Advertisment

Tamil News Today: தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்

அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN CM MK Stalin attacks on BJP and full statement in tamil

Tamil News Live updates : பெட்ரோல், டீசல் விலை : சென்னையில் 613-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது

மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 26, 2024 22:51 IST
    இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்தார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

    "இந்தியா கூட்டணியை அமைத்தார்கள் இந்தியாவில் ஆட்சியை பிடித்தார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும்..!" விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • Jan 26, 2024 22:49 IST
    பாவதாரிணியின் உடலுக்கு பண்ணைபுரத்தில் நாளை இறுதி சடங்குகள்

    சென்னை தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பவதாரிணியின் உடல், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பாவதாரிணியின் உடலுக்கு பண்ணைபுரத்தில் நாளை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன



  • Jan 26, 2024 22:44 IST
    அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோபம் வரும் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோபம் வரும். இப்போ சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.



  • Jan 26, 2024 21:29 IST
    பட்டியலின மக்களின் நலனை பாதுகாக்கும் அரசு திராவிட மாடல் அரசு : முதல்வர் ஸ்டாலின்

    பட்டியலின மக்களின் நலனை பாதுகாக்கும் அரசு திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளோம். சமூக நீதி, சமூக சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுவதும் அமைக்கவே இந்த மாநாடு. இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றும் கடமை நமக்கு உள்ளது மத்திய அரசும், மாநில அரசும் சரி நிகரானவை என முதல்வர் ஸ்டாலின்



  • Jan 26, 2024 21:27 IST
    பவதாரிணி உடலுக்கு உதயநிதி அஞ்சலி

    சென்னை, தி.நகரில் இளையராஜா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பவதாரிணி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி



  • Jan 26, 2024 20:34 IST
    மாணவர் திமுகவில் பணியாற்றிய திருமாவளவன் : நினைவுகளை பகிர்ந்த முதல்வர்

    திருமாவளவன் சட்டக்கல்லூரி மாணவராக மாணவர் திமுகவில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு கொள்கை கர்ஜனையாக இருக்கும். அன்று கழகத்திற்குள் முழங்கினார் இன்று கழகத்தின் கூட்டணிக்குள் இருந்து முழங்குகிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jan 26, 2024 20:00 IST
    பாடகி பவதாரிணியின் மறைவு பேரிழப்பு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    மறைந்த பாடகி பவதாரணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "நான் ஒரு இசைப்பிரியன்.. அந்த வகையில் பாடகி பவதாரிணியின் மறைவு பேரிழப்பாகும்" என தெரிவித்துள்ளார்.



  • Jan 26, 2024 19:59 IST
    விஜயகாந்த் இல்லத்தில் நடிகர் சிலம்பரசன்

    மறைந்த கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் மரியாதை!



  • Jan 26, 2024 19:58 IST
    மறைந்த பாடகி பவதாரிணி உடலுக்கு பாக்யராஜ் அஞ்சலி

    மறைந்த பாடகி பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய, நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் "சின்ன வயதிலேயே பவதாரிணி போன்றவர்களை கடவுள் கூட்டிக் கொள்வது கஷ்டமாக உள்ளது" என கூறியுள்ளார்.



  • Jan 26, 2024 19:26 IST
    தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு; பவதாரணி மறைவு குறித்து ராமராஜன்


    பாடகி பவதாரணியின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு என நடிகர் ராமராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Jan 26, 2024 19:11 IST
    பவதாரணி உடலுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் அஞ்சலி

     

    நாங்க ஒரு குடும்பம் மாதிரி இருந்திருக்கோம்; அவங்க சத்தம் போட்டுக்கூட பேசுனது இல்ல என பவதாரணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.



  • Jan 26, 2024 18:28 IST
    “ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்” - விசிக மாநாட்டில் தீர்மானம்


    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டும் என விசிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
     



  • Jan 26, 2024 17:32 IST
    இளையராஜா இல்லத்தில் பவதாரணி உடல்

    தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது பாடகி பவதாரிணியின் உடல். இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். 



  • Jan 26, 2024 16:39 IST
    பவதாரிணியின் மறைவுவுக்கு ரஜினி வருத்தம் 

    "பவதாரிணியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இளையராஜாவிடம் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

     



  • Jan 26, 2024 16:08 IST
    தங்கையின் உடலுக்காக காத்திருந்த அண்ணன்கள் 

    மறைத்த பாடகி பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அவரது சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.



  • Jan 26, 2024 16:05 IST
    சென்னை கொண்டு வரப்பட்டது பவதாரிணி உடல்

    மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. 

    விமான நிலைய நடைமுறைகள் முடிந்த பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பவதாரிணியின் உடலை பெற்றுக் கொள்ள அவரது மூத்த சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் சுப்பு பஞ்சு சென்னை விமான நிலையம் வருகை தந்துள்ளார். தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது

     



  • Jan 26, 2024 15:12 IST
    பாடகி பவதாரிணி மறைவு - சென்னை புறப்பட்ட உடல் 

    மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. 

    தற்போது அவரது உடல் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 3.30 மணியளவில் விமானம் தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jan 26, 2024 15:08 IST
    கங்குவா படத்தின் புதிய அப்டேட் 

    நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 



  • Jan 26, 2024 14:44 IST
    விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது: பிரேமலதா கருத்து 

    மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 

    "விஜயகாந்த் இருந்தபோது கொடுத்திருக்க வேண்டும். அவர் உயிரோடு இருந்தபோதே விருது கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக பெற்றிருப்போம். விஜயகாந்த் அமரர் ஆகி 30 நாட்கள் ஆகும் நிலையில், இத்தகைய சிறப்பு கிடைத்துள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

     



  • Jan 26, 2024 14:41 IST
    நைட்ரஜன் ஹைபோக்ஸியா கேஸ் மூலம் மரண தண்டனை 

    அமெரிக்காவை சேர்ந்த கென்னத் யூஜின் ஸ்மித் என்ற குற்றவாளிக்கு நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்ற முறை மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 



  • Jan 26, 2024 14:37 IST
    ஊடகவியலாளர் முகமது ஜூபேருக்கு பதக்கம் வழங்கிய முதல்வர் 

    சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை’ ஊடகவியலாளர் முகமது ஜூபேருக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "தமிழ்நாடு அரசிடம் இருந்து அங்கீகாரம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ஊடகவியலாளர் முகமது ஜூபேர் கூறியுள்ளார். 



  • Jan 26, 2024 13:21 IST
    பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு



  • Jan 26, 2024 13:20 IST
    அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு

    அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து, பல்வேறு தரவுகளை பெற்று ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது - எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்



  • Jan 26, 2024 13:00 IST
    பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து சென்னை எடுத்து வரப்படுகிறது: விமான நிலையம் புறப்பட்டார் யுவன் சங்கர் ராஜா

    சென்னை எடுத்து வரப்படும் பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து சென்னை எடுத்து வரப்படுகிறது பாடகி பவதாரிணியின் உடல் சகோதரியின் உடலை பார்வையிட்டு, விமான நிலையம் புறப்பட்டார் யுவன் சங்கர் ராஜா



  • Jan 26, 2024 12:43 IST
    தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

    தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி



  • Jan 26, 2024 12:12 IST
    சமக வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் சுந்தரேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

    75வது குடியரசு தினத்தை முன்னிட்டு சமக வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் சுந்தரேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்



  • Jan 26, 2024 12:00 IST
    கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்

    கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் .கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Image



  • Jan 26, 2024 11:28 IST
    தேசியக் கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

    தேசியக் கொடி ஏற்றிய குடியரசுத் தலைவர் தேசியக் கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு



  • Jan 26, 2024 10:41 IST
    இன்று மதியம் 3.30 சென்னைக்கு கொண்டுவரப்படும் பவதாரணியின் உடல்

    மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று பகல் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது தியாகராயர் நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரிணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.



  • Jan 26, 2024 10:34 IST
    பவதாரணியின் உடல்: இலங்கையில் இருந்து இன்று பகல் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது

    மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று பகல் 3.30 மணி அளவில் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது தியாகராயர் நகர் முருகேசன் சாலையில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பவதாரிணியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.



  • Jan 26, 2024 10:33 IST
    டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மெரியாதை

    குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. 



  • Jan 26, 2024 09:27 IST
    பின்னணி பாடகி பவதாரணி மறைவுக்கு நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல்

    மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.



  • Jan 26, 2024 09:25 IST
    அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

    குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு; பார்த்து ரசித்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர். 



  • Jan 26, 2024 09:14 IST
    விருதுகளை வழங்கிய ஸ்டாலின்

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு, நெல் உற்பத்தி திறனுக்கான விருது. மதுரையை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாவிற்கு முதலமைச்சரின் சிறப்பு விருது. யாசர் அராஃபத், டேனியல் செல்வ சிங் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம். | கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை பெற்றார் ஊடகவியலாளர் முகமது ஜூபேர்.



  • Jan 26, 2024 08:19 IST
    மெரினா கடற்கரை குடியரசு தின விழா அணிவகுப்பு தொடங்கியது

    சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு தொடங்கியது



  • Jan 26, 2024 08:06 IST
    குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியினை ஏற்றினார் ஆளுநர் ரவி

    75வது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் தேசிய கொடியினை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி. 



  • Jan 26, 2024 08:04 IST
    தேசிய கொடியை ஏற்றி வைக்க ஆளுநர் வருகை

    75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி. வருகை



  • Jan 26, 2024 08:02 IST
    சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன்

    நடிகர் சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன்.  நடிகை வைஜெயந்திமாலாவுக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு



  • Jan 26, 2024 08:01 IST
    விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது

    மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது ஒன்றிய அரசு



  • Jan 26, 2024 08:00 IST
    கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல்

    வீட்டு வேலைக்குச் சென்ற இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மர்லினாவுக்கு பிப்ரவரி 9ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி டி.வி. ஆனந்த் உத்தரவு.



  • Jan 26, 2024 07:58 IST
    ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிடுகிறார்

    டெல்லியில் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிடுகிறார்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment