பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 89-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 15, 2024 07:05 ISTஇரு பாலர் பயிலும் கல்லூரி ஆகும் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி
2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு
'அரசு கலைக்கல்லூரி, நந்தனம்' எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு
-
Jun 14, 2024 21:26 ISTபோப் பிரான்சிஸ்ஸை சந்தித்த நரேந்திர மோடி; இந்தியா வர அழைப்பு விடுத்தார்
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்து அவரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், இந்தியா வருமாறு அவருக்கு விடுத்தார்.
Met Pope Francis on the sidelines of the @G7 Summit. I admire his commitment to serve people and make our planet better. Also invited him to visit India. @Pontifex pic.twitter.com/BeIPkdRpUD
— Narendra Modi (@narendramodi) June 14, 2024 -
Jun 14, 2024 19:31 ISTதிருப்பத்தூர்: பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், இன்று (ஜுன் 14) இந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.
பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை முதியவர் ஒருவரையும் தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். -
Jun 14, 2024 19:30 ISTநல்லது செய்து தோற்றோம்; தீமை செய்து தோற்றால்தான் அவமானம் - ரோஜா
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நகரியில் போட்டியிட்டு நடிகை ரோஜா தோல்வி அடைந்தார். ஆந்திர முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா கூறுகையில், “நல்லது செய்து தோற்றோம்; தீமை செய்து தோற்றால்தான் அவமானம். மரியாதையுடன் எழுவோம். மக்களின் குரலை எதிரொலிப்போம்.” என்று பேசியுள்ளார்.
-
Jun 14, 2024 19:27 ISTவிருதுநகரில் சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண்; மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், சொக்கநாதன் புதூரைச் சேர்ந்த செந்திமயில் (22) சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jun 14, 2024 19:19 ISTஈரோடு இடைத் தேர்தல் போல, விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது - அண்ணாமலை
இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தனர்; அப்போது, அண்ணாமலை கூறியதாவது: “இடைத் தேர்தல் என்றாலே பணம் ஆறாகப் போகும் என்பதை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அதை பொய்யாக்க வேண்டும் என்பது எனது ஆசை. தேர்தல் ஆணையம் கடுமையாக செயல்பட்டு தடுக்க வேண்டும். ஈரோடு இடைத் தேர்தல் போல, விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது” என்று கூறினார்.
-
Jun 14, 2024 19:15 ISTஇருபாலர் கல்லூரி ஆகிறது சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி - உயர் கல்வித்துறை உத்தரவு
சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 'அரசு கலைக்கல்லூரி, நந்தனம்' எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
Jun 14, 2024 18:33 ISTசாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால்; நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை
சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. பெண் வீட்டார் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் புகுந்து கண்ணாடிகள் மற்றும் நாற்காலிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Jun 14, 2024 17:50 ISTவிலங்குகள் நல வாரிய செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்கு நல வாரிய அனுமதி சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலம் எடுத்து செல்வதை தடுக்கக் கோரி யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஜூன் 27-ம் தேதி நேரில் ஆஜராகாத பட்சத்தில் இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளருக்குப் பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 14, 2024 17:12 ISTரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை எச்சரிக்கை
80 வயதிற்கு மேற்பட்டவர்களை ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்தக்கூடாது. இதனை மீறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இது குறித்து பொதுமக்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்று உணவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில் சென்று பொருட்களை பெற வேண்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டதாக செய்தி வெளியான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Jun 14, 2024 17:11 ISTதனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளியிலிருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அவசரமாக அழைத்துச் சென்றனர். பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை ஈடுப்பட்டு வருகிறார்கள்.
-
Jun 14, 2024 16:29 IST“தமிழிசையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி'' - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
"மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான தமிழிசையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறியவர். தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Jun 14, 2024 16:28 IST``அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி'' - தமிழிசை
``அன்புத் தம்பி அண்ணாமலையை சந்தித்ததில் மகிழ்ச்சி'' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
Jun 14, 2024 16:28 IST“15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்“ - தமிழகம் கோரிக்கை
ஜூன் மாதத்தில் காவிரியில் இருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே தரவேண்டிய நிலுவையில் உள்ள 6 டிஎம்சி உட்பட 15 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-
Jun 14, 2024 16:27 ISTசட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கு: செந்தில் பாலாஜி மனுக்கள் தள்ளுபடி
சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
Jun 14, 2024 16:03 ISTதமிழிசையின் அரசியல் அனுபவம் கட்சியின் வளர்ச்சிக்கு உத்வேகம் : அண்ணாமலை
தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து வருவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Jun 14, 2024 15:21 ISTதமிழிசையுடன் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு
முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பா.ஜ.க வேட்பாளராகவும் களமிறங்கிய தமிழிசையுடன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
-
Jun 14, 2024 14:47 ISTகும்பகோணம் தேவராயன்பேட்டை கிராமத்தில் 13 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு
கும்பகோணம்: தேவராயன்பேட்டை கிராமத்தில் வீட்டு கட்டும்போது கண்டெடுக்கப்பட்ட 13 ஐம்பொன் சிலைகள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
-
Jun 14, 2024 14:45 ISTதுணை முதல்வராக பவன் கல்யாண் : ஆந்திரா அமைச்சரவை இலாக்கா அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிப்பு. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார்
-
Jun 14, 2024 14:44 ISTஅர்ச்சகர்களை உருவாக்கும் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களை உருவாக்கும் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சிக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் மாதம் ₹4,000 உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
-
Jun 14, 2024 14:00 ISTசிவசங்கர் பேட்டி
வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) முதல் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது;
மீறி இயங்கினால் பேருந்துகளை பறிமுதல் செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளும்- கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
-
Jun 14, 2024 13:28 IST7 நாட்களுக்கு மழை
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 20-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jun 14, 2024 13:26 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேஜகூ சார்பில் பாமக போட்டியிடுகிறது - பாஜக அறிவிப்பு
-
Jun 14, 2024 12:48 ISTஜெயக்குமார் மரண வழக்கு
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக, நெல்லை மாநகர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆனந்தராஜிடம் விசாரணை
ஜெயக்குமார் எழுதியதாக கைப்பற்றிய கடிதத்தில், ஆனந்தராஜின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் விசாரணை
-
Jun 14, 2024 12:48 ISTநீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
கடந்த 2015ல் ஆவினங்குடியில் மணல் திருட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர்
வழக்கு விசாரணை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
-
Jun 14, 2024 12:42 ISTஉயிரிழந்த இந்தியர்களின் உடல்களுக்கு பினராயி விஜயன் அஞ்சலி
#Watch | குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களுக்கு கேரள அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் பினராயி விஜயன்
— Sun News (@sunnewstamil) June 14, 2024
கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 1 என 31 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.… pic.twitter.com/nK1x9ATmnF -
Jun 14, 2024 12:21 ISTரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு
டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக, குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு
மு.க.ஸ்டாலின் உத்தரவு
-
Jun 14, 2024 12:14 ISTநீட் தேர்வு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தேசிய தேர்வுகள் முகமை தொடந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் உள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்;
மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு உத்தரவு
-
Jun 14, 2024 11:51 ISTஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம்
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
12-ம் வகுப்பில் 35 பேரும், 10-ம் வகுப்பில் 8 பேரும் தமிழில் 100-க்கு 100 பெற்றுள்ளனர். அந்த மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கி பாராட்ட உள்ளோம்
- பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ‘ஐம்பெரும் விழாவில்’ மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Jun 14, 2024 11:51 ISTநாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
-
Jun 14, 2024 11:33 ISTநரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை. தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது நிலப் பிரச்சனை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மருத்துவர் சுப்பையா, 2013ல் வெட்டிக் கொலை.
-
Jun 14, 2024 11:24 ISTகொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட உடல்கள்
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து - விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட உடல்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வருகை தந்து உடல்களை பெற்றுச் செல்ல காத்திருக்கும் உறவினர்கள்.
-
Jun 14, 2024 11:20 ISTபள்ளி மாணவர்களை பார்க்கும் போது எனக்கும் இளமை திரும்புகிறது: ஸ்டாலின்
பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக நான் கலந்துகொள்வேன்; ஆனால் என்னைவிட ஆர்வமாக கலந்து கொள்பவர் அமைச்சர் உதயநிதி தான்; தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் நான் கலந்து கொள்ள வேண்டிய முதல் விழா இதுவாக இருக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸிடம் சொல்லி இருந்தேன்; பள்ளி மாணவர்களை பார்க்கும் போது எனக்கும் இளமை திரும்புகிறது” - பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் ‘ஐம்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Jun 14, 2024 11:08 ISTவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.
-
Jun 14, 2024 10:48 ISTதங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ.6,650க்கும், சவரன் ரூ.53,200க்கும் விற்பனை.
-
Jun 14, 2024 10:48 ISTஆந்திராவில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து விபத்தில் 3 வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு . 6 பேர் படுகாயம்
-
Jun 14, 2024 10:03 ISTகேரள அரசு சார்பில் குவைத்திற்கு செல்ல முடிவு: மத்திய அரசு அனுமதி மறுப்பு: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வருத்தம்
“குவைத் மன்காஃப் தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கேரள அரசு சார்பில் குவைத்திற்கு செல்ல முடிவெடுத்தோம்; விமானத்திற்கு காத்திருந்த நிலையில் குவைத்திற்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது; இக்கட்டான சூழலில் மத்திய அரசின் இது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” - கொச்சியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டி
-
Jun 14, 2024 09:59 IST7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களின் உடல்கள் காலை 10.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட உள்ளன
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் காலை 10.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.
-
Jun 14, 2024 09:58 ISTபிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமனம்
பிரதமர் மோடியின் 3வது ஆட்சியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மை செயலாளராக பி.கே.மிஸ்ராவும் மீண்டும் நியமனம்.
-
Jun 14, 2024 09:58 ISTஅம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்க நடவடிக்கை
அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை சுமார் ரூ. 5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை. எடுத்து வருவதாக தகவல் சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை துவங்க மாநகராட்சி திட்டம்.
-
Jun 14, 2024 09:57 ISTகட்சியை கைப்பற்றுவதைவிட கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் : ஓ.பி.எஸ்
கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்துடன் சிந்திக்காமல், கட்சியை கைப்பற்றுவதைவிட கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்ற பெருந்தன்மையான முடிவை எடுக்க வேண்டும்- பன்னீர் செல்வம்
-
Jun 14, 2024 09:07 ISTகுவைத் தீ விபத்து இறந்தவர்களின் உடல்களை பெற்றுகொள்ள ஏற்பாடுகள் தீவிரம்
-
Jun 14, 2024 08:47 ISTகொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உடல்களை பெற்றுகொள்ள ஏற்பாடுகள் தீவிரம்
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் உடல்களை பெற்றுகொள்ள ஏற்பாடுகள் தீவிரம். குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் உடல்கள் காலை 10:30 மணிக்கு ஐ.ஏ.எப் விமானத்தில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் : நித்தின் ஆர்.கே
-
Jun 14, 2024 08:28 ISTஅமித்ஷா விவகாரம்: தமிழிசை விளக்கம்
மக்களவை தேர்தலில் பாஜக சந்தித்த சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார் தொகுதியில் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அமித்ஷா அறிவுரை வழங்கினார் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா கண்டித்ததாக தகவல் பரவிய நிலையில் தமிழிசை விளக்கம்
-
Jun 14, 2024 08:26 ISTசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் : கிடந்த பெட்டியால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கேட்பார் அற்று கிடந்த பெட்டி மோப்பநாய், பிரத்யேக இயந்திரங்கள் உதவியுடன் சோதனை செய்த பாதுகாப்பு படை வீரர்கள் கிடந்தது காலி பெட்டி என உறுதி.
-
Jun 14, 2024 08:25 ISTஅகவிலைப்படி உயர்வு
2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.1.2024 முதல் 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு.
-
Jun 14, 2024 08:15 ISTஇந்தியா வரும் இறந்தவர்களின் உடல்கள்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல், இந்திய விமானப்படை விமானம் மூலம் கேரளா புறப்பட்டது. விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சின் சென்றுள்ளார்.
-
Jun 14, 2024 08:14 ISTஇத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.