Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கனமழை வெள்ள எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக 3வது நாளாக நிரம்பி வழியும் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை. இன்று காலை 6 மணி நிலவரப்படி 16,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.பவானி ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருவாய்த் துறை அறிவுறுத்தல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 19, 2024 00:56 ISTமசாஜ் சென்ட்ரில் சோதனை; இளம்பெண்ணுக்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் தீர்ப்பு
2019ம் ஆண்டு நீலாங்கரையில் உள்ள மசாஜ் செண்டரில் விபச்சாரம் நடப்பதாக, அங்கு வேலை செய்த இந்தோனேசிய பெண் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்
இந்நிலையில், மசாஜ் செண்டரில் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு, சோதனை நடத்திய காவல் ஆய்வாளர் நடராஜன் ₹2.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு சரிதான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. -
Jul 18, 2024 20:55 ISTசென்னையில் மழை வெள்ளம் தேங்கினாலும், உடனே அப்புறப்படுத்துவோம் – மேயர் பிரியா
சென்னையில் மழை வெள்ளம் தேங்கினாலும், அதை உடனே அப்புறப்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தை மாநகராட்சி அளிக்கும் என மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்
-
Jul 18, 2024 20:42 IST‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய்
‘மகாராஜா’ படத்தைப் பார்த்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டினார்
-
Jul 18, 2024 20:22 ISTஎம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமின் மனு மீதான விசாரணை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Jul 18, 2024 20:08 IST`வாழை' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு
மாரி செல்வராஜ் இயக்கிய `வாழை' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது
-
Jul 18, 2024 19:57 ISTதமிழகத்தின் 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் நீலகிரி, கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். நெல்லை, குமரி, தென்காசி, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட 31 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 18, 2024 19:39 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 36,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 36,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து நாளை அதிகாலை 50,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது.
-
Jul 18, 2024 19:33 ISTநீட் வினாத்தாள் கசிவு; 4 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கைது
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எய்ம்ஸ் பாட்னாவில் இருந்து நான்கு எம்.பி.பி.எஸ் மாணவர்களை சி.பி.ஐ கைது செய்துள்ளது.
-
Jul 18, 2024 18:52 ISTசூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் முதல் பாடல் ஜூலை 23ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் முதல் பாடல் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-
Jul 18, 2024 18:42 ISTபெங்களூருவில் வேட்டி அணிந்திருந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு; வணிக வளாகத்திற்கு சீல்
பெங்களூருவில் வேட்டி அணிந்திருந்ததால் வணிக வளாகத்திற்குள் விவசாயிக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்படுகிறது. சீல் வைக்கும் நடவடிக்கைக்காக வணிக வளாகத்திற்குள் உள்ளவர்களை மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். வேட்டி அணிந்திருந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த விவகாரம் சட்டமன்றம் வரை சென்ற நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 18, 2024 18:40 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கணவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக் கூடாது அருள் மனைவி மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனது கணவரை (அருள்) என்கவுண்ட்டர் செய்துவிடுவார்கள் என்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக் கூடாது என ஆவடி ஆணையர் அலுவலகத்தில் அருள் மனைவி அபிராமி மனு தாக்கல் செய்துள்ளார்.
-
Jul 18, 2024 18:30 ISTசட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு: செந்தில் பாலாஜியை விடுவிக்க கோர்ட் மறுப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்கும் நோக்கில் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்கிறார் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
-
Jul 18, 2024 18:01 ISTநிதி ஆயோக் அறிக்கைப்படி தமிழ்நாடு பலதுறைகளில் பின்தங்கியுள்ளது - அண்ணாமலை விமர்சனம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “நிதி ஆயோக் அறிக்கைப்படி தமிழ்நாடு பலதுறைகளில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்- பெண் சமத்துவக் குறியிஇட்டில் 10-வது இடட்திலும் சுத்தமான குடிநீரில் 9-வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. குழந்தைகள் காணாமல் போவது சுமார் 11% அதிகரித்துள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
-
Jul 18, 2024 17:27 ISTஉ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் மரணம்
உத்திர பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டதில் 4 பேர் மரணமடைந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்
-
Jul 18, 2024 17:15 ISTவரும் 24-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது
-
Jul 18, 2024 16:49 ISTஇளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு. நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதிப்பு
-
Jul 18, 2024 15:37 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ₹10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்
-
Jul 18, 2024 15:33 ISTசவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்: உச்சநீதிமன்றம் உத்தரவு
குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தடுப்பு காவல் ஆணைக்கு எதிரான அவரது தாயாரின் மனுவை விசாரித்து முடிக்கும் வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 18, 2024 14:58 ISTதென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையில் நீதிமன்ற பணியாளர்கள் ஈடுபட்டனர். இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்காத புகாரில் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின் இணைப்பை துண்டித்து கம்ப்யூட்டர் உள்ளிட்டவை ஜப்தி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கோட்டாட்சியர் உறுதிமொழி பத்திரம் அளித்ததை தொடர்ந்து ஜப்தி நிறுத்திவைக்கப்பட்டது.
-
Jul 18, 2024 14:33 ISTதிருநெல்வேலி தேர்தல் முடிவு: நயினார் நாகேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு
திருநெல்வேலி தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
-
Jul 18, 2024 14:27 ISTவடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. ஓரிரு நாட்களில் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 18, 2024 14:27 ISTதொடர் கன மழை... கோவைக்கு ஆரஞ்சு, நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கும், கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கும் வாய்ப்பு என்றும், கோவைக்கு ஆரஞ்சு, நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 18, 2024 13:58 ISTராமநாதபுரம் தேர்தல் முடிவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்துள்ளார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5.09 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3.42 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
-
Jul 18, 2024 13:55 IST'தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே' - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து
இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கில், "தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. மீனவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2024 13:40 ISTஆம்ஸ்ட்ராங் கொலை: 7 வழக்கறிஞர்கள், 3 பெரிய ரவுடிகளுக்கு தொடர்பா?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 7 வழக்கறிஞர்கள் மற்றும் 3 பெரிய ரவுடிகளுக்கு தொடர்பா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 7 வழக்கறிஞர்களின் பட்டியலை தயாரித்து செல்போன் தொடர்புகளை வைத்து போலீசார் கைது நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும் பலரின் தொடர்புகளை ஆய்வு செய்யும் பணிகளில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது
-
Jul 18, 2024 12:56 ISTகள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி, அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
-
Jul 18, 2024 12:36 ISTசட்டம் - ஒழுங்கு சீர்கேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்: சீமான் அறிவிப்பு
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
-
Jul 18, 2024 12:36 ISTஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்.
-
Jul 18, 2024 12:29 ISTநீட் தேர்வு முறைகேடு: சென்னை ஐஐடி குழு அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை ஐஐடி குழு அளித்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
வினாத்தாள் கசிவு, நீட் தேர்வை முழுமையாக பாதித்தது என்பதை நிரூபித்தால் தேர்வை ரத்து செய்யலாம்- தலைமை நீதிபதி சந்திரசூட்
சென்னை ஐஐடி இயக்குநர், தேசிய தேர்வு முகமையின் உறுப்பினராக இருப்பதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் தரப்பு வாதம்
-
Jul 18, 2024 12:01 ISTசசிகலாவுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நீங்கள் செய்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிழலாக 33 ஆண்டுகளாக இருந்த நீங்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள்?
- வி.கே.சசிகலாவுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
-
Jul 18, 2024 12:01 ISTஎம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
நில மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கைது
ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் கைது
-
Jul 18, 2024 11:57 ISTதுவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
அடுத்த 2 மாதத்திற்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 40,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்;
பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியீடு
-
Jul 18, 2024 11:22 ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,520 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக அதிகரிப்பு.
தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
Jul 18, 2024 11:04 ISTஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் பதவியேற்றனர்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், என்.கோட்டீஸ்வர் சிங் பதவியேற்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
Jul 18, 2024 10:37 ISTமதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகன் கொலை வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகள் கைது
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலமுருகன் கொலை வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகள் கைது ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேர் கைது முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தந்தை, மகனான மகாலிங்கம், அழகு விஜய்யை கைது செய்த போலீசார் குடும்ப பிரச்சினையில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
-
Jul 18, 2024 10:07 ISTநீட் முறைகேடு சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு
நீட் முறைகேடு சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக NTA கூறியுள்ளது.
-
Jul 18, 2024 09:39 ISTமகாராஷ்டிரா மாநிலம் கும்பே நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் கும்பே நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்ட ஆன்வி கம்தார் உயிரிழப்பு மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
-
Jul 18, 2024 09:39 ISTவங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி .மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
Jul 18, 2024 08:09 ISTஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு லாஸ் வேகாஸில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி.
-
Jul 18, 2024 08:08 ISTநீலகிரி: 4 தாலூகாக்களில் பள்ளி விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவிப்பு
-
Jul 18, 2024 08:06 ISTகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை. ஒகேனக்கலில் தொடரும் வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு கர்நாடக அணைகளில் இருந்து 50,000 கன அடி நீர் திறந்துள்ளதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு.
-
Jul 18, 2024 08:06 IST19 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் . நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை தொடரும்" "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர் , நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை நீடிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.