Advertisment

News Highlights: சூரப்பா மீதான புகாரில் முகாந்திரம்- கலையரசன் குழு

Tamil News Today : புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களும் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

author-image
WebDesk
New Update
சூரப்பா விசாரணைக் குழு: இறுதி முடிவு எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் தடை

Tamil News Today : அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுவதில் உண்மை இல்லை.

Advertisment

தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் சூரப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கலையரசன் குழு அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காணை குப்பத்தில் 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தொடங்குகிறார்.

தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.  சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என அறிவிப்பு. மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களின் பிரசாதங்களும் தபால் மூலம் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil Nadu News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























19:36 (IST)12 Feb 2021










































விவசாயிகள் நன்றி

24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் அறிவிப்பு - முதலமைச்சரின் அறிவிப்புக்கு விவசாயிகள் நன்றி

19:36 (IST)12 Feb 2021










































சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 36 பேருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

18:35 (IST)12 Feb 2021










































பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது நாளை வழங்கப்படும் என அறிவிப்பு

பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளிடம் நாளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி; 16.34 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்

18:34 (IST)12 Feb 2021










































உச்ச நீதிமன்றம் கருத்து

சாதி மறுப்பு திருமணங்கள்தான் சமூகப் பதற்றங்களைத் தணிக்கும் வழி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

18:32 (IST)12 Feb 2021










































ஏர் இந்தியா’ விமான ஊழியர்களுக்கு கொரோனா

வந்தே பாரத் திட்டத்தில் பணியாற்றிய ‘ஏர் இந்தியா’ விமான ஊழியர்கள் 1,995 பேருக்கு கொரோனா 

18:30 (IST)12 Feb 2021










































முதல்வர் பழனிச்சாமி நிவாரண அறிவிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் என்றும் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

18:28 (IST)12 Feb 2021










































திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

எத்தனை உயிர்கள் பலியானாலும் நாங்கள் அலட்சியமாகவே இருப்போம் என அதிமுக அரசு செயல்படுகிறது - இதற்கு முன் பலமுறை வெடிவிபத்து ஏற்பட்டும், பாதுகாப்பு குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

17:34 (IST)12 Feb 2021










































ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் - ஜப்பான் வீராங்கனை ஒசாகா அபாரம்
மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்துக்கு, ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா முன்னேறி உள்ளார். இன்று நடந்த மூன்றாம் சுற்று ஆட்டத்தில், துனிசிய வீராங்கனை ஜபரை அவர் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒசாகா, 6-க்கு 3, 6-க்கு 2 என்ற செட் கணக்கில், ஜபரை வீழ்த்தி, நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
 
16:55 (IST)12 Feb 2021










































மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

பொருளாதாரத்தை ஊக்குவிக்க பட்ஜெட்டில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகே மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்றும்  மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். 

16:34 (IST)12 Feb 2021










































சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ₹2 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ₹50 ஆயிரம் நிவாரணமும் வழங்க உத்தரவுவிட்டுள்ளார்.

15:49 (IST)12 Feb 2021










































பெட்ரோல் விலை உயர்வு குறித்த நடிகை குஷ்பூ கருத்து

“வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் சலுகை தந்திருப்பதால் பெட்ரோல் விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது” என்று பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

15:45 (IST)12 Feb 2021










































விருது நகர் பட்டாசு ஆலை வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

15:32 (IST)12 Feb 2021










































திபெத்திய வருட பிறப்பு

இன்று திபெத் மற்றும் சீனாவில் வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. புத்த துறவி புதிய வருடத்தை வரவேற்கும் பொருட்டு பூஜை செய்யும் காட்சிகள்  

15:30 (IST)12 Feb 2021










































கழக தோழர்கள் பேனர், ஃப்ளக்ஸ், பட்டாசுகளை அறவே தவிர்க்க வேண்டுகிறேன் - உதயநிதி ஸ்டாலின்

பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் தொண்டர்கள் பேனர்கள், பட்டாசுகள் மற்றும் ஃப்ளக்ஸ்களை அறவே தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற்றேன் என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை. 

15:25 (IST)12 Feb 2021










































சென்னை மெட்ரோ சேவையில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

15:24 (IST)12 Feb 2021










































மாநிலங்களவை ஒத்திவைப்பு 

மார்ச் 8ம் தேதி வரை நாடாளுமன்ற மாநிலங்களவை ஒத்திவைப்பு 

15:23 (IST)12 Feb 2021










































பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு. காயம் அடைந்த 24 நபர்கள் சிவகாசி மற்றும் சாத்தூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

14:45 (IST)12 Feb 2021










































சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 நபர்கள் பலி 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. பட்டாசு ஆலையில் தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

14:43 (IST)12 Feb 2021










































2020 மிஸ் இந்தியா வெற்றியாளர்கள் அறிவிப்பு

தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை மன்யா சிங் பெற்றுள்ளார். கடந்த ஆண்டிற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார் மானசா. 

14:08 (IST)12 Feb 2021










































தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே நாளில் தேர்தலை நடத்த கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு. 

14:06 (IST)12 Feb 2021










































மாநிலங்களவை எம்பி தினேஷ் திரிவேதி ராஜினாமா  

மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறை காரணமாக பதவி விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்துள்ளார். 

13:48 (IST)12 Feb 2021










































சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் - கலையரசன் குழு 

அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுவதில் உண்மை இல்லை. தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் சூரப்பாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கலையரசன் குழு அறிவிப்பு. 

13:27 (IST)12 Feb 2021










































தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது

எதிர்வரும் தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார் என்று பாஜக தலைவர் இல. கணேசன் அறிவிப்பு. 

13:26 (IST)12 Feb 2021










































தமிழகத்தில் நான் முதலமைச்சரா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? - ஸ்டாலின் கேள்வி

பொதுமக்களிடம் நான் மனுக்கள் வாங்குவதை பார்த்து, செல்போன் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் கேள்வி. 

13:02 (IST)12 Feb 2021










































மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகிறார் மல்லிகார்ஜூன கார்கே 

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றி வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைவதால் மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்பு. 

13:01 (IST)12 Feb 2021










































சசிகலாவை சந்திக்கும் திட்டம் இல்லை - பிரேமலதா

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் அவரை பல அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

12:31 (IST)12 Feb 2021










































எம்.எஸ்.பி. முறை ரத்து செய்யப்படும் என்று வேளாண் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாதா? அனுராக் கேள்வி

மண்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறை ரத்து செய்யப்படும் என வேளாண் சட்டத்தில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் 

12:29 (IST)12 Feb 2021










































வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளை தடுக்க வேண்டும்

வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளை பதிவிடுவதை ட்விட்டர் நிறுவனமும் மத்திய அரசும் தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு 

12:28 (IST)12 Feb 2021










































அண்ணா பல்கலைகழகத்தில் எம்.டெக். படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு சாத்தியம் இல்லை

எம்.டெக். மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் தேதி டிசம்பருடன் முடிந்து விட்டது என்பதால் அண்ணா பல்கலைகழகத்தில் எம்.டெக். படிப்பில் 45 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதியளிக்க சாத்தியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் பதில் அளித்துள்ளது. 

12:09 (IST)12 Feb 2021










































சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!

கட்டிட விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்புவது முறையற்றது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுருத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டும் மனு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது. 

11:44 (IST)12 Feb 2021










































கொடி ஏற்றிய கேப்டன்!

தேமுதிகவின் கொடி நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். தொண்டர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

11:31 (IST)12 Feb 2021










































தமிழக அரசு அரசாணை வெளியீடு!

திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

11:19 (IST)12 Feb 2021










































அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கு பதவி!

43 வருடங்கள் திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக வெற்றியழகன் நியமனம்.

10:06 (IST)12 Feb 2021










































குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ்!

கலப்பு திருமணம் செய்த பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கலாம் என   தமிழக அரசு அரசாணை வெளியீடுள்ளது. 

10:03 (IST)12 Feb 2021










































மதுரை எய்ம்ஸ்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு மாநிலங்களவை எம்.பி. ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் தீர்மானத்திற்கு  ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் நிறுவனத்தில் துணைவேந்தர், இயக்குனர் தவிர 3 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

09:04 (IST)12 Feb 2021










































பொதுத்தேர்வு எப்போது?

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் . 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுப்படுத்தியுள்ளார். 

09:03 (IST)12 Feb 2021










































மின்சார ரயிலில் மாணவர்களுக்கு அனுமதி!

வரும் 15-ம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது  ரயில்வே நிர்வாகம் . 

Tamil News Today : கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பினார்

நேற்றைய செய்திகள்

நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment