Tamilnadu news :துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதைப் பார்த்தால் அவரிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடப்பட்டுள்ளது. 2020-21ம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கொரோனாவை கண்டறிய தமிழகத்தின் புகழ்பெற்ற சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ₨89.96-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ₨82.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,
உத்தரகாண்ட் வெள்ளத்தில் 197 பேரை காணவில்லை, இதுவரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu news : டெல்லி குடியரசு தின வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
ஜன.3-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Web Title:Tamilnadu news live group1 exam date dmk mk stalin admk cm edappadi actor santhanam tamil
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அன்றாடம் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 46.17 அமெரிக்க டாலராகவும், 2019-2020 ஆம் நிதியாண்டில் அது 60.47 அமெரிக்க டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2015-16 ஆம் நிதி ஆண்டில் 202.85 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த கச்சா எண்ணையின் இறக்குமதி, 2019-20 ஆம் நிதியாண்டில் 226.95 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தது என பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது பாஜக எம்.பி மக்களவையில் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
“பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும்” பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்தார்.
அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, நான் எதையும் சந்திக்க தயார். நீதிமன்ற உத்தரவுப்படி தான் சசிகலா, இளவரசி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதில், அரசுக்கு எந்தவித சமந்தமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
துறைமுக அதிகாரங்கள் மசோதா, 2020 – இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வெற்றிகரமான சர்வதேச நடைமுறைகளின்படி மத்திய துறைமுகங்களின் நிர்வாக வழிமுறைகளை மாற்றியமைத்து, முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர இம்மசோதா உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
முகமது நபிகள் குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவினாசி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகின்றனர், ஒருபோதும் அவர்களை அதிமுகவில் இணைக்கமுடியாது.கட்சி ஒருபோதும் அவர்களுக்கு தலைவணங்காது. தினகரன் பின்னும் சூழ்ச்சிவலையில் தொண்டர்கள் சிக்கக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.
சசிகலா தனது வாகனத்தில் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக இந்த நடவடிக்கைகளை கைவிட்டு இப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிட்டு, தேர்வுகள் நேர்மையாக நடைபெற்று காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று தனது ட்விட்டர் குறிப்பில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை முழுக்க ஊழலுக்கான ஊற்றுக்கண்ணே.
கேள்வித்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது அனைத்தும் மாவட்ட அளவிலேயே நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது பெருந்தொகை கையூட்டு கொடுப்பவர்களுக்கு கேள்வித்தாளை அளிப்பது, தேர்வு செய்வது போல முறைகேடுகளுக்கு வழியாக அமையும்.
ரூ.60,000-க்கு மேல் ஊதியம் கிடைக்கும் இந்த பணிகள் ரூ.20-30 லட்சம் வரை விலை பேசப்படுவதாகவும், பணம் கொடுத்தால் தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற்றுத்தருவதாகவும் ஆங்காங்கே ஏலம் விடப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இளநிலை உதவியாளருக்கும் கீழ்நிலை பணிகளுக்கு - ஜீப்ஓட்டுநர், இரவு காவலர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் - பஞ்சாயத்து யூனியன் மட்டத்தில் நியமனம் செய்யும் ஏற்பாடுகள் இருந்தன.
கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தான் நியமனம் செய்யப்படும்.
இளநிலை உதவியாளர் பணி கிராம நிர்வாக அதிகாரிக்கு மேல் மூன்றாம் நிலை பதவியாகும். இது ஏன் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரையறைக்குள் உட்படுத்தவில்லை?
இன்னும் நான்கு நாட்களில் எழுத்துத் தேர்வு துவங்க உள்ள நிலையில் தேர்வு நடக்கவுள்ள முறை குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன.
தமிழக ஊரக வளர்ச்சித்துறையில், ஓவர்சீயர் & இளநிலை தொழில் அலுவலர் பணியில் முறைகேடு நடப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலக்ருஷ்ணன் தெரிவித்தார்.
தனது ட்விட்டரிர் குறிப்பில், "தமிழக ஊரக வளர்ச்சித்துறையில், ஓவர்சீயர் & இளநிலை தொழில் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்திக் கொள்ள சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மதுரை - ராமேஸ்வரம் இடையே இன்று இரவு 11:45 மணி (06090), நாளை காலை 6:45 மணி (06097) ஆகிய இரு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
மதுரையில் செல்லூர் குளத்தைப் பார்வையிட்டேன். ரூபாய் 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2019 அம் ஆண்டு குளத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. குளம் தூர்வாரப்படாததால் அதன் கொள்ளளவு அதிகரிக்கவில்லை. ஆகாய தாமரை மிகுந்துள்ள இந்த குளம் இந்த அரசின் மோசமான பணியைக் காட்டுகிறது என திமுக மகளிரணித் தலைவி மு.க கனிமொழி தெரிவித்தார்.
சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா - காமராசர் பெயர் நீக்கம் கண்டனத்திற்குரியது என ஆசிரியர் கே. வீரமணி தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், "சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது (1989)- முதலமைச்சர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனையத்திற்குக் காமராசர் பெயரும் சூட்டப்பட்டன. இப்பொழுது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இருபெரும் தலைவர்களின் பெயர்களும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வினைப் புண்படுத்தும் வேலையில் மத்திய பா.ஜ.க. ஆட்சி ஈடுபட்டு வருகிறது. உடனடியாக ஏற்கெனவே இருந்து வந்த அரும்பெரும் தலைவர்கள் அண்ணா, காமராசர் பெயர்கள் இடம்பெறவேண்டும். இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை மதிக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
களத்தில் ஒற்றுமையாக நின்று தீயசக்தி தி.மு.கவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல சிவராஜ் சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் இன்று காலமானார்.
மத்திய அரசு நிதியுதவி பெறும் MTech Biotechnology, M.Sc. Medical & Agricultural biotechnology போன்ற பட்ட மேற்படிப்புகளில் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி இளங்கோ வலியுறுத்தினார்.
தில்லி - ஹரியானா எல்லையில் திகிரி பார்டரில் விவசாயிகள் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் கலந்து கொண்டார்.
சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில், எட்டு இடங்களில் வலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும், 350 டன் அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றப்படுகின்றன. மழை வெள்ளம் காரணமாக, வலை அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது, மீண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அடையாறு ஆற்றிலும், மூன்று இடங்களில், வலைகள் அமைக்கப்பட உள்ளன என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக எம்பி பாலசுப்பிரமணியம் மத்திய அரசுக்கு கோரிக்கை
மத்தியில் ஆளும் பாஜக அரசு, "நாட்டை ஒரு சுடுகாடாக மாற்றியிருக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அது நடக்காது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
*கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 4-வது வாரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் அதிமுக விடுத்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இருக்குமிடத்தில் மின்விளக்கு பொருத்த வேண்டும் எனறும் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் ரயில் இனி திண்டுக்கலில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
₨29 லட்சம் நிதி மோசடி தொடர்பாக நடிகை சன்னி லியோனை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசாருக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட மலையாளத்திரைப்படம் 'ஜல்லிக்கட்டு' ஆஸ்கரில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என்றும், இந்த அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு வேலை, ஊதியத்தை தாண்டி அவர்களின் சுயமரியாதை உயரும் என்றும், கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பயண கட்டணங்களுக்கு நிலையான குறிப்பிட்ட தொகையை மட்டுமே விமான நிறுவனங்கள் வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்படும் என்று கொளத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு வேலை, ஊதியத்தை தாண்டி அவர்களின் சுயமரியாதை உயரும் எனவும் அறிவிப்பு
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வந்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், உமேஷ் சின்ஹா, சந்திர பூஷன் ஆகியோரும் உடன் வந்தனர். இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தமிழகத்தில் ஆய்வுசட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், ஆயத்த பணிகள் குறித்து இந்த குழு ஆலோசனை நடத்தவுள்ளது./
சென்னையில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக பிப்.14ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. 100 அவசர எண்ணுக்கு அழைத்த மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனை செய்து வெடிகுண்டு ஏதும் இல்லை என காவல்துறையினரிடம் உறுதி செய்துள்ளனர்.
சட்டப்பேரவைக்குள் திமுக எம்.எல்.ஏ.க்கள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `கடந்த 2017ம் ஆண்டு பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டொமினிக் குடியரசு மற்றும் பார்படாஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் இன்று சென்னையில் ஆய்வு நடத்துகின்றனர்.
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் பாஜகவில் நாளை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.