Tamil New Live updates: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
Jun 24, 2024 05:36 ISTசாலை விபத்து சிகிச்சைக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் - சுகாதாரத்துறை செயலர் உத்தரவு
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்வது கட்டாயம் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விபத்து வழக்குகளில் இழப்பீட்டை நிர்ணயிப்பதை தீர்மானிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், அதனால் ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியிருந்தார்.
-
Jun 23, 2024 21:09 ISTநீட் தேர்வில் முறைகேடு: 63 மாணவர்கள் தகுதி நீக்கம் - தேசிய தேர்வு முகமை உத்தரவு
இளநிலை நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசியத் தேர்வு முகமை ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
-
Jun 23, 2024 20:04 ISTபோக்குவரத்து சார்பு பெண் ஆய்வாளரை திட்டியதாக புகார்; சிவகங்கை நகர பா.ஜ.க தலைவர் கைது
போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பா.ஜ.க தலைவர் உதயா கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜக நிர்வாகி கைதைக் கண்டித்து, சிவகங்கை காவல் நிலையம் முன்பு பா.ஜ.க நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணித்த பாஜக நிர்வாகி உதயா சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக கூறப்படுகிறது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சார்பு பெண் ஆய்வாளர் சீட் பெல்ட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உதயா தகாத வார்த்தைகளால் திட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் புகார் அளித்ததால் பா.ஜ.க நிர்வாகி உதயா கைது செய்யப்பட்டார்.
-
Jun 23, 2024 19:55 ISTபரமக்குடியில் இளம்பெண் கொலை; 2வது கணவர் கைது
பரமக்குடியில் இளம்பெண் மேகலா பணிபுரியும் கடை வாசல் முன்பே, அவரை வது கணவர் மணிகண்டன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். கொலை செய்த 2வது கணவர் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
Jun 23, 2024 19:53 ISTநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களைத் தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டி ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jun 23, 2024 19:49 ISTசாராய வேட்டை: கல்வராயன் மலையில் மாயமானதாக கூறப்பட்ட காவலர்கள் ஊர் திரும்பினர்
கல்வராயன் மலைக்கு சாராய வேட்டைக்குச் சென்ற 7 பட்டாலியன் காவலர்கள் மாயமானதாக வெளியான தகவல் வெளியானது. கல்வராயன்மலையில் மாயமானதாக கூறப்பட்ட 7 காவலர்களும் ஊருக்குத் திரும்பினர். சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு தாமதமாக வந்ததாக, கள்ளக்குறிச்சி காவல்துறை அறிவித்துள்ளது.
-
Jun 23, 2024 19:32 ISTகள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு: காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது அதிர்ச்சி - நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: “கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. காஙிரஸ் தலைவ மல்லிகார்ஜுன் கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? பிற்படுத்தப்பட்டோர் விஷச் சாராயத்தால் இறக்கும்போது, ராகுல் காந்தியிடமிருந்து ஒரு அறிக்கைகூட வரவில்லை” என்று விமர்சித்துள்ளார்.
-
Jun 23, 2024 18:41 ISTகள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம்; ராகுல் காந்தி பேசாதது ஏன்? நிர்மலா சீதாராமன் கேள்வி
“கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பேசாதது ஏன்? மல்லிகார்ஜூன கார்கே வாய் திறக்காதது ஏன்?” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பினார். -
Jun 23, 2024 18:38 ISTகள்ளக்குறிச்சி விஷச் சாராயம்: உயிரிழப்பு 57 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
-
Jun 23, 2024 18:37 ISTசட்னியில் இறந்து கிடந்த தவளை
கேரள மாநிலம் ஷோரனூர் ரயில் நிலையத்தில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
ரயில்வே துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து, ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். -
Jun 23, 2024 17:43 ISTகுடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட மிதமாக குடியுங்கள்.. கமல்ஹாசன்
“குடிக்க வேண்டாம் என்று சொல்வதை விட மிதமாக குடியுங்கள் உங்கள் உயிர்தான் முக்கியம் என அறிவுரை சொல்லும் இடங்கள் டாஸ்மாக் கடைகள் அருகிலே அமைக்கப்பட வேண்டும்” என கள்ளக்குறிச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறினார்.
-
Jun 23, 2024 17:30 ISTஈரோட்டில் திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் 10 நாள்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்த பெண்களை தாக்கியதாக திமுக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
Jun 23, 2024 16:25 ISTடிராக்டர் பந்தயத்தின்போது விபத்து - இளைஞர் மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே நடைபெற்ற டிராக்டர் பந்தயத்தின்போது டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
-
Jun 23, 2024 16:03 ISTஇலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை (24.06.24) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்
-
Jun 23, 2024 15:36 ISTநீட் தேர்வு முறைகேடுகள்; வழக்குப்பதிவு செய்தது சி.பி.ஐ
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகாரில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Jun 23, 2024 15:12 ISTரஷ்யாவுக்கு ஆள்கடத்தல்; தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 3 பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
சுற்றுலா, வேலைக்காக சென்ற இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்த்து உக்ரைன் போரில் ஈடுபடுத்திய விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த நபர் உட்பட 3 பேருக்கு சி.பி.ஐ ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் சுமார் ரூ.3.5 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இந்திய இளைஞர்களை ரஷ்யாவிற்கு ஆட்கடத்தல் செய்ததாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Jun 23, 2024 14:53 ISTதமிழ்நாட்டில் இன்று முதல் ஜூன் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூன் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jun 23, 2024 14:40 ISTகுடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் - கமல்ஹாசன்
டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் என விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
-
Jun 23, 2024 14:09 ISTநிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சை பேச்சு; டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இனியவனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கவிஞர் இனியவனின் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது
-
Jun 23, 2024 13:29 ISTஅண்ணாமலை சிபிஐ விசாரணை கேட்பதன் நோக்கம் தெரிகிறது
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அண்ணாமலை சி.பி.ஐ விசாரிக்க சொல்வது வழக்கை தாமதப்படுத்தி குற்றவாளிகளை மறைக்கும் முயற்சி. அண்ணாமலையின் ஆட்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்ற சி.பி.ஐ விசாரணை கேட்கின்றனர். அண்ணாமலை சிபிஐ விசாரணை கேட்பதன் நோக்கம் தெரிகிறது- தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
-
Jun 23, 2024 12:36 ISTஅதி கனமழை: கேரளாவுக்கு ரெட் அலர்ட்
கேரளா மற்றும் கர்நாடகாவில் இன்று அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை. கேரளாவுக்கு ரெட் அலர்ட் விடுத்தது, இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jun 23, 2024 12:07 ISTசாலை விபத்தில் பலியான 3 பெண்கள்: ஸ்டாலின் நிதியுதவி
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி. சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு
-
Jun 23, 2024 12:04 ISTமயிலை பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம்
மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
பணம் கேட்டு தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதானவர் அகோரம். திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கம்.
-
Jun 23, 2024 11:33 ISTவிஷ சாராய விவகாரம்அனுமதி இன்றி போராட்டம் : பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு
விஷ சாராய விவகாரம் தொடர்பாக அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு. சென்னை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு.
-
Jun 23, 2024 11:04 ISTமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு : ஸ்டாலின் கண்டனம்
நெட் தேர்வு ரத்தை தொடர்ந்து, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்; இது போன்ற முறைகேடுகள் சாதாரணமானவை அல்ல, திறனற்ற, சரியான கட்டமைப்பு இல்லாத தேர்வு முறையின் தொடர் தோல்விகள் என்பதை மறந்துவிடக் கூடாது” - முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து X தளத்தில் பதிவு
-
Jun 23, 2024 10:58 ISTமீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி: இஸ்ரோ
இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து 'புஷ்பக்' ஏவுகணை விடுவிக்கப்பட்ட நிலையில், நிர்ணயிக்கப்பட்ட ஓடுதளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. இந்த ஏவுகணையானது செயற்கைகோள் அல்லது விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமியில் தரையிறங்கக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 23, 2024 10:22 ISTசென்னை அருகே மெத்தனால் கலந்த 1500 லிட்டர் ரசாயனம் பறிமுதல் : 4 பேர் கைது
சென்னையை அடுத்த செங்குன்றம், வடபெரும்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை தனியார் கெமிகல் குடோனில் சோதனை நடத்தியபோது மெத்தனால் கலவையுடன் இருந்த 1500 லிட்டர் ரசாயனம் சிக்கியது கொருக்குப்பேட்டை கவுதம், மலையனுர் பரமசிவம், மாதவரம் பென்சிலால், ராம்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிக்கிய மாதேஷ் உடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை
-
Jun 23, 2024 09:04 ISTதெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு
சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் அதிர்ச்சி சம்பவம் முக்காணி பகுதியில் சாந்தி, பார்வதி, அமராவதி, சண்முகத்தாய் ஆகியோர் தண்ணீர் பிடித்த போது விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - சண்முகத்தாய் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார், சாலையோரம் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த 4 பெண்கள் மீது மோதியது.
-
Jun 23, 2024 09:01 ISTகொள்ளிடம் ஆற்றில் மாயமான 10ம் வகுப்பு மாணவனை தேடும் பணி தீவிரம்
கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10ம் வகுப்பு மாணவனை தேடும் பணி தீவிரம் .2வது நாளாக டிரோன் உதவியுடன் தேடும் தீயணைப்பு துறையினர். ஸ்கூபா டைவிங் வீரர்களும் ஆற்றில் மாணவனை தேடி வருகின்றனர் சோகத்துடன் காத்திருக்கும் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
-
Jun 23, 2024 09:00 ISTதமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும்.
-
Jun 23, 2024 08:57 ISTபாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது
ஜேடிஎஸ் கட்சித் தொண்டர் சேத்தனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கர்நாடகா மாநில எம்.எல்.சி சூரஜ் ரேவண்ணா அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டார்.
-
Jun 23, 2024 08:06 ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில், சிவகுமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்த சிவகுமாரை இன்று காலை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட சிவகுமாரை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேலும் ஒருவர் கைது.
-
Jun 23, 2024 07:59 IST1500 மாணவர்களுக்கு பேருக்கு இன்று நீட் மறுதேர்வு
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 500 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு .30ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்.
-
Jun 23, 2024 07:58 ISTநீட் முறை கேடு : சி.பி.ஐ விசாரிக்க உத்தரவு
நீட் முறைகேடு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு. வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடவடிக்கை.
-
Jun 23, 2024 07:57 ISTதமிழக மீனவர்கள் 18 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை .
-
Jun 23, 2024 07:56 ISTவிஷச்சாராய குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.