Tamil News updates : Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார்- மகன் சஜீப் வஜீத் உறுதி
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு கடின உழைப்புக்குப் பிறகு சிறுபான்மையினர் தனக்கு எதிராக திரும்பியதால் ஷேக் ஹசீனா மிகவும் அதிருப்தியடைந்து விட்டார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஞாயிற்றுக்கிழமை முதல் ஆலோசித்து வந்தார். இனி அவர் அரசியலுக்கு திரும்பி வரமாட்டார்.
சஜீப் வஜீத்
-
Aug 05, 2024 22:50 ISTவங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை விடுவிக்க உத்தரவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை விடுதலை செய்ய வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது பரம போட்டியாளரான அவாமி லீக்கின் ஷேக் ஹசீனா நிர்வாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும், இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. -
Aug 05, 2024 22:23 ISTமேற்கு வங்கத்தில் இந்திய-வங்காள எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு; அமைதி காக்க மம்தா வேண்டுகோள்
அண்டை நாட்டில் நிலவும் அமைதியின்மையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்க மக்கள் அமைதி காக்கவும், ஆத்திரமூட்டல்களை தவிர்க்கவும் முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய கொந்தளிப்பு இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளது.
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை டாக்காவிற்கு திட்டமிடப்பட்ட விமானங்களை ரத்து செய்தன, அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
-
Aug 05, 2024 21:05 ISTவங்க தேச நிலவரம்; மோடியிடம் அமைச்சர் குழு விளக்கம்
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு வங்கதேச நிலைமை குறித்து விளக்கமளித்தது. இதற்கான கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.
Cabinet Committee on Security met today at LKM and was briefed about the situation in #Bangladesh. pic.twitter.com/BczeBR5kxS
— DD News (@DDNewslive) August 5, 2024 -
Aug 05, 2024 20:45 ISTவயநாடு நிலச்சரிவு உயிர்பலி 400-ஐ கடந்தது
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. -
Aug 05, 2024 20:06 ISTவங்கதேச நிலவரம்; ஜெய்சங்கரிடம் பேசிய ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை சந்தித்து வங்கதேசத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
-
Aug 05, 2024 20:00 ISTவங்கதேசத்தில் 14 போலீசார் படுகொலை; 300 பேர் காயம்
வங்கதேசத்தில் 14 போலீசார் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 300 போலீசார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 05, 2024 19:51 ISTடாக்காவுக்கு விமான சேவையை நிறுத்திய ஏர் இந்தியா
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலான நிலையில் ஏர் இந்தியா விமான சேவையை டாக்காவுக்கு நிறுத்தியுள்ளது.
-
Aug 05, 2024 19:27 ISTடாக்கா விமான நிலையம் மூடல்
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ள நிலையில் டாக்கா விமான நிலையம் 6 மணி நேரத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது.
-
Aug 05, 2024 19:18 ISTவங்கதேச பிரதமர் இந்தியாவில் தஞ்சம்; கொல்கத்தா எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வங்கதேசம்- கொல்கத்தா எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எஃப் டிஜி தல்ஜித் சிங் சவுத்ரி, மற்ற மூத்த அதிகாரிகளுடன் திங்களன்று இந்தியா-வங்காளதேச எல்லையில் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்வதற்காக கொல்கத்தாவை சென்றடைந்துள்ளார். -
Aug 05, 2024 18:24 ISTடாக்கா விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிப்பு
வங்காளதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்படும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
-
Aug 05, 2024 18:23 ISTஇந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கிய ஷேக் ஹசீனா
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று அதிகாலை தனது டாக்கா இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், இன்று மாலை 6 மணியளவில் டெல்லிக்கு அருகில் உள்ள காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கினார்.
-
Aug 05, 2024 18:22 ISTவங்கதேச உள்நாட்டு கலவரம்: தொலைதொடர்பு சேவைகளை மீட்டெடுத்தது கிராமின்போன்
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தில், வங்கதேச தொலைத்தொடர்பு ஆபரேட்டர் கிராமின்போன் 3G மற்றும் 4G நெட்வொர்க்குகளை மீட்டெடுத்து முழுவதும் மொபைல் இணைய சேவைகளை மக்கள் பெறுவதற்கு வழி செய்துள்ளது என்று நார்வேயின் டெலினர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
மொபைல் இணைய சேவைகளை உடனடியாகவும் முழுமையாகவும் மீட்டெடுக்குமாறு கிராமின்போன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்று டெலிநார் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
Aug 05, 2024 17:33 ISTவங்கதேசத்தில் அமைதி நிலவ வேண்டும்: மம்தா பானர்ஜி
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளதால், கடுமையாக நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள பெட்ராபோல் தரை துறைமுகம் வழியாக சரக்கு போக்குவரத்து மற்றும் கொல்கத்தா மற்றும் டாக்கா இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
-
Aug 05, 2024 17:32 ISTவங்கதேசத்தில் சிக்கிய இந்தியர்கள்: நில துறைமுக அதிகாரி தகவல்
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளதால், இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள பெட்ராபோல் தரை துறைமுகம் வழியாக சரக்கு போக்குவரத்து மற்றும் கொல்கத்தா மற்றும் டாக்கா இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் வன்தமுறை வெடித்து வரும் நிலையில், இந்திய டிரக்குகள் சிக்கியுள்ளன என்று வங்காளதேச எல்லையின் இந்தியப் பகுதியில் உள்ள நிலத் துறைமுகமான பெட்ராபோலின் கிளியரிங் ஏஜெண்ட்ஸ் ஸ்டாஃப் வெல்ஃபேல் அசோசியேஷன் செயலர் கார்த்திக் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
-
Aug 05, 2024 17:06 ISTவங்கதேசத்தில் ராணுவ ஆட்சி: ரயில் சேவையை நிறுத்தியது இந்தியா
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்து ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலைய அனைத்து ரயில் சேவைகளையும் இந்தியா நிறுத்தியுள்ளஇந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
-
Aug 05, 2024 17:03 ISTஇது வெறும் சிக்னல் அல்ல... அதையும் தாண்டி: சென்னை காவல்துறை
சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னையில் வட்ட வடிவில் ஒளிரும் சிவப்பு சிக்னல், இதய வடிவில் ஒளிர விடப்பட்டது ``இது வெறும் சிக்னல் இல்ல; அதையும் தாண்டி..!'' என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்திய காவல்துறை
-
Aug 05, 2024 16:48 ISTபாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் கமத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-2 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
-
Aug 05, 2024 16:43 ISTகோவையில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்கள் மீட்பு!
கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டு பொதுமக்கள் தவறவிடும் செல்போன்கள் குறித்து உரிய புகார் பெற்று, IMEI நம்பரை வைத்து செல்போன்களை கண்டறிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி 2024-ல் பொதுமக்கள் தவறவிட்ட ₹94.78 லட்சம் மதிப்பிலான 504 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
-
Aug 05, 2024 16:42 ISTபிரதமர் அலுவலகத்தை சூரையாடிய போராட்டக்காரர்கள்
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்து டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ளது
-
Aug 05, 2024 16:41 ISTயானை தாக்கி படுகாயமடைந்த நபரை சந்தித்த அமைச்சர்
கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ₹50,000 உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார்
-
Aug 05, 2024 16:40 ISTதிரிபுரா வந்தடைந்தார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரத்தால் தலைநகர் டாக்காவில் இருந்து திரிபுரா வந்துள்ள ஷேக் ஹசீனா லண்டன் செல்ல இருப்பதாக தகவல்
-
Aug 05, 2024 16:39 ISTராணுவ ஆட்சியில் வங்கதேசம்: முஜிபுர் ரகுமான் சிலை உடைப்பு
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரகுமான் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
-
Aug 05, 2024 16:19 ISTஇன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு - வங்கதேச ராணுவ தளபதி வக்கர் உஸ் ஜமான் உறுதி
வங்கதேசத்தில் அவசர நிலை பிரகடனம் மற்றும் ஊரடங்கு தேவையில்லை; இன்று இரவுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்; சட்டம் ஒழுங்கை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நடத்துவோம் என்று வங்கதேச ராணுவ தளபதி வக்கர் உஸ் ஜமான் உறுதி தெரிவித்துள்ளார்.
-
Aug 05, 2024 15:55 ISTஷேக் ஹசீனா ராஜினாமா; ராணுவ ஆட்சி அமல் - ராணுவ தளபதி வக்கர் உஸ் ஜமான் அறிவிப்பு
வங்கதேச நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கர்-உஸ்-ஜமான் ராணுவம் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் என்றார். நாட்டில் நடக்கும் பரவலான வன்முறைகளுக்கு தாம் முழுப்பொறுப்பேற்பதாகவும் கூறி, போராட்டக்காரர்கள் தங்களது போராட்டங்களை கைவிடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
-
Aug 05, 2024 15:25 ISTவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா நாட்டை விட்டு வெளியேறினார்
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தங்கள் தொடர்பான பல வார போராட்டங்களைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததாக வங்கதேச தூதரக அதிகாரிகள் டெல்லியில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
டெய்லி ஸ்டார் படி, ஹசீனா திங்கள்கிழமை டாக்காவிலிருந்து "பாதுகாப்பான இடத்திற்கு" புறப்பட்டார். ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, அவர் இன்று இந்தியாவில் தரையிறங்குவார். அவரும் அவரது சகோதரியும் அவரது அதிகாரப்பூர்வ இல்லமான கோனோ பாபனை விட்டு வெளியேறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Aug 05, 2024 15:20 ISTவங்கதேசத்தை விட்டு வெளியேறினார் பிரதமர் ஷேக் ஹசீனா?
வங்கதேசத்தில் 300 பேர் உயிரிழந்த புதிய வன்முறையின் பின்னணியில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார் என்று அந்நாட்டு மொழி நாளிதழ்களின் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் ராணுவ தளபதி வக்கர் உஸ் ஜமான் விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பங்களாதேஷின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான மோதல்கள் நடந்தன, இறப்பு எண்ணிக்கை குறைந்தது 300 ஆக உயர்ந்துள்ளது என்று ஏ.எஃப்.பி செய்தி தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
-
Aug 05, 2024 15:01 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
-
Aug 05, 2024 14:36 ISTசுற்றுலாப் பயணிகளை மீட்ட போலீசார்
குஜராத்: காவேரி ஆற்றில் திடீரென பெய்த கனமழை காரணமாக வங்கன் கிராமத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை நவ்சாரியில் உள்ள வான்ஸ்டா போலீசார் மீட்டனர்.
#WATCH | Gujarat: Vansda Police in Navsari rescued tourists who were stranded in Vangan Village when sudden heavy rainfall led to a spate in Kaveri River.
— ANI (@ANI) August 5, 2024
(Video: Navsari Police) pic.twitter.com/vTRHaP2Hv5 -
Aug 05, 2024 14:15 ISTகார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சத்தியமூர்த்தி பவன் முன்பு 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
-
Aug 05, 2024 14:12 ISTநெல்லை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தேர்வு
நெல்லை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
ராமகிருஷ்ணன் - 30 வாக்குகள்
பவுல் ராஜ் - 23 வாக்குகள்
செல்லாத வாக்கு – 1
நெல்லை மேயரானார் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன்
-
Aug 05, 2024 13:40 ISTமாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர்,மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 05, 2024 13:37 ISTநெல்லை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல்
நெல்லை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
ராமகிருஷ்ணன் - 30 வாக்குகள்
பவுல் ராஜ் - 23 வாக்குகள்
செல்லாத வாக்கு - 1
-
Aug 05, 2024 13:25 ISTஎம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை
போலி ஆவணம் கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க வழக்கில், திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய தனியார் நிறுவன அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார் -
Aug 05, 2024 13:24 ISTமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் கணிப்பு
-
Aug 05, 2024 13:21 ISTவிருதுநகருக்கு ஆக.7ம் தேதி உள்ளூர் விடுமுறை
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அதனை ஈடு செய்யும் விதமாக ஆக.17ம் தேதி பணிநாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு
-
Aug 05, 2024 12:42 ISTகோவை மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு,
மேயர் வேட்பாளராக, தான் தேர்வு செய்யப்படாததால், கண்ணீர் விட்டு அழுத கவுன்சிலர் மீனா லோகு.
மேயர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேயர் வேட்பாளர் ரேஸில், மீனா லோகுவின் பெயரும் அடிபட்ட நிலையில், ரங்கநாயகி தேர்வு
ஏமாற்றமடைந்த மீனா லோகு அழுதவாறு காரில் ஏறி புறப்பட்டார்
-
Aug 05, 2024 12:29 ISTநீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
சென்னை கொளத்தூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு.
நீச்சல் பயிற்சியின் போது சிறுவன் உயிரிழந்த சோகம். பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு. நீச்சல்குளம் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்து கொளத்தூர் போலீசார் விசாரணை
-
Aug 05, 2024 12:26 ISTமழையை எதிர்கொள்ள அரச தயார்- ஸ்டாலின்
எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி
-
Aug 05, 2024 12:26 ISTஅமெரிக்கா செல்லும் ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்க்க 27-ம் தேதி அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார்.
முன்னதாக வரும் 22ம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம், 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் முதல்வரின் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்திக்க உள்ளதாக தகவல்.
-
Aug 05, 2024 11:53 ISTகொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு
கொளத்தூர் தொகுதியில் திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு
வீனஸ் நகரில் துணை மின் நிலையம், கழிவுநீர் வெளியேற்று நிலையத்தை பார்வையிட்ட ஸ்டாலின்
-
Aug 05, 2024 11:39 ISTநெல்லை மேயர் தேர்தல்: 2 பேர் வேட்பு மனுத் தாக்கல்
திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டி. இவர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜூம் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மேயர்பதவிக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
-
Aug 05, 2024 11:37 ISTதுணைநிலை ஆளுநர் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது
"டெல்லி மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களை நியமிப்பதில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. டெல்லி அரசின் ஆலோசனையை இதில் அவர் கேட்கத் தேவையில்லை"
துணை நிலை ஆளுநருக்கு எதிராக டெல்லி ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
Aug 05, 2024 11:24 ISTமாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தம்
சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவு
வாகனங்களை ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி தரப்பில் குப்பை சேகரிப்பிற்கு மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்காக 2,886 வாகனங்கள் உள்ளன
ஓட்டுநர்கள் சிலர் பணியில் இருப்பதாக கையெழுத்து போட்டுவிட்டு, சொந்த வேலைகளுக்கு சென்றுவிடுவதால் பணிகள் முடக்கம் என புகார்
-
Aug 05, 2024 11:09 ISTநெல்லை மேயர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமஸ்கிருஷ்ணன் போட்டி
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
வழக்கமாக வரும் சைக்கிளிலேயே வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை தந்த ராமகிருஷ்ணன்
நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 உறுப்பினர்களில் 51 பேர் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள்
-
Aug 05, 2024 10:58 ISTவங்கதேசம் வன்முறை ; ரயில்கள் சேவை நிறுத்தம்
வன்முறை அதிகரித்து வருவதால் அனைத்து சேவைகளும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக வங்கதேச ரயில்வே கூறியுள்ளது. நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
"தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளையும் மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்" என்று பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
-
Aug 05, 2024 10:37 ISTவங்கதேச வன்முறை : இதுவரை 300 பேர் உயிரிழப்பு
வங்கதேச அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 300 ஐ எட்டியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Aug 05, 2024 10:28 ISTதமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது: அமைச்சர் எஸ்.ரகுபதி
“தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது; ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது; இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது; மேலும் சட்டம் - ஒழுங்கை பேணிக்காப்பதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” - புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
-
Aug 05, 2024 10:26 ISTவங்கதேசம்: போராட்டக்கார்கள் நீண்ட பேரணி
வங்கதேசம் மேலும் ஒரு பதட்டமான நாளுக்கு தயாராகி வருகிறது, இன்று டாக்கா வரை நீண்ட பேரணியில் கலந்துகொள்ளுமாறு போராடக்கார்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
Aug 05, 2024 10:00 ISTவயநாடு நிலச்சரிவு: தேடுதல் பணியில் ஈடுபட்ட 18 பேர் வனப்பகுதிக்குள் சிக்கி தவிப்
வயநாடு நிலச்சரிவு - சாலியாற்றில் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்ட 18 பேர் வனப்பகுதிக்குள் சிக்கி தவிப்பு; உள் வனப்பகுதியில் தேடுதல் பணியின் போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு குறைவான வெளிச்சம் காரணமாக சாலியாற்றை கடக்க முடியாமல் 14 மீட்புக் குழுவினர், 4 தன்னார்வ மீட்புப் பணியாளர்கள் உட்பட 18 பேர் சிக்கி தவிப்பு
-
Aug 05, 2024 09:52 ISTவங்கதேச வன்முறை : 14 போலிசார் கொலை: 300 கேர் காயம்
காவல்துறை தலைமையகத்தின் தகவலின்படி, வன்முறையில் இதுவரை நாடு முழுவதும் 14 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் சிராஜ்கஞ்ச் எனயட்பூர் காவல் நிலையத்தில் கொல்லப்பட்டனர். கொமிலாவின் எலியட்கஞ்சில் ஒருவர் கொல்லப்பட்டதாக பெங்காலி மொழியின் முன்னணி செய்தித்தாள் ப்ரோதோம் அலோ தெரிவித்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.