Advertisment

Tamil News Highlights : தந்தையின் மருத்துவமனை செலவுகள் குறித்து வரும் வதந்திகள் வேதனை அளிக்கிறது - எஸ்.பி.பி சரண்

Tamil News: சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14-க்கும் 1 லிட்டர் டீசல் விலை ரூ.76.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : தந்தையின் மருத்துவமனை செலவுகள் குறித்து வரும் வதந்திகள் வேதனை அளிக்கிறது - எஸ்.பி.பி சரண்

Tamil News  : பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த கட்சிகளில் சிரோமணி அகாலிதளம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி நிறுவனர்களில், அகாலிதளத்தின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதலும் ஒருவர். இவர் வேளாண் மசோதாக்கக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், சனிக்கிழமை சண்டிகரில் நடைபெற்ற சிரோமணி அகாலிதளம் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலிஅவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்தார்.

Advertisment

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், காலணி வீசியும் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்காக செப்டம்பர் 28ம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை,  நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், ரேஷன் பொருட்கள் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை, வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Tamil news : தமிழ்நாடு மற்றும் தேசியச் செய்திகள், உலகச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் பிளாகில் இணைந்திருங்கள்.Highlights

  22:33 (IST)27 Sep 2020

  தந்தையின் மருத்துவமனை செலவுகள் குறித்து வரும் வதந்திகள் வேதனை அளிக்கிறது - எஸ்.பி.பி சரண்

  தந்தையின் மருத்துவமனை செலவுகள் குறித்து வரும் வதந்திகள் வேதனை அளிக்கிறது என்று எஸ்.பி.பி சரண் தெரிவித்தர்.  

  22:16 (IST)27 Sep 2020

  போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

  சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.  

  22:15 (IST)27 Sep 2020

  பாஜகவினர் காகிதப்புலிகள். தீவிரமாக செயல்பாடுகள் நடைபெறுவதை போன்ற ஒரு உருவகத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஊடகங்கள் அதற்கு துணைபோகின்றன. தமிழகத்தில் பாஜக வேரூன்றுவதற்கான வழிவகையே கிடையாது என்று கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.   

  21:36 (IST)27 Sep 2020

  ராஜஸ்தான் வெற்றிக்கு 224 ரன்கள் இலக்கு

  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில், இன்றிரவு 7:30 மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில், பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்,   223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக மாயங் அகர்வால் 106 ரன்களும், கேப்டன் கே.எல் ராகுல் 69 ரன்களும் எடுத்தனர். 

  ராஜஸ்தான் அணி சற்று முன்புவரை 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை சேர்த்துள்ளது.    

  21:02 (IST)27 Sep 2020

  மக்கள் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும். அதில், எந்தவித விதிவிலக்கும் இருக்க கூடாது

  மக்கள் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிய வேண்டும். அதில், எந்தவித விதிவிலக்கும் இருக்க கூடாது. நீங்கள் ஒரு வழிபாடு இடத்திற்குச் செல்லும்போது முகக்கவசங்கள் அணிய வேண்டாம் என்று சொல்லும் கடவுள் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வர்தன் தெரிவித்தார்.     

  20:20 (IST)27 Sep 2020

  தொழில் நுட்பங்களுடன் பரப்புரையைத் தொடர்வோம் - மு.க ஸ்டாலின்

  கரூர் மாவட்ட திமுக நடத்திய முப்பெரும் விழா கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! 545 இடங்களிலிருந்து 50,000 பேர் காணொலி மூலமாக ஒருங்கிணைந்தது கண் கொள்ளாக்காட்சி. வி. செந்தில் பாலாஜிக்கும் நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள்! தொழில் நுட்பங்களுடன் பரப்புரையைத் தொடர்வோம் என்று மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.

  20:17 (IST)27 Sep 2020

  இந்திய பண்பாட்டு வரலாறு எழுதுவதற்கு அமைத்தக் குழுவை கலைக்க வேண்டும்

  வரலாறு எழுதுவது ஒரு அரசாங்கத்தின் கடமை அல்ல. குழுவில் இடம் கேட்பதற்கு பதிலாக, இந்த யோசனையை நாம் நிராகரிக்க வேண்டும் என்று முன்னதாக ரவிக்குமார் எம்.பி தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.   

  20:16 (IST)27 Sep 2020

  இந்திய பண்பாட்டு வரலாறு எழுதுவதற்கு அமைத்தக் குழுவை கலைக்க வேண்டும் - திருமாவளவன்

  இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு குழு நியமனம். இது நம்பகத்தன்மை கொண்டதாக- ஒரு சார்பற்றதாக இருக்க முடியாது!  மத்திய அரசு அமைத்திருக்கும் குழுவில் எங்களுக்கும் இடம் கொடுங்கள் என்று கேட்பதைவிடவும் இந்தக் குழுவே வேண்டாம் என்று உரத்து முழங்கவேண்டியதே இன்றைய தேவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.   

  19:55 (IST)27 Sep 2020

  இது போன்ற இணையதளம் மூலம் எந்தவிதமான கல்வி உதவித்தொகை அறிவிப்பை அமைச்சகம் வெளியிடவில்லை

  பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கீழ் இயங்கும் இணையதளம் தேசிய கல்வி உதவித்தொகை தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

  இந்த செய்தி போலி. இது போன்ற இணையதளம் மூலம் எந்தவிதமான கல்வி உதவித்தொகை அறிவிப்பை அமைச்சகம் வெளியிடவில்லை என்று பத்திரிக்கை தகவல் தொடர்பு  தெரிவித்தது.  

  19:04 (IST)27 Sep 2020

  வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு : அமித் ஷா கருத்து

  வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

  18:59 (IST)27 Sep 2020

  மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,280 (நேற்றைய எண்ணிக்கை 1,187) பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 596, சேலம் – 378, செங்கல்பட்டு –296, திருப்பூர் – 282, கடலூர் – 256, திருவள்ளூர் – 202, காஞ்சிபுரம் – 196, விழுப்புரம் – 144, வேலூர் – 115, திருநெல்வேலி – 111 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  18:59 (IST)27 Sep 2020

  கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.42% குணமடைந்துள்ளனர்

  தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,706-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,25,154 ஆக அதிகரித்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 90.42% குணமடைந்துள்ளனர்.

  18:58 (IST)27 Sep 2020

  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,313-ஆக அதிகரித்துள்ளது

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 27, அரசு மருத்துவமனைகளில் 53 என மொத்தம் 80 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,313-ஆக அதிகரித்துள்ளது.

  18:22 (IST)27 Sep 2020

  வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.  

  17:38 (IST)27 Sep 2020

  அன்புமணி ராமதாஸ் செய்திக் குறிப்பு (6/n)

  இடம் கிடைத்த மாணவர்கள் குறித்த காலத்திற்குள் சேரவில்லை என்றால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாமல் போய்விடும். அதேபோல், உயர்கல்வி கற்பதற்காக Clarendon Scholarship of Oxford, Erasmus Mundus scholarship of EU, Adelaide Scholarship of Australia போன்ற கல்வி உதவித்தொகைகளை இழக்க நேரிடும். இதுபோன்ற இழப்புகளை பல ஏழை மாணவர்களின் குடும்பங்களால் தாங்க முடியாது.

  எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அக்டோபர் முதல் வாரத்திற்குள் இறுதிப் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்; தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க வேண்டும்.

  17:37 (IST)27 Sep 2020

  அன்புமணி ராமதாஸ் செய்திக் குறிப்பு (5/n)

  ஒருவேளை அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிட முடியாதவையாகும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர்கள் நடப்பு பருவத்தில் சேரத் தவறினால் ஓராண்டு படிப்பை இழக்க நேரிடும்; மேலும் அடுத்த ஆண்டில் புதிதாக பட்டம் பெறுவோருக்கு மட்டும் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், இப்போது உயர்கல்வி கற்க வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு இந்த வாய்ப்பு மறுக்கப்படலாம். அதனால் அவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடக் கூடும்.

  அதுமட்டுமின்றி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாடுகளின் வங்கிகளில் கணக்குத் தொடங்கி ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி வைப்பீடு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும். இதற்கெல்லாம் மேலாக அனைத்து மாணவர்களும் முதல் பருவக் கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.

  17:36 (IST)27 Sep 2020

  அன்புமணி ராமதாஸ் செய்திக் குறிப்பு (4/n)

  சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் விடைத்தாளில் தேர்வு எழுதும் முறையில் தேர்வை நடத்துகின்றன. அத்தேர்வுகளின் விடைத்தாள்களை விரைந்து திருத்தி முடிவுகளை அறிவிப்பது தான் சற்று சவாலான விஷயம் ஆகும்.

  அந்தப் பல்கலைக்கழகங்களிலும் 90% மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகங்கள் நினைத்தால், விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை உடனடியாகத் தொடங்கி விடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வுகள் முடிந்த சில நாட்களில் முடிவுகளை அறிவித்து, அடுத்த சில நாட்களில் தற்காலிக பட்டச் சான்றிதழ்களை ஆன்லைன் முறையில் அனுப்பினால் கூட, மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

  17:36 (IST)27 Sep 2020

  அன்புமணி ராமதாஸ் செய்திக் குறிப்பு (3/n)

  பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் இம்மாத இறுதிக்குள்ளாகவும், சில பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதத் தொடக்கத்திலும் இறுதிப்பருவத் தேர்வுகள் நிறைவடையவுள்ளன. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் உயர்கல்வி எதிர்காலம் அமையும்.

  அக்டோபர் மாதம் 5-ஆம் தேதிக்குள் இறுதிப்பருவத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு, தற்காலிக பட்டச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கினால் மட்டும் தான் அவர்களின் வெளிநாட்டு உயர்கல்வி கனவு சாத்தியமாகும். இதை சாத்தியப்படுத்துவது கடினமானது அல்ல. பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் தான் இறுதிப் பருவத்தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றின் முடிவுகளை ஒரு சில நிமிடங்களில் தொகுத்து பட்டியலிட்டு விடலாம்.

  17:35 (IST)27 Sep 2020

  அன்புமணி ராமதாஸ் செய்திக் குறிப்பு (2/n)

  இறுதிப் பருவத் தேர்வு இல்லாமல், அதற்கு முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கிடைத்துள்ளது. அவர்கள் முதல் பருவத்திற்கான கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தி விட்டனர்.

  அக்டோபர் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக அவர்கள் இறுதிப் பருவத் தேர்வுகளில் வெற்றி பெற்று, தற்காலிக பட்டச் சான்றிதழ்களை (Provisional Certificate) தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு விடும்.

  அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் படிக்க இடம் கிடைத்த மாணவர்கள் விசா உள்ளிட்டவற்றை பெறவும் தற்காலிக பட்டச் சான்றிதழ்கள் அவசியம் ஆகும். ஆனால், மாணவர் சேர்க்கை, விசா அனுமதி உள்ளிட்ட அனைத்தும் சாத்தியமாகுமா? என்பது தெரியாமல் தமிழ்நாட்டு மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இறுதிப் பருவத் தேர்வுகள் தொடங்கி விட்டன.

  17:35 (IST)27 Sep 2020

  கேள்விக்குறியாகும் வெளிநாட்டு உயர்கல்வி? பட்டச் சான்றிதழ்களை விரைந்து வழங்குக - அன்புமணி ராமதாஸ் செய்திக் குறிப்பு (1/n)

  தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பட்டப்படிப்பு இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வுகளை நடத்துவதில் நடந்த குழப்பங்களுக்கு தீர்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மட்டும் 10,000 மாணவர்களின் உயர்கல்வி கனவு கருகிவிடும்.

  இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பாவின் பிற நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் மழைக்கால பருவப் படிப்புகளில் சேர தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

  17:32 (IST)27 Sep 2020

  முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்

  பீகார் முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே முதல்வர் நிதீஷ் குமார் முன்னிலையில் ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். குப்தேஷ்வர் பாண்டே சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில் அனைவராலும் அறியப்பட்டார்.  

  17:30 (IST)27 Sep 2020

  பயணிகளிடமிருந்து ரூ. 83.7 லட்சம் மதிப்புள்ள 1.62 kg தங்கம் கைப்பற்றப்பட்டது

  நேற்று இரவு துபாயிலிருந்து AI IX 1644 மற்றும் 6E 8497 விமானம் மூலம் வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ. 83.7 லட்சம் மதிப்புள்ள 1.62 kg தங்கம் கைப்பற்றப்பட்டது. 7 தங்க பசை உருளைகள் மற்றும் 5 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. மூவர் கைதாகினர் என்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை தெரிவித்தது.  

  17:28 (IST)27 Sep 2020

  2,000 மின் கிளினிக்குகள் அமைக்கப்படும் - விஜயபாஸ்கர்

  தமிழத்தில் 2,000 மின் கிளினிக்குகளை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றனர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  17:27 (IST)27 Sep 2020

  திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து

  திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுக்கப்படும் என்று செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.  

  16:28 (IST)27 Sep 2020

  கனிமொழியையும் விசாரிக்க வேண்டும்!

  திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்த விவகாரத்தில் கனிமொழியை விசாரணை செய்ய வேண்டும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஈ.வெ.ராவின் பிறந்தநாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இதுதான் பெரியாருக்கு நீங்கள் காட்டும் மரியாதையா என்று கேட்டிருப்பது அரசியல் உள்நோக்கத்தோடு வீசிறியிருக்கிற கேள்வி. ஆகையால் கனிமொழியிடமும் விசாரித்து உண்மையை அறியவேண்டும், இந்த அநாகரீக செயலின் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" கூறியிருக்கிறார்.

  15:22 (IST)27 Sep 2020

  மகாராஷ்டிராவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் - முதல்வர் உத்தவ் தாக்கரே

  இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். ஊரடங்கு தளர்விற்குப் பிறகு அதிகமான மக்கள் வெளியே வர ஆரம்பித்ததுதான் இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  15:07 (IST)27 Sep 2020

  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - செல்லூர் ராஜு எச்சரிக்கை

  "தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துபவர்கள் மீது நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  15:04 (IST)27 Sep 2020

  சட்டப்படி தண்டிக்கவேண்டும் - பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்

  சிலைமீது காவிசாயம் பூசி இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டவர்களை, சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார்.

  14:30 (IST)27 Sep 2020

  40 ஆயிரம் படுக்கைகளுக்குக் கூடுதல் ஆக்சிஜன் வசதி - விஜயபாஸ்கர்

  தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் கூடுதலாக 40 ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

  14:07 (IST)27 Sep 2020

  இத்தகைய இழிவான செயலை விசிக கடுமையாகக் கண்டிக்கிறது - திருமாவளவன் ட்வீட்

  'தந்தை பெரியார் மற்றும் திராவிட அரசியலுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் சாதி-வகுப்புவாத-மரபுவழி-இனவெறி-மூடநம்பிக்கை கொண்ட குழுக்கள் இப்போது இத்தகைய காழ்ப்புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. இத்தகைய இழிவான செயலை விசிக கடுமையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்' என்று பெரியார் சிலை அவமதிப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.

  13:59 (IST)27 Sep 2020

  கோயம்பேடு காய்கறிகள் மொத்த விற்பனை அங்காடி நாளை திறப்பு

  அதிகப்படியான கொரோனா வைரஸ் பரவுதல் காரணமாக நீண்ட நாள்கள் மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கறி அங்காடி மீண்டும் திறக்கவேண்டும் என வியாபாரிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, நாளை திறக்கப்படவுள்ளது. கிருமி நாசினி செலுத்துவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தல்.

  13:43 (IST)27 Sep 2020

  தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

  தமிழகத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விருதுநகர், ராணிப்பேட்டை, தென்காசி, மதுரை ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

  13:32 (IST)27 Sep 2020

  "தமிழகத்தில் கதை சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது" - பிரதமர் மோடி

  வானொலி மூலம் நடைபெற்ற பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ உரையில், "நாட்டில் பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலைகள் இருக்கின்றன. அதிலும், தமிழகம் மற்றும் கேரளாவில் கதை சொல்வதற்கென்று சுவாரசிய பாணி உள்ளது. அதனை வில்லுப்பாட்டு எனச் சொல்கிறோம். இதில் இசையோடு கதை சொல்லும் வித்தியாச பாணி இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  13:04 (IST)27 Sep 2020

  எஸ்.பி.பி.க்கு நினைவு இல்லம் கட்டப்படும்: அவரது மகன் சரண் அறிவிப்பு

  மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் அறிவித்துள்ளார்.

  12:09 (IST)27 Sep 2020

  தமிழகத்தின் வில்லுப்பாட்டு இசை குறித்து பேசிய பிரதமர் மோடி

  பிரதமர் மோடி தனது மான் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில், “இசையுடன் கதை சொல்லும் வில்லுப்பாட்டு முறை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. வில்லுப்பாட்டின் மூலம் புராண கதைகள் சொல்லும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது.” என்று கூறினார்.

  12:03 (IST)27 Sep 2020

  கொரோனா குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது - பிரதமர் மோடி மான் கி பாத் உரை

  பிரதமர் மோடி, மாதந்தோறும் வானொலியில் உரையாற்றும் மான் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சியில், கொரோனா குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது. நமது கிராமங்களின் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

  11:49 (IST)27 Sep 2020

  பெரியார் சிலை அவமதிப்பு; மு.க.ஸ்டாலின் கண்டனம்

  திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?

  திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்!

  பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

  11:37 (IST)27 Sep 2020

  பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஓ.பி.எஸ்

  திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலையை அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

  11:02 (IST)27 Sep 2020

  தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி

  தமிழ்நாடு காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள தினேஷ் குண்டுராவு வலியுறுத்தியுள்ளார்.

  10:59 (IST)27 Sep 2020

  பெரியார் சிலை அவதிப்பு; கனிமொழி கண்டனம்

  திருச்சி அருகே இனாம்குளத்தூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் அன்று தமிழக பிஜேபி தலைவர் முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்று கூறினார். இதுதான் அவர்கள் பெரியாருக்கு காட்டும் மரியாதையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

  10:53 (IST)27 Sep 2020

  பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி

  பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கடந்த 3 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவ பரிசோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

  10:49 (IST)27 Sep 2020

  பள்ளி திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

  கோபி அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பெற்றோர் சம்மத கடிதத்துடன் தான் வர வேண்டும் என வருவாய்த்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து அறிவிப்பார். பள்ளி திறப்பு குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக மட்டுமே அக்டோபர் 1-ம் தேதி பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

  10:39 (IST)27 Sep 2020

  அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் ரேஷன் கடை தொடங்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு

  செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு: விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் ரேஷன் கடை தொடங்கப்படும். தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

  10:35 (IST)27 Sep 2020

  சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாளில் அமைச்சர்கள் மரியாதை

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாளில், சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவருடைய திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியரஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

  09:55 (IST)27 Sep 2020

  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93,167 பேருக்கு கொரோனா; 1,124 பேர் பலி

  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 92,043 பேர் குணமடைந்துள்ளனர்; 1,124 உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  09:36 (IST)27 Sep 2020

  பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர்களை கைது செய்ய கிராம மக்கள் வலியுறுத்தல்

  திருச்சி அருகே இனாம்குளத்தூர் கிராமம் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியும் காலணி வீசியும் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த கிராம மக்கள், பெரியார் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

  09:31 (IST)27 Sep 2020

  திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு; போலீஸ் விசாரணை

  திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியும் காலணி வீசியும் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  09:31 (IST)27 Sep 2020

  திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு; போலீஸ் விசாரணை

  திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியும் காலணி வீசியும் சமூக விரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  08:47 (IST)27 Sep 2020

  முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்

  முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82.

  Tamil news updates : விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெற்ற தவறான பயனாளிடமிருந்து ரூ.13.25 கோடி மீட்கப்பட்டுள்ளது. தவறான பயனாளிகள் 40,000 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12.5 கோடி மற்றும் புதிதாக 2,010 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.20 கோடி என 42,010 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.13.25 கோடி மீட்கப்பட்டுள்ளது.
  Tamil Nadu Tamil News
  Advertisment

  Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

  Follow us:
  Advertisment