Advertisment

Tamil News Updates: இறுதி கட்ட மக்களவை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

Tamil New Live Updates: இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha elections Unlike first 4 phases women voter turnout more than men in Phase 5

IE Tamil Updates

Petrol Diesel price:

Advertisment

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 ஏரிகளின் நீர்நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.33% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 49.11%, புழல் - 88.79%, பூண்டி - 9.28%, சோழவரம் - 9.62%, கண்ணன்கோட்டை - 64.6%

  • Jun 01, 2024 07:02 IST
    இறுதி கட்ட மக்களவை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

    நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.  

    அதன்படி, உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

    ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு இறுதி கட்டமாக 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



  • May 31, 2024 22:50 IST
    கருத்தக்கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவிப்பு

    தேர்தலுக்கு பிறகான கருத்தக்கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு, ஊடக விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்போம் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.



  • May 31, 2024 20:36 IST
    நீதிமன்றங்களில் ஆன்லைன் ஃபைலிங் கட்டாயம் உத்தரவு ஒத்திவைப்பு

    தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆன்லைன் ஃபைலிங் கட்டாயம் என்ற உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • May 31, 2024 19:49 IST
    டி20 உலககோப்பை : முதல் பயிற்சி ஆட்டத்தை தவறவிடும் விராட்கோலி

    டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நாளை வங்கதேச அணியுடன் மோத உள்ள நிலையில், இந்த போட்டியில் விராட்கோலி பங்கேற்பது கடினம் என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்திய அணி அமெரிக்கா சென்றுவிட்ட நிலையில், விராட்கோலி நேற்று தான் அமெரிக்க சென்றுள்ளார். இதனால் அவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற முடியாத நிலை உள்ளது. அதே சமயம் வரும் 5-ந் தேதி நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டிகளில் இந்திய அணியில் களமிறங்குவார்.



  • May 31, 2024 19:27 IST
    சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு : ராகுல் காந்திக்கு சம்மன்

    கடந்தாண்டு மே 5ம் தேதி சாவர்க்கர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக, சாவர்க்கரின் பேரன் சாத்யகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்தார்.



  • May 31, 2024 19:26 IST
    கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர்

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் புதிய இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.



  • May 31, 2024 18:27 IST
    மணிப்பூர்: சாலைகளில் மீன்பிடித்த மக்கள்!

    ரெமல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மணிப்பூரில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மக்கள் மீன்பிடித்தனர்.



  • May 31, 2024 17:58 IST
    அரசு நிலத்தில் மத வழிபாட்டு தலங்கள்: ஓராண்டுக்குள் அகற்ற உத்தரவு

    அரசு நிலங்களில் சட்ட விரோதமாக உள்ள மத வழிபாட்டு தலங்களின் கட்டங்களை ஓராண்டுக்குள் அகற்ற வேண்டும் என கேரள அரசுக்கு மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • May 31, 2024 17:35 IST
    வெள்ளியங்கிரி மலையேற்ற அனுமதி இன்று நிறைவு

    கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெற்றது. அனைவரும் கீழே இறங்கிய பின்பு மலை பாதை முழுவதும் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.



  • May 31, 2024 16:33 IST
    இந்தியா வந்த 100 டன் தங்கம்

    இங்கிலாந்து மத்திய வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் 100 டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி இந்தியா கொண்டுவந்தது.
    இந்தியாவுக்கு சொந்தமான 822.1 டன் தங்கத்தில் 508.3 டன் இந்தியாவிலும், மீதமுள்ள 313.8 டன் வெளிநாட்டிலும் உள்ளது.



  • May 31, 2024 16:24 IST
    ஊராட்சி தலைவரின் அதிகாரம் பறிப்பு

     

    தென்காசி மாவட்டம் ஆவுடையனூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதால், தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



  • May 31, 2024 15:50 IST
    தமிழ்நாட்டில் பள்ளி கோடை விடுமுறை நீட்டிப்பு

     

    தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
    ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கத்தால் 4 நாள்கள் கழித்து திறக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 31, 2024 15:28 IST
    சிசுவின் பாலினத்தை அறிவித்ததால் சர்ச்சை: யூடியூபர் இர்ஃபான் அளித்த பதில் ஏற்கப்பட்டது

    யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை வெளிப்படுத்திய வீசியோ சர்ச்சையானது. இந்த சர்ச்சை வீடியோ குறித்து மருத்துவத் துறையிடம் விளக்கம், விழிப்புணர்வு காணொலி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.  “குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறியும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வெளிநாடுகளிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை” எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறையின் சார்பில் மத்திய சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 



  • May 31, 2024 14:48 IST
    இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; ஸ்டாலினின் டெல்லி பயணம் ரத்து

    டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில், ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியாகும் நிலையில் ஜூன் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை” என தகவல் வெளியாகி உள்ளது.



  • May 31, 2024 14:07 IST
    அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; கலங்கரை விளக்கம் - ஆர்.பி உதயகுமார் பதிலடி

    அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு என அண்ணாமலை கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்; அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை; விளம்பர வெளிச்சத்தில் அரசியல் செய்கிறார்; தமிழ்நாட்டிற்காக அண்ணாமலை என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா? அ.தி.மு.க-வை அழிக்கப் பார்க்கும் அண்ணாமலையை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.



  • May 31, 2024 13:53 IST
    தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 31, 2024 13:36 IST
    சென்னையில் சட்டவிரோதமாக தாய்பால் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

    சென்னை மாதவரம், கே.கே.ஆர். கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவர் நடத்தி வரும் மருந்து விற்பனை கடையை சோதனை செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தாய்ப்பால் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 



  • May 31, 2024 13:30 IST
    ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு சோதனை; மிரட்டல் விடுத்தவர் கைது

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. செல்போன் எண்ணை வைத்து கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை உறுதி செய்த போலீசார், தேவராஜைக் கைது செய்த நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இது குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 31, 2024 13:23 IST
    சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12-ம் மாணவன் உயிரிழப்பு

    சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12-ம் மாணவன் சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதய நோய் பாதிப்பால் உயிரிழந்த ஹரிசுதன் என்ற சக மாணவரின் உடலை பார்க்கச் சென்றபோது மாணவன் சக்தி மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனுக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும் மற்று இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • May 31, 2024 13:08 IST
    வாக்கு எண்ணிக்கை அன்று புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு

    “புதுச்சேரியில் ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து வகை மதுக் கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் ஐந்து வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப்படை, 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்று ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். 



  • May 31, 2024 12:48 IST
    குஜராத்தை சேர்ந்த மோடி காந்தியை படம் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? - துரைமுருகன் விமர்சனம்

    தி.மு.க அமைச்சர் துரைமுருகன்:  “குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி காந்தியை படம் பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் என சொல்வதா? காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார்” என்று மோடியை விமர்சித்துள்ளார்.



  • May 31, 2024 12:23 IST
    தமிழ்நாட்டின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி கண்டுள்ளது - ஸ்டாலின் பெருமிதம்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “தமிழ்நாட்டின் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சியைக் கண்டுள்ளது. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம்தான் இது; பயணத்தை தொடர்வோம்; தமிழ்நாட்டை உயர்த்துவோம். புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால் உயர் கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிகை உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.



  • May 31, 2024 11:47 IST
    மின் தடையில்லா தமிழ்நாடு: மின்துறை பெருமிதம்

    முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது 10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன 2021ல் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவுதிறன் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது கடந்த மே 2ம் தேதி 20,830 மெகாவாட் உச்ச மின் தேவையை எவ்வித தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது 17,785 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் அமைப்பு> அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ₨2.65 மானியமாக வழங்கப்படுகிறது நெசவாளர்கள், வீட்டு உபயோகதாரர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மின் துறை பெருமிதம்.



  • May 31, 2024 11:32 IST
    எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு

    ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு - சிறப்பு விசாரணைக்குழு நடவடிக்கை சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு சற்று நேரத்தில் மருத்துவ பரிசோதனை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு போலீஸ் காவல் கிடைக்கும் பட்சத்தில் பிரஜ்வால் ரேவண்ணாவை ஹாசனில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டம்.



  • May 31, 2024 10:59 IST
    சதுப்பு நில பகுதியில் மீண்டும் தீ விபத்து

    சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நில பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது; நேற்றிரவு சதுப்பு நிலம் முழுவதும் தீ பரவி இன்று அதிகாலை தீ அணைக்கப்பட்ட நிலையில் காற்றின் காரணமாக மீண்டும் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.



  • May 31, 2024 10:57 IST
    டி.டி.எப் வாசன் செல்போனை ஒப்படைக்க நோட்டீஸ்

    பிரபல யூ டியூபர் டி.டி.எப் வாசன் தனது செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணாநகர் காவல்நிலைய போலீசார் நோட்டீஸ். செல்போன் பேசியபடி காரை இயக்கிய வழக்கில் டி.டி.எப் வாசன் தனது செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க நோட்டீஸ்.



  • May 31, 2024 10:14 IST
    இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்தது தொடர்பாக 4 சிறார்கள் கைது

    மதுரை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் நத்தம் பறக்கும் பாலத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுத்தது தொடர்பாக 4 சிறார்கள் கைது. 4 பேர் மீதும் இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் தல்லாகுளம் போலீசார். 



  • May 31, 2024 09:59 IST
    மகாத்மா காந்தியை உலக மக்களிடம் கொண்டுச் சேர்க்கவில்லை என்ற ஆதங்கத்தைதான் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார்; வானதி சீனிவாசன் அறிக்கை

    “மகாத்மா காந்தியை உலக மக்களிடம் கொண்டுச் சேர்க்கவில்லை என்ற ஆதங்கத்தைதான் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார்; நேரு குடும்பத்தை மட்டுமே முன்னிறுத்தி மற்ற தலைவர்களை இருட்டடிப்புச் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை; மகாத்மா காந்தி மீது பிரதமர் மோடி பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்; மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் பிறந்த பிரதமர் மோடி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மகாத்மாவை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்” - கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை



  • May 31, 2024 09:42 IST
    ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

    என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம். 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் நடவடிக்கை. பணி ஓய்வு பெற இருந்த நிலையில் வெள்ளத்துரையை சஸ்பென்ட் செய்தது தமிழ்நாடு அரசு. திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.



  • May 31, 2024 09:16 IST
    பீகார் வெப்ப அலையால் 16 பேர் உயிரிழப்பு

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் வீசிய வெப்ப அலை .2 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்தால் அதிர்ச்சி. 



  • May 31, 2024 09:14 IST
    தமிழகத்தில் நாளை முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் நாளை முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.  கேரளாவில் இன்று முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • May 31, 2024 09:13 IST
    அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

    அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 11ல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாள்கள் நடக்கும் கூட்டம் ஜூன் 19ல் நிறைவடைகிறது. மக்களவை தேர்தல் நடத்தை விதிகளுக்குப் பிறகு, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment