Tamil Breaking News Highlights: தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில்கள்; மோடி இன்று துவக்கி வைப்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore Bengaluru Vande Bharat Express Train Time Change Relief announced for Passengers Tamil News


பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 165-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கோவை: வாலிபரின் வயிற்றை கத்தியால் குத்திக் கிழித்த கும்பல்.  
கோவையில் வாலிபரின் வயிற்றை கத்தியால் குத்திக் கிழித்த கும்பல்.  பணம் தராத ஆத்திரத்தில் 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் கத்திக்குத்தில் படுகாயமடைந்த வாலிபர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. 

 

  • Aug 30, 2024 21:04 IST

    ஓமந்தூரார் மருத்துமனை பகுதியில் வைக்கப்பட்ட ஒலிப்பெருக்கிகள் அகற்றம்

     எஃப் 4 கார் ரேஸ் வழித்தடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளில் இருந்து வெளி வரும் சத்தம், சென்னை ஓமந்தூரார் மருத்துமனையில் எதிரொலிக்காதபோதிலும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளை அகற்குமாறு அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவமனைக்குள் வெளிப்புற சத்தம் வராமல் சவுண்ட் ப்ரூபிங் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.



  • Aug 30, 2024 20:27 IST

    பாகிஸ்தானுக்கு வருமாறு, பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு

    சீனா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு வருமாறு, பிரதமர் மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Aug 30, 2024 20:25 IST

    அமோனியா வாயு கசிந்து ஒருவர் பலி

    தனியார் உர தொழிற்சாலையின் துணை நிறுவனத்தில் அமோனியா வாயு கசிந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அமோனியா வாயு பைப் லைனில் பராமரிப்பு பணியின் போது அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபரீதம்



  • Aug 30, 2024 20:22 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 4 வழக்கறிஞர்களுக்கு தடை

    பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு முடியும் வரை 4 பேருக்கும் தடை விதித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.



  • Aug 30, 2024 18:37 IST

    பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு 4வது பதக்கம்

    பாராலிம்பிக் ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியா வீரர் மணிஷ் நர்வால் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது



  • Aug 30, 2024 18:24 IST

    ஹேமா கமிட்டி முழு அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

    ஹேமா கமிட்டி அறிக்கையில் மறைக்கப்பட்ட பக்கங்கள் உள்பட முழு நகலையும் சமர்ப்பிக்க கேரள முதன்மை செயலாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது



  • Aug 30, 2024 18:05 IST

    பாராலிம்பிக் - இந்தியாவுக்கு வெண்கலம்

    பாராலிம்பிக் மகளிர் 100 மீட்டர் தடகளப் போட்டியில் இந்தியா வீராங்கனை ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 1 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது



  • Aug 30, 2024 17:50 IST

    சென்னையில் 25 சவரன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்

    சென்னை வளசரவாக்கத்தில் வீடுபுகுந்து மயக்க மருந்து அடித்து பெண்ணிடம் 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. மகளின் நகையை மகனுக்காக சிறுக சிறுக அடமானம் வைத்தது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது



  • Aug 30, 2024 17:29 IST

    எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார்; விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை - தமிழக அரசு

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது



  • Aug 30, 2024 17:10 IST

    கேரள பாலியல் புகார்; ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு எஸ்.ஐ.டி

    கேரள நடிகர்கள் மீது நடிகைகள் முன்வைத்த பாலியல் புகார் தொடர்பாக, ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்யும் என பூங்குழலி ஐ.பி.எஸ் தெரிவித்துள்ளார்



  • Aug 30, 2024 17:03 IST

    'கேரளாவைபோல தமிழகத்திலும் கமிட்டி வேண்டும்': நடிகை விசித்ரா

    "திரையுலக பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க கேரளாவைபோல தமிழகத்திலும் கமிட்டி வேண்டும்; கமிட்டி கண் துடைப்பாக இருக்கக்கூடாது; வலுவான தலைவர்கள் இருக்க வேண்டும்" என்று  நடிகை விசித்ரா கூறியுள்ளார். 



  • Aug 30, 2024 16:27 IST

    ‘தங்கலான்’ ரூ. 100 கோடி வசூல்

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 30, 2024 16:21 IST

    சிவாஜி சிலை விவகாரம் - மன்னிப்பு கோரிய மோடி 

    "சிவாஜி மகாராஜா நமக்கு அரசர் மட்டுமல்ல, நம் தெய்வம்; அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் 35 அடி சத்ரபதி சிவாஜி மகாராஜா சிலை இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சிவாஜி மகராஜாவை வணங்கி மன்னிப்பு கேட்டார். 

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை வத்வான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ”2013 ஆம் ஆண்டில் எனது கட்சி என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது, ​​முதலில் நான் ராய்காட் கோட்டைக்கு தான் சென்றேன். அங்கு நான் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் முன் பயபக்தியுடன் வணங்கினேன். மேலும், சிவாஜி மகாராஜா நமக்கு அரசர் மட்டுமல்ல, அவர் நமது ஆராத்தித்து வணங்கக் கூடிய தெய்வம். அவரை நாம் வணங்கி உத்வேகம் பெறுவோம்" என்று அவர் கூறினார்.

    ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Modi Maharashtra Visit



  • Aug 30, 2024 16:05 IST

    ஒரே பிரிவில் இரு பதக்கங்களை வென்று வீராங்கனைகள் அசத்தல்!

    பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் , வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றுள்ளனர்.



  • Aug 30, 2024 15:37 IST

    மாற்றாந் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு -  துரை வைகோ எம்.பி 

    கன்னியாகுமரியில் இன்று ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், :தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால் தேசிய கல்விக்கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார்.

    இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றாந் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது. தமிழகத்தில் ஒருபோதும் திமுக தலைமையிலான கூட்டணி மாறாது. அண்ணாமலை அவருடைய அரசியல் அறிவை வளர்க்க வெளிநாடு சென்றுள்ளார்." என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Aug 30, 2024 15:30 IST

    மதுரை சிறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை 

    கைதிகள் நெரிசலால் மதுரை மத்திய சிறைக்கு பதிலாக மாற்று இடம் கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர், சிறைத்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

     



  • Aug 30, 2024 15:28 IST

    ஆசிரியர் கல்வியியல் பல்கலை. துணை பதிவாளர் மீது புகார் 

    ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. துணை பதிவாளர் மோகன் மீது மாணவி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் மாணவி புகார் தெரிவித்துள்ளார்.  துணை பதிவாளர் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 



  • Aug 30, 2024 15:19 IST

    தாம்பரம்: வாகனம் கவிழ்ந்து விபத்து

    தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் பாலம் சேதம் மாற்றுப்பாதையில் வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை விரைந்து
    மீட்ட பொதுமக்கள், தற்காலிக சாலையை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Aug 30, 2024 15:10 IST

    முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேலுக்கு நிபந்தனை முன்ஜாமின்

    சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் மதுரை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. 4 வாரங்களுக்கு தினந்தோறும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



  • Aug 30, 2024 15:09 IST

    சத்திய ஞான சபை - தொல்லியல் துறை ஆய்வு

    வடலூர் சத்திய ஞான சபையில் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய  தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 



  • Aug 30, 2024 14:18 IST

    கருங்கல் அரசுப் பள்ளியில் அன்பில் மகேஸ் ஆய்வு

    கன்னியாகுமரி: கருங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, நன்னெறி கதை சொல்லிய 12ம் வகுப்பு மாணவனை கைத்தட்டி பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஸ்



  • Aug 30, 2024 13:47 IST

    தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்

    தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

    சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் வந்தே பாரத் ரயில்

    மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில் வந்தே பாரத் ரயில் சேவை



  • Aug 30, 2024 13:09 IST

    தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு

    அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவிப்பு

    குழுவில் ஹெச்.ராஜா, எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், கனக சபாபதி, சக்கரவர்த்தி, எஸ்.ஆர்.சேகர் இடம்பெற்றுள்ளனர்



  • Aug 30, 2024 12:55 IST

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்

    இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 30, 2024 12:39 IST

    வக்பு சட்டத்திருத்தம்: 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம்

    வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து பொதுமக்கள், சம்பந்தப்பட்ட தரப்பினர், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் /jpcwaqf-lss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் 15 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

    நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவிப்பு



  • Aug 30, 2024 12:12 IST

    எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு முன்ஜாமின் மறுப்பு

    ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு முன்ஜாமின் மறுப்பு

    சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    குச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரில் விஜயபாஸ்கர், சேகர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது



  • Aug 30, 2024 11:50 IST

    சென்னையில் 2 சிறுமிகள் மாயம்

    சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் பள்ளி மாணவிகள் 2 பேர் மாயமானதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பருடன் பேசி வந்ததை கண்டித்த நிலையில், சிறுமிகள் மாயமானதாக பெற்றோர்கள் தகவல் நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று சென்ற நிலையில், இன்னும் வீடு திரும்பவில்லை என தகவல் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ஆண் நண்பரிடம் விசாரித்த போது, பிறந்த நாள் விழாவிற்காக வந்த இருவரையும் கோயம்பேடு பேருந்தில் ஏற்றிவிட்டதாக போலீசாரிடம் தகவல்.



  • Aug 30, 2024 11:50 IST

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு : உயர் நீதிமன்றம் அதிரடி

    "டி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் முறைகேடு வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது" 2016ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி 6 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு வழக்கில் கைதான கருணாநிதி என்பவர், விசாரணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் டிஎன்பிஎஸ்சி குருப் 1 விடைத்தாள் மாற்றிய வழக்கில், 65 சாட்சி சேர்க்கப்பட்டு, 10 பேரிடம் விசாரணை நிறைவடைந்து விட்டது - அரசு தரப்பு



  • Aug 30, 2024 11:13 IST

    அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, கரூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 30, 2024 11:12 IST

    திருச்சி என்ஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்

    திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியர் நள்ளிரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த எலக்ட்ரீசியனை கைது செய்த போலீசார் மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் வார்டன் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்ய மாணவர்கள் கோரிக்கை.



  • Aug 30, 2024 11:06 IST

    மயக்க மருந்து அடித்து 25 சவரன் கொள்ளை

    சென்னை வளசரவாக்கத்தில் இன்று அதிகாலை மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 25 சவரன் நகை கொள்ளை வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது மயக்க மருந்து அடித்து, கை, கால்களை கட்டி போட்டு கொள்ளையர்கள் துணிகரம் மூதாட்டி சாந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்.



  • Aug 30, 2024 10:22 IST

    அரக்கோணம் வழியில் மின்சார ரயில்கள் ரத்து

     சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கம் அரக்கோணம் பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அறிவிப்பு இன்றும், நாளையும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து சென்னை - திருவள்ளூர் இடையே மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் இயங்காது.



  • Aug 30, 2024 10:00 IST

    திருச்சி என்.ஐ.டி விவகாரம் - திருச்சி எஸ்.பி.வருண்குமார் பேட்டி

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர்கள் மூலம் மாணவிகளிடம் தகவல்களை கேட்டுப்பெற உள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளித்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - திருச்சி எஸ்.பி.வருண்குமார்



  • Aug 30, 2024 09:29 IST

    லட்டு வாங்க ஆதார் கட்டாயம்

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இன்று முதல் லட்டு வாங்க பக்தர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் லட்டுக்களை வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில மாற்றத்தை செய்துள்ளது அதன்படி சாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே தேவை என்று வருபவர்கள் அவர்களுடைய ஆதார் அட்டையை கவுண்டர்களில் சமர்ப்பித்து இரண்டு லட்டுக்களை வாங்கி செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.



  • Aug 30, 2024 09:20 IST

    குமரியில் வெளுத்து வாங்கும் கனமழை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் இருந்தே பெய்து வரும் தொடர் மழை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால், இயல்பு வாழ்க்கை பாதிப்பு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதி



  • Aug 30, 2024 08:53 IST

    திருச்சி NIT-ல் மாணவிக்கு பாலியல் தொல்லை - ஊழியர் ஒருவர் கைது

    திருச்சி என்.ஐ.டி மாணவிகள் விடுதியில் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த மற்ற மாணவிகள் பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



  • Aug 30, 2024 08:33 IST

    நோக்கியா நிறுவனத்துடன் ரூ.450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    நோக்கியா நிறுவனத்துடன் ரூ.450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து சென்னை, சிறுசேரி சிப்காட்டில் தொழிற்சாலை அமைக்கிறது நோக்கியா .  இதன்மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் 



  • Aug 30, 2024 08:23 IST

    மாணவிக்கு பாலியல் தொல்லை போராட்டம்

    திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியர் நள்ளிரவு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த எலக்ட்ரீசியனை கைது செய்த போலீசார் முதுகுளத்தூரை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் என்பவர் சிறையில் அடைப்பு அறையில் தங்கி இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - விடுதி வார்டன் பொறுப்பேற்க கோரிக்கை



  • Aug 30, 2024 07:44 IST

    ஃபார்முலா-4 கார் பந்தயம்: உதயநிதியை வாழ்த்திய தனுஷ்

    சென்னையில் நடைபெறும் ஃபார்முலா4 கார் பந்தயத்திற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து. ஃபார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என்றும் கருத்து



  • Aug 30, 2024 07:43 IST

    தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு

    மதுரையில், எம்.எல்.ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான தளபதி வீட்டின் முன்பு நேற்று(29.08.2024) தீக்குளித்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு நேற்று காலை மானகிரி கணேசன் என்பவர் தீக்குளித்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் 90 சதவீதத்திற்கு மேல் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்



  • Aug 30, 2024 07:42 IST

    அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தானதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்கும் அமெரிக்க நிறுவனம் சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைய புரிந்துணர்வு ஒப்பந்தம்.



  • Aug 30, 2024 07:41 IST

    சென்னையில் பயங்கர தீ விபத்து

    பை, காலணி விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து அதிகாலையில் கொழுந்து விட்டு தீ எரிந்ததால் அதிர்ச்சி ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து விரைந்த தீயணைப்பு படையினர்.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: