News Highlights: 6 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

Tamil News : இந்தியா – இங்கிலாந்து இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நடராஜன் பங்கேற்க வாய்ப்பு

Tamil News : லடாக் எல்லை பிரச்சினை குறித்து, மாநிலங்களவையில் இன்று விளக்கமளிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங் .

தமிழகத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பெட்ரோல் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது.

உத்தரகாண்ட் வெல்ளம், 4 நாட்கள் ஆன நிலையில் கடும் குளிர் நிலவும் மலைப்பகுதியில் வீரர்கள் போராடி வருகின்றனர். 37 பேரை மீட்டுவிடலாம் என்ற போராட்டம் தொடர்ந்து வருகிறது.

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த விவகாரமத்தில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

Live Blog

Tamil Nadu News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.


22:52 (IST)11 Feb 2021

அமித் ஷா கருத்து

பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அக்கவுண்ட்டில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்: அமித் ஷா 

19:26 (IST)11 Feb 2021

ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என்றும், மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

19:25 (IST)11 Feb 2021

மின்சார ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி

வரும் 15-ம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க அனுமதி – ரயில்வே நிர்வாகம்

19:24 (IST)11 Feb 2021

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகம் வந்த சசிகலா “ரூ.192 கோடி செலவிடப்பட்டதாக தகவல்”வெளியாகியுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19:22 (IST)11 Feb 2021

பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசசாமி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசசாமி, தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2,000 மினி கிளினிக் திறக்கப்படும் என்று  உறுதியளித்துள்ளார்.

17:35 (IST)11 Feb 2021

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  அறிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – கலால் வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

17:35 (IST)11 Feb 2021

வாசிம் ஜாபருக்கு  முன்னாள் கேப்டன் கும்ளே ஆதரவு

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மதவாத சர்ச்சை காரணமாக தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபருக்கு  முன்னாள் கேப்டன் கும்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.

17:06 (IST)11 Feb 2021

நடிகர் கார்த்தி ட்வீட்

கொரோனா சிகிச்சையிலிருந்து சூர்யா வீடு திரும்பியுள்ளதாக நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

17:05 (IST)11 Feb 2021

அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அட்டூழியம் தலைதூக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

17:04 (IST)11 Feb 2021

அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடி

‘கூவத்தூரில் எங்களுக்கு தினகரன் தான் ஊத்திக் கொடுத்தார்’ என அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

16:57 (IST)11 Feb 2021

திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்தியாவில் பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், “வரிகளை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள்” என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

16:41 (IST)11 Feb 2021

பொதுக்குழு கூட்டத்தில் – கமல்ஹாசன்

“எனது இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள்; ஆனால், வாரிசு அரசியலாக மாறிவிட கூடாது என்பதால்  நான் மறுத்துவிட்டேன்” என்று பொதுக்குழுவில் உரையாற்றிய மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

16:31 (IST)11 Feb 2021

சர்ச்சைக்குரிய கணக்குளை முடக்க ட்விட்டர் நிறுவனம் மறுப்பு

விவசாயப் போராட்டம் குறித்த சர்ச்சைப் பதிவுகளை பதிவிட்ட கணக்குகளை முடக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதற்கு டிவிட்டர் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 

16:18 (IST)11 Feb 2021

உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணிக் குழு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மீட்பு பணியாளர்களுக்கு தேவையான பயிற்சியும், உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது – என்.டி.பி.சி. இயக்குநர்

15:58 (IST)11 Feb 2021

விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி – முதலமைச்சர் பழனிசாமி

சட்டப்பேரவையில் அறிவித்தபடி விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சரத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார் 

15:46 (IST)11 Feb 2021

“சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பு இயல்பானது” – தமிழக பாஜக தலைவர் முருகன்

சென்னை கோயம்பேடு பகுதியில் பாஜகவின் மாநில தேர்தல் அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். ஒரு அரசியல்வாதி என்ற முறையில் சசிகலாவுக்கு  தொண்டர்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு இயல்பானதுதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவின் அரசியல் நிலைபாடு என்ன என்பதை பொறுத்தே தங்கள் நிலையை பற்றிக் கூற இயலும் என்றும் முருகன் கூறியுள்ளார். 

15:32 (IST)11 Feb 2021

கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் – நடிகர் சூர்யா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா தற்போது  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

15:29 (IST)11 Feb 2021

மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எப்படி உதவப் போகிறது – தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இப்படிப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எப்படி உதவப் போகிறதுஎன்று  மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

15:10 (IST)11 Feb 2021

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை  இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றுள்ளனர்.  ஆன்லைன் பதிவு  மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடைபெற்று  வருகிறது.

15:00 (IST)11 Feb 2021

விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா – ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா நெருப்பு இன்னும் அணையாத நிலையில், விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா என்றும் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே அரசின் பொறுப்பு என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.

14:29 (IST)11 Feb 2021

கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் – சுனில் அரோரா

வாக்கு பதிவு மையங்கள் 68,000த்திலிருந்து 93,000 ஆக அதிகரித்துள்ளது என்றும் கொரோனா காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சுனில் அரோரா கூறுகிறார்.

13:41 (IST)11 Feb 2021

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள்!

முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்ற வழக்குகள் விசாரணை முன்பு போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13:23 (IST)11 Feb 2021

மநீம 25 தீர்மானங்கள் !

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தொடர்வார் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் முழு அதிகாரம் கமல்ஹாசனுக்குதான் உள்ளது எனவும் தீர்மானம்.. இன்று காலை முதல் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

12:56 (IST)11 Feb 2021

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.  இடைக்கால பட்ஜெட் தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:26 (IST)11 Feb 2021

மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு!

தென்காசியில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பத்மரோகினி என்னும் 9 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

12:25 (IST)11 Feb 2021

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது! !

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை மற்றும் சேலம் வீட்டிற்கு செல்போன் மூலம் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த திருவண்ணாமலையை சேர்ந்த அன்பழகன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

12:02 (IST)11 Feb 2021

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்!

9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி இல்லை; பதிலாக 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் உறுதி செய்துள்ளார். 

12:01 (IST)11 Feb 2021

தொலைபேசி எண் திட்டம்!

மக்கள் குறைகளை தீர்ப்பதற்கான தொலைபேசி எண் திட்டம் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் ‘1100’ என்ற தொலைபேசி எண்ணில் குறைகளை தெரிவிக்கலாம்  என்று  திருப்பூரில் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

11:58 (IST)11 Feb 2021

பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு  !

லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம். எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது என  மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் எல்லை பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங் இன்று பதில் அளிப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. 

11:15 (IST)11 Feb 2021

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் !

கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.பொதுக்குழு கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா மாநாட்டை நடத்துவது பற்றியும், தேர்தல் பிரசாரம் குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

10:36 (IST)11 Feb 2021

தமிழக தேர்தல் குழுவுடன் ஆலோசனை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று 2ம் நாளாக  தமிழக தேர்தல் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் .தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகள் இந்த ஆலோசனை கலந்துக் கொள்ள உள்ளனர். 

10:17 (IST)11 Feb 2021

எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ்!

சென்னை விமானநிலைய முனையங்களில் அண்ணா, காமராஜர் பெயர்களை நீக்கியது குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். 

09:40 (IST)11 Feb 2021

காதலர் தினம் கொண்டாட தடை!

காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி விதிமீறி கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.

09:25 (IST)11 Feb 2021

தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி!

தியேட்டரில் ரிலீஸ் செய்து குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி-யில் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் தியேட்டரில் திரைப்படங்கள் வெளியிட அனுமதி என்று தியேட்டர் உரிமையாளர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். 

09:22 (IST)11 Feb 2021

நடராஜன் விடுவிப்பு!

விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நடராஜன் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

08:48 (IST)11 Feb 2021

தனிமையில் சசிகலா!

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்; ஒரு வாரம் தனிமையில் இருப்பார் என உறவினர்கள் தகவல்; வரும் 17ம் தேதி முதல் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளை சந்திக்கிறார். 

08:47 (IST)11 Feb 2021

பாஜகவின் தலைமை தேர்தல் அலுவலகம்!

சென்னை கோயம்பேட்டில் பாஜகவின் தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் எல்.முருகன் திறந்து வைத்தார் . ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

Tamil News : மக்களவையில் பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

நேற்றைய செய்திகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கொரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் இல்லை.

முகமது நபிகள் குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news live tn election admk edappadi sasikala ttv dhinakaran farmers protest modi speech tamil

Next Story
‘கட்சியில் இல்லாதவரைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்?’ சசிகலா பற்றிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில்karuppatti, panangkaruppatti, black sweet of palm in rations, cm edappadi k palaniswami, govt will consider karuppatti to distribute in rations, tamil nadu, nadar community, ரேஷனில் கருப்பட்டி வழங்க பரிசீலனை, முதல்வர் பழனிசாமி, நாடார் சமூக விழா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com