/indian-express-tamil/media/media_files/Yhi5pFt2YqtmGmuO6oFg.jpg)
Tamil News Live Updates: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 84 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 305 மில்லியன் கன அடியாக உள்ளது.
-
Aug 20, 2024 22:14 IST
பொன்னேரி அருகே ஓம்ரான் நிறுவன தொழிற்சாலையை திறந்து வைக்கும் ஸ்டாலின்
பொன்னேரி அருகே ஓம்ரான் நிறுவனம் அமைத்துள்ள மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 21) தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரின் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஓராண்டு காலத்தில் ஆலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது
-
Aug 20, 2024 22:13 IST
கும்பகோணம் பாபநாசம் அருகே ரயில் சேவை பாதிப்பு
கும்பகோணம் பாபநாசம் அருகே ரயில்வே லெவல் கிராசிங்கில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி, ரயில் மின்சார கம்பியில் உரசியதால் கம்பி அறுந்தது. ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், பாபநாசம் மற்றும் பண்டாரவாடையில் ரயில்கள் நிறுத்தம்
-
Aug 20, 2024 22:12 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்கறிஞருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ண ன் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு எதிராக சென்னை காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 20, 2024 22:04 IST
மதுரையில் வரும் 24-ந் தேதி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு
மதுரையில் வரும் 24-ந் தேதி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட சார்பில், நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டம், பள்ளி கல்வித்துறையுடன், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைக்கும் முடிவை கைவிட தி.மு.க அரசை கண்டித்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 20, 2024 21:57 IST
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
"பல சிறந்த கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் அவை பட்டதாரிகளை உருவாக்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் கல்வி கற்கும் திறனும், வேலை வாய்ப்புக்காக தேவைப்படும் திறனுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
-
Aug 20, 2024 20:25 IST
ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்
ஷீரடியில் இருந்து மும்பை சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால், பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து ரயிலில் பயணித்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனை ஐஆர்சிடிசி மேலாளர்கள் ஒப்புக்கொண்ட நிலையில், அதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது
-
Aug 20, 2024 20:22 IST
சுற்றுலா பயணிகளை மிரட்டிய கரடி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அக்கல் கிராமத்தில் சாலையில் உலாவிய கரடியை வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள் கரடி ஆக்ரோஷத்துடன் எழுந்து நின்று அவர்களை மிரட்டியதால் அச்சமடைந்து கார் கண்ணாடியை அடைத்துக்கொண்ட பயணிகள் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
-
Aug 20, 2024 19:34 IST
ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து: கேரளா முதல்வர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவு சம்பவம் காரணமாக கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
-
Aug 20, 2024 19:32 IST
உலகின் முதிய பெண்மணி 117 வயதில் காலமானார்
உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரா தனது 117 வயதில் காலமானார். அமெரிக்காவில்ம் ஆண்டு பிறந்த மரியா இந்த நூற்றாண்டின் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தைக் கடந்தவர்; மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ஃப்ளூ உள்ளிட்டவற்றையும் தனது காலத்தில் பார்த்தவர் கடந்த 2 தசாப்தங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்தவர் 2023இல் கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டார்
-
Aug 20, 2024 19:26 IST
உண்மையாக சமூகநீதியை காப்பது பிரதமர் மோடி தான்: எல்.முருகன்
உண்மையாக சமூகநீதியை காப்பது பிரதமர் மோடி தான். ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியவர் மோடி. அம்பேத்கர் வாழ்ந்த இடங்களை அர்ப்பணித்தார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் முதல்வர் ஸ்டாலின் முதலில் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
-
Aug 20, 2024 18:38 IST
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்ட பஞ்சாப் தொழிலாளி கீழே விழுந்து பலி
சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளி, பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். பஞ்சாபைச் சேர்ந்த தேவேந்திர சிங் (27) என்பவர் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது, 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
Aug 20, 2024 18:29 IST
உயர்பதவிகளில் நேரடி நியமன முறையை திரும்ப பெற்றது மத்திய அரசு; சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின்
“உயர்பதவிகளில் நேரடி நியமன முறையைத் திரும்ப பெற்றது மத்திய அரசு; சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். “50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகநீதியை நிலைநாட்டுவோம்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Aug 20, 2024 18:04 IST
ஆட்டு தலையில் அண்ணாமலை படம் - ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்
அண்ணாமலை படத்துடன் ஆட்டை பலியிட்ட விவகாரத்தில் காவேரிபட்டினம் காவல்நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஆடு தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மோகன் தாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தரப்பில் ஐகோர்ட்டில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
Aug 20, 2024 17:57 IST
அண்ணாமலையின் அறிவுரை தேவையில்லை - அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்: “எம்.ஜி.ஆர். புகழை நிலைநிறுத்துவது பற்றி அண்ணாமலை அறிவுரை கூறத் தேவையில்லை. 32 மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்ராண்டு விழாவை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நாணயத்தில் இந்தி இருக்கிறதே என்று எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வி தேசவிரோதக் குற்றமல்ல. தி.மு.க-வின் இரட்டை வேடத்தை நாணயம் வெளியீட்டு விழா வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது” என்று கூறியுள்ளார்.
-
Aug 20, 2024 17:18 IST
கிருஷ்ணகிரியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை: முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கைதாகி உள்ள நபர்கள் வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக முகாம்களை நடத்தி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் விசாரணை விரிவுபடுத்தப்படும் என்றும் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Aug 20, 2024 17:00 IST
தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? - ஐகோர்ட் கேள்வி
தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
-
Aug 20, 2024 16:36 IST
டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. "கோர்ட்" என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதிகாரிகள் சோதனையிட்டதில் இதுவரை எந்த ஒரு மர்ம பொருளும் சிக்கவில்லை
-
Aug 20, 2024 16:09 IST
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீட்டுக்கு பாதுகாப்பு வாபஸ்
முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தே.மு.தி.க பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வீடுகளில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் துப்பாக்கி ஏந்திய நிலையில் 5 காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது
-
Aug 20, 2024 15:58 IST
த.வெ.க கட்சி கொடியேற்ற அனுமதி கேட்டு போலீசாருக்கு கடிதம்
நாளை மறுநாள் 5,000 பேருக்கு மத்தியில் கட்சி கொடி ஏற்றும் விழாவுக்கு அனுமதி கேட்டு போலீசாருக்கு, த.வெ.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கொடி ஏற்றியவுடன் பனையூரில் உள்ள தவெக அலுவலகம் முன்பு தொண்டர்கள் மத்தியில் விஜய் முதல் அரசியல் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. 5 ஆயிரம் பேர் மத்தியில் கொடியேற்று விழா நடத்த விஜய் தரப்பிற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
-
Aug 20, 2024 15:29 IST
த.வெ.க கட்சிக் கொடி - விஜய் மாஸ்டர் ப்ளான்
அடுத்த மாதம் 'தி கோட்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். தியேட்டருக்கு வரும் சுமார் ஐம்பது லட்சம் மக்களிடம் கட்சி கொடியை கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
-
Aug 20, 2024 15:17 IST
மகாராஷ்டிராவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ரயிலை மறித்து போராட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 வயது சிறுமிகள் 2 பேருக்கு தூய்மை பணியாளர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் காவல்துறை தடியடி நடத்தியது. கோபத்தில் காவலர்கள் மீது கற்களை வீசி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். பாலியல் தொல்லை அளித்த தூய்மை பணியாளரை காவல்துறை கைது நிலையில், மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
-
Aug 20, 2024 14:37 IST
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
-
Aug 20, 2024 14:06 IST
29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்ளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 20, 2024 14:05 IST
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 20, 2024 13:28 IST
மத்திய அரசு பதவிகளில் நேரடி நியமனம்
மத்திய அரசு பதவிகளில் நேரடி நியமனத்துக்கான முறையையை நிறுத்தி வைக்க கோரி யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம்
-
Aug 20, 2024 13:27 IST
ராகுல் காஷ்மீருக்கு பயணம்
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்.தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை (ஆக.21) மற்றும் நாளை மறுநாள் (ஆக.22) ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு செல்கின்றனர்.
-
Aug 20, 2024 12:46 IST
இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை
இயக்குநர் நெல்சன் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷாவிடம் போலீஸ் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் குறித்து மோனிஷாவிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இயக்குநர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை
-
Aug 20, 2024 12:07 IST
சென்னை வந்த மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு
ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், சென்னை வந்த இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு
-
Aug 20, 2024 12:07 IST
சிவராமனுக்கு நீதிமன்ற காவல்
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு நீதிமன்ற காவல்.
செப்டம்பர் 2ஆம் தேதி வரை சிவராமனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.
நீதிபதி உத்தரவை தொடர்ந்து சிவராமனை சிறையில் அடைத்த போலீஸ்
-
Aug 20, 2024 12:05 IST
தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலி, தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும்
அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது
மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலம், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலம் பயிற்சிகள் வழங்க வேண்டும்
-
Aug 20, 2024 11:51 IST
ஸ்டாலினின் முதல் தனிச் செயலாளர் உமாநாத்
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்
2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம்
முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றார்
-
Aug 20, 2024 11:39 IST
பாடகி பி.சுசீலா வீடு திரும்பினார்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி பி.சுசீலா வீடு திரும்பினார்
-
Aug 20, 2024 11:17 IST
லேட்டரல் என்ட்ரி: ஸ்டாலின் கண்டனம்
லேட்டரல் என்ட்ரி - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதலாகும்
தகுதிவாய்ந்த SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அதிகாரிகளின் மேல்மட்டத்தில் தகுதியான வாய்ப்புகளைப் பறிக்கிறது
மத்திய அரசு இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும்
ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டிகளுக்கான பின்னடைவு - காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
-
Aug 20, 2024 10:56 IST
பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கருவூலக் கணக்குத்துறைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும், பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Aug 20, 2024 10:55 IST
டெல்லியில் கடும் மழை : சாலை முழுவதும் தேங்கிய நீர்
தலைநகர் டெல்லியில் நேற்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது நகரின் பல பகுதிகள் மழை நீரால் பாதிக்கப்பட்டள்ள நிலையில், மிண்டோ சாலையானது மழை நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், அப்பகுதி வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்
-
Aug 20, 2024 10:20 IST
தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது?
தி.மு.க - பா.ஜ.க திடீர் பாச உறவு காட்டிக்கொள்வதில் என்ன மர்மம் உள்ளது?" "தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் பாஜகவோடு இணக்கம் காட்டும் முதல்வர் ஸ்டாலின்" "பாஜக - திமுக இடையேயான உறவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" அண்ணாமலைக்கு இன்னும் அரசியல் அனுபவம் தேவை அரசியல் அனுபவமும் புரிதலும் இல்லாத தலைவராக அண்ணாமலை உள்ளார் அண்ணாமலைக்கு தமிழகத்தின் நிலவரமும், கலவரமும் தெரியவில்லை திமுக - பா.ஜ.க உடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றாதீர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
-
Aug 20, 2024 10:19 IST
தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6660-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கும் விற்பனை.
-
Aug 20, 2024 09:48 IST
காஷ்மீர் : நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்
-
Aug 20, 2024 09:14 IST
ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை.
-
Aug 20, 2024 09:01 IST
கொட்டிய கனமழை மின்னல் தாக்கி, தாய் கண்முன்னே இளைஞர் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டிய கனமழை மின்னல் தாக்கி, தாய் கண்முன்னே இளைஞர் உயிரிழப்பு.
-
Aug 20, 2024 09:00 IST
பாடகி பி.சுசீலா வீடு திரும்பினார்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி பி.சுசீலா வீடு திரும்பினார்.
-
Aug 20, 2024 07:56 IST
பெண் மருத்துவர் கொலை - இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் தொடரும் போராட்டம். தாமாக முன்வந்து வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு.
-
Aug 20, 2024 07:53 IST
ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைன் செல்லலும் முதல் இந்தியா பிரதமர்
30 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைன் செல்லலும் முதல் இந்தியா பிரதமர் . 'போரை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க இந்தியா எப்போதும் பரிந்துரைக்கிறது'- வெளியுறவுத்துறை அமைச்சகம்.
-
Aug 20, 2024 07:51 IST
பா.ஜ.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பா.ஜ.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு .நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, சுற்றி வளைத்து, சரமாரியாக வெட்டிய 8 பேர் கொண்ட கும்பல்.
-
Aug 20, 2024 07:51 IST
நிலம் கையகப்படுத்துவதில் துரிதமாக செயல்பட்டால், ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்
தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் துரிதமாக செயல்பட்டால், ரயில்வே திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.