்பவம் நடந்துள்ளது. சந்தேகத்தை எழுப்புகிறது. ஆணித்தரமாக சொல்கிறேன். விஷச் சாராய விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடர்பு உள்ளது. விஷச் சாராய விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரும் எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன், புதுச்சேரி முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏன் கூறவில்லை.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jun 24, 2024 15:13 IST
    அறந்தாங்கி அருகே தேர் சாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் காயம்

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து மகாலிங்கம் (60) என்பவர் உயிரிழந்தார். முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்கு ஏற்பாடு நடந்தபோது நேரிட்ட விபத்தில் காயமடைந்த 4 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரின் மீதும் கும்பம் ஏற்றிக்க்கொண்டிருந்தபோது, கயிறு அறுந்து தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.



  • Jun 24, 2024 14:54 IST
    மாடுகளை பிடிக்க கூடுதலாக 5 பணியாளர்கள் நியமனம்

    சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மண்டலம் வாரியாக கூடுதலாக 5 பணியாளர்கள் நியமனம். தெருநாய்களின் தொல்லையத் தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். தற்போது தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது

    அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.325-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    - சென்னை மாமன்ற கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  பிரியா ராஜன்



  • Jun 24, 2024 14:32 IST
    கெஜ்ரிவால் ஜாமின்: தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    உயர்நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைத்த பின்பே மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் -உச்சநீதிமன்றம்

    மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு.



  • Jun 24, 2024 14:22 IST
    நீட் மறுதேர்வு: சி.பி.ஐ. விசாரணை

    நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை. மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறு தேர்வில் பங்கேற்காதது ஏன்?

    தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு? - சிபிஐ விசாரணையில் பல தகவல்கள் வெளியாக வாய்ப்பு



  • Jun 24, 2024 14:04 IST
    மீனவர்களை மீட்க கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தல்



  • Jun 24, 2024 14:04 IST
    கள்ளக்குறிச்சி விவகாரம்: கார்கேவுக்கு, ஜே.பி.நட்டா கேள்வி

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்தும் காங்கிரஸ் மெளனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கேள்வி

    துறை அமைச்சரை நீக்கவும், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் தமிழக முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும் - ஜே.பி.நட்டா



  • Jun 24, 2024 13:51 IST
    எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் அரசியல் செய்கின்றனர்: ஆர்.எஸ்.பாரதி

    விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார்.

    -ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர்



  • Jun 24, 2024 13:36 IST
    இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு



  • Jun 24, 2024 13:18 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்புமனுக்கள் ஏற்பு

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.



  • Jun 24, 2024 13:18 IST
    கீழடி அகழாய்வு

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 10ம் கட்ட அகழாய்வில் 27 பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டுள்ளது. 



  • Jun 24, 2024 13:00 IST
    சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை: தமிழிசை

    விஷ சாராய விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    முதலமைச்சர், மதுவிலக்கு துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி சென்று பார்க்கவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்க ஆளுங்கட்சி முயற்சிக்கிறது. தார்மீக பொறுப்பேற்று மதுவிலக்குத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்



  • Jun 24, 2024 13:00 IST
    சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை: தமிழிசை

    விஷ சாராய விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    முதலமைச்சர், மதுவிலக்கு துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி சென்று பார்க்கவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்க ஆளுங்கட்சி முயற்சிக்கிறது. தார்மீக பொறுப்பேற்று மதுவிலக்குத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்



  • Jun 24, 2024 12:44 IST
    சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க வெளிநடப்பு: ஜி.கே.மணி

    சாதி வாரி கணக்கெடுப்பும், உள் ஒதுக்கீடும் தனித்தனி பிரச்சினை. ஏற்கனவே அருந்ததியர்கள், இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது- ஜி.கே.மணி

    சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி மறுப்பு என பாமக குற்றஞ்சாட்டி பா.ம.க வெளிநடப்பு 



  • Jun 24, 2024 12:24 IST
    நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்

    நாளை ஆளுநரை சந்திக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்க உள்ளார். 



  • Jun 24, 2024 12:23 IST
    சாதிவாரி கணக்கெடுப்பு - தீர்மானம் நிறைவேற்றப்படும்

    “சாதிவாரி கணக்கெடுப்பு - தீர்மானம் நிறைவேற்றப்படும்“ ''ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடப்பு கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும்'' - முதல்வர் ஸ்டாலின்



  • Jun 24, 2024 12:11 IST
    ஆளுநருடம் அண்ணாமலை,தமிழிசை சந்திப்பு

    ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அண்ணாமலை, தமிழிசை சந்திப்பு

    கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் தமிழக பாஜக புகார் மனு



  • Jun 24, 2024 11:45 IST
    நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

    நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்.

     

    Pro.jpg



  • Jun 24, 2024 11:39 IST
    விஷ சாராய மரண விவகாரம்: இ.பி.எஸ் வலியுறுத்தல்

    ``தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது''

    ``காவல் நிலையம், நீதிமன்றம் அருகேயே கள்ளச்சாராயம் விற்பனை''

    ``விஷ சாராய உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது''

    ``விஷ சாராய மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்''

    அரசின் அழுத்தத்தால், ஆட்சியர் தவறான தகவலை கூறினார் - இ.பி.எஸ்



  • Jun 24, 2024 11:38 IST
    புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு

    18வது மக்களவையின் முதல் கூட்டம் கூடியது புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு இடைக்கால சபாநாயகர் பர்துருஹரி மஹதாப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் 



  • Jun 24, 2024 11:17 IST
    மக்களவை முதல் கூட்டத்தில் மோடி பேச்சு

    18-வது மக்களவையின் முதல் கூட்டத்திற்கு முன் பிரதமர் மோடி பேச்சு

    2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அனைவரையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும். 

    எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள். 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் - பிரதமர் மோடி



  • Jun 24, 2024 10:54 IST
    பா.ஜ.கவின் செயல்பாடுகள் காரணமாகவே மக்கள் 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்துள்ளனர்; மோடி

    முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.,க்கள் பதவியேற்க உள்ளனர்; 60 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு அமைந்துள்ளது; நாடாளுமன்றக் கூட்டம் சாதாரண மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்; பாஜகவின் செயல்பாடுகள் காரணமாகவே மக்கள் 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்துள்ளனர்; புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடர் ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்- மோடி 



  • Jun 24, 2024 10:42 IST
    நிதி நிலைக்கு ஏற்ப கல்வராயன் மலையை மேம்படுத்த நடவடிக்கை

    நிதி நிலைக்கு ஏற்ப கல்வராயன் மலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன்



  • Jun 24, 2024 10:42 IST
    ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு

    தமிழ்நாட்டிற்கு சாலை வளர்ச்சி மிக முக்கியமானது; சாலை வசதி மேம்பாட்டை கிராம, நகர வித்தியாசமின்றி தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது; அதன்படி ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Jun 24, 2024 10:32 IST
     மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவி ஏற்றார் பர்துருஹரி மஹதாப்

     மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவி ஏற்றார் .பர்துருஹரி மஹதாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு .கோப்பில் கையெழுத்திட்டு இடைக்கால சபாநாயகர் பொறுப்பு பணியை தொடங்கினார் மஹதாப்.



  • Jun 24, 2024 10:15 IST
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,700-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,600-க்கும் விற்பனை.



  • Jun 24, 2024 09:40 IST
    மீனவர்களை விடுதலை செய்ய: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்



  • Jun 24, 2024 09:38 IST
    விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    கோவை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் சோதனை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் சோதனை.



  • Jun 24, 2024 09:19 IST
    விஷ சாராயம் : மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிப்பு: ஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது

    கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு. ஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது.



  • Jun 24, 2024 09:18 IST
    கரூர் அருகே லாரி மோதி பயங்கர விபத்து

    கரூர் அருகே பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது, லாரி மோதி பயங்கர விபத்து.  பேருந்தின் முன்பக்கம் நின்று பழுது பார்த்துக் கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு.



  • Jun 24, 2024 08:42 IST
    மருந்துகள் கையிருப்பு இல்லை என இ.பி.எஸ் தவறான தகவலை கூறி வருகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    மருந்துகள் கையிருப்பு இல்லை என இ.பி.எஸ் தவறான தகவலை கூறி வருகிறார். மருந்துகள் அனைத்தும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மருந்துகள் கையிருப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை விட தமிழக அரசு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • Jun 24, 2024 08:41 IST
    விஷச்சாராயம் சம்பவம் : கல்வராயன்மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் 2வது நாளாக ஆய்வு

    விஷச்சாராயம் சம்பவம் ,  கல்வராயன்மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் 2வது நாளாக ஆய்வு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழிக்கும் பணிகள் மும்முரம் சத்தியமங்கலம், பவானி உள்ள முகாம்களில் இருந்து கல்வராயன்மலைக்கு விரைவு.



  • Jun 24, 2024 07:48 IST
    18வது மக்களவை : இன்று தொடக்கம்

    18வது மக்களவையின் முதல் அமர்வு இன்று தொடங்குகிறது . புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 280 எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு. 



  • Jun 24, 2024 07:43 IST
    விஷச் சாராயம் : பலி 59ஆக அதிகரிப்பு

    கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் மரணம் .விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை கைது செய்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார்.



  • Jun 24, 2024 07:42 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை .தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் உள்ளிட்ட 64 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.



  • Jun 24, 2024 07:41 IST
    5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

    தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jun 24, 2024 07:41 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

    நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment