/indian-express-tamil/media/media_files/nTJoqokqI737JL3k7YIm.jpg)
Tamil News Updates : பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 160-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரியில் பூமி திரும்புகிறார் சுனிதா
80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமி திரும்புகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 26, 2024 04:06 IST
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது - ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வைப் பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது; பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லையென்றால் அடுத பிரதமர் நிச்சயம் செய்வார்; விரைவில் 90% மக்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து நிச்சயம் குரல் எழுப்புவர்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
Aug 25, 2024 21:03 IST
தி.மு.க-வுடன் எப்போதும் பா.ஜ.க கூட்டணி வைக்காது - அண்ணாமலை
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம்; தொண்டர்களை கேட்டுத்தான் தேசிய கட்சியான பாஜக முடிவு எடுக்கும். 2024 தேர்தலில், ஒரு மாற்று சக்தியாக தமிழகத்தில் பாஜக நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
Aug 25, 2024 20:58 IST
என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும் - யுவன் சங்கர் ராஜா
பள்ளி விழா ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: “ஆரம்பத்தில் நான் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை; இதனால், நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு, நான் தனி அறையில் அமர்ந்து கதவை பூட்டிக்கொண்டு அழுதுகொண்டிருப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித்தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும்” என்று பேசியுள்ளார்.
-
Aug 25, 2024 19:53 IST
தமிழ்நாடு பெயரை யாராலும் மாற்ற முடியாது - உதயநிதி
கலைஞர் கட்டிய தமிழ்நாடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி: “தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா; தமிழ்நாடு பெயரை மாற்ற ஒரு கும்பல் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டோம்; நடக்கவும் நடக்காது” என்று பேசினார்.
-
Aug 25, 2024 19:23 IST
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ, 3 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்து உயிரிழந்த கண்ணன், முனீஸ்வரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Aug 25, 2024 19:20 IST
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால்... பீகாரிலிருந்து வெளியேறி வேலை செய்ய கட்டாயம் ஏற்படாது - பிரசாந்த் கிஷோர்
ஜன் ஸ்வராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர்: “2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி 243 இடங்களில் போட்டியிடும்; 2025-ல் ஜன் ஸ்வராஜ் அரசு அமைந்தால் 10,000 - 12,000 ரூபாய் வேலைக்கு யாரும் பீகாரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
-
Aug 25, 2024 17:45 IST
பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், காலை முதலே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவசர உதவிக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
-
Aug 25, 2024 17:44 IST
முத்தமிழ் முருகன் மாநாடு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
“திராவிடம் யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம்தான் அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகராக்கியது. முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று பழனியில் நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
-
Aug 25, 2024 17:34 IST
"உழைக்காமல் தலைவரான ஒரே நபர் அண்ணாமலை" - இ.பி.எஸ் சரமாரி தாக்கு
"மைக் கிடைத்தால் அண்ணாமலை பொய்யாக பேசுவார். அவருக்கு ஒரே முதலீடு வாயும் நாக்கும் தான். ஏதோ ஒரு வழியில் பதவியை பெற்று விட்டு தலைகால் புரியாமல் ஆடுகிறார். உழைக்காமல் தலைவரான ஒரே நபர் அண்ணாமலை" என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை அ.தி.மு.க பொதுச் செயலாளர் சரமாரி தாக்கிப் பேசியுள்ளார்.
-
Aug 25, 2024 17:28 IST
அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து - ஒசூரில் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்துகுள்ளாகியுள்ளது. 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Aug 25, 2024 16:48 IST
நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு
நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
-
Aug 25, 2024 16:26 IST
"பா.ஜ.க-வுடன் கூட்டணி தற்கொலைக்கு சமமானதாக போய்விடும்" - காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு
"முதலமைச்சர் ஸ்டாலின் எப்போதுமே மாதவாதத்திற்கு இடம் கொடுக்க மாட்டார். 100 சதவீதம் உறுதியாக சொல்கிறேன் மு.க ஸ்டாலின் பா.ஜ.க-வுடன் என்கிற நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். பா.ஜ.க-வுடன் கூட்டணி என்றால், அது தற்கொலைக்கு சமமானதாக போய்விடும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் தொலைக்காட்சி ஒன்று அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
Aug 25, 2024 15:54 IST
ஃபார்முலா 4 கார் பந்தயம் - ஓடுபாதையில் நின்ற கார்
சென்னை இருங்காட்டுக்கோட்டையில் 2வது நாளாக ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இயந்திர கோளாறு காரணமாக கார்
ஒன்று ஓடுபாதையில் நின்றது. -
Aug 25, 2024 15:52 IST
ஆழ்கடலில் தீப்பிடித்து எரிந்த படகு
கேரளா அருகே ஆழ்கடலில் தீப்பிடித்து எரிந்த குமரி மாவட்ட மீனவரின் படகு தீப்பிடித்து எரிந்தது. படகு தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளது.
-
Aug 25, 2024 15:25 IST
முத்தமிழ் முருகன் மாநாடு - முருகனை காண வந்த இஸ்லாமிய பெண்
ஆயிஷா பேகம் என்பவர், தனது பக்கத்துவீட்டு தோழி பூங்கொடியுடன் முத்தமிழ் முருகன் மாநாட்டை பார்க்க வந்ததாகவும், மாநாடு மிகச்சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
Aug 25, 2024 15:24 IST
ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து உறங்கிய நபர்
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் ஒருவர் படுத்து உறங்கியுள்ளார். தண்டவாளத்தில் படுத்திருந்த நபரால், நடு வழியில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு, ரயிலின் லோகோ பைலட் இறங்கி வந்து, தண்டவாளத்தில் படுத்திருந்தவரை எழுப்பினார்
-
Aug 25, 2024 14:58 IST
பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
"தற்போது, கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும். தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
-
Aug 25, 2024 14:10 IST
காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
தஞ்சை: திருவையாறு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவன் ஹரிபிரசாத், 7ம் வகுப்பு மாணவன் பிரவீன் இருவரும் படித்துறை அருகில் குளிக்கும் போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர்.
-
Aug 25, 2024 13:46 IST
தமிழ்நாட்டில் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்: பிரேமலதா விஜயகாந்த்
பெண் தலைவர்களுக்கு பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். பாதுகாப்பு எதற்காக திரும்பப் பெறப்பட்டது என்பது தெரியவில்லை. தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. பாதுகாப்பை எதிர்பார்த்து நாங்கள் இல்லை, ஆனால் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை.
- பிரேமலதா விஜயகாந்த்
-
Aug 25, 2024 13:09 IST
அனுமதியின்றி எங்கும் கொடியற்றக் கூடாது: த.வெ.க. அறிவுறுத்தல்
அனுமதியின்றி எங்கும் கொடியற்றக் கூடாது, விதிகளை மீறி கொடிக்கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
-
Aug 25, 2024 12:45 IST
இபிஎஸ் பேட்டி
10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
-
Aug 25, 2024 12:42 IST
சண்முகபாண்டியன் மயக்கம்
மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், கூட்ட நெரிசல் காரணமாக அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன் மயக்கம்
உடனடியாக மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்
-
Aug 25, 2024 12:41 IST
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் பதிவு
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2024
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த்.
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன். #CaptainVijayakanth @PremallathaDmdk… -
Aug 25, 2024 12:16 IST
பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும்.
தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1,000ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ₹150ல் இருந்து ₹225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு ₹450ல் இருந்து ₹670 ஆக உயர்கிறது
-
Aug 25, 2024 12:16 IST
தேமுதிக தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’
தேமுதிக தலைமை அலுவலகம் இனி ‘கேப்டன் ஆலயம்’என்று அழைக்கப்படும்
- தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் 72 வது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
-
Aug 25, 2024 11:41 IST
தொடர் விடுமுறை காரணமாக, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
.4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு முருகனை தரிசிக்கும் பக்தர்கள் ஆவணி திருவிழா தொடங்கியுள்ளதால், பக்தர்கள் வருகை அதிகரிப்பு.
-
Aug 25, 2024 11:41 IST
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இ.பி.எஸ் பதிவு
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர் விஜயகாந்த் தனக்கென தனித்த இடத்தைக் கொண்ட அவரது பிறந்தநாளில் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூறுகிறேன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இ.பி.எஸ் பதிவு
-
Aug 25, 2024 10:51 IST
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது: அமைச்சர் சேகர்பாபு
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். பழனியை சுற்றிலும் அரோகரா கோஷம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பழனி மாநாட்டு கண்காட்சிகள் 5 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது" "எல்லோருக்குமான அரசு இது" "இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இது" "இந்து சமய அறநிலையத்துறைக்கு, மாநாட்டை நடத்தும் கடமை உள்ளது- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
-
Aug 25, 2024 10:19 IST
கொல்கத்தா மருத்துவர் மரணம் : ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை ஊழல் புகார் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை சம்பவத்தின் போது, மருத்துவமனை முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ் சந்தீப் கோஷ் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது சந்தீப் கோஷ் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது
-
Aug 25, 2024 09:05 IST
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
பூலா மலை அடிவாரத்தில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி தொழிலாளர்கள் உயிரிழந்தனர் உடல் சிதறி உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி தீவிரம் ஆவிச்சிபட்டியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவு =போலீசார் தேடி வருகின்றனர்.
-
Aug 25, 2024 09:05 IST
பாலியல் குற்றச்சாட்டு : கேரள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா
பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் சித்திக்.
-
Aug 25, 2024 09:04 IST
டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது
பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார் டெலிகிராம் சி.இ.ஓ. பவெல் துரோவ், அஸர்பைஜானில் இருந்து தனியார் ஜெட்டில் பயணம் செய்த நிலையில், விசாரணைக்காக விமான நிலையத்தில், பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர் டெலிகிராமில் மதிப்பீட்டாளர்கள் பற்றாக்குறையால், சட்டவிரோத பணப்பரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், பவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 25, 2024 08:39 IST
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2ஆம் நாள் நிகழ்வு தொடக்கம்
முருகனின் திருப்புகழ் பாடும் 100க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் முருகனின் புகழை பரப்பும் வகையில் தொண்டாற்றிய 16 பேருக்கு ஒரு சவரன் தங்க நாணயம் பரிசு
-
Aug 25, 2024 07:47 IST
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் கைது
திருப்பதி: சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட நுழைய முயன்றதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் கைது; கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 கோடாலிகள், மோட்டார் சைக்கிள், கார் ஆகியவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
-
Aug 25, 2024 07:46 IST
முத்தமிழ் மாநாட்டில் கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் மாநாட்டில் கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வகையில் கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
-
Aug 25, 2024 07:42 IST
சென்னை 4 கார் பந்தயம் தொடங்கியது
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது அடுத்த சுற்றுப்போட்டி சென்னை தீவுத்திடல் சாலையில் 2 நாட்கள் நடக்கிறது
-
Aug 25, 2024 07:41 IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; 23 லட்சம் பேர் பயன் பெறும் இந்த ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.