Advertisment

Tamil Breaking News Highlights: மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான நா.த.க முன்னாள் நிர்வாகி உயிரிழப்பு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saesasa

Tamil News Updates: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது

Advertisment

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2473 மில்லியன் கன அடியாக உள்ளது.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 80 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 304 மில்லியன் கன அடியாக உள்ளது. 

  • Aug 22, 2024 21:59 IST
    பாலியல் வழக்குகளை முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

    "கிடைக்கக்கூடிய தரவுகளின்படி நாடு முழுவதும் தினமும் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. பலசமயங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு எதிராக ஒன்றிய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, 15 நாட்களுக்குள் வழக்குகள் முடிக்கப்பட்ட வேண்டும்என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.



  • Aug 22, 2024 21:55 IST
    சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வயதான கேட்ரிங் தொழிலாளி பாலசுப்பிரமணி போக்சோ சட்டத்தில் கைது!



  • Aug 22, 2024 20:32 IST
    ஸ்டாலின் உத்தரவு 

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 50% பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ. 300 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், பேருந்து பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு சேவை சிறப்பாக இயங்க உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் இ-பேருந்துகளுக்கு கட்டமைப்பை உருவாக்க ரூ. 111.50 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • Aug 22, 2024 20:30 IST
    செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

    அடுத்த மாதம் செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூரு வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.



  • Aug 22, 2024 18:50 IST
    பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்; ,மோடிக்கு மம்தா கடிதம்

    கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், நாடு முழுவதும் தினமும் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நடப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்குள் விரைவு நீதிமன்றங்களில் தண்டனை வழங்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் மம்தா கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.



  • Aug 22, 2024 18:44 IST
    இயக்குனர் மாரி செல்வராஜின் `வாழை' படத்திற்கு நடிகர் கார்த்தி வாழ்த்து

    இயக்குனர் மாரி செல்வராஜின் `வாழை' படத்திற்கு நடிகர் கார்த்தி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், “நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது.” என்று தெரிவித்துள்ளார்.



  • Aug 22, 2024 17:56 IST
    கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடையாக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Aug 22, 2024 17:40 IST
    வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் காளை கண்டுபிடிப்பு - தங்கம் தென்னரசு தகவல்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காலை கண்டறியப்பட்டுள்ளது. செதுக்கு முறையில் சீறும் திமிலுள்ள காளை உருவம் கிடைக்கப்பெற்றது. இதுவே முதல் முறை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளர்.



  • Aug 22, 2024 16:38 IST
    அபராதம் கட்டாத காரில் வந்த விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவிற்கு விஜய் பயணித்த வந்த TN 37 DR 1111 என்ற காருக்கு ரூ.4,500 அபராத தொகை நிலுவையில் உள்ளது. TN 37 DR 1111 என்ற கார் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட நிலையில், மொத்தமாக ரூ.4,700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைசியாக விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.200 மட்டுமே செலுத்தியுள்ள நிலையில், ரூ.4,500 அபராத தொகை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட TN 37 DR 1111 என்ற டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார், கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது



  • Aug 22, 2024 16:18 IST
    ஆளுநருடன் தலைமை செயலாளர் சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சென்னை ராஜ்பவனில் தலைமை செயலாளர் முருகானந்தம் சந்தித்தார். புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றதற்கு மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெறுகிறார்



  • Aug 22, 2024 15:55 IST
    த.வெ.க கட்சி கொடியில் யானை படம்; பி.எஸ்.பி எதிர்ப்பு

    விஜய் இன்று வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானைப் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



  • Aug 22, 2024 15:50 IST
    சவுக்கு சங்கரின் தாயார் மனு - தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு செய்துள்ளார். இதற்கு ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Aug 22, 2024 15:27 IST
    மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம்

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், மருத்துவர்களுக்கு எதிராக சம்பள பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க கூடாது. கொல்கத்தா மருத்துவமனையில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Aug 22, 2024 15:06 IST
    கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு

    கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவராமன் மீது இதுவரை 2 போக்சோ வழக்கும், ஒரு மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது



  • Aug 22, 2024 14:56 IST
    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    சிப்காட் உணவுப் பூங்காவின் ரூ. 400 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.



  • Aug 22, 2024 14:44 IST
    கொல்கத்தா மருத்துவமனைக்கு வந்தடைந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள்

    ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் வந்தனர்.



  • Aug 22, 2024 14:19 IST
    இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Aug 22, 2024 13:43 IST
    அன்பில் மகேஸ் பேட்டி

    பள்ளிகளில் நடக்கும் தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெற்றோர்களுக்கு நம்பிக்கை உருவாகும். இதனால், பள்ளியின் பெயர் கெட்டுப்போகாது.
    தனியார் பள்ளிகளில் எந்த முகாம் நடப்பதாக இருந்தாலும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி அனுமதி அளித்த பிறகே செய்ய வேண்டும் என கூறி இருக்கிறோம்"

    - அன்பில் மகேஸ் பேட்டி



  • Aug 22, 2024 13:23 IST
    ராகுல் காந்தி பேட்டி

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி உறுதியாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல்முறை..

    - ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ராகுல் காந்தி பேட்டி



  • Aug 22, 2024 12:45 IST
    பெண் மருத்துவர் கொலை: சி.பி.ஐ அறிக்கை தாக்கல் 

    கொல்கத்தா மருத்துவர் கொலை - சி.பி.ஐ அறிக்கை தாக்கல் 

    சம்பவம் நடந்து 5-வது நாள் விசாரணைக்காக சென்றபோது குற்றம் நடந்த இடம் மாற்றப்பட்டிருந்தது. பயிற்சி மருத்துவரின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 



  • Aug 22, 2024 12:31 IST
    எனக்கு தகவல் வரவில்லை: ஸ்டாலின்

    "எனக்கு தகவல் வரவில்லை" - அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு  
    முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்  



  • Aug 22, 2024 11:53 IST
    மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்


    மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - உச்சநீதிமன்றம்

    மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும். மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிடில அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத் தான் கருத்ப்படுவர். வருகைப் பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் கூற முடியாது- உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு 



  • Aug 22, 2024 11:50 IST
    ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்

    முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்.

    தேர்வு செய்யப்பட்ட 120 பேருக்கு ரூ.25,000 ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்



  • Aug 22, 2024 11:15 IST
    எப்போதும் உண்மையாக இரு விஜய்- சோபா

    இப்போ போல எப்போதும் உண்மையா இரு விஜய் 

    நாட்டுக்கே ராஜானாலும் எனக்கு பிள்ளை 

    தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று, பெண்ணியம் காப்பாற்று, புரட்சிகர திட்டங்கள் தீட்டு 

    வானில் பறக்கும் உன் கொடி உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி 

    ஏற்கனவே நான் ஒரு CM (Celebrity Mother) இனி நானும் ஒரு PM  (Proud Mother)

    - தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அம்மா சோபா



  • Aug 22, 2024 10:33 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு ஒரு கிராம் தங்கம் ரூ.6,680க்கும், ஒரு சவரன் ரூ.53,440க்கும் விற்பனை. 



  • Aug 22, 2024 10:23 IST
    கட்சியின் கொடியின் வரலாறு : பிறகு சொல்கிறேன்- விஜய்

    அரசியல் பயணத்தை தொடங்கி பிப்ரவரி மாதம் கட்சியை அறிவித்தேன். அப்போதில் இருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம். தவெக கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை, கொடிக்கான விளக்கத்தை விரைவில் சொல்வேன் என்று கூறினார்.



  • Aug 22, 2024 10:13 IST
    ஸ்டாலின் அமெரிக்கா செல்வதையொட்டி தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

    முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதையொட்டி தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் ஏற்படுத்த முடிவு 1 மூத்த அமைச்சர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியிலிருந்து விடுவிக்கபட்டு 3 புதிய முகங்கள் அமைச்சராகின்றனர் என தகவல்.



  • Aug 22, 2024 10:06 IST
    ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக தரை இறக்கப்பட்ட விமானம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.



  • Aug 22, 2024 10:00 IST
    தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக இதை பார்க்கிறேன்: நடிகர் விஜய்

    முதல் மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது மாநாட்டிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக இதை பார்க்கிறேன் நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் கொடியை அறிமுகப்படுத்தியதில் மிகவும் பெருமை - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்



  • Aug 22, 2024 09:53 IST
    தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி ஏற்பு

    மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். வேற்றுமைகளை களைந்து அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைபிடிப்பேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் மக்கள் நல சேவகராக கடமை ஆற்றுவேன்.- த.வெ.க உறுதிமொழி



  • Aug 22, 2024 09:46 IST
    த.வெ.க கொடியை விஜய் ஏற்றும் காட்சிகள்



  • Aug 22, 2024 09:45 IST
    த.வெ.க கொள்கை பாடல் வெளியீடு

    தலைவன் யுகம் பிறக்குது, வீரக் கொடி, வெற்றிக்கொடி, இது வெல்லும் கொடி” போன்ற வரிகள் இடம் பெற்ற விஜய் கட்சியின் அரசியல் பாடல் வெளியிடப்பட்டது.விவேக் எழுதியுள்ள த.வெ.க பாடலுக்கு, தமன் இசையமைத்துள்ளார். 



  • Aug 22, 2024 09:38 IST
    த.வெ.க உறுதிமொழி: விஜய் அறிமுகம்



  • Aug 22, 2024 09:37 IST
    பனையூர் கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை ஏற்றிய விஜய்

    த.வெ.க கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து  பனையூர் கட்சி  அலுவலகத்தின் கம்பத்தில் கொடியை ஏற்றினார்.



  • Aug 22, 2024 09:30 IST
    முக்கிய உறுதிமொழிகளை முன்மொழிந்த நடிகர் விஜய்

    அனைவருக்கும் சம வாய்ப்பு, மொழி போர் தியாகிகள் தொடர்பான உறுதிமொழி , சாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டும் போன்ற முக்கிய உறுதிமொழியை விஜய் முன்மொழிந்தார். அதை மற்றவர்கள் பின்பற்றி கூறினர்.



  • Aug 22, 2024 09:23 IST
    கழக கொடியை சற்று நேரத்தில் அறிமுகம் செய்கிறார் விஜய்

    தமிழக வெற்றிக் கழக கொடியை சற்று நேரத்தில் அறிமுகம் செய்கிறார் விஜய். இரண்டு போர் யானைகள் மத்தியில் வாகை மலருடன் மஞ்சள், சிவப்பு நிறத்தில் த.வெ.க கொடி



  • Aug 22, 2024 08:59 IST
    வீட்டில் இருந்து விஜய், பனையூர் கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டர்

    நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து விஜய், பனையூர் கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டர். அவருக்கு முன்பாக விஜய்யின் அம்மா மற்றும் அப்பா பழனியூர் கட்சி அலுவலகத்திற்கு சென்றனர். காலை 9.15 மணிக்கு கட்சி கொடி அறிமுகம் செய்யபப்ட உள்ளது. இதற்கான பிரதான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.



  • Aug 22, 2024 08:32 IST
    தமிழக வெற்றிக்கழக உறுதிமொழி

    அன்னை தமிழ் மொழியை காக்க உயிர்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி.சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன்.-தமிழக வெற்றிக்கழக உறுதிமொழி 



  • Aug 22, 2024 08:19 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா விளக்கம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா நெல்சன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பண பரிமாற்றமும் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மோனிஷா நெல்சன் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்! இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அழைத்து விசாரித்ததாகவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளதாகவும் இதனை தவிர்த்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.



  • Aug 22, 2024 08:18 IST
    குரங்கு அம்மை பரவல்: கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை

    .உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு தானியங்கி வெப்ப பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.



  • Aug 22, 2024 08:11 IST
    நடிகர் விஜய்க்கு சீமான் வாழ்த்து



  • Aug 22, 2024 08:10 IST
    காலை 9.15 மணிக்கு மேல் தவெக கட்சி கொடியை அறிமுகம்

    சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 9.15 மணிக்கு மேல் தவெக கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்.



  • Aug 22, 2024 08:09 IST
    பிடிஎஸ் படிப்பில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று நேரடி கலந்தாய்வு

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று நேரடி கலந்தாய்வு ஆயிரத்து 200 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment