News Highlights: திமுகவுக்கு மறைமுகமாக உதவ டிடிவி தினகரன் முயற்சி- எடப்பாடி பழனிச்சாமி

Tamil News Today : ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் என ஐசிசி அறிவித்துள்ளது.

cm edappadi k palaniswami, no chance to sasikala join with aiadmk, vk sasikala, முதல்வர் பழனிசாமி, சசிகலா, சசிகலா அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு இல்லை, அதிமுக, cm palaniswami meets pm modi, cm edappadi k palaniswami journey to delhi, cm palaniswami meets amit shah, sasikala

Tamil News Today : திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும். சசிகலா, டிடிவி தினகரன் குறித்து மறைமுக விமர்சனம் செய்தார் முதல்வர் பழனிசாமி. .

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அவலநிலை குறித்து விவாதிக்க மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக, இந்திய கம்யூ., ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் இலக்கு செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு கட்சி கொடியுடன் கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என 7 பேரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Live Blog

Tamil Nadu News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.


21:41 (IST)09 Feb 2021

பிப். 15ம் தேதி நெய்வேலியில் விசிக ஆர்ப்பாட்டம்.

NLCநிறுவனத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எட்டுபேரும் தமிழரல்லாதோர் 1550 பேரும் தேர்வாகியுள்ளனர். எனவே, அத்தேர்வை ரத்துசெய்து தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் தேர்வுமுறையை வலியுறுத்தி பிப் 15அன்று நெய்வேலியில் தொல். திருமாவளவன்  தலைமையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

21:32 (IST)09 Feb 2021

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு – அமித் ஷா பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ” உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அதன் துணை ஆறு அலகண்டா ஆகியவற்றில் கடந்த 7-ம் தேதி காலை 10 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரிஷிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்து 13.2 மெகா திறன் கொண்ட நீர் மின்சக்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீர் மின் நிலையத்தையும், வெள்ளம் சேதப்படுத்தியது. இச்சம்பவத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. 197 பேரை காணவில்லை. இவர்களில் 139 பேர் என்டிபிசி மின் நிலைய கட்டுமான திட்டத்தில் ஈடுபட்டவர்கள். 46 பேர் ரிஷி கங்கா திட்ட பணியில் ஈடுபட்டவர்கள், 12 பேர் கிராம மக்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.  

20:31 (IST)09 Feb 2021

ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்

மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

20:27 (IST)09 Feb 2021

தி.மு.க.விற்கு மறைமுகமாக உதவ சிலர் முயற்சிக்கின்றனர் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வை கைப்பற்றி தி.மு.க.விற்கு மறைமுகமாக உதவ சிலர் முயற்சிக்கின்றனர்.  அதிமுக அதனை முறியடிக்கும். 10 ஆண்டுகள் உருப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுக கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். அவரை, நம்பி சென்றவர்கள் தற்போது நடுத்தெருவில் உள்ளனர் என்று முதல்வர் தனது தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.   

20:23 (IST)09 Feb 2021

கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் – துணை முதல்வர்

கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் “கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். “யாரும் யாருக்கும் அடிமை இல்லை” என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என்று துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.    

20:20 (IST)09 Feb 2021

கிருபானந்தவாரியார் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர்

கிருபானந்தவாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று  முதல்வர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார்.  

19:50 (IST)09 Feb 2021

தனிநபர் மசோதாவை ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புகள் 129 & 215 ஆகியவற்றில் செய்யவேண்டிய திருத்தங்களை முன்மொழிந்து தனிநபர் மசோதா ஒன்றை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.  

19:47 (IST)09 Feb 2021

தேர்தலை புறக்கணிக்க தயார் – புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவை மாநில அந்தஸ்து நிறைவேற்ற தேர்தலை புறக்கணிக்க தயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

19:36 (IST)09 Feb 2021

மதுரை மாநகரில் கனிமொழி தீவிர தேர்தல் பரப்புரை

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட, கே.புதூர் பேருந்து நிலையம் அருகில் தொழுவம் அமைப்போர், மேய்ப்பர் சங்கத்தினரை சந்தித்து  திமுக எம்.பி கனிமொழி உரையாடினார். 

 

19:29 (IST)09 Feb 2021

கடன் தள்ளுபடி சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் – முதல்வர்

கூட்டறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வரும் 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

19:14 (IST)09 Feb 2021

அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை

2019-ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  

19:11 (IST)09 Feb 2021

தமிழகத்தில் 24,56,291 பேர், ரூ.3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 24,56,291 பேர், ரூ.3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து ரூ.19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில்  பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.      

18:35 (IST)09 Feb 2021

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது.  tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  

18:34 (IST)09 Feb 2021

ரூ. 5.1 கோடி மதிப்புள்ள 44 kg ஹாஷிஷ் கைப்பற்றப்பட்டன.

சென்னை விமான சரக்கக சுங்கத்துறை: விமான சரக்கக ஏற்றுமதி தளத்தில் தோஹாவிற்கு (கத்தார்) டிஜிட்டல் எடை கருவியில் மறைத்து அனுப்பப்படவிருந்த ரூ. 5.1 கோடி மதிப்புள்ள 44 kg ஹாஷிஷ் & 700 gm மெத் படிகங்கள் NDPS சட்டப்படி கைப்பற்றப்பட்டன. ஏற்றுமதியாளர் & CHA அலுவலர் கைது.

18:32 (IST)09 Feb 2021

ஓராண்டில் மட்டும் 902 இடங்களை OBC , SC&ST மாணவர்கள் இழந்திருக்கிறார்கள் – சு. வெங்கடேசன் அறிக்கை

மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஓராண்டில் மட்டும் 902 இடங்களை OBC , SC&ST மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். இழந்ததே மொத்த இடங்களில் 13%. ஓராண்டில் இதுவெனில்,கடந்த காலங்களில் எவ்வளவு பறி போயிருக்கும்? என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். 

17:39 (IST)09 Feb 2021

நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்னை; நமக்கு எதிரி திமுகதான் – அமைச்சர் வேலுமணி

அமைச்சர் வேலுமணி: “நமக்குள் (அமமுக – அதிமுக இடையே) இருப்பது அண்ணன் தம்பி பிரச்னை; ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும்; நமக்கு எதிரி திமுகதான்” என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

17:34 (IST)09 Feb 2021

நாடு முழுவதும் இதுவரை 63.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 63.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2ம் கட்டம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பிப்ரவரி 13ம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:30 (IST)09 Feb 2021

மத்திய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்

மத்திய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் சீனாவைவிட இந்திய ராணுவமே அதிகம் அத்துமீறியதாக வி.கே.சிங் பேசியிருந்த நிலையில் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

17:26 (IST)09 Feb 2021

2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு – உள்துறை அமைச்சகம்

2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16:31 (IST)09 Feb 2021

ராகுல் காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரப் பயணம் தள்ளி வைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14, 15, 16 தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவருடைய தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

15:37 (IST)09 Feb 2021

விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் முடக்கப்படும் – ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை

விவசாய போராட்டத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் 1,178 கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு வலியுறுத்திய நிலையில், ட்விட்டர் நிர்வாகம், விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் நீக்கப்படும் என்று பதில் தெரிவித்துள்ளது.

15:28 (IST)09 Feb 2021

சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹூ பதில்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ: “சட்டப்பேரவை தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ளூர் விடுமுறை தேதி குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
 என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

15:23 (IST)09 Feb 2021

நீட் விடைத்தாள் முறைகேடு புகார்: சிறப்பு புலனாய்வு அமைக்கலாமா? ஐகோர்ட் கேள்வி

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? என்று மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

13:16 (IST)09 Feb 2021

குடிமராமத்து பணிகளின் நிலை – இணையதளத்தில் வெளியிட உத்தரவு

குடிமராமத்து பணிகளின் நிலை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக  தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

13:15 (IST)09 Feb 2021

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் கோரி  கலையரசன் குழு தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. 

13:13 (IST)09 Feb 2021

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் – சசிகலா

சென்னை திரும்பினார் சசிகலா  தமிழக மக்களின் அன்புக்கு நான் அடிமை…அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

13:13 (IST)09 Feb 2021

கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருங்கள் – முதல்வர் பழனிச்சாமி

*ராணிப்பேட்டையில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

13:11 (IST)09 Feb 2021

டெல்லி டிராக்டர் பேரணி – உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

12:05 (IST)09 Feb 2021

பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது – முதல்வர் அறிவிப்பு

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

12:04 (IST)09 Feb 2021

இளவரசி சுதாகரன் சொத்துக்கள தஞ்சசையில் பறிமுதல்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துகளை மாவட்ட நிர்வாகம்; பறிமுதல் செய்துள்ளது.

12:02 (IST)09 Feb 2021

அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

12:01 (IST)09 Feb 2021

ஹாட்ரிக் வெற்றி பெறுவது அதிமுகவின் கனவு – கனிமொழி

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என்று திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

12:00 (IST)09 Feb 2021

தமிழக அரசுக்கு உத்தரவு

சசிகலாவை வரவேற்க சென்னை ராமாவரம் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டதாக கூறி எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள்கள் தொடர்ந்த வழக்கில் பிப்.11-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

11:59 (IST)09 Feb 2021

சசிகலாவின் வருகை ஆளும் கட்சியினருக்கு பதற்றம் – முத்தரசன்

சசிகலாவின் வருகை ஆளும் கட்சியினருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி உறுதியாக உள்ளது  என தெரிவித்துள்ளார்.

11:10 (IST)09 Feb 2021

தங்க விலை உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் ரூ.4,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

11:09 (IST)09 Feb 2021

ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

11:08 (IST)09 Feb 2021

மத்திய அரசுக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியையும் கற்பிக்க உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். 

11:07 (IST)09 Feb 2021

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் OLX தளத்தில் பண மோசடி.! 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்-லைன் மோசடியில் சிக்கியுள்ளார். பிரபல ஆன்-லைன் விற்பனை தளத்தில், பயன்படுத்திய சோபாவை விற்பனை செய்வதாக ஹர்ஷிதாவிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யபட்டுள்ளது.

10:25 (IST)09 Feb 2021

மீண்டும் சமத்துவபுரங்கள்!

திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10:11 (IST)09 Feb 2021

சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் நிறுவனர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

09:53 (IST)09 Feb 2021

வன்முறையில் கைது!

டெல்லியில் கடந்த ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பின்போது விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த சம்பவத்தில், செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர்  இன்று கைது செய்தனர்.

09:38 (IST)09 Feb 2021

இன்று உச்சிமாநாடு !

பிரதமர் மோடி மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இடையே இன்று உச்சிமாநாடு அளவிலான பேச்சுவார்த்தை  நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையில் ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

09:37 (IST)09 Feb 2021

டிடிவி தினகரன் பேட்டி!

சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் விசாரித்தார். ச‌சிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் . சசிகலா, தேர்தலில் போட்டியிட சட்டவாய்ப்பு இருப்பதால், நிச்சயம் அவர் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

News Today : ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அதன் நஷ்டம் 10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

நேற்றைய செய்திகள்

மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பி ரவீந்தரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live sasikala chennai house ttv dhinakaran admk cm edappadi dmk tamil news

Next Story
அதிமுக சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளால் சிதைந்துவிடக் கூடாது – சசிகலா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com