/tamil-ie/media/media_files/uploads/2023/04/chattisgarh-1.jpg)
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெப்ப பாதிப்பு-எச்சரிக்கை
மேட்டுப்பாளையம்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக பில்லூர் அணையிலிருந்து 2வது நாளாக உபரி நீர் திறப்பு - கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த்துறை அறிவுறுத்தல்.
-
Jul 18, 2024 01:06 IST
மகாராஷ்டிராவில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் காயம்
மகாராஷ்டிரா சத்தீஸ்கர் எல்லையோரத்தில் உள்ள சச்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சல்கள் தாக்கியதில் 2 வீரர்கள் காயமுற்றனர்.
-
Jul 17, 2024 21:02 IST
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு நீர் திறப்பு 50,651 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு நீர் திறப்பு 45,651 கன அடியிலிருந்து 50,651 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
-
Jul 17, 2024 20:44 IST
பாத்திரத்தில் மாட்டிய 3 வயது குழந்தை; பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
சென்னையில் 3 வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது பாத்திரத்தில் மாட்டிக் கொண்டது. குழந்தைக்கு எவ்வித சிறு காயங்களும் இன்றி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
-
Jul 17, 2024 20:23 IST
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக நிரோஷனா சுட்டுக்கொலை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக நிரோஷனா சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவி, குழந்தைகள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுவிட்டு, மர்மநபர் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய மர்மநபரை இலங்கை போலீசார் தேடி வருகின்றனர். தம்மிக நிரோஷனா இலங்கை ஜூனியர் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
-
Jul 17, 2024 19:59 IST
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் கோவை, நீலகிரி, குமரி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Jul 17, 2024 19:38 IST
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்பு
பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
Jul 17, 2024 19:23 IST
மின் கட்டண உயர்வு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவிப்பு
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
Jul 17, 2024 18:33 IST
தி.மு.க ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை - வி.கே. சசிகலா விமர்சனம்
வி.கே. சசிகலா: “தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை; தி.மு.க ஆட்சியில் 3 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். தி.மு.க இதே வழியில் ஆட்சி செய்தால் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் கடனை விட்டுச் செல்வார்கள். எல்லா வகையிலும் வரிகளை அதிகரிக்க செய்வதுதான் தி.மு.க அரசின் சாதனை” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 17, 2024 17:57 IST
தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது - தமிழக அரசு பெருமிதம்
பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித் தொகை ரூ.1,000 என்பது ரூ. 1,200 ஆக அதிகரிப்பு!
மாற்றுத் திறனாளி உதவித் தொகை ரூ. 1,000-ல் இருந்து ரூ. 1,500 ஆக அதிகரிப்பு!
முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ. 5,337 கோடி நிதி ஒதுக்கீடு!
மிக்ஜாம், தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ரூ. 2476.89 கோடி நிதி ஒதுக்கீடு!
ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
Jul 17, 2024 17:29 IST
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரரும் துணை நடிகருமான மைதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜாபர் சாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படத்தில் துணை நடிகராக பணியாற்றியவர் மைதீன்.
-
Jul 17, 2024 17:22 IST
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை; பதிவை நீக்கினார் சித்தராமையா
கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களும் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ வேலைகளில் கன்னடர்களை மட்டுமே பணியமர்த்துவதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று பக்கத்தில் பதிவிட்ட தனது பதிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை நீக்கியுள்ளார்.
சித்தராமையா தனது பதிவில், “மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் “சி மற்றும் டி” கிரேடு பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை கட்டாயம் பணியமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கன்னட மண்ணில் கன்னடர்களின் வேலை பறிக்கப்படுவதைத் தவிர்த்து, தாய்நாட்டில் சுகபோக வாழ்வைக் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் விருப்பம். நாங்கள் கன்னட ஆதரவு அரசு. கன்னடர்களின் நலனைக் காப்பதே எங்களின் முன்னுரிமை” என்றார். எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சித்தராமையா தனது பதிவை நீக்கியுள்ளார்.
-
Jul 17, 2024 17:14 IST
திருவள்ளூரில் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது
திருவள்ளூர் மாவட்டம், சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி சேதுபதி (30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 5 கொலை வழக்குகள் உடபட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 6 மாதம் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி சேதுபதியை சிறப்பு படைப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
-
Jul 17, 2024 17:10 IST
கர்நாடாகாவின் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக அரசு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவை 45,651 கன அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 40,000 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் 45,000 கன அடி நீராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து 36,675 கன அடியாக உள்ள நிலையில், 651 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
Jul 17, 2024 16:47 IST
சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
சிபிஐ கைதுக்கு எதிராகவும், இடைக்கால ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
-
Jul 17, 2024 16:46 IST
கர்நாடகாவில் அரசு பணிகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது
-
Jul 17, 2024 14:20 IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு. தமிழக மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து மிகவும் ஆக்கப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
-
Jul 17, 2024 13:36 IST
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த பா.ஜ.க.நிர்வாகி கைது
சென்னையில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த பா.ஜ.க. வட சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் பி.என்.சி மில் அருகே கஞ்சா விற்பனை செய்ய சென்ற விஜய் ரகு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Jul 17, 2024 13:26 IST
ஒரே நாளில் அமரன் தங்கலான் குறித்து முக்கிய அறிவிப்பு
'தங்கலான்' படத்தின் 'மினிக்கி மினிக்கி’ பாடலும், ‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதியும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதால் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உற்சாகம் இரண்டு திரைப்படங்களும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ளன
-
Jul 17, 2024 13:24 IST
சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் லேசான மழை பெற்ற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது,
-
Jul 17, 2024 13:23 IST
ஆடி மாதத்தின் முதல் நாள் : சேலத்தில் கிராம மக்கள் கொண்டாட்டம்
சேலம் பகுதியில், ஆடி மாதத்தின் முதல்நாளான இன்று அழிஞ்சி செடி குச்சியில் தேங்காயை சொருகி அதை தீயிலிட்டு உண்ணும் பண்டிகை கிராமபுறங்களில் விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. புது மண தம்பதிகளுக்கு தலை ஆடி கொண்டாட்டம் நடைபெறும்போது அவர்களுக்கு புத்தாடை அணிவித்து, குடும்பத்தோடு இணைந்து தேங்காய் சுட்டு விநாயகருக்கு படைத்து உண்ணுவது இங்கு வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
-
Jul 17, 2024 12:39 IST
கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு: அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்
அரசு, தனியார் துறைகளில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு 100% கன்னடர்களை நியமிக்கும் வகையில் மசோதா நாளை தாக்கல்
-
Jul 17, 2024 12:38 IST
அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பே இல்லை: செல்லூர் ராஜூ
தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரிப்பு. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. கவுன்சிலர் எப்படி இனி நடைபயிற்சி செல்ல முடியும்? நடைபயிற்சி செல்லவே பயம் ஏற்பட்டுள்ளது- செல்லூர் ராஜூ
-
Jul 17, 2024 12:36 IST
தெரு நாய்கள் கடித்து குழந்தை உயிரிழப்பு
தெலங்கானா, ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
ஜவஹர் நகரில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த குழந்தையை, தலை முடியை கவ்வி இழுத்து சென்ற தெரு நாய்கள்
சம்பவ இடத்தில் சிதறி கிடந்த குழந்தையின் தலை முடியை பார்த்து, பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள்
குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
Jul 17, 2024 12:34 IST
ஓமன் கடலில் 13 இந்தியர்கள் மாயம்
ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் மாயம். இந்தியர்களை மீட்க ஓமன் சென்றது இந்திய போர்க்கப்பல் மற்றும் விமானம்
-
Jul 17, 2024 12:21 IST
சர்தார் 2 படப்பிடிப்பு : சண்டை பயிற்சியாளர் பலி
சென்னையில் சாலிகிராமத்தில் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழப்பு
அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மேலே இருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல்
-
Jul 17, 2024 12:19 IST
ஆன்லைன் மூலம் மது விற்பனை? அரசு மறுப்பு
ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்கும் திட்டம் இல்லை
"டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமில்லை" - டாஸ்மாக் நிர்வாகம்
மதுபானங்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய, உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மறுப்பு
-
Jul 17, 2024 11:57 IST
தர்மேந்திர பிரதானுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
நேற்று பிரதமரை சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சருடன் சந்திப்பு
சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் சந்திப்பு
தமிழ்நாட்டில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்ததாக ஆளுநர் X தளத்தில் பதிவு
-
Jul 17, 2024 11:44 IST
தக்காளி விலை மீண்டும் உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-ஆக உயர்வு. சில்லறை விலையில் கிலோ ரூ.80க்கு விற்பனை
-
Jul 17, 2024 11:19 IST
வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டமா?: ராமதாஸ் கண்டனம்
ஆன்லைன் விநியாக நிறுவனம் மூலம் வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கே சென்று மது விற்பதாக வரும் செய்திகள் உண்மையா? வீடுகளுக்கே மதுவை விநியோகித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது- ராமதாஸ்
-
Jul 17, 2024 11:01 IST
சென்னை மாநகராட்சியின் ஆணையராக ஜெ.குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக ஜெ.குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
Jul 17, 2024 10:49 IST
மத்திய அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு; நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து விவாதித்ததாக தகவல் நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Jul 17, 2024 10:36 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 3 பேரை காவலில் எடுக்க திட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை திட்டம்
-
Jul 17, 2024 10:10 IST
தங்கம் விலை கடும் உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55 ஆயிரத்தை தாண்டியது ஒரு கிராம் தங்கம் ரூ.6,920-க்கும், ஒரு சவரன் ரூ.55,360-க்கும் விற்பனை
-
Jul 17, 2024 09:13 IST
டிரம்பை சுற்றிய தீய சக்தியை விரட்: சிறப்பு காளி பூஜை நடத்திய இந்து அமைப்பினர்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை சுற்றிய தீய சக்தியை விரட்ட டெல்லியில் சிறப்பு காளி பூஜை நடத்திய இந்து அமைப்பினர்
-
Jul 17, 2024 08:54 IST
தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் மிக கனமழைக்கும் வாய்ப்பு புதுச்சேரி, கேரளா, தெற்கு உள் கர்நாடகாவிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 33 செ.மீ. மழை பதிவு
-
Jul 17, 2024 08:35 IST
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிலமோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது
| அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிலமோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் கைது,மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது
-
Jul 17, 2024 08:20 IST
தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை - லேசான மழைக்கு வாய்ப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் - லேசான மழை பெய்யக்கூடும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jul 17, 2024 08:18 IST
விபத்தில் 4 பக்தர்கள் உயிரழப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் 4 பக்தர்கள் பலி, காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
-
Jul 17, 2024 07:41 IST
கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - 16.07.2024 அன்று பெய்த மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த சோகம் திருவனந்தபுரத்தில் ஓடும் கார் மீது மரம் விழுந்து பெண் ஒருவரும், பாலக்காட்டில் வீடு இடிந்து தாய், மகனும் உயிரிழப்பு கண்ணூரில் நீரில் மூழ்கி 2 பேர், திருவல்லா, வயநாட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு மலப்புரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் 35 வீடுகள் சேதம்
-
Jul 17, 2024 07:39 IST
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு கரூரில் போலி சான்றிதழ் வழங்கி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த வழக்கு கேரளாவில் வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.