Tamil New Updates: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 133-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 38.69% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 39.86%, புழல் - 78.15%, பூண்டி - 3.09%, சோழவரம் - 10.17%, கண்ணன்கோட்டை - 61.4%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 29, 2024 21:39 ISTகஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் - மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில், ஜாமின் வழங்க கோரிய வழக்கு மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Jul 29, 2024 21:37 ISTஇளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக. 14-ம் தேதி தொடக்கம் - மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்குகிறது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 5 முதல் 13 வரையும் 3-ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரையும் நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு விவரம், அட்டவணை குறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Jul 29, 2024 21:32 ISTதமிழ்நாட்டில் காவிரி நீர் வீணாவதை தடுக்கவே மேகதாது திட்டம் - சித்தராமையா
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் சமர்ப்பண பூஜை செய்த பின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி: “தமிழ்நாட்டில் காவிரி நீர் வீணாவதைத் தடுப்பதற்கான மாற்றுவழிதான் மேகதாது திட்டம்; மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும். அரசியல் காரணங்களுக்காக மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு குரல் கொடுக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் வீணாவதைத் தடுக்க தமிழ்நாட்டுடன் பேசத் தயாராக இருக்கிறோம். மேகதாது திட்டத்தால் தமிழ்நாடு கவலைப்படவில்லை என்றாலும் அவர்கள் பேசத் தயாராக இல்லை.” என்று கூறினார்.
-
Jul 29, 2024 21:26 ISTஆகஸ்ட் 3-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
வல்வில் ஓரி விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 3-ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 17-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
-
Jul 29, 2024 21:00 ISTசிவகங்கையில் பா.ஜ.க பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு
சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் செல்வகுமார் கொலை வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது, காவலரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். குற்றவாளி தாக்கியதில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் பிரதாப் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்த காவலர் மற்றும் குற்றவாளி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
-
Jul 29, 2024 20:35 ISTதமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jul 29, 2024 20:05 ISTபாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் அணிகள் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவர் அணிகள் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. காலிறுதி போட்டியில் துருக்கியிடம் 2-6 செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
-
Jul 29, 2024 19:45 ISTபள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு; ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்ப்பட்டது. அப்போது தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Jul 29, 2024 19:28 ISTமதுபானங்களை சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி கோரிய மனு; தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கவும், டாஸ்மாக்-கில் மதுவிற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த முரளிதரன் தொடர்ந்த வழக்கு 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
-
Jul 29, 2024 18:28 ISTடெல்லியில் துரை வைகோ எம்.பி
இந்திய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள "சமத்துவம் மற்றும் சம நீதிக்கு எதிராக, புதிய குற்றவியல் சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறது என டெல்லியில் துரை வைகோ எம்.பி காட்டமாக கூறியுள்ளார்.
-
Jul 29, 2024 18:26 ISTஒலிம்பிக்ஸ் ஹாக்கி: தோல்வியை தவிர்த்தது இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில், அயர்லாந்து அணியுடன் மோதிய இந்திய அணி கடைசி நேரத்தில் கோல் அடித்து தோல்வியைத் தவிர்த்தது. ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
-
Jul 29, 2024 18:25 ISTகள் விற்பனை குறித்து முடிவு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ‘கள்’ விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கலாமா? என்பது குறித்து பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
Jul 29, 2024 18:24 ISTஅதிகரிக்கும் நீர்வரத்து: மேட்டூர் அணையில் இருந்து நீர்திறக்கு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Jul 29, 2024 18:23 ISTகாதல் கணவரைப் பார்க்க பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்
சமூக வலைதளம் மூலம் காதலித்து வீடியோ கால் வழியே திருமணம் செய்த இளம்பெண் ஒருவர், ராஜஸ்தானில் உள்ள காதல் கணவரைப் பார்க்க உரிய முறைப்படி விசா பெற்று பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளார்.
-
Jul 29, 2024 17:38 ISTசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீடிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நாளை வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 29, 2024 17:36 ISTபோதை பொருள் கடத்த முயன்ற 3 பேர் சென்னையில் கைது
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, ராமநாதபுரத்திற்கு 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்குன்றம் பகுதியில், பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட குடோனில், 954 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
Jul 29, 2024 17:31 ISTபள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமன உதவியாளர் பணி: ஜூலை 31-ல் கலந்தாய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமன உதவியாளர் பணியிடங்களுக்கு 25.02.2023 அன்று முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஜூலை 31 அன்று சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
-
Jul 29, 2024 16:43 IST17 கோடி இஸ்லாமியர்களில் ஏழைகள் இல்லையா? ஓவைசி கேள்வி
பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின்போது, 'இந்த நாட்டில் உள்ள 17 கோடி முஸ்லிம்களில் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் யாரும் இல்லையா' என விவாதத்தின் போது ஓவைசி கேள்வி எழுப்பினார்.
-
Jul 29, 2024 16:27 ISTநாட்டை தவறாக வழிநடத்த முயற்சி; ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் சிங் பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உரைக்குப் பிறகு மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிவீர் திட்டம் தொடர்பாக நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாகக் கூறினார்.
““நமது ஜவான்கள் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கிறார்கள், இது நமது தேசிய பாதுகாப்பின் முக்கியமான பிரச்சினை. அக்னிவீரன் விவகாரத்தில் தேசத்தை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடக்கின்றன, நீங்கள் எப்போது அனுமதிக்கிறீர்களோ அப்போதெல்லாம் நான் அறிக்கை வெளியிட தயாராக இருக்கிறேன்” என்றார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்டர் எக்ஸில் சில கேள்விகள் எழுப்பியிருந்தார். -
Jul 29, 2024 15:46 IST'பா.ஜ.க சக்கரவியூகத்தை உடைப்போம்'; ராகுல் காந்தி
ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பாஜகவின் சக்கரவியூகத்தை உடைப்போம் என்று மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்களன்று, கோடிக்கணக்கான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ‘சக்கரவியூகத்தை’ பாஜக உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை சபையில் நிறைவேற்றுவதன் மூலம் இந்திய கூட்டமைப்பு அதை உடைக்கும் என்று கூறினார். "இந்த சபையில் இந்தியா கூட்டணி உத்தரவாதமான சட்ட MSP ஐ நிறைவேற்றும் என்று நான் கூறியது போல், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாங்கள் சாதிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்" என்று ராகுல் கூறினார். -
Jul 29, 2024 15:42 ISTபெரிய முதலாளிகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட்; ராகுல் தாக்கு
2024 மத்திய பட்ஜெட் பெரிய முதலாளிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி மக்களவையில் தாக்கிப் பேசினார்.
-
Jul 29, 2024 15:12 ISTதமிழ்நாட்டில் 7 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை அடுத்த ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
Jul 29, 2024 14:59 ISTஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கேள்வி
ராகுல் காந்தி தவறான கருத்துகளை அவையில் கூறக் கூடாது.
- சபாநாயகர் ஓம் பிர்லா
அமைச்சர்கள் பேசும் போது சபாநாயகர் இந்த அறிவுரையை கூறுவது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது மட்டும் குறுக்கிட்டு அறிவுரை சொல்கிறீர்கள்
- காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால்
-
Jul 29, 2024 14:32 IST20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி: ராகுல் காந்தி விமர்சனம்
பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது.
ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன. ஜிஎஸ்டி மூலம் வரி பயங்கரவாதத்தை ஏவியுள்ளது அரசு
-ராகுல் காந்தி
-
Jul 29, 2024 14:20 ISTமத்திய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் உள்ளனர்: ராகுல் காந்தி
பாஜக ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களே ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் உள்ளுக்குள் ஒருவித அச்சத்தில்தான் உள்ளனர். மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது
மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு -
Jul 29, 2024 14:19 ISTபாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் 3ம் இடத்தைப் பிடித்து மனு பாக்கர் மற்றும் சரபோஜித் சிங் இணை இறுதிச்சுற்றுக்கு தகுதி;
-
Jul 29, 2024 14:06 ISTகப்பலூர் டோல்கேட் அகற்ற வலியுறுத்தி நாளை பந்த்
மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை திட்டமிட்டப்படி பந்த் நடைபெறும்
கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவிப்பு
-
Jul 29, 2024 13:43 ISTமேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.38 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம், 16,000 கனஅடியிலிருந்து 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Jul 29, 2024 13:42 ISTஅமைச்சர் ரகுபதி பேட்டி
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
குற்றவாளிகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழிவாங்கும் நோக்கத்தில் நடைபெறும் முன்விரோத கொலைகள் தான் தமிழ்நாட்டில் அரங்கேறுகின்றன. வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை
- சென்னையில் அமைச்சர் ரகுபதி பேட்டி
-
Jul 29, 2024 13:23 ISTஆக.11ல் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆக.11ல் திருப்பூரில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் என அறிவிப்பு
-
Jul 29, 2024 13:20 ISTஹேமந்த் ஜாமின்: உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு;
ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
Jul 29, 2024 12:53 ISTஈபிஎஸ்-க்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதில்
திமுக ஆட்சியில் நடைபெறும் சம்பவங்கள், அரசியல் குற்றச்சம்பவங்கள் அல்ல. தமிழகம் கொலை மாநிலமாக மாறி வருவதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்
-
Jul 29, 2024 12:53 ISTசிறந்த திருநங்கை விருது
2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
-
Jul 29, 2024 12:27 ISTகொலைகளுக்கு அரசை குறை சொல்லக் கூடாது
"தமிழகத்தில் நடைபெறும் கொலைகளுக்கு அரசை குறைகூறுவது ஏற்புடையது அல்ல" என அமைச்சர் ரகுபதி பேட்டி.
"வன்முறை சம்பவங்களுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" - அமைச்சர் ரகுபதி
பழிக்குப் பழி கொலையில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் தடுக்க முயற்சிக்கிறோம். அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தால் பாதுகாப்பு வழங்கப்படும்- ரகுபதி
-
Jul 29, 2024 12:26 ISTகாஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி தொடர்வார்
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி தொடர்வார். நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வராததால் மேயராக மகாலட்சுமி தொடர்வார் என மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் அறிவிப்பு
-
Jul 29, 2024 11:58 ISTமேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது
-
Jul 29, 2024 11:53 ISTஊரக வளர்ச்சி துறைக்கு புதிய வாகனங்கள்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 35 கோடியே 25 லட்சம் மதிப்பில் 391 வாகனங்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்
-
Jul 29, 2024 11:41 ISTடெல்லியில் 13 பயிற்சி மையங்களுக்கு சீல்
டெல்லி ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் மற்றும் சட்ட விரோதமாக இயங்கி வந்த 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
-
Jul 29, 2024 11:33 ISTஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் : அன்புமணி கண்டனம்
ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் - அன்புமணி கண்டனம்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்து கண்டிக்கத்தக்கது. சட்டம் ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதற்கு படுகொலைகள் சான்று . அரசியல் படுகொலைகளுடன் போதைக் கலாசாரமும், குற்றச் செயல்களும் தலைவிரித்து ஆடுகின்றன- அன்புமணி
-
Jul 29, 2024 11:17 IST35 கவுன்சிலர்கள் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர்
மாமல்லபுரம் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்ட கவுன்சிலர்கள் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர். துணை மேயர் குமரகுருபர சாமி தலைமையில் 35 கவுன்சிலர்கள் விடுதியில் தக்க வைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்லைகயில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. -
Jul 29, 2024 11:03 ISTமேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியை எட்டியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் : நீர்வளத்துறை சுற்றறிக்கை
“மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120 அடியை எட்டியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படலாம்; எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல செல்ல வேண்டும்; மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” - மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை சுற்றறிக்கை
-
Jul 29, 2024 11:02 ISTஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.35.25 கோடி செலவிலான 391 புதிய வாகனங்களை வழங்கிடும் நிகழ்ச்சி: ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.35.25 கோடி செலவிலான 391 புதிய வாகனங்களை வழங்கிடும், அடையாளமாக 10 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
-
Jul 29, 2024 11:01 ISTவெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு தொடர்பாக 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்வளத்துறை சுற்றறிக்கை.
-
Jul 29, 2024 10:40 ISTமகப்பேறு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“மகப்பேறு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது; தற்போது சுகப்பிரசவம் குறைந்து, சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் முறை அதிகமாக உள்ளது; மகப்பேறு உயிரிழப்புகளை 0% சதவீதத்திற்கு கொண்டு சென்றால் தான் நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என அர்த்தம்” - சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
-
Jul 29, 2024 10:25 ISTபொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கியது; பொதுப்பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில் 26,654 மாணவர்களும், 7.5% இடஒதுக்கீட்டில் 1,343 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
-
Jul 29, 2024 10:16 ISTதங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கும் விற்பனை
-
Jul 29, 2024 10:10 ISTதுப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை
மகாராஷ்டிரா - நவி மும்பையில் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ.11.80 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை 3 நிமிடங்களில், கொள்ளையர்கள் நான்கு முதல் ஐந்து சுற்றுகள் வரை துப்பாக்கிச்சூடு நடத்தினர் - ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
Jul 29, 2024 09:44 ISTஅரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்: சீமான் பதிவு
அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) July 29, 2024
தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த… pic.twitter.com/dymPBxh3Kt -
Jul 29, 2024 08:48 ISTமுழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.36 அடியாக உயர்வு .அணைக்கான நீர்வரத்து 1.53 லட்சம் கன அடியாக உயர்வு.
-
Jul 29, 2024 08:02 ISTகட்சி தொடங்குகிறார் பிரஷாந்த் கிஷோர்
அக்டோபர் 2-ம் தேதி தாம் நடத்தி வரும் ஜன் சுராஜ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.