Tamil News Updates: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Read in english : Kolkata doctor rape-murder case live updates
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5ஏரிகளில் 36.62% நீர் இருப்பு உள்ளது.செம்பரம்பாக்கம் - 37.26%, புழல் - 74.76%, பூண்டி - 3.03%, சோழவரம் - 7.21%, கண்ணன்கோட்டை - 60.8%
-
Aug 23, 2024 21:37 ISTபிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் மதித்ததே இல்லை: உக்ரைன் அதிபர்
பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் எப்போதும் மதித்ததே இல்லை. அதனால் தான், அவரை சந்திக்க மோடி மாஸ்கோ சென்றிருந்தபோது, உக்ரைன் மருத்துமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என்று உக்ரைன் அதிகர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
Aug 23, 2024 21:29 ISTஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த 11 பேர் மற்றும் ஒரு விசைப்படகு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்
-
Aug 23, 2024 21:26 ISTஇரு மாணவர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் பலி
நாமக்கல், எருமபட்டி அருகே அரசு பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் (16) என்ற மாணவன் உயிரிழப்பு
-
Aug 23, 2024 20:07 ISTவட மாநில வாலிபர்கள் 3 பேர் மீது தாக்குதல்: சென்னையில் பரபரப்பு
சென்னை ஆவடி பகுதியில் வடமாநில சிறுவர்கள் மீது கும்பல் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயல் பகுதியில் ராஜம்மாள் நகரில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் சுவர் ஏறிக்குதித்துச் செல்ல முயன்றதாக, வட மாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களை அப்பகுதியினர் பிடித்து தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களை மீட்டு அழைத்துச் சென்று விசாரணை
-
Aug 23, 2024 19:27 ISTவிஷ சாராய வழக்கு - 4 பேர் மீது குண்டாஸ்
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்
-
Aug 23, 2024 19:04 ISTபெண் காவலர்களுக்கு புதிய சலுகை; ஸ்டாலின் அறிவிப்பு
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, பெற்றோர், அல்லது கணவர் உள்ள இடங்களில் 3 ஆண்டுகள் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
-
Aug 23, 2024 19:03 ISTநாகையில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
-
Aug 23, 2024 18:09 ISTசென்னையில் 14 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
சென்னை காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 12 காவல் ஆய்வாளர்கள் உள்பட 14 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்
-
Aug 23, 2024 17:51 ISTமேகதாது அணை; கர்நாடகா அரசு மீண்டும் விண்ணப்பம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி கர்நாடக அரசு மீண்டும் விண்ணப்பம் அளித்துள்ளது
-
Aug 23, 2024 17:49 ISTகிருஷ்ணகிரி அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 3 பேர் மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
-
Aug 23, 2024 16:56 ISTயானையை கட்சிக் கொடியில் வைக்க விஜய்க்கு உரிமை இல்லையா? சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “யானையைக் கட்சிக் கொடியில் வைக்க நடிகர் விஜய்க்கு உரிமை இல்லையா? யானை எந்த தனிக்கட்சி கட்சிக்கும் சொந்தமா?” என்று சீமான் பரபரப்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Aug 23, 2024 16:33 ISTகிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் சிவராமன் குற்ற உணர்வில் தற்கொலை - சீமான்
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், “கிருஷ்ணகிரி சம்பவத்தில் சிவராமன் குற்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி சம்பவம் போல் இனி தொடர கூடாது” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
Aug 23, 2024 16:21 ISTகிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் - அண்ணாமலை
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 23, 2024 16:17 ISTகள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கவில்லை அரசு - பி.சி, எம்.பி.சி நலத்துறை விளக்கம்
"கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை” என்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
Aug 23, 2024 16:13 ISTகிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை - சீமான்
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
Aug 23, 2024 15:35 ISTகிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது - இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேலும், அவரது தந்தை திரு. அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.
போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது ? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா ? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் விடியா திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 23, 2024 15:29 ISTஅரசுமுறை பயணமாக உக்ரைன் சென்றார் மோடி
போலாந்தில் இருந்து ரயில் மூலமாக உக்ரைனில் உள்ள கீவ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். கீவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
-
Aug 23, 2024 15:00 ISTதடை நீக்கம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கவி அருவியில் நீர்வரத்து சீரானதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கவியருவியில் காட்டாற்று வெள்ளம் வந்ததைடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது
-
Aug 23, 2024 14:48 ISTகணினி வெடித்து விபத்து: 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல்
தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்துக்குள்ளானதில் கரும்புகை வெளியேறியதால் ஆய்வகத்தில்
இருந்த 19 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. -
Aug 23, 2024 14:23 ISTவெறிநாய் கடித்து 3 பேர் சிகிச்சைக்காக அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வெறிநாய் கடித்து 11ம் வகுப்பு பள்ளி மாணவன் உட்பட 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல இடங்களில் இது போன்ற வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Aug 23, 2024 14:05 ISTசிவராமனின் தந்தை மரணம்: சிசிடிவி காட்சி வெளியீடு
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சிவராமனின் தந்தை அசோக் குமார், நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
-
Aug 23, 2024 13:56 ISTசெந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் போது, செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரி காரசார விவாதம் நடந்து வருகிறது.
-
Aug 23, 2024 13:00 ISTசிவராமன் மரணம் - காவல்துறை விளக்கம்
பாலியல் புகார் கைதி சிவராமன் மரணம் குறித்து கிருஷ்ணகிரி காவல்துறை விளக்கம்
2-வது முறையாக எலி மருந்து சாப்பிட்டு சிவராமன் தற்கொலை முயற்சி. போலீஸ் கைது செய்வதற்கு முன்பே சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி. குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஜூலை 9-ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். - காவல்துறை விளக்கம்
-
Aug 23, 2024 12:55 ISTகிலோ கணக்கில் தங்க அணிந்து வந்த பக்தர்கள்
கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள்
3 பேரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை பார்த்து அசந்த பிற பக்தர்கள். ஒவ்வொரு நகையும் வடம் போல் இருந்ததால் கவனம் பெற்ற புனே பக்தர்கள்
-
Aug 23, 2024 12:31 IST3 காவலர்கள் உள்பட 6 பேர் கைது
கைது செய்யப்பட்ட 3 பேரும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்
சம்பந்தப்பட்ட இளைஞர் இணைய வழியில் பாலியல் தொழில் செய்வதை அறிந்து அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் சோமசுந்தரம் , கோபால்ராஜ், நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர் லட்சுமணன் ஆகிய 3 பேர் கைது
மூன்று காவலர்களும் தங்கள் நண்பர்கள் ஜெயராம், ஹரீஸ், அருண்குமார் ஆகிய 3 பேருடன் சேர்ந்த கடத்தலில் ஈடுபட்டதாக தகவல்
வீட்டில் இருந்த இளைஞரை 6 பேர் இழுத்து சென்றதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை
சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கடத்தப்பட்ட இளைஞரை மீட்ட காவல்துறை
-
Aug 23, 2024 11:52 ISTபழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் நாளை 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' தொடங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
Aug 23, 2024 11:49 ISTவனத்துறை வசம் செல்லும் பழைய குற்றாலம்?
வனத்துறை வசம் செல்லும் பழைய குற்றாலம்? பழைய குற்றால அருவி வரும் 29ஆம் தேதி முதல் வனத்துறை வசம் செல்வதாக தகவல்
-
Aug 23, 2024 11:30 ISTஉக்ரைன் சென்றார் மோடி
உக்ரைன் சென்றார் மோடி- கீவ் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரயில் மூலம் உக்ரைன் வந்தார் பிரதமர் மோடி
கீவ் ரயில் நிலையம் வந்த மோடிக்கு உக்ரைன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
-
Aug 23, 2024 11:24 ISTநகை மோசடி: வங்கியில் விசாரணை
சவரன் நகை மோசடி - திருப்பூர் வங்கியில் விசாரணை
கேரளா மாநிலம் கண்ணூர் நகை மோசடி தொடர்பாக திருப்பூர் வங்கியில் போலீஸ் விசாரணை
-
Aug 23, 2024 10:39 ISTகொல்கத்தா மருத்துவர் மரணம்: 15வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள்
கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து 15வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்வெள்ளிக்கிழமை அரசு நடத்தும் மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பணியை மீண்டும் தொடங்குமாறு உச்ச நீதிமன்றத்தின் வேண்டுகோளை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.
-
Aug 23, 2024 10:36 ISTதங்கத்தின் விலை குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை தங்கம் சவரனுக்கு ரூ.160 சரிவு
-
Aug 23, 2024 10:20 ISTவிஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.
-
Aug 23, 2024 10:03 IST37 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி
37 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
Aug 23, 2024 09:28 ISTவிவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்
குமரி கடலில் நீர் மட்டம் தாழ்வு காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம். இன்று காலை 12.00 மணிக்கு பிறகு கடலின் தன்மையைப் பொறுத்து சுற்றுலா படகு சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவிப்பு!
-
Aug 23, 2024 08:28 ISTஆம்ஸ்ட்ராங் கொலை : மேலும் ஒருவர் கைது
துபாயில் இருந்து அதிகாலையில் சென்னை வந்தவரை, விமான நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது. செய்தனர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 27 பேர் கைதாகி உள்ளனர் திருவேங்கடத்துடன் சேர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Aug 23, 2024 08:17 ISTபிரதமர் மோடி உக்ரைன் பயணம்
போலந்து பயணத்தை முடித்து உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றார், பிரதமர் மோடி கீவ் நகரில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
Aug 23, 2024 08:17 ISTபாலியல் வன்கொடுமை : சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு
காவேரிபட்டினம் அருகே கீழே விழுந்து தலையில் காயம்பட்டு அசோக் குமார் உயிரிழந்தார். தனியார் திருமண மண்டபம் அருகில் நேற்று நள்ளிரவு மரணமடைந்ததாக தகவல் சிவராமனின் தந்தை அசோக்குமார் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட தகவல்.
-
Aug 23, 2024 07:49 ISTகருக்கலைப்பு முயற்சி : பெண் செவிலியர் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு முயற்சி கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் செவிலியர் கைது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி இரவிலும் அதிரடி மருத்துவர்களே கருக்கலைப்பு செய்ய அஞ்சும் போது செவிலியரான உனக்கு என்ன தெரியும் - இயக்குனர் சாந்தி சரமாரி கேள்வி.
-
Aug 23, 2024 07:44 ISTநீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்
ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலமாக 2வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற 4வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
-
Aug 23, 2024 07:42 ISTகிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சிவராமன் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி கேம்ப் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழப்பு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.