Advertisment

Tamil Breaking News Highlights: மீனவர்கள் கைது: ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fishersmens

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2772 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 124 மில்லியன் கன அடியாக உள்ளது.  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 301 மில்லியன் கன அடியாக உள்ளது. 

  • Jul 01, 2024 23:05 IST
    லண்டனில் சர்வதேச அரசியல் படிக்க செல்கிறார்; அங்கிருந்தே கட்சிப் பொறுப்பை கவனிப்பார் அண்ணாமலை

    தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 5 மாதங்கள் லண்டனில் தங்கி படித்தபடியே தலைவர் பணிகளை கவனிப்பார்; அண்ணாமலை உயர்கல்விக்கக பிரிட்டன் சென்று சர்வதேச அரசியல் குறித்த படிப்பில் பங்கேற்கிறார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 12 அரசியல் தலைவர்களைப் படிக்க அழைக்கிறது. செப்டம்பர் 2-ம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அண்ணாமலை லண்டன் செல்கிறார்.



  • Jul 01, 2024 22:05 IST
    சென்னை மாவட்ட பா.ஜ.க தலைவர் மீது  செயலாளர் புகார்; தலைமறைவான சாய் சத்யனுக்கு போலீஸ் வலைவீச்சு 

    சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு செயலாளர் பாலசுப்ரமணியம் அளித்த கொலை மிரட்டல் புகாரில், பா.ஜ.க கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக பாலசுப்ரமணியம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவான சாய் சத்யனை போலீசார் தேடி வருகின்றனர்.



  • Jul 01, 2024 21:19 IST
    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகருக்கு கொடுத்த கடனைத் திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வாங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 



  • Jul 01, 2024 20:36 IST
    ராகுல் காந்தியிடம் பணிவு இல்லை - மக்களவையில் ஜெ.பி. நட்டா பேச்சு

    மக்களவையில் ராகுல் காந்தி பா.ஜ.க-வையும் மோடியையும் விமர்சனம்  செய்து பேசியது குறித்து, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில், “ராகுல் காந்தி தேர்தல் தீர்ப்பை புரிந்துகொள்ளவில்லை; அல்லது அவரிடம் பணிவு இல்லை” என்று கூறினார்.



  • Jul 01, 2024 18:29 IST
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் - நீதிபதிகள் கருத்து

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை" அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என துணை காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்று மனுதாரர் கூறியுள்ள நிலையில, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது என சிபிஐ தரப்பு கூறியுள்ளது.



  • Jul 01, 2024 17:37 IST
    மகளிர் டெஸ்ட் - இந்தியா அபார வெற்றி

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது 



  • Jul 01, 2024 17:34 IST
    நீட் தேர்வின் பாகுபாட்டினால் 20 உயிர்களை இழந்துள்ளோம்: ஆ.ராசா

    "இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை அரசு குறி வைக்கிறது" "இது தான் பாசிசம், இது தான் இனவாதம்" "நீட் தேர்வில் நிலவும் பாகுபாட்டின் காரணமாக 20 உயிர்களை இழந்துள்ளோம்" என திமுக எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.



  • Jul 01, 2024 16:49 IST
    திராவிட மண்ணில் பா.ஜ.க வெற்றி பெறவில்லை: ஆ. ராசா

    “8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும் திராவிட மண்ணில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார் இந்திரா காந்தி” என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.



  • Jul 01, 2024 16:11 IST
    ராகுல் காந்தி தேர்தல் வெற்றியை ரத்து செய்யக் கோரி வழக்கு

     

    ராகுல் காந்தி குடியுரிமை விவகாரத்தை கேள்விக்குள்ளாக்கி அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமையை ஆன்லைனில் டவுன்லோடு செய்தேன் என வழக்கறிஞர் கூறியிருந்தார்.



  • Jul 01, 2024 15:21 IST
    திரிசூலம் அகிம்சையின் சின்னம்; பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு

    ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் மட்டும் இந்துக்கள் அல்ல என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “திரிசூலம் வன்முறையின் சின்னம் அல்ல; அது அகிம்சையின் சின்னம்” என்றும் கூறினார்.



  • Jul 01, 2024 14:49 IST
    மக்களவையில் சிவன் படத்தை காட்டி பேசிய ராகுல் காந்தி

    சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. மாறாக அகிம்சையின் சின்னம்

    பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் எனவும், காந்தியை ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் அவர் கூறுகிறார். இவர் வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் இதை அறிந்திருக்கலாம்

    உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.            

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றர்



  • Jul 01, 2024 14:47 IST
    எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது: ராகுல் காந்தி

    கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 


    மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே; கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. 
    எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது.


    - மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு



  • Jul 01, 2024 14:32 IST
    மெட்ரோ ரயில்களில் 84.33 லட்சம் பேர் பயணம்

    ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது;


    அதிகப்பட்சமாக ஜூன் 21ம் தேதி 3,27,110 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்



  • Jul 01, 2024 14:31 IST
    நீலகிரியில் சினிமா படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

    தோட்டகலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் படப்பிடிப்புக்கு அனுமதி தேவைப்படுபவர்கள் தோட்டகலை அலுவலகத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 01, 2024 13:58 IST
    செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்

    வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

    செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு



  • Jul 01, 2024 13:46 IST
    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைகு வாய்ப்பு

    திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 01, 2024 13:46 IST
    புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும்: அமித்ஷா

    புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். புதிய சட்டங்கள் மூலம்  பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தண்டனை வழங்குவது மட்டுமல்ல, நீதியை நிலைநாட்டவும், இந்த திருத்த சட்டங்கள் உதவும்.

     
    புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்
    - அமித்ஷா



  • Jul 01, 2024 13:11 IST
    தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

    வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம்

    மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம்

    ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம்

    சுற்றுலாத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம்

    பொதுப்பணித்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம்

    நீர்வளத் துறை செயலாளராக மணி வாசன் நியமனம்

    உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

    நெடுஞ்சாலை துறை செயலாளராக செல்வராஜ் நியமனம்



  • Jul 01, 2024 13:01 IST
    அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி

    நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி

    ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

    சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமைச்சர் புறக்கணிப்பதாக தகவல்



  • Jul 01, 2024 12:47 IST
    11 பேருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில், முக்கிய குற்றவாளிகள் 11 பேருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல் - கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

    கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேருக்கு சிபிசிஐடி காவல்

    5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கோரிய நிலையில், 2 நாள் காவல்.

    விஷ சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்



  • Jul 01, 2024 12:46 IST
    நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கள்ளக்குறிச்சி விவகாரம்

    நாடாளுமன்றத்தில் எதிரொலித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்

    "தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்துள்ளனர், இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று பதில் அளிக்க வேண்டும்"

    மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்சு

    வெட்கக்கேடு... வெட்கக்கேடு... என முழக்கமிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள்



  • Jul 01, 2024 12:30 IST
    ஜனாதிபதி உரை: கார்கே விமர்சனம்

    குடியரசுத் தலைவரின் உரையில் தொலைநோக்கு சிந்தனையோ வழிகாட்டுதலோ இல்லை

    ஏழைகள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் குறித்து குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் இடம் பெறவில்லை

    குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு



  • Jul 01, 2024 12:08 IST
    5 மாவட்டங்களில் லேசானது மழை

    தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    திருவள்ளூர், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jul 01, 2024 11:54 IST
    விஷச் சாராய வழக்கு: 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    விஷ சாராய வழக்கு - முக்கிய குற்றவாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு

    கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் ஆஜர் - சற்று நேரத்தில் விசாரணை

    விஷ சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேர் ஆஜர்



  • Jul 01, 2024 11:53 IST
    கள்ளக்குறிச்சி வழக்கு: விசாரணைக்கு எடுத்தது உயர் நீதிமன்றம்

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம்

    கல்வராயன் மலை பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன் வந்து வழக்கு

    தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, டிஜிபி எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு



  • Jul 01, 2024 11:43 IST
    3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது

    தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் பரிந்துரை



  • Jul 01, 2024 11:23 IST
    ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

    நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த கோரி ஆர்ப்பாட்டம்

    மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு

    மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்



  • Jul 01, 2024 11:01 IST
    5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட அதிநவீன பேருந்துகள்



  • Jul 01, 2024 10:59 IST
    எம்.பி.யுமான சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திரிகோணமலை எம்.பி.யுமான சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன் - பிரதமர் மோடி சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் - பிரதமர் மோடி சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் - பிரதமர் மோடி



  • Jul 01, 2024 10:56 IST
    அமைச்சர்கள் சி.வி.கணேசன், சேகர்பாபு உள்ளிட்டோர் வாக்குசேகரிப்பு

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் சி.வி.கணேசன், சேகர்பாபு உள்ளிட்டோர் வாக்குசேகரிப்பு



  • Jul 01, 2024 10:42 IST
    ண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை: 8 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடும் காவல்துறை

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை மஞ்சுவிரட்டு விழாவில் மாடு பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரங்கேறிய இரட்டை கொலை 8 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடும் காவல்துறை



  • Jul 01, 2024 09:55 IST
    25 மீனவர்கள் கைது : விடுவிக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட மீனவர்கள்

    பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள், 4 படகுகளை விடுவிக்க வலியுறுத்தல் கடலில் இறங்கும் போராட்டத்திற்கு முன்பாக சாலைமறியலில் ஈடுபட்ட மீனவர்கள்



  • Jul 01, 2024 09:54 IST
    தொடரும் கனமழை காரணமாக பந்தலூர் பகுதியைச் சுற்றி 20 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

    தொடரும் கனமழை காரணமாக பந்தலூர் பகுதியைச் சுற்றி 20 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் .நீர்நிலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை சாலை துண்டிக்கப்பட்டதால் 20க்கும் மேலான கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு பந்தலூர் பொன்னானி, தொரப்பள்ளி ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம் பாடந்துறை பகுதியில் சிறிய அளவிலான மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு.



  • Jul 01, 2024 09:52 IST
    நீட் மறு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

    நீட் மறு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு .மறுதேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்தமாக தரவரிசை பட்டியல் மாற்றி வெளியீடு exams.nta.ac.in/NEET எனும் இணையதளத்தில் மறு தேர்வுக்கான முடிவுகளை அறியலாம் 563 மாணவர்களுக்கு நடந்த மறு தேர்வில், 750 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.



  • Jul 01, 2024 09:36 IST
    புதிய விண்வெளிக் கொள்கையை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசு

    விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விண்வெளிக் கொள்கையை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசு வலுவான தொழில்துறை உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கம் விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கம் குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை Space Bay-ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவு



  • Jul 01, 2024 09:22 IST
    புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் டெல்லியில் முதல் வழக்குப்பதிவு

    டெல்லி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்ததாக வழக்கு பீகாரை சேர்ந்த தெருவோர வியாபாரி பங்கஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.



  • Jul 01, 2024 09:11 IST
    3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிkக்க: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்;

    3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்; இன்று முதல் 3 புதிய குற்றவியல் திருத்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில் நோட்டீஸ்



  • Jul 01, 2024 08:45 IST
    நடிகர் சங்க தலைவராக மோகன்லால் 3வது முறையாக போட்டியின்றி தேர்வு

    மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவராக மோகன்லால் 3வது முறையாக போட்டியின்றி தேர்வு செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்



  • Jul 01, 2024 08:44 IST
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்



  • Jul 01, 2024 07:52 IST
    நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சோகம். 

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சோகம். 



  • Jul 01, 2024 07:51 IST
    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை நான்கு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக் கடற்படை அத்துமீறல் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக மீனவ கிராம மக்கள் வேதனை. 



  • Jul 01, 2024 07:50 IST
    வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிந்தது

    19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிந்தது.  வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து 1809.50 ரூபாய்க்கு விற்பனை வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மாதம் 1840.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனை. 



  • Jul 01, 2024 07:49 IST
    இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மரணம்

    இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (91) காலமானார். கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Jul 01, 2024 07:48 IST
    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை . நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு . 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment