Advertisment

Tamil Breaking News Highlights: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News Update Today- 27 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains today

Petrol and Diesel Priceசென்னையில் பெட்ரோல்டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும்டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

உக்கடம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

நொய்யல் ஆற்றில் இருந்து அதிக அளவிலான நீர் திறப்பு காரணமாக உக்கடம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

 

  • Jun 28, 2024 07:39 IST
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி,நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசான மழை பெய்யும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு



  • Jun 28, 2024 07:04 IST
    2வது ஆண்டு கல்வி விருது விழா

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது விழா,  இன்று (ஜூன் 28) மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது.



  • Jun 27, 2024 21:58 IST
    சென்னையில் மின்சார ரயில்கள் திடீர் நிறுத்தம்

     

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயில், கோளாறு காரணமாக நெமிலிச்சேரி அருகே நிறுத்தப்பட்டது.
    இதையடுத்து, அந்த மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களும் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன.



  • Jun 27, 2024 21:53 IST
    வெட்கமாக இல்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு கே.என். நேரு காட்டமான கேள்வி

    ஜெயலலிதா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு முட்டக்கட்டைப் போட்ட எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோருவது வெட்கமாக இல்லையா? என அமைச்சர் கே.என். நேரு காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.



  • Jun 27, 2024 20:16 IST
    எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவு; 5 தனிப்படைகள் அமைப்பு


    நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • Jun 27, 2024 19:23 IST
    திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

     

    கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 27, 2024 18:53 IST
    ஒரு மாத குழந்தை தெருநாய் கடித்து மரணம் : திட்டக்குடி அருகே பயங்கரம்!

    கடலூர், திட்டக்குடி அருகே தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த ஒருமாத குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில, குழந்தை சிகிச்கை பலனின்றி உயிரிழந்தது.



  • Jun 27, 2024 18:20 IST
    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் : 48 பேர் சிகிச்சையில் உள்ளதாக தகவல்

    கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை 118 பேர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 229 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • Jun 27, 2024 18:19 IST
    தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு அரசு நடவடிக்கை

    தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 19,872 நியாய விலைக்கடைகள் சொந்த கட்டடங்களிலும், 9285 கடைகள் வாடகையில்லா கட்டடங்களிலும், 797 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன. தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பு



  • Jun 27, 2024 18:18 IST
    ரேஷன் பொருட்கள் பேக்கிங் செய்து வழங்கப்படுமா? அமைச்சர் சக்கரபாணி பதில்

    ரேஷன் பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி "நியாய விலைக்கடைகளில் அரிசியை பேக்கிங் செய்து வழங்க, தனியார் பங்களிப்புடன் 2500 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன அரிசி ஆலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது பேக்கிங் செய்து வழங்கப்படும் அரிசிக்கு GST விதிக்கப்படுவதால், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்"  என கூறியுள்ளார்.



  • Jun 27, 2024 17:18 IST
    9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 27, 2024 17:15 IST
    இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: முதல்வருக்கு வெளியுறவு அமைச்சர் பதில்

    இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் எனமுதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்



  • Jun 27, 2024 16:29 IST
    அ.தி.முக உண்ணாவிரதப் போராட்டம்: இ.பி.எஸ்-க்கு சீமான் வாழ்த்து

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க-வினர் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு நாம் தமிழகர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரை பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் தி.மு.க அரசின் எதேச்சதிகாரப் போக்கு ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து நா.த.க ஒருங்கிணைப்பாளர் சிமான் வாழ்த்து தெரிவித்துள்ளாஅர்.



  • Jun 27, 2024 15:46 IST
    நீட் தேர்வு முறைகேடு வழக்கு: பாட்னாவில் 2 பேர் கைது - சி.பி.ஐ அதிரடி நடவடிக்கை

    நீட்-யுஜி வினாத்தாள் கசிவு வழக்கை பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸிடம் இருந்து கையகப்படுத்திய சி.பி.ஐ பாட்னாவைச் சேர்ந்த இருவரை வியாழக்கிழமை கைது செய்தது. இருவரும் நீட்-யுஜி தேர்வாளர்களுக்கான தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளை மே 4-ம் தேதி  நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு செய்ததாகக் கூறப்படுகிறது - அதே நாளில் அவர்கள் பதிலளிக்கப்பட்ட வினாத்தாளை மனப்பாடம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நான்கு தேர்வர்களும் அடங்குவர், மேலும் 5 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.



  • Jun 27, 2024 14:53 IST
    செங்கோல் - உ.பி. முதல்வர் தமிழில் கண்டனம்

    செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து  இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை  சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. செங்கோல் மீதான எதிர்ப்பு தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டன பதிவு



  • Jun 27, 2024 14:29 IST
    உதயநிதி அறிவிப்பு

    கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர். கடந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ₹5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த முறை ₹7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்

     -சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி அறிவிப்பு



  • Jun 27, 2024 14:28 IST
    சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

    சேலம் மேற்கு தொகுதியில் ரூ.20 கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணி தொடங்கிவிட்டது.

    நான் முதல்வன்திட்டத்தின் மூலம்  87,712 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் கிடைத்துள்ளது.

    கடந்த  யுபிஎஸ்சி தேர்வில்  27 பேர் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 45 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதற்கு நான் முதல்வன்திட்டமும் முக்கிய காரணம்

    - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு



  • Jun 27, 2024 13:24 IST
    நீட் வழக்கு: தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    நீட் ஓ.எம்.ஆர் தாள் நகலை தங்களுக்கு வழங்கக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு மீது பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து, ஏற்கனவே உள்ள நீட் தொடர்பான மனுக்களுடன் இந்த மனுவையும் இணைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வு உத்தரவு. 
    இதுவரை நீட் முறைகேடு மற்றும் நீட் தேர்வு ஆகியவைக்கு எதிராக 32 ரிட் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



  • Jun 27, 2024 13:23 IST
    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    7 முதல் 11 செ.மீ. மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என கணிப்பு



  • Jun 27, 2024 13:02 IST
    மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும்: எதிர்க்கட்சிகள்

    நாடாளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    செங்கோலை அகற்றுமாறு சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு சமாஜ்வாடி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம்

    முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது - சமாஜ்வாடி

    செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாடியின் ஆலோசனை நல்லது - காங்கிரஸ்

    சமாஜ்வாடி எம்.பி. கூறியது நல்ல ஆலோசனையே - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

    புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தியது - மாணிக்கம் தாகூர்



  • Jun 27, 2024 12:47 IST
    மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்பு. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.



  • Jun 27, 2024 12:38 IST
    நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு: பிரேமலதா

    விஷ சாராயம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாமா?. நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம். 

    விஷ சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை -தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்



  • Jun 27, 2024 12:28 IST
    பிரேமலதா நேரில் சென்று ஆதரவு

    சட்டப்பேரவை சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக, சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை, நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா.



  • Jun 27, 2024 12:27 IST
    பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 18 மடங்கு அதிகரிப்பு- முர்மு

    உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை தொழில்துறை செயல்படுத்தி வருகிறோம். 

    பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு



  • Jun 27, 2024 12:07 IST
    நீட் முறைகேடு விவகாரம்: முர்மு பதில்

    குடியரசு தலைவர் உரையின் போது "நீட், நீட்" என எதிர்க்கட்சிகள் முழக்கம். போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. 

    "வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்"

    "வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை களைய கட்சி, அரசியலைத் தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்" -  குடியரசுத் தலைவர் முர்மு 



  • Jun 27, 2024 12:05 IST
    பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி: எதிர்க்கட்சிகள் முழக்கம்

    வடகிழக்கில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசு உழைக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்- முர்மு 

    பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாக குடியரசுத் தலைவர் கூறியபோது எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.



  • Jun 27, 2024 12:03 IST
    ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல்: முர்மு 

    பாஜக அரசின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். 2024 தேர்தலில் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 



  • Jun 27, 2024 11:30 IST
    ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு: ஸ்டாலின்

    திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது, இதில் முதன்மையானது தொழில் துறை.

    உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருகிறார்கள்.

    ஏற்றுமதியில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது.

    ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

    மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது- 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேச்சு



  • Jun 27, 2024 10:54 IST
    சேலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகளை அடுத்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம்: ஸ்டாலின்

    “சேலத்துக்கும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவை சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ அருள் கூறினார், அந்த உறவை நானும் அறிவேன்; சேலத்தில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகளை அடுத்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Jun 27, 2024 10:35 IST
    ஓசூரில் விமான நிலையம் , திருச்சியில் ‘கலைஞர் நூலகம் அமைக்கப்படும்: ஸ்டாலின்

    “ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும்; திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும்; கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Jun 27, 2024 10:34 IST
    புதிய நகராட்சி, மாநகராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும்; : அமைச்சர் கே.என்.நேரு பதில்

    பதில்: “தற்போது உள்ள விதிகளின்படி தமிழ்நாட்டில் புதிய நகராட்சி, மாநகராட்சிகளை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும்; நாளை மறுநாள் (ஜூன் 29) பேரவையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது; மக்கள் தொகை மற்றும் வருவாய் குறைவாக உள்ள சில ஊர்கள் இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அவற்றை நகராட்சி அல்லது மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது” - சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு



  • Jun 27, 2024 10:32 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கும் விற்பனை



  • Jun 27, 2024 10:32 IST
    தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, மோட்டர் வாகனம், தோல் பொருட்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது: ஸ்டாலின்

    “தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைக்கும் வகையிலான அறிவிப்பு; தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்து கொண்டுள்ளனர்; இதனால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, மோட்டர் வாகனம், தோல் பொருட்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Jun 27, 2024 10:27 IST
    ஜூன் 29: பேரூராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றவது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்

    “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை மறுநாள் (ஜூன் 29) மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பேரூராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றவது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்” - சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு



  • Jun 27, 2024 10:25 IST
    பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியது; பேச்சிப்பாறை அணையில் இருந்து 3000 கனஅடி உபரி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீரும் திறக்கப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது



  • Jun 27, 2024 09:30 IST
    அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி - மாவட்ட நிர்வாகம்

    தென்காசி குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றம் குறைந்து காணப்படுவதால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க அனுமதி - மாவட்ட நிர்வாகம்



  • Jun 27, 2024 09:24 IST
    அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு



  • Jun 27, 2024 08:40 IST
    ரூ.22 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல்

    நைஜீரிய நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் .தோகா வழியாக விமானத்தில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.



  • Jun 27, 2024 08:08 IST
    பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

    தொடர் கனமழையால், பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை .பில்லூ.ர் அணையின் நீர்மட்டம் 97 கன அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறப்பு.



  • Jun 27, 2024 08:07 IST
    அத்வானிக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

    பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு உடல்நலக்குறைவு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. 



  • Jun 27, 2024 08:06 IST
    நீலகிரி : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆட்சியர் அருணா அறிவிப்பு. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment