Tamil News Today: ஆகஸ்ட் 23ம் தேதி: உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi

Tamil News Live Updates: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் 
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது!.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 86 மில்லியன் கன அடியாக உள்ளது.  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 306 மில்லியன் கன அடியாக உள்ளது. 

  • Aug 20, 2024 01:09 IST

    நிவாரண நிதியில் தவனை தொகை பிடித்தம் செய்த வங்கி: கேரளா முதல்வர் கண்டனம்

    பேரிடரால் பாதிக்க்பபட்ட மக்களுக்கான நிவாரண தொகையில் தவனைத் தொகையை பிடித்தம் செய்த வங்கிகளுக்கு கேரளா முதல்வர் பிணராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். நெருக்கடியான நேரங்களில் வங்கிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.



  • Aug 19, 2024 20:47 IST

    ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்ய அ.தி.மு.க விரும்பினால் அனுமதி தரப்படும்: அண்ணாமலை

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து கிணற்கு தவளை போல் பேசியுள்ளார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. நாணய வெளியீட்டு விழா தொடர்பாக அ.தி.மு.க அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செய்ய அ.தி.மு.க விரும்பினால் அனுமதி தரப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 19, 2024 19:50 IST

    சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை கைது செய்துள்ளோம். என்சிசி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளனர். புகார் கிடைக்கப் பெற்றதும் 4 தனிப்படைகள் அமைத்து முக்கிய குற்றவாளி உட்பட 11 பேரை கைது செய்துள்ளோம். சம்பவத்தில் தொடர்புடையவர்கள், மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோவில் கைது செய்துள்ளோம். வேறு எந்த பள்ளிகளில் எல்லாம் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என விசாரணை நடத்தி வருகிறோம். 5 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளிடமும் பேசி உள்ளோம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆட்சியர் சரயு கூறியுள்ளார்.



  • Aug 19, 2024 19:43 IST

    விஷம் கலந்த நெல்லை சாப்பிட்ட புறாக்கள் பலி

    உப்பூரில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த விஷம் கலந்த நெல்களை சாப்பிட்டு 7 புறாக்கள் உயிரிழந்த நிலையில், குடிநீரிலும் விஷம் கலக்கப்பட்டதா என மக்கள் அச்சமடைந்துள்ளது. மேலும் விஷம் வைத்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



  • Aug 19, 2024 19:41 IST

    பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கால், பஞ்சலிங்க அருவி பகுதி, கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்தது



  • Aug 19, 2024 19:36 IST

    பிரேமலதா விஜயகாந்த்துடன் விஜய் சந்திப்பு: கோட் படத்தில் விஜயகாந்த் இருக்கிறாரா?

    சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பிரேமலதாவை சந்தித்தார் நடிகர் விஜய். கோட் பட இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் உடனிருந்தனர்.



  • Aug 19, 2024 18:48 IST

    பாலியல் வன்கொடுமை புகார் வந்ததுமே நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம் - அமைச்சர் கீதா ஜீவன் 

    அமைச்சர் கீதா ஜீவன்: “பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் வந்ததுமே நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 1098 என்ற எண்ணில் புகார் தரலாம்; பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே பெண் குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Aug 19, 2024 17:51 IST

    கேரள திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்; நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை

    கேரள திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017ல் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை வெளியானது. 

    மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

    பாலியல் ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மலையாலத்தில் பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

    பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கட்டாயப்படுத்துகின்றனர். 

    2019-ல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடியானதால் அறிக்கை வெளியானது.



  • Aug 19, 2024 17:32 IST

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; என்.சி.சி போலி முகாம்கள் குறித்து விசாரணை - கிருஷ்ணகிரி கலெக்டர்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் - மாவட்ட ஆட்சியர் சரயு பேட்டி: புகார் பெற்ற உடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி தேவையான ஆலோசனை, உளவியல் உதவிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றத்தை மறைக்க முயன்ற நபர்களையும் போக்சோவில் கைது செய்துள்ளோம்.

    போலியாக NCC முகாம் நடத்தி, வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேறு எந்த பள்ளிகளில் இதுபோன்ற போலி முகாம்கள் நடத்தியுள்ளனர் என்ற விசாரணையும் நடத்தப்படுகிறது.

    பாலியல் தொந்தரவு, வன்கொடுமை போன்ற புகார்களை 1098 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.



  • Aug 19, 2024 16:34 IST

    பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: என்.சி.சி விளக்கம் 

    போலி என்.சி.சி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக என்.சி.சி விளக்கம் அளித்துள்ளது. “கிருஷ்ணகிரியில் தேசிய மாணவர் படை (NCC) முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் என்.சி.சி-க்கு எந்த தொடர்பும் கிடையாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி-யில் பதிவு செய்த, எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. சிறுமி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் என்.சி.சி-யில் உறுப்பினர்கள் இல்லை” என்றும் கிருஷ்ணகிரியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்.சி.சி  தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. 



  • Aug 19, 2024 16:33 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை - ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு  செப்.02 வரை நீதிமன்ற காவல்

    பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு இருப்பதாக பிரபல் ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

    கொலைக்கு திட்டம் தீட்டியதில் பொற்கொடிக்கு தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் பெயரில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியிடம் போலீசார் விசாரணை செய்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். 

    கைது செய்யப்பட்ட பொற்கொடியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு செப்டம்பர் 02ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Aug 19, 2024 16:25 IST

    மனு அளிக்க திரண்ட மாடக்குடி மக்களால் பரபரப்பு 

    மனு அளிக்க திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மாடக்குடி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்வு, நூறு நாள் வேலை திட்டம் ரத்தாகும் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள். 



  • Aug 19, 2024 15:58 IST

    சூரி அடுத்த படத்தில் கமிட் 

    விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து 'விலங்கு' பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூரி.

     



  • Aug 19, 2024 15:57 IST

    வீடு வாடகை விவகாரம் - யுவனிடம் விசாரிக்க போலீசார் முடிவு

    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாடகை விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணையை தொடங்கி இருக்கிறது. போலீசார் விசாரணையில் வாடகை பாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. வாடகை விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் போலீசார் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளனர். 

    ஒவ்வொரு வருடமும் மொத்தமாக வாடகையை யுவன் செலுத்தி வந்த நிலையில், இம்முறை GOAT பட  ஆடியோ வெளியான பிறகு வாடகை தருவதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வீட்டை காலி செய்ய யுவன் முயன்றதாக வீட்டு உரிமையாளர் புகார் அளித்துள்ளார். சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்த நிலையில், அவர் தரப்பு விளக்கத்தை கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 



  • Aug 19, 2024 15:54 IST

    துப்பாக்கி முனையில் கொள்ளை - அக்னிவீரர் கைது

    கடந்த 13ம் தேதி போபாலில் துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் அக்னிவீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    அக்னிவீரரான மோஹித் சிங் பாகேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கைவரிசையை காட்டியுள்ளார். கொள்ளை சம்பவம் நடைபெற்றது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள். 



  • Aug 19, 2024 14:55 IST

    மோடி ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

    என்னுடைய குட்டி நண்பர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி

    - பிரதமர் மோடி



  • Aug 19, 2024 14:53 IST

    பெண் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

    தஞ்சாவூர் பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்டதாக பாப்பாநாடு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சூரியா சஸ்பெண்ட்

    தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் உத்தரவு



  • Aug 19, 2024 14:26 IST

    அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

    சென்னை அக்கரை - திருவான்மியூர் இடையே சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் பணி 60% நிறைவடைந்துள்ளது

    பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி



  • Aug 19, 2024 14:09 IST

    தஞ்சாவூர் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

    கும்பகோணம் கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், அக்டோபர் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு

    கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம்  உள்ளிட்ட 44 குளங்கள், 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ல் உயர்நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு



  • Aug 19, 2024 14:03 IST

    ரயில்வே துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்

    - ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்-க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்



  • Aug 19, 2024 13:17 IST

    கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Aug 19, 2024 12:50 IST

    சித்தராமையா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்

    ஆளுநர் உத்தரவை எதிர்த்து சித்தராமையா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல்

    மூடா விவகாரத்தில் ஆளுநர் உத்தரவை ரத்து செய்ய  கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையா அம்மாநில உயர் நீதிமன்றத்தல் மனுத் தாக்கல்

    மைசூரு நகர்புற மேம்பாட்டு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க உத்தரவிட்ட ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி மனு 



  • Aug 19, 2024 12:46 IST

    தாம்பரம் - செங்கோட்டை தாமதமாக இயக்கம்

    தாம்பரம் - செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கு தாமதமாக, தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிப்பு

    பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களால் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Aug 19, 2024 12:42 IST

    மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

    ரக்‌ஷா பந்தன் - பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய பள்ளி குழந்தைகள்

    டெல்லியில் பள்ளி குழந்தைகளிடம் ராக்கி கட்டிக்கொண்ட பிரதமர் மோடி

    ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    "உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் செழிப்பையும் கொண்டு வரட்டும்"



  • Aug 19, 2024 12:41 IST

    போலி என்.சி.சி கேம்ப்: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்

    கிருஷ்ணகிரியில் என்சிசி கேம்ப்பில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

    பள்ளியில் நடந்தது போலியான என்.சி.சி கேம்ப் என தெரிய வந்துள்ளது

    கைது செய்யப்பட்ட போலி என்.சி.சி மாஸ்டர் சிவராமனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலம்

    ஒய்வு பெற்ற சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் ஒருவரை என்.சி.சி கமாண்டர் என கூறி நம்ப வைத்த சம்பவம்

    சிவராமன் இதே போன்று சூலகிரி பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் போலி என்.சி.சி கேம்ப் நடத்தியது அம்பலம்

    அந்த பள்ளிகளில் எடுக்கப்பட்ட என்.சி.சி கேம்ப் போட்டோக்களை காட்டி பள்ளியில் கேம்ப் நடத்திய சிவராமன்



  • Aug 19, 2024 12:04 IST

    ஆ.ராசா நேரில் ஆஜர்

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆ.ராசா



  • Aug 19, 2024 11:43 IST

    ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

    கன்னியாகுமரி அருகே, பிரபல ரவுடி செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

    காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது துப்பாக்கிச்சூடு



  • Aug 19, 2024 11:33 IST

    தரவரிசை பட்டியல் வெளியீடு

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்



  • Aug 19, 2024 11:33 IST

    நாணயத்தை வெளியிட்டது மத்திய அரசு

    "கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டது மத்திய அரசு, அதனால் தான் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்" - முதல்வர் ஸ்டாலின்



  • Aug 19, 2024 11:32 IST

    இ.பி.எஸ்க்கு ஸ்டாலின் பதில்

    "கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தில் ஏன் இந்தி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்"

    "எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அரசியல் அறிவும் இல்லை"

    "எல்லா தலைவர்களின் நினைவு நாணயங்களிலும் இந்தி இருக்கும்"

    "நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றிய அரசின் நிகழ்ச்சி என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும்"

    "ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆருக்கு வெளியிடப்பட்ட நாணயங்களை ஈபிஎஸ் பார்த்திருக்க மாட்டார்"

    "ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?"

    "எம்ஜிஆர் நாணய வெளியீட்டு விழாவுக்கு ஈபிஎஸ் விடுத்த அழைப்பை ஒன்றிய அரசு மதிக்கவில்லை" - முதல்வர் ஸ்டாலின்



  • Aug 19, 2024 11:17 IST

    முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி நியமனம்

    தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம்

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமித்து தலைமை செயலாளர் முருனகாந்தம் உத்தரவு 



  • Aug 19, 2024 11:03 IST

    தி.மு.க-காரர் பேசுவதை விட அதிகமாக, சிறப்பாக நேற்று ராஜ்நாத் சிங் கருணாநிதி குறித்து பேசினார்: ஸ்டாலின்

    நேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. கலைஞரின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் சென்று பார்வையிட்டார். திமுககாரர் பேசுவதை விட அதிகமாக, சிறப்பாக நேற்று ராஜ்நாத் சிங் கருணாநிதி குறித்து பேசினார். உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார் ராஜ்நாத் சிங் - முதல்வர் ஸ்டாலின்



  • Aug 19, 2024 11:01 IST

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி: ஸ்டாலின்

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி. கூட்டாட்சி, ஜனநாயகம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்தார். தெற்கிலிருந்து உதித்த சூரியனுக்கு நீங்கள் அளித்த இதயப்பூர்வமான அஞ்சலிக்கு நன்றி- முதல்வர் ஸ்டாலின்  



  • Aug 19, 2024 10:49 IST

    ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்: குடியரசுத் தலைவர்



  • Aug 19, 2024 10:36 IST

    மதுரை: தாழ்வாக சென்ற மின்கம்பியில் அரசுப்பேருந்து உரசியதால் பரபரப்பு

    மதுரை திருப்பரங்குன்றத்தில், தாழ்வாக சென்ற மின்கம்பியில் அரசுப்பேருந்து உரசியதால் பரபரப்பு நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள் பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்று தாழ்வாக மின்கம்பிகள் செல்வதாக, அப்பகுதியினர் புகார் சில நாட்களுக்கு முன், கோத்தகிரியில் அரசுப் பேருந்து மீது மின்கம்பி விழுந்து, ஓட்டுநர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



  • Aug 19, 2024 10:35 IST

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

    உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல். 4 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு



  • Aug 19, 2024 09:54 IST

    தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்

    தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்.



  • Aug 19, 2024 09:25 IST

    3வது மாடியில் இருந்து ஏசி கிழே விழுந்ததில் 18 வயது சிறுவன் உயிரிழப்பு

    டெல்லி: பட்டேல் நகர் பகுதியில் உள்ள கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து ஏசி கிழே விழுந்ததில் 18 வயது சிறுவன் உயிரிழப்பு; அருகே நின்று பேசிக்கொண்டிருந்த அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி



  • Aug 19, 2024 09:24 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை : ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு என தகவல்

    பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியதில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு என தகவல்; ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பொற்கொடியை பிடித்து போலீசார் விசாரணை



  • Aug 19, 2024 09:22 IST

    சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகள் விற்கப்படும் சம்பவம் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது

    சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகள் விற்கப்படும் சம்பவம் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரத்தில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது கள்ளச்சந்தை கும்பல் சில்லறை வியாபாரிகள் மூலம் இந்த சிமெண்ட் வெள்ளைப்பூண்டுகளை விற்பனை செய்கின்றனர் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்



  • Aug 19, 2024 08:57 IST

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

    கிருஷ்ணகிரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது. கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை கைது செய்த தனிப்படை போலீசார்.



  • Aug 19, 2024 08:32 IST

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

     தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் ஆளுநர் ஏற்கனவே ஆக.1ம் தேதி டெல்லி சென்று திரும்பிய நிலையில், 2வது முறையாக பயணம். 



  • Aug 19, 2024 07:54 IST

    இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது : தமிழிசை

    தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல். இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் விளக்கம்



  • Aug 19, 2024 07:45 IST

    டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் இன்று பதவியேற்கிறார்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக, எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இன்று பதவியேற்கிறார் இன்று முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் நீடிப்பார் என தகவல்



  • Aug 19, 2024 07:45 IST

    தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: