Tamil News Today: பாரிஸ் ஒலிம்பிக் : வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

Tamil News Live Updates-08-08-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Live Updates-08-08-2024: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 143-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் 
புழல் ஏரிக்கு நீர்வரத்து 178 கன அடியாக அதிகரிப்பு. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2500 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 99 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் திறப்பு. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 308 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக சரிவு.

  • Aug 08, 2024 23:37 IST

    நிலகிரி மலை ரயில் 7 நாட்களுக்கு ரத்து: சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு!

    கல்லாறு முதல் ஹெல்குரோவ் வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை முதல் (ஆகஸ்ட் 9) 7 நாட்களுக்கு நீலகிரி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Aug 08, 2024 23:34 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறையில் உள்ளவரை கைது செய்ய ஆணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனின் பெயரும் குற்ற எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்கான ஆணையை செம்பியம் போலீசார் சிறை நிர்வாகத்திடம் வழங்க உள்ளனர்



  • Advertisment
    Advertisements
  • Aug 08, 2024 23:32 IST

    சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து ஸ்ரீஜேஷ் ஓய்வு

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்ற நிலையில் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அறிவித்துள்ளார். 



  • Aug 08, 2024 20:44 IST

    "தலைமுறைகள் போற்றப்படும் சாதனை" - மோடி பெருமிதம் 

    " ஒலிம்பிக் வெண்கலம் - தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை" என பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் "மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டிய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள்" என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Aug 08, 2024 20:04 IST

    கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு 

    பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதுடன் ஹாக்கியில் இருந்து இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெறுகிறார். 



  • Aug 08, 2024 20:03 IST

    ஹாக்கி - வெண்கலத்தை கைப்பற்றியது இந்தியா

    பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா அணி. 2-1 கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி  பெற்றது. 



  • Aug 08, 2024 18:50 IST

    மீனவர் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை உள்ளதா - மக்களவையில் துரை வைகோ கேள்வி

    மக்களவையில் பேசிய ம.தி.மு.க எம்.பி துரை வைகோ: “தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா, மீனவர் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை உள்ளதா, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதவாறு 2024 -ல் மீனவர்கள் மீது அதிகமான தாக்குதல் நடந்துள்ளது; தமிழக மீன்வர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Aug 08, 2024 18:03 IST

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

    புத்தாளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர், தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை சிறைபிடித்தனர்.



  • Aug 08, 2024 18:01 IST

    சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம்: மத்திய அரசு நிதி வழங்க தாமதம் ஏன் - தயாநிதி மாறன் கேள்வி

    "சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியின் நிலை என்ன, தாமதத்திற்கு காரணம் என்ன, பிற மாநிலங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்றும் வழங்கப்பட்ட நிதி குறித்த விபரங்கள் என்ன?" என்று மக்களவையில் தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய நகர்ப்புற வளர்ச்சி இணையமைச்சர் அளித்த எழுத்துப்பூர்வமான பதில் அளித்துள்ளார்.



  • Aug 08, 2024 17:36 IST

    வயநாட்டில் பேரழிவை தேசிய பேரிடராக உடனே அறிவிக்கப்பட வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: “வயநாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவை தேசிய பேரிடராக அறிவித்து தாராள உதவிக்கரத்தை ஒன்றிய அரசு காட்ட வேண்டும்; இயற்கைப் பேரிடரில் அரசியல் பார்வை தேவையற்றது; பாதிக்கப்பட்ட மக்கள் இழப்புகளைச் சந்தித்து அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீருடன் உள்ளவர்களது மறுவாழ்வுக்கு உத்தரவிட வேண்டியது ஒன்றிய அரசின் மனிதநேய மகத்தானதொரு கடமை” என்று கூறியுள்ளார்.



  • Aug 08, 2024 17:12 IST

    அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கக் கோரி சவுக்கு சங்கர் மனு; காவல்துறைக்கு ஐகோர்ட் அவகாசம்

    தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக்கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க காவல் துறை தரப்புக்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.



  • Aug 08, 2024 16:45 IST

    மயங்கி விழுந்த 2-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

    திருச்சியில் பள்ளி உணவு இடைவேளையில் விளையாடிக் கொண்டிருந்த 2ம் வகுப்பு மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த மாணவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். உடனே கவனித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்



  • Aug 08, 2024 16:26 IST

    நான் குற்றவாளி அல்ல, என் மீது புனையப்பட்ட வழக்கு - நீதிபதி அல்லியின் கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்

    தவறு என்று தெரிந்தே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளீர்கள், இதனை ஒப்புக் கொள்கீறிர்களா? என சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றச்சாட்டு பதிவின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு, நான் குற்றவாளி அல்ல, என் மீது புனையப்பட்ட வழக்கு; நான் நிரபராதி, குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்



  • Aug 08, 2024 15:59 IST

    பாரிஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேற்றம்

    பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்



  • Aug 08, 2024 15:37 IST

    கிராம சபைக் கூட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அன்புமணி

    இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15-ஆம் நாள் காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைக் கூட்டங்கள் தான் அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான ஊடகம். அந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்



  • Aug 08, 2024 15:19 IST

    தமிழகத்தில் ஐ.பி.எஸ் உள்பட 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    தமிழகத்தில் ஐ.பி.எஸ் உள்பட 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களின் எஸ்.பி.,க்களும் மாற்றப்பட்டுள்ளனர்



  • Aug 08, 2024 15:15 IST

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா - திருமாவளவன் எதிர்ப்பு

    நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அரசு மதம் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பது மிகவும் ஆபத்தானது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • Aug 08, 2024 14:59 IST

    பாஜக நிர்வாகி தற்கொலை முயற்சி

    சென்னையில் பாஜக பட்டியலின மாநில செயலாளர் பரந்தாமன் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.

    நில விவகாரம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் தன்னை தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக பரந்தாமன் குற்றச்சாட்டு



  • Aug 08, 2024 14:47 IST

    மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல்

    மாணவர்கள் இடையே சாதி ரீதியிலான மோதல்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதலில் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவன் மீது தாக்குதல்.

    தாக்கப்பட்ட மாணவன் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி. பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் 6 மாணவர்கள் சீர்திருத்தப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்.

    காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் மகன் நீங்கலாக ஆறு மாணவர்கள் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல்



  • Aug 08, 2024 14:23 IST

    அடுத்த 3 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை

    திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 08, 2024 13:44 IST

    குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறி வைத்து இந்த மசோதா தாக்கல்

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் - இன்று மிகவும் சோகமான நாள்; தி.மு.க எம்.பி கனிமொழி

    மசோதா சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

    முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினராக நியமிப்பது நியாயமா ?

    மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது

    நாட்டு மக்கள் இடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி

    குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறி வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரான மசோதா - தி.மு.க எம்.பி கனிமொழி



  • Aug 08, 2024 13:38 IST

    6 மாவட்டங்களில் கனமழை

    தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Aug 08, 2024 13:36 IST

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல். மசோதாவை தாக்கல் செய்தார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. நாடு முழுவதும் 9.40 லட்சம் ஏக்கர் அளவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகள் உள்ளன



  • Aug 08, 2024 13:16 IST

    வினேஷ்க்கு ஹரியானா அரசு மரியாதை

    வினேஷ் போஹத் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரைப் போலத்தான் வரவேற்கப்படுவார்

    வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு அரசு அளிக்கும் மரியாதை மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் சைனி அறிவிப்பு



  • Aug 08, 2024 13:02 IST

    சீமான் வலியுறுத்தல்

    அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

    - சீமான் வலியுறுத்தல்



  • Aug 08, 2024 12:24 IST

    பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது

    இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம். கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.

    முருகன் மாநாடு பொதுவானது- மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்கிறோம்

    இதையே வரவேற்பாக ஏற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கலாம். முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள்.  மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்

    அமைச்சர் சேகர்பாபு



  • Aug 08, 2024 12:17 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 23 நாட்களுக்கு பிறகு, பரிசல் இயக்க அனுமதி

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 23 நாட்களுக்கு பிறகு, பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தார் பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி

    ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு



  • Aug 08, 2024 12:16 IST

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் 11ம் தேதியும், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 12ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Aug 08, 2024 12:16 IST

    மாநிலங்களவையில் அமளி

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கத்தை மாநிலங்களவையில் எழுப்ப அனுமதி மறுப்பை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி



  • Aug 08, 2024 12:05 IST

    வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

    வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, வெங்காய மாலையை கழுத்தில் அணிந்தபடி இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



  • Aug 08, 2024 12:01 IST

    முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு

    முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    வினாத்தாள் வெளியாகி விற்பனைக்கு வந்ததாக தகவல் பரவியதை அடுத்து, தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஆகஸ்ட் 11ம் தேதி நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு நடைபெறவுள்ளது.



  • Aug 08, 2024 11:59 IST

    அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்: அமைச்சர் சிவசங்கர்

    பிரதமர் நரேந்திர மோடியே, ராமரை விட்டு விட்டு ஜெய் ஜெகநாத் என கூற ஆரம்பித்துவிட்டார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் அதன் பிறகு பார்க்கலாம்

    - 2026 தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலினே ஜெய்ஸ்ரீராம்' சொல்வார் என்ற அண்ணாமலையின் விமர்சனத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி



  • Aug 08, 2024 11:26 IST

    மாமதுரை விழா

    மதுரையில் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் "மாமதுரை விழா" சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்



  • Aug 08, 2024 10:56 IST

    மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மரணம்

    மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 80.



  • Aug 08, 2024 10:40 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை : ரவுடி நாகேந்திரனை கடைசி ஒரு வருடமாக சந்தித்த நபர்களின் விவரங்கள் சேகரிப்பு

    ரவுடி நாகேந்திரனை கடைசி ஒரு வருடமாக சந்தித்த நபர்களின் விவரங்கள் சேகரிப்பு வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் இருந்து விவரங்களை பெற்றனர் தனிப்படை போலீசார் நாகேந்திரனை கண்காணிக்கும் தனி காவலரிடம் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் பெறப்பட்டுள்ளன ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான ஸ்கெட்ச் சிறையில் இருந்து போடப்பட்டதா? என கண்டறியும் பணியில் தனிப்படை மகன் அஸ்வத்தாமன் கைது குறித்து சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனிடம் கூறிய வழக்கறிஞர்கள். 



  • Aug 08, 2024 10:39 IST

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை -ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.  ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி நீடிப்பதால் வீடு, வாகன கடன்களின் வட்டி உயராது.



  • Aug 08, 2024 10:13 IST

    நடுவானில் இயந்திரக் கோளாறு - ரத்து செய்யப்பட்ட விமானம்

    லண்டனில் இருந்து சென்னை வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, விமானம் சென்னைக்கு வராமல், லண்டனுக்கே திரும்பி சென்று விட்டதால், சென்னை - லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Aug 08, 2024 09:55 IST

    சென்னை; நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம்

    சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை.



  • Aug 08, 2024 09:08 IST

    பூ வியாபாரிகளை செருப்பால் அடிப்பேன் என மிரட்டிய சார்பு ஆய்வாளர்

     மதுரையில் பூ வியாபாரிகளை செருப்பால் அடிப்பேன் என மிரட்டிய சார்பு ஆய்வாளர்.சரக்கு வாகனத்தில் வந்த பூ வியாபாரிகளுடன் வாக்குவாதம் நிலக்கோட்டையில் இருந்து மதுரை சந்தைக்கு வந்த விவசாயிகள், சோதனை சாவடியில் நிறுத்தம்.



  • Aug 08, 2024 08:51 IST

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

    மீனவர்களை தாக்கி இலங்கை கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்துள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 



  • Aug 08, 2024 08:49 IST

    வினேஷ் போகத்திற்கு உரிய மரியாதை: ஹரியானா அரசு

    வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான மரியாதை தரப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத் வரவேற்கப்படுவார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்கான மரியாதை, வெகுமதி, வசதிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.



  • Aug 08, 2024 07:47 IST

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்கிறார்.



  • Aug 08, 2024 07:46 IST

    பிரியாணி மேன் அபிஷேக் மேலும் ஒரு வழக்கில் கைது

    ’பிரியாணி மேன்' என்று கூறப்படும் அபிஷேக் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.



  • Aug 08, 2024 07:42 IST

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு .மல்யுத்தம் தன்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என வினேஷ் போகத் உருக்கம்.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: